Dec 4, 2005

சென்னை வெள்ள நிலவரம் - update 3

இன்னமும் என் அடுக்ககத்தின் முன் தண்ணீர் வடிந்த பாடில்லை இங்கே. மாநகராட்சி ஆட்கள் மூன்று நாட்கள் கெடு கொடுத்திருக்கிறார்கள், அதுவரை எனக்கு நீராலானது உலகு. அந்தமான் நிகோபார் பக்கத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் stagnant ஆக இருப்பதாக செய்தியில் படித்தேன். அதுவும் இந்த பக்கம் வந்தால், சென்னை ஆசியாவின் வெனிஸாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இரண்டு நாட்களாய் மழை இல்லை. இன்று காலையில் தான் பெரும்பாலான ஏரிகளில் நிரம்பி வழியும் தண்ணீர் ஒரு நிலைக்கு வந்திருப்பதாக கேள்வி. காஞ்சிபுரத்தில் குறைந்தது 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிந்து / கரை உடைந்து காஞ்சி தீவினை உண்டாக்கி இருக்கின்றன என்பது செய்தி. சிதம்பரத்தில் நேற்றும், இன்றும் மழை பெய்திருக்கிறது. மற்ற ஊர்கள் பற்றி தகவல்கள் இல்லை. இன்றைய எல்லா நாளிதழ்களிலும், கமிஷ்னர் சைலேந்திரபாபு ப்டகில் ஒலிபெருக்கியுடன் கத்திக் கொண்டிருக்கிறார். மழை வரும் சாத்தியங்கள் இது வரை இல்லை. மற்றபடி பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் காய்ந்து கிடக்கின்றன. இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை.

Comments:
உங்களுக்கு உண்மை நிலவரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் வீட்டில் சன் டி வி தெரிகிறதா?

just kidding...

thanks for the updates, appreciate it.
 
நாராயணன் பார்த்து அங்கங்க குழியா வெட்டி வச்சிருக்குமே சென்னையில. பார்த்துப்போங்க.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]