Dec 28, 2005

IISc-யில் தீவிரவாத தாக்குதல்

இன்று மாலை ஐந்து மணிக்கு அடையாளம் தெரியாத சில நபர்கள் ஒரு அம்பாசிடர் காரில் வந்து IISc பெங்களூரில் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இதில் ஒரு பேராசிரியர் மரணமடைந்து விட்டார். உள்ளே இருக்கும் ஜே.என். டாடா ஆடிட்டோரியத்தில் ஒரு கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தப் போது இது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. நான்கு/ஆறு பேராசிரியர்கள் தீவிரமான காயத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் முழுவதும் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. IISc தீவிரவாதிகளின் பட்டியலில் இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கு டிசம்பர் மாதம் சனி. நான்கு வருடங்களுக்கு முன் இதே நாளில் ஆப்கானுக்கு ஒரு விமானம் கடத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் நவம்பரில் பாராளுமன்றத்தில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. போன வருடம் ட்சுனாமி. இந்த வருடம் இந்த வெறி தாக்குதல். இந்தியாவின் புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களும், பெங்களூரின் முன்னோடி மென்பொருள் நிறுவனங்களும் குறி வைக்கப்பட்டிருக்கின்றன. இது பெங்களூரின் முதலீட்டு நிலையினை சீர் குலைக்கும் நடவடிக்கையாக தெரிகிறது. மேல் விவரங்கள் தெரிந்தாலேயொழிய இதைப் பற்றி விரிவாக பேச முடியாது.


செய்தி - ஐபிஎன் | ரிடிப் | இந்தியன் எக்ஸ்பிரஸ்

Comments:
இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதத்தை ஒடுக்க முதுகெலும்பற்ற தலைவர்கள் முன்வரவில்லை என்பதே சோகம். சர்வதேச அளவில் இந்தியாவுக்குக் "கருணையின் சிகரம்" என்ற பட்டத்தை வாங்கித் தருவதற்காக ஒவ்வொருவரும் படாதபாடு பட்டுக்கொண்டு அனைத்து தீவிரவாதங்களையும் மென்மையாகக் கையாளுவதாகவே எனக்குப் படுகிறது.

அரசு இச்சம்பவத்தை நிகழ்த்தியவர்களைக் கண்டுபிடித்துக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

எனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.
 
Narayanan,
It is shocking. Do you know the names of the professors who died/were hurt?
 
Prof. MC Puri (Ex IIT-Delhi) is killed. The injured are Dr Vijay Chandru a senior scientist of IISc, Dr Pankaj Gupta of IIT, Vijay Patil, a lab assistant at the Dhanvanthri Kshetra, Cadilla Phamaceuticals Laboratory within the campus, and Dr Sangeetha. They were rushed to the M S Ramaiah Hospital. Their condition is stated to be critical. - source:rediff.com
 
Thanks for the info..Its shocking
 
மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயல் இது.

பரந்து விரிந்த IISc Campus ன் அமைதி வசீகரமிக்கது. பல நண்பர்களைச் சந்திப்பதற்காக அங்கு சென்றிருக்கிறேன். அந்த அமைதியையும் குலைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது அடாத செயல்.

காவல்துறை விரைந்து செயல்படும் என நம்புவோம்.
 
இது போன்ற அர்த்தமற்ற தாக்குதல்களை கண்டால் பத்திக்கிட்டு வருது. லூசுப்பயலுங்க.

எனது கண்டனங்களும் அனுதாபங்களும்.
 
தீடிரென்று வந்து கண்ட இடத்தில் தாக்கிவிட்டுப் போகும் கோழைகளை என்ன செய்வது?

கண்டனங்களும் அனுதாபமும்.
 
இது போன்ற நேரத்தில் அரசியல்வாதிகளை போல், இது கோழைத்தனமான செயல் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பது சரியல்ல...

இந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை அவசர கதியில் கண்டுபிடித்து ஆற அமர பல வருடங்களாக கேஸ் நடத்தாமல் விரைவாக கேஸை நடத்தி அதிக பட்ச தண்டனை வாங்கித்தருவதே முதுகெலும்புள்ள அரசு செய்ய வேண்டிய செயல்
 
மிகவும் கண்டனத்துக்குரிய செயல். உலகப் பெற்ற கல்விச்சாலையின் மீது தாக்குதல் என்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

இறந்த பேராசிரியருக்கு எனது அனுதாபங்கள். காயம்பட்டவர்கள் பூரண நலம் பெற என் பிராத்தனைகள்.

இந்த கொடுஞ்செயலை செய்தவர்களை மிகக்கடுமையாக தண்டிக்க வேண்டும்
 
அதிர்ச்சி அளிக்கும் தகவல். அரசியல் லாபங்கள், குறுகிய இன உணர்வு, மத உணர்வு, ஓட்டு வங்கி அரசியல், தேசிய இனங்களுக்கான விடுதலை உணர்வை மதியாமை, மத அடிப்படைவாதத்தை வளர்க்கும் விதமான செயல்பாடுகள், சரியான கல்வியைப் பரவலாக்காமை, ஊழல், அரசு தீவிரவாதம், போன்ற காரணிகளால் அரசு தீவிரவாதிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதற்கான விளைவை அனுபவிப்பவர்கள் மக்கள்.

இது கண்டனத்துக்கு உரியது.
 
இது பயங்கரவாதத்தினை முன்வைக்கின்றவர்களின் தாக்குதலெனில், இதனால் அவர்கள் சாதிக்கப்போவது ஏதுமில்லை - தமது நோக்க முன்னேற்றத்திலேயும் ஆதரவிலும் பின்னடைவினைத் தவிர.

ஆயுதம் தரிக்காதவர்களின்மீது, ஆயுதம் தாங்காதவர்கள்மீது தாக்குதலை நியாயப்படுத்தாவர்களின்மீது இலக்கு வைத்துச் செய்யப்படும் எந்தத்தாக்குதலும் எக்காலத்திலும் தாக்குகின்றவர்களுக்கு நன்மையைச் செய்யப்போவதில்லை.

இந்திய அறிவியல்மையம் இப்படியாகப் பயங்கரவாதிகளின் பட்டியலிலே இருக்குமென்பதை அறிந்திருக்கும் இந்திய அரசு அது குறித்து எத்துணை பாதுக்காப்புநடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது என்பது பகிரங்கப்படுத்தப்படவேண்டும். எதிர்காலத்திலே அறிவியல்மையங்களுக்கு இயன்றவரையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

போகிறபோக்குக்கு, பரந்து அரசியல்வாதிகளுக்கும் மைய/மாநில அரசுகளுக்கும் உள்ளூர்த்தொலைக்காட்சிகளுக்கும் இடுப்பின்கீழே இறுக்கிக் குத்திவிட்டு அடுப்பிலேற்றப்பட்ட அடுத்த பிரச்சனையிலே வடை சுட்டுத் தின்னப்போவதாலே இருக்கும் பிரச்சனை தீரப்போவதில்லை; பாதுகாப்பும் ஏற்படப்போவதில்லை - வேண்டுமானால், அவரவருக்கு உள்ளே சுரண்டிக்கொண்டிருக்கும் அர்த்தமற்ற குற்ற உணர்வினை ஆறுதற்படுத்த உதவலாம்.
 
//இதில் ஒரு பேராசிரியர் மரணமடைந்து விட்டார். உள்ளே இருக்கும் ஜே.என். டாடா ஆடிட்டோரியத்தில் ஒரு கருத்தரங்கு நடந்து கொண்டிருந்தப் போது இது நிகழ்த்தப் பட்டிருக்கிறது//
பாவிகள்!!.
 
இது சம்பந்தமாக எனது தாழ்மையான கருத்து, ஊழல் இருக்கும் வரை இந்தியாவில் எங்கும் சென்று தாக்குதல் நடத்தலாம் என்பது எனது கருத்து. ஏனெனில் டெல்லிகோட்டையிலேபோய் தாக்குதல் நடத்தலாம், எனும்போது இது சாதாரன விடயம், எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும், ஒருஅதிகாரி அல்லது சிலர் கையூட்டு வாங்கிக்கொண்டு அவர்களை அனுமதிக்கலாம், அவர்களின் நோக்கமறியால், லஞ்சம் ஒழிந்தால் இந்தாக்குதல்கள், குறையும் அல்லது இல்லாது போகுமென்பது எனது கருத்து.
 
தங்கமணி,
//அதிர்ச்சி அளிக்கும் தகவல். அரசியல் லாபங்கள், குறுகிய இன உணர்வு, மத உணர்வு, ஓட்டு வங்கி அரசியல், தேசிய இனங்களுக்கான விடுதலை உணர்வை மதியாமை, மத அடிப்படைவாதத்தை வளர்க்கும் விதமான செயல்பாடுகள், சரியான கல்வியைப் பரவலாக்காமை, ஊழல், அரசு தீவிரவாதம், போன்ற காரணிகளால் அரசு தீவிரவாதிகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதற்கான விளைவை அனுபவிப்பவர்கள் மக்கள்.//

பட்டியலிட்ட பிரச்சினைகளுக்கும், இந்த நிகழ்வுக்கும் என்ன சம்பந்தமென்று உண்மையிலேயே புரியவில்லை. ரௌடித்தனத்தை கைகொள்ளும் சினிமாக் கதாநாயகர்கள் பேசும் இந்த மொன்னையான தர்க்கத்தை வைத்து எதையும் நியாயப்படுத்தி விடலாம். ஆனால் கூடவே "அதற்கான விளைவை அனுபவிப்பவர்கள் மக்கள்" என்று பரிதாபப்படுவதில் எந்த அர்த்தமுமில்லை. கோபப்பட வேண்டியது ஆளும், அதிகார வர்க்கத்தின்மீது மட்டுமல்ல, கண்மூடித்தனமான வன்முறையை கண்டவிடத்தில் நிகழ்த்தும் தனிநபர்கள்/குழுக்களின் மீதும் தான். ஆயுதமேந்தி அரசியல் குறிக்கோளை அடைவதும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான நெறிமுறைகள் உள்ளன. இன்றைய நிகழ்வு அதில் அடங்காது. இந்த கருத்து சம்பந்தமில்லாமல் அவலை நினைத்து உரலை இடித்த கதையாக உள்ளது.
 
அறிவியல் கழகங்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதை உணர்த்துகிறது. இதுபோல பல விஷ்யங்களை நாம் சில உயிர்க்ளை பலி கொடுத்துத்தான் செய்யப்போகிறோம் என்பது வருந்த தக்கது.
 
ரொம்பவும் மனதை பிழிந்த சம்பவம். விஞ்ஞானிகளே நாட்டின் கண்கள் ,அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும்
 
The politically correct people in the blogs are not able to see the 6 ton gorilla in the middle of the room.

What can I say?

ennampo.blogsome.com
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]