Jan 11, 2006

சனவரி 26 - சில கேள்விகள்

காஷ்மீரில் டால் ஏரி உறைந்து போய் கிடக்கிறது. மக்கள் ஏரியில் நீந்துவதை விட்டு ஏரியின் மீது நடந்து செல்கிறார்கள். டெல்லி கம்பளிப் போர்வைக்குள் கமுக்கமாய் சுருண்டு கிடக்கிறது. வட மாநிலங்கள் எங்கும் பனியின் பொழிவு அதிகமாக இருக்கிறது. சீரோ டிகிரிக்கு மிக அருகில் பல வட மாநிலங்களில் வெப்பநிலை இருக்கிறது. டெல்லியில் போன ஞாயிற்றுக் கிழ்மையின் வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸ். இந்த நிலையில் தான் சில விஷயங்களை பார்க்க நேர்ந்தது.

சனவரி 26 ஆம் நாள் இந்தியாவின் குடியரசு தின நாள். அன்றைக்கு டெல்லியில் ராஜ்பத்தில் ராணுவ அணிவகுப்பு நடக்கும். ஒவ்வொரு மாநிலமும் தத்தம் பெயர் அடங்கிய ஊர்திகளோடு உலா போவார்கள். பிரதமர், குடியரசு தலைவர் போன்றவர்கள் குண்டு துளைக்காத கண்ணாடிப் பேழையில் நின்று, இந்தியா எப்படி நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது என்று உரக்கச் சொல்லுவார்கள். ரோஜாப்பூவும், சாமந்தியும், பச்சை நிற பிற பூக்களும் சூட்டப்பட்ட சிறுவர் சிறுமியர்கள் "வந்தே மாதரம்" பாடிக் கொண்டே பிரதமர் இருக்கும் திசை நோக்கி வணக்கமிட்டு அவ்விடத்தினை கடப்பார்கள். அந்த வருடம் ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்ட அக்னியோ, பிருத்வியோ கம்பீரமாக ராணுவ லாரியில் ஏற்றப்பட்டு உலா வரும். மக்கள் இருமருங்கிலும் நின்று இதை கண்டு களிப்பார்கள். என் பள்ளி நாட்களில், சாரண இயக்கத்தில் இருந்த போது, டெல்லி செல்வது என்பது மிகப் பெரிய மரியாதை, கெளரவம், இலட்சியம் என்கிற எண்ணங்களும், கருத்தாக்கமும் தொடர்ச்சியாக ஊட்டப்பட்டன. பின் கல்லூரியில் தேசிய சமூக சேவையமைப்பில் இருந்த போதும், டெல்லி போவது, குடியரசு தினத்தன்று அணிவகுப்பில் இருப்பது என்பது மிகப் பெரிய கனவு. அப்படி ஒரு நாளும் டெல்லி போனதில்லை. முதன்முறையாக ஒரு வணிக சந்திப்பிற்காக டெல்லி விமானநிலையலத்திலிருந்து வெளிவந்து, டாக்சி பிடித்தால், இந்தியாவின் தலைநகரம் அழுக்காக, மிக அழுக்காக இருந்தது. மனதிற்குள் சொல்லிக் கொண்டேன், பெரியதாக ஒன்றும் இழக்கவில்லை என்று. ஆனால்,சர்வ வல்லமை பொருத்திய, ஆசியாவின் தலையாய் இன்று விளங்கும் இரு நாடுகளில் ஒன்றாக இருந்து, தன் ராணுவ வலிமையினை ஒவ்வொரு சுதந்திர/குடியரசு தினத்தன்றும், ராணுவத்திற்கான செலவீனத்தினை ஒவ்வொரு பட்ஜெட் அறிவிப்பிலும் வெளிப்படுத்தும் இந்திய மைய அரசின் கருத்தியல்களில் என்றைக்குமே எனக்கு கருத்து வேறுபாடு உண்டு.

முதல் பிரச்சனை, டெல்லியில் தற்போது உறைய வைத்துக் கொண்டிருக்கும் குளிரில், இந்தியாவெங்கிலுமிருந்து அழைத்து வரப்பட்ட 11- 16 வரையிலான குழந்தைகள், இந்த குடியரசு அணிவகுப்பிற்காக விடியற்காலை 5.30 மணிக்கு எழுப்பப்பட்டு ஒத்திகை பார்க்க கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார்கள். இத்தனைக்கும், டெல்லியிலிருக்கும் அத்தனை பள்ளிகளும், குளிரின் காரணமாக சனவரி 15 வரை மூடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவின் எல்லா பாகங்களிலிருந்து வந்திருக்கும் குழந்தைகள் உறைய வைக்கும் குளிரில் ஒத்திகை பார்க்கப்பட்டு, மூன்றாம்தர முகாம்களில் போதிய கம்பளிகள், தலை குல்லாய்கள், காலுறைகள் இன்றி தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இதை விட அராஜகம் வேறேதும் இருக்கமுடியாது. இந்தியாவின் நாளைய செல்வங்கள், இன்றைக்கு வெறுமனே ஆடலுக்கும், பாடலுக்கும் அணிவகுப்பின் monotony-யை குறைப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறார்கள். இவ்வளவும் செய்தாலும் எஞ்சப்போவது என்னவோ ஒரு சான்றிதழும், ஒரு வெண்கல பதக்கமும் தான். சுதந்திர இந்தியாவினைக் கொண்டாடும் நிகழ்வில் தான் குழந்தைகளின் ஒட்டு மொத்த சுதந்திரம் அடகு வைக்கப்படுகிறது. இந்தியாவின் பெருமையை உலகெங்கும் பறைசாற்ற 25 நாட்கள் பிஞ்சு தளிர்கள் ஒழுக்கம், தேச பக்தி என்கிற பெயரில் ராணுவ ஒழுங்கோடு தயார் படுத்தப் படுகிறார்கள். கூட்டத்தினர்களை மகிழ்விப்பது, பிரதம்ர் முதற்கொண்டு ஒரங்கட்டி, ஒய்யாரமாய் நிழலில் உட்கார்ந்து இருக்கும் பெருந்தலைகளை வணங்குவது, கிட்டத்திட்ட ஒரு கி.மீருக்கு மேல் நீளும் அணிவகுப்பில் ஆடிக் கொண்டிருப்பது என குழந்தைகளை டிரில் எடுப்பதில் தேசபக்தி எப்படி வளரும். எப்போது வீட்டுக்கு போகப் போகிறோம் என்கிற எண்ணம் தான் மிகும். அஹிம்சையால் சுதந்திரம் பெற்ற நாட்டின் குடியரசு தினத்தில் தான் இத்தனை ஹிம்சைகளும். இது தாண்டி, வாழ்த்தி, வணங்கி வாழ்வதற்கு நாம் என்ன முடியாட்சியிலா இருக்கிறோம்? எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று சொன்னானே ஒரு முண்டாசு கவிஞன், எந்த இளவரசன் இன்னொரு மன்னன் முன்னால் சலாம் போட்டு நடனமாடுவான் ? என்ன எழவுக்கு வேண்டுமிது ? இதன்மூலம் நாம் சாதிக்கப் போவது என்ன ? நடுங்கும் குளிரில், குழந்தைகளின் ஆட்டம் இல்லாமல் போனால் என்ன கெட்டழிந்துவிடும். இந்தியாவின் மானமென்ன ஆடும் குழந்தைகளிடத்திலா இருக்கிறது? பின் எதற்காக இந்த idiotic ritual.
பார்க்க - ஐபிஎன் செய்தி


இரண்டாவதாக, கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பெற்றுள்ள வளர்ச்சி அதன் பொருளாதாரம் சார்ந்ததே. வருடாவருடம் மென்பொருள், உற்பத்தி, விவசாயம் இன்னபிற அறிவு/உடல் சார் துறைகளில் நாம் சம்பாதிப்பதை, பட்ஜெட்டின் போது மொத்தமாய் ராணுவத்திற்கு தாரை வார்க்கிறோம் அல்லது வார்க்க சொல்லி கட்டாயப் படுத்தப் படுகிறோம். இந்தியாவின் பட்ஜெட்டில் ராணுவத்திற்கான செல்வு சென்ற நிதியாண்டில் 80,000 கோடி ரூபாய்களுக்கு மேல் (17.77 பில்லியன் டாலர்கள்) இவ்வளவு செலவழித்து வந்து கடந்த ஜம்பத்தி சொச்சம் ஆண்டுகளில் என்ன விஷயத்தினை சாதித்தோம்? கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பெற்றுள்ள வளர்ச்சிகான காரணம் இந்தியாவின் பலமான பொருளாதாரம். இதற்கு காரணம் நமது தொழில், அறிவு ரீதியிலான பங்களிப்பு, அக்னியும், பிருத்வியும் அல்ல. இந்திய ராணுவத்தினை மதிக்கிறேன் என்பதும், கடமைப்பட்டிருக்கிறேன் என்பதும் தனி விஷயம். அப்படி மரியாதை செய்யவேண்டுமெனில் மூப்படைகளுக்கும் ராணுவதினத்தில் வணக்கஞ்செய்கிறேன். குடியரசு தினமென்பது ஒரு நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் பூரணமாக நடைமுறைக்குள்ளாகியிருக்கிறது என்பதை சொல்லும் தினம். ராணுவம் எங்கே வந்தது இங்கே? பாதுகாப்பின் பரிபூரணத்தில் இருப்பதாக சொல்லும் அரசு தான் குண்டு துளைக்காத காரிலும், மேடையிலும் தங்கள் தைரிய அறிக்கைகளை உணர்ச்சி பொங்க உரைக்கிறார்கள். இதில் என்ன பெருமை இருக்கப் போகிறது. மேலும் ராணுவத்தினைக் கொண்டு ஒரு நாட்டின் மரியாதையினை உரக்கச் சொல்வது காலனியாதிக்கத்தின் பாதிப்பு. போர் என்கிற ஒன்று மிக அவசியமேற்பட்டாலேயொழிய தேவையில்லை என்பதும், உலக அமைதியும், சமத்துவமும், சகிப்புதன்மையும், சமாதானமும் பீரங்கிகளின் அகலமான வாய்களை திறப்பதனால் ஏற்படாது என்பது ஈராக்கும், பாலஸ்தீனமும், இலங்கையும் உதாரணங்கள். இந்தியா ஏன் இனி பொருளாதார வலிமையினையும், மக்கள் சக்தியையும் முன்வைத்து தேசிய தினங்களை கொண்டாட முன் வரக் கூடாது. உலகம் இந்தியாவினை ஒரு வலிமை மிக்க பொருளாதார சக்தியாக பார்க்கும் போது, இன்னமும் நாம் எத்தனை நாள் காலனியாதிக்க மனோபாவத்திலேயே தேசிய நிகழ்ச்சிகளை சடங்குகளாக்கி, சன் டிவியில் "குடியரசு தினத்தினை குதூகலமாய் கொண்டாடப் போகிறோம்"?

Comments:
நாராயணன் நீங்கள் ஐபிஎன் உடைய நிகழ்ச்சியை படித்தீர்களா பார்த்தீர்களா தெரியாது. பார்த்திருந்தால் அதை பற்றி, அதாவது உங்கள் கருத்துக்கு மாற்றாக கருத்து வைத்த, சென்னையைச் சேர்ந்த ஒருவரின்(இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்) கருத்துக்களையும் முன்னால் ராணுவ அதிகாரியின் கருத்துக்களையும் பார்த்திருபீர்கள்/படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

கடவுளைப்பற்றிய கருத்துக்களைப் போன்று, நாட்டுப்பற்றைப்பற்றிய கருத்தும் அவரவருடைய தனிப்பட்ட விஷயம் என நினைக்கிறேன் நான்.
 
மோகன், பரத்பாலா (சென்னையை சேர்ந்த இயக்குநர்/தயாரிப்பாளர்) தான் ஜனகனமன மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் போன்றவைகளை தந்தவர். கண்டிப்பாக நாட்டுப்பற்று, தேசபக்தி போன்றவைகள் தனிப்பட்ட விஷயங்கள் தாம். ஆனால், என்னுடைய கேள்வி - இதற்கு குழந்தைகள் ஏன் சங்கடப்படுத்தப்பட வேண்டும் என்பது தான்.
 
நாராயண்,

நல்ல பதிவு - ஆழ்ந்த கருத்துக்கள் மற்றும் கேள்விகள். தங்கள் கேள்விகளுடன் உடன் படுகிறேன்.

டெல்லியில் மெட்ரோவின் விரிவாக்கத்தால் தனியார் பஸ் முதலாளிகள் பிஸினஸ் டல் என ஒரு செய்தி. சாலை மற்றும் போக்குவரத்து முன்னேற்றம், பொல்யூஷன் கட்டுப்பாடு என டெல்லியிலும் சில நல்லவைகள் நடந்து வருகிறது (நாளொரு கற்பழிப்பு செய்தியுடன்)

- அலெக்ஸ் பாண்டியன்
(மடல் அனுப்பக் கேட்டிருந்தீர்கள் மன்னிக்கவும்- தாமதத்திற்கு - உங்கள் ஐடி தெரியவில்லை)
 
ஒணர்ச்சிவசப்படாதே தலைவா!
 
மார்கழி குளிர் பெரிது.
அதனினும் பெரிது டெல்லியில் மார்கழி குளிர்.
எல்லாவற்றையும் விட பெரியது பாஸ்டன் போன்ற அண்டார்டிகா குளிர்.

பாஸ்டனிலோ, அண்டார்டிகோவிலோ சௌகரியமாக வீட்டின் வெப்பநிலையை, வருவாய்க்கு ஏற்றபடி வைத்துக் கொள்ள முடிகிறது. போதிய அளவு குளிர் தடுப்புகள், insulation, குளிர் கட்டுப்பாடு, ஹீட்டர்கள் போன்றவை இல்லாத செங்கல்+சிமெண்ட் சில் தரைகளில் வசிப்பதற்கு தனி சாமர்த்தியம் வேண்டும். தூங்கும்போது கூட பிறந்த மேனியாக சுதந்திரம் அளிக்காமல், கோட்டு சூட்டு மற்றும் கம்பளி+ரஸாய் என்று வாழ்ந்திருக்கிறேன்.

குழந்தைகள் தங்கும் இடத்திற்கு தெர்மோஸ்டாட் பொருத்தினால் பிரச்சினை தீர்ந்து விடுமே?

---இதன்மூலம் நாம் சாதிக்கப் போவது என்ன ---

ஒரு புது அனுபவம் அவர்களுக்குக் கிடைக்கிறது. பள்ளி ஆண்டு விழாவில் மேடையேறி நாடகம் பொடுவது போல்; கோடை விடுமுறையில் புதியதாக ஏதாவது பயில்வது போல்; மேக்ஸ்முல்லர் பவனுக்கு கல்ச்சுரல் வழங்க செல்வது போல்;ஃபீல்ட் ட்ரிப், இன்பச் சிற்றுலா, sleepover என்று மாற்றத்திற்காக...

குறைந்தபட்சம் இருபது ஆண்டுகள் கழித்து பங்குகொண்டவர்களில் ஒருவராவது, நாவலாசிரியரானால் - கதைக்களனில் சேர்க்க சில சுவையான நிகழ்வுகள் கிடைக்கலாம் ;-)
 
/ இந்தியா ஏன் இனி பொருளாதார வலிமையினையும், மக்கள் சக்தியையும் முன்வைத்து தேசிய தினங்களை கொண்டாட முன் வரக் கூடாது./

நல்லதொரு பார்வை.
 
//ராணுவத்திற்கான செலவீனத்தினை ஒவ்வொரு பட்ஜெட் அறிவிப்பிலும் வெளிப்படுத்தும் இந்திய மைய அரசின் கருத்தியல்களில் என்றைக்குமே எனக்கு கருத்து வேறுபாடு உண்டு.
//

Defence Expenditure is proportional to the threats a country faces.

I'm sure you are aware of the numerous border issues we have with the Chinese.

And ofcourse there is our little brother Pakistan - to whom, according to our Arundhathi Roys, we must surrender everything without a question.

I might also hasten to add that our defence expenditure is lower than our adversaries(%ge wise of the GDP).

Believe me, its far lesser than what we actually need.

The average Jawan has to work with a inferior field kit in the hills while the Chinese soldier opposite to his post has a superb kit!

I have spoken with many a people who have participated in the Republic day parade, including girls*, and they are more than happy to participate in the parade.

If I may add, I'm willing to introduce you to a member of the first NCC contigent that marched down the Rajpath if you can come over to Coimbatore and jog with me for a morning. :-)

* - I even had the opportunity to march with these girls in a school parade!

Finally, I request you to take a look at India's neighbourhood.We live in a VERY UNSTABLE environment.

Almost every neighbour of ours is facing a crisis - except perhaps for Bhutan(they too are now having issues with the Chinese).

Add the maoist,naxals and the whole lot of insurgencies we have to counter!

How can India afford to reduce defence expenditure at this juncture?

Thanks for your time,
Samudra
 
//உலக அமைதியும், சமத்துவமும், சகிப்புதன்மையும், சமாதானமும் பீரங்கிகளின் அகலமான வாய்களை திறப்பதனால் //

If I may point out this attitude led to our 1962 Indo-China War!

Sorry for the second post, but I wish to echo the words of our President APJAK here : "Strength respects Strength"

People invest in India because it is a SECURE* location to invest.

There is quite a lot of cheap manpower and raw material in Africe.Why dont they invest it there?

We are a safer bet - because we are secure and have the infrastructure
 
குளிர்ச்சியா எதாவது குடிங்க; ரொம்ப சூடா இருக்கீங்க :)

"குண்டு துளைக்காத கண்ணாடிப் பேழை"ங்ற cliche-யெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வச்சிடலாம்; அத வேற ஒரு கோணத்துல பாக்கணும்.

IBN செய்தி பாத்த சூட்டோடு சூடா எழுதிருக்கீங்க போல. "These children are made to suffer in bitter cold just for the sake of parade..." கொஞ்சம் செண்ட்டி போட்டு லைட்டா sensationalise பண்ணினா எப்டி இருக்கும்னு கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாக்க முடியுது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]