Dec 5, 2005

சென்னை வெள்ள நிலவரம் - updates 4 / திங். 9.45AM

இன்னமும் இங்கே தண்ணீர் தேங்கியிருக்கிறது. குளத்திலிருந்து வரும் நீரினை அதிகாலையில் அடைத்திருக்கிறார்கள். ஆனால் தேங்கிய தண்ணீரில் கழிவுநீர் கலந்து நாற்றமடிக்க ஆரம்பித்துவிட்டது. நாங்கள் பரவாயில்லை. பெரும்பாலான முக்கிய சாலைகளில் தண்ணீர் இல்லை. நேற்று துரைசாமி பாலம் (தி.நகர்) வழியாக வந்தேன். துடைத்து விட்டாற்ப் போல பளிச்சென்று இருக்கிறது. ஆனாலும், அரசாங்கத்தின் அறிவிக்கை படி அடையாறில் அதீத நீர்வரத்து நாளை மாலை நிற்கலாம் என்று சொல்கிறார்கள், அதுவும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்யாமல் இருந்தால். அடையாறு ஒடும் நிறைய இடங்கள் பெரும்பான்மையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. கோட்டூர்புரத்தில் ராணுவ படகுகளின் மூலம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே தாற்காலிக நிவாரண முகாம்கள் நிறுவப்பட்டு, உணவும் இருப்பிடமும் அளிக்கப்படுகிறது. சென்னையில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான இடங்கள்: கோட்டூர்புரம், சைதாப்பேட்டை தரைப்பாலத்தினை ஒட்டிய பகுதிகள், மடிப்பாக்கம், முகலிவாக்கம், கோவிலம்பாக்கம், தாம்பரம், சேலையூர், சின்மயா நகர், செனாய் நகர், வளசரவாக்கத்தின் ஒரு சில பகுதிகள், மேத்தா நகர், நெசப்பாக்கம் கான் நகர், வேளச்சேரி ராம் நகர், ராமாவரம். நேற்று மாலை ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பிச்சாடூர் ஏரியின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு பொன்னேரி வழியே நீர் வரத்து அதிகமாகியிருப்பதாக தகவல். சரியான தகவல்கள் வந்தபின் பாதிப்பினை பதிகிறேன். நகரின் முக்கிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. அரசாங்கமும், மாநகராட்சியும், காவலர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றார்கள். சன் டிவியினை நம்பாதீர்கள். நகரமே தண்ணீரிலும் கடுமையான குழப்பத்திலும் இருக்கும் போது ஒரு சில இடங்களில் நிவாரண பணிகள் தாமதமாகலாம். அரசாங்கத்தினை குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை. அவர்களும் தண்ணீரை எங்கே கொண்டு கொட்டுவார்கள் ? செய்தித் தாள்களில் நகர கட்டமைப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் அளவிற்கு மத்திய அரசு செலவு செய்யும் என்று படித்தேன். இந்த தண்ணீர் பிரச்சனைகள் அடங்கிய பிறகு இந்த வார இறுதியில் urban planning பற்றிய என்னுடைய கருத்துக்களை எழுதுகிறேன். ஒரு லட்சம் கோடி பத்தாது. மும்பையினை சீரமைக்கவே 50,000 கோடி ரூபாய்கள் தேவைப்படும் என்று இந்தியாவின் முன்னோடி கட்டிடக் கலை நிபுணர் ஹபீஸ் காண்ட்ராக்டர் என்.டி.டி.வியின் வாக் தி டாக் கில் சொன்னது நினைவுக்கு வருகிறது. இன்று இதுவரை மழையில்லை. ஆனாலும், வானிலை அறிக்கைகள் 24 மணி நேரத்தில் மழை இருக்கிறது என்று சொல்கின்றன.

Comments:
அவ்வப்போது தந்துகொண்டிருக்கும் தகவல்களுக்கு நன்றி நரேன்.
 
உருப்படாதது-ன்னு பேர் வச்சுகிட்டு உருப்படியான காரியம் செய்யுறீங்க .தகவல்களுக்கு நன்றி!
 
நாராயணன்,

மேலதிக விபரங்களுக்கு நன்றி.

செய்தித் தாள்களில் நகர கட்டமைப்புக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் அளவிற்கு மத்திய அரசு செலவு செய்யும் என்று படித்தேன். இந்த தண்ணீர் பிரச்சனைகள் அடங்கிய பிறகு இந்த வார இறுதியில் urban planning பற்றிய என்னுடைய கருத்துக்களை எழுதுகிறேன்.

இங்கு தமிழ்முரசிலும் முதல்பக்கத்தில் செய்தி வந்திருந்தது. கண்டிப்பாக விரைவில் எழுதுங்கள்.
 
உருப்படியா எழுதுறீங்க.ஏன் உருப்படாததுன்னு ஒரு தலைப்பு.

வீட்டுக்குள்ளாற இருந்துட்டு சளி,இருமல்,ஜுரம்-னு அவஸ்தை.
பாவம் தண்ணிக்கிடையில இந்த ஜனங்களுடைய அவஸ்தை எப்ப தீருமோ
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]