Dec 31, 2005
ஆளப் போவது யார்?
2006 தமிழகத்தினைப் பொறுத்தவரை மிக முக்கியமான வருடம். தமிழக சட்டசபை தேர்தல்கள் இந்த வருடம் நடைபெற இருக்கிறது. இரண்டு காரணங்களினால் இந்த தேர்தல் மிக முக்கியமானதாகிறது.
ஒன்று ஜெயிக்கப் போகும் கட்சி / தலைவர்கள் தான் தமிழகத்தினை 2010 வரை ஆளுவார்கள். 2010 என்பது மானுட வாழ்வியலிலும், உலக அமைப்பிலும் ஒரு முக்கியமான மைல்கல்லாய் அமைந்துவிடும். இப்போதே நிறைய சமூக மாற்றங்கள், அறிவியல் தொழில்நுட்பம் என ஆரூடங்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆக, தமிழகத்தினை 2010 வரை ஆளப்போவது யாராயிருந்தாலும், அவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி தமிழகத்தினை முன்னெடுத்து செல்லவேண்டும் என்பது பில்லியன் டாலர் கேள்வி.21-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் நிலையென்ன? எப்படி வளர்ச்சியடைய போகிறோம்? மாறி வரும் உலக பொருளாதார சூழலையும், அரசியல் கோட்பாடுகளையும் தமிழகம் (முக்கியமாக சென்னை, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை) எப்படி எதிர்கொள்ளப் போகிறது ? தமிழகம் இந்தியாவிலேயே முதலீட்டுக்கு சாதகமான மாநிலங்களில் முதல் இடத்தில் இருக்கிறது. இதைப் எப்படி ஆள வரப்போகிறவர்கள் தக்கவைத்துக் கொள்ளப் போகிறார்கள்?
இரண்டாவதாக, தமிழகத்தின் மூத்தக் கட்சியான தி.மு.க.வின் தலைவரான கருணாநிதிக்கு வயதாகிக் கொண்டேப் போகிறது. அ.தி.மு.கவிலோ ஜெயலலிதாவிற்கு பின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் கிடையாது. திராவிட அரசியலின் கடைசி தேர்தலாக இது இருக்குமா ? இந்த இரண்டு திராவிட பாரம்பரிய கட்சிகளைத் தாண்டி, பா. ம.க, விடுதலை சிறுத்தைகள், கொஞ்சமாய் ம.தி.மு.க, விஜயகாந்தின் தே.தி.மு.க போன்றவைகளும், தேசிய கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க வும் கம்யூனிஸ்டுகளும் தமிழகத்தின் தலையெழுத்தினை மாற்றி எழுதும் சக்தியினை பங்குப் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் நடக்காமல் போனாலும், அடுத்த தேர்தலுக்கு போகும் போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சாத்தியங்கள் இருக்கிறதா? இது தாண்டி, இந்தியாவெங்குமே பொருளாதாரம், அடிப்படை கட்டமைப்பு, அரசியல்வாதிகளை பின்னி பெடலடெக்கும் ஊடகங்கள், தகவல் பெற்றறியும் மசோதா, தகவல் தொழில்நுட்ப,அதிநவீன தொழில்களின் முன்னேற்றம் என்று ஹை-வோல்டேஜில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு சமமான குரல்கள் தமிழகத்திலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. யார் வந்தாலும், இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். வலைப்பதிவுகள் சமீபத்தில் நடந்த பிரிட்டிஷ் தேர்தலில் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன.
இந்த முக்கியமான தேர்தலை சமூக மாற்றத்தினை உள்ளடக்குவதில் ஒரு சிறு முயற்சியாக "தேர்தல்2006" என்கிற கூட்டு வலைப்பதிவினை தொடங்கி இருக்கிறேன். ஜனவரி தொடங்கி பேச ஆரம்பிக்கலாம். எப்போது தேர்தல் அறிவிப்பு வரும் என்று தெரியாமல் இருந்தாலும், அடிப்படை கேள்விகளையும், அரசியல் விளளயாட்டுகளையும் அலச அரம்பிக்கலாம். 234 தொகுதிகளை தொகுதிவாரியாக அலச முடியும். தமிழகமெங்கும் விரவியிருக்கும் வலைப்பதிவாளர்கள் அவரவர்கள் இடத்தின் நிலவரத்தினை பதியலாம். சாதாரணமாய் தினமும் சந்திக்கும் பல்வேறு மக்களிடம் சில கேள்விகள் கேட்டு பதில் பெறலாம். தமிழகம் யார் தலைமையில் ஆள வேண்டுமென்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ரோட்டில் சர்வசாதாரணமாக பார்க்கும் மக்கள் தான் எஜமான்கள். அவர்கள் நினைத்தாலேயொழிய மாற்றங்கள் வாராது. இந்த வலைப்பதிவு தேறும் பட்சத்தில், இதனை கல்லூரிகளுக்கு எடுத்து செல்லலாம். என்னளவில் ஊடகங்களில் இருக்கும் தொடர்புகளைக் கொண்டு நிருபர்களிடமிருந்து சேதிகள் சேகரிக்க முனைகிறேன். நாளைய தலைமுறைக்கு ஒரு ஆரோக்கியமான வெளியை உருவாக்கி விவாதிக்க சொல்லலாம். அவரவர் இடங்களிலிருந்து நிலவரங்களை பதியலாம். சென்ற தேர்தலை நான், அரவிந்தன் மற்றும் சில நண்பர்கள் இணையத்தில் முழுமையாக தொகுத்திருந்தோம். tamil.net இல் பங்கு பெற்றிருந்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த முறை அந்தப்படை பெருகட்டும். உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் / தமிழகத்தின் அரசியலில் ஆர்வமிருக்கும் எவரும் இதில் பங்கு பெறலாம். தமிழகத்தில் என்னென்ன இருக்கவேண்டும், என்ன மாறுதல்கள் வேண்டும் என்று தொடர்ச்சியாக கருத்தினை வற்புறுத்துங்கள். இதில் யார் வேண்டுமெனாலும் சேர்ந்து கருத்துக்களை பகிரலாம். நீங்கள் எந்த சார்பு நிலை வேண்டுமானால் இருக்கலாம்.(கலைஞர் தான் உலகின் உன்னதமான தலைவர், புரட்சி தலைவி போன்ற தலைவி சூரிய குடும்பத்திலேயே இல்லை, திருமா/ தலித் அரசியல் இல்லாமல் தமிழகமில்லை, மருத்துவர்.இராமதாஸ் இருக்குமிடம்தான் தமிழகத்தின் அசைக்கமுடியாத சக்தி ) எவ்விதமான கருத்தாங்களையும் முன்வைக்கலாம். தி.மு.க/அ.தி.மு.க, தலித், தமிழ் தேசியம், நக்சல்பாரி, உலகப்பொருளாதாரம், விடுதலைப்புலிகள் ஆதரவு / எதிர்ப்பு, ஈழத்தமிழர் வாழ்க்கையும் தமிழக அரசியலும், வாக்கு போடவேண்டுமா / வேண்டாமா, தேர்தல் முறைகளில் வேண்டிய மாற்றங்கள் என்ன, நேர் /எதிர் / குறுக்கு / உள்குத்து அரசியல், மூன்றாம்/நான்காம்/பத்தாம் அணி என்று எந்த தலைப்பிலும் எழுதலாம். மிகவும் சீரியஸாக எழுத வேண்டும் என்கிற கட்டாயங்கள் இல்லை. பகடி, நையாண்டி, நகைச்சுவை என பல்வேறு முகங்களில் தமிழக அரசியலை ஆராயலாம். நானே ஒரு "கொள்கை / தேர்தல் அறிக்கை generator" தயார் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையினை எழுத சிரமபடும்போது நாம் உதவலாம் என்ற நல்லெண்ணம் தான் ;) மற்றபடி இதை ஒரு மிக முக்கியமான மாற்று ஊடகமாகவும் மக்களின் குரலாகவும் மாற்றுவதென்பது மக்களின், நண்பர்களின், வலைப்பதிவர்களின் கையில் (அல்லது கீபோர்டில்) இருக்கிறது.
கூட்டு வலைப்பதிவில் பதிய விரும்பும் நண்பர்கள், பின்னூட்டத்தில் தங்களின் மின்னஞ்சல் முகவரியினை கொடுங்கள், இணைத்து விடுகிறேன். ஒரு புதிய களத்தில் தமிழகத்தின் எதிர்காலத்தினை மாற்றும் காரணிகளை அலசி, ஆராய்ந்து, செப்பனிடுவோம். மற்றபடி, mandatory New year wishes : )
"மாற்றம் வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போறாது. மாற்றமாக நீ மாறாவிடில் மாற்றங்கள் வாராது"

Comments:
<< Home
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
___________________________
கூட்டு வலைப்பதிவிற்கு---
kanakasabapathy@gmail.com
___________________________
கூட்டு வலைப்பதிவிற்கு---
kanakasabapathy@gmail.com
ஆகா! நல்ல தொடங்கம்! வருக 2006
தங்களுடன் இணைந்து எழுத நானும் விரும்புகிறேன். நாளை என்பது லேட்... இன்றே இப்பொழுதே என்னுடைய கேள்வியை கேட்டு வைக்கிறேன். பதில் தெரிந்தவர்கள், உடன் படுபவர்கள் இதற்காக குரலெழுப்பலாம். பாடுபடலாம்.
1. அதிகமான முதலீடு வரவேற்கக்கூடியதா? இந்த முதலீடுகளால் தமிழக மக்கள் அடைந்த பயனென்ன? எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது? எந்தத் துறையில் முதலீடு வருகிறது.? என்னைப் பொறுத்தவரை தற்போதைய முதலீடுகள் எல்லாம் “வேலைவாய்ப்பற்ற வாய்ப்பற்ற வளர்ச்சியையே” உருவாக்கியுள்ளது.
2. கடந்த ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, தாமிரபரணியில் 19 பேரை அடித்தே கொன்றார்? இந்த ஆட்சியில் வெள்ள நிவாரணத்தில் 50 பேரை மிதித்தே கொன்றார்கள்? இவர்கள் இருவருக்கும் என்ன கொள்கை வேறுபாடு? அதிமுக - திமுக இரண்டுக்கும் இடையில் உள்ள அடிப்படை கொள்கை வித்தியாசம் என்ன?
மற்றதை பின்னால் பேசுவோம்....
email: ksperumal@gmail.com

தேர்தல் நெருங்க நெருங்க வலைப்பதிவு உலகமே ஒரு கூட்டு வலைப்பதிவு மாதிரிதான் இருக்கும்கறது நம்ம கருத்து...
இருந்தாலும் "சமத்துவபுரம்" மாதிரி உங்க கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள்

(ஆனா எழுத நினைச்சது ::
தேர்தல் நெருங்க நெருங்க வலைப்பதிவு உலகமே ஒரு கூட்டு வலைப்பதிவு மாதிரிதான் இருக்கும்கறது நம்ம கருத்து...
அட என்னதான் எல்லா சாதிக்காரனுவளும் ஒரே ஊர்ல தன்னப்போல குடியிருந்தாலும் சமத்துவபுரம்னு ஒரு திட்டத்த போட்டு குடி வச்சாத்தானப்பு ஒரு மதிப்பு... அப்பிடி எடுத்திக்கிடுவமே.. நல்லாருங்கப்பு... )
நான் நினைத்ததை விடுத்து சொன்னதை மட்டும் எடுத்துக்கொள்ள தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

உருப்படாததுன்னு சொல்லிபுட்டீங்க யார் ஆண்டா என்ன திராவிட பாரம்பாரியம் தானே கம்யூனிஸ்டோ காங்கிரஸோ ப.ம.க, இல்லையே விடுங்க பேய் போனல் என்ன பிசாசு அம்புட்டுதான்.
திறமையியல்லாத அனுபவம் இல்லதா புதியவர்களுக்கு கொடுத்துப்பார்த்தால் என்ன? வேண்டாம் என்கிறீர்களா சரி விடுங்க.

good effor narain!
dont know if i would participate rightaway. but do add me..
mathygrps at gmail dot com
-Mathy

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Corporate English classes in Chennai
Communicative English training center
English training for corporates
Spoken English training
Workplace Business English training institute
Workplace English training for corporates
Workplace soft skills training institutes
Corporate language classes
Business English training for Workplace
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]