Dec 23, 2005
ட்சுனாமிகா - நம்பிக்கையின் ஒளி

ஆயிற்று இன்னும் இரண்டு நாட்கள் போனால், ஒரு வருடம் ஆகப் போகிறது. ட்சுனாமி என்கிற சொல்லும், அதன் கோரமும் இன்று எல்லார் மனதிலும் ஆழமாக பதிந்து ஒரு வருடமாகிறது. எல்லா தரப்பு மக்களையும், உலகினையும் உலுக்கிய விஷயம் இன்றைக்கு "காதல் ட்சுனாமி" என்கிற அளவில் திரைப்பாடல்களில் இடப் பெற தொடங்கிவிட்டது.
ட்சுனாமி நிவாரண நிதி, பொருளுதவி எல்லாம் முடிந்து எவ்வாறு கணவனை இழந்த சொந்தங்களை இழந்த பெண்கள் தங்கள் கால்களில் நிற்கிறார்கள் என்பது பற்றிய ஒரு செய்தி விளக்கத்தினைக் கேட்டப்போது பிரமிப்பாக இருந்தது. ட்சுனாமிகா என்பது ஒரு பொம்மை. ட்சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்களும், உபாசானா ஃபவுண்டேஷனும் (ஆரோவில்) , தேசிய (சென்னை) டிசைன் கவுன்சிலும் இணைந்து உருவாக்கிய ஒரு படைப்பு. ட்சுனாமிகா என்பது எளிதில் செய்யக்கூடிய பல்வேறு கூறுகளை அடக்கிய ஒரு அழகான பொம்மை. இதை தலைமுடி செருகக்கூடிய கிளிப், கீ செயின், ஸேப்டி பின் என பல்வேறு அவதாரங்களில் பார்க்க முடியும்.
ஒரு நாளைக்கு நாகப்பட்டினத்தில் மட்டும் பெண்கள் 15,000 ட்சுனாமிகாக்களை உருவாக்குகிறார்கள். சாண்டா கிளாஸினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நமக்கு, ஒரு புதிய மாற்று வழி ட்சுனாமிகா ப்ரோஜக்ட்டினை ஆதரிப்பது. புதிய வருடத்துக்கான அன்பளிப்புகளோ, அல்லது வேறு ஏதாவது விதத்திலோ ட்சுனாமிகாவினை வாங்குங்கள். நிறைய வலைப்பதிவாளர்கள் நிறைய செய்திருக்கிறீர்கள். ஆனாலும், ட்சுனாமிகாவினை ஆதரிப்பதன் மூலம், தொடர்ச்சியான ஒரு நிதி ஆதாரத்தினையும், வாழ்வும் உத்வேகத்தையும் அம்மக்களுக்கு அளிக்க முடியும்.
ட்சுனாமிகா தளம்| அமெரிக்காவில் தொடர்பு கொள்ள | படங்கள்
Subscribe to Posts [Atom]