Jan 16, 2006

ஜல்லியடித்தல்: "மே இட் ப்ளீஸ் யுவர் ஹானர்"

திண்ணையில் மலர்மன்னன் மோகன்தாஸின் (காந்தி)யின் கொலையினையும், அதனை செய்த நாதுராம் (கோட்சே)யின் தரப்பின் நியாயங்களையும் நெடுக நிறுவி காந்தி ஹிந்துகளுக்கோ, இந்தியாவுக்கோ எதுவும் பெரியதாக செய்யவில்லை என்றும், அவரின் இஸ்லாமிய அரவணைப்பு என்பது அரசியல் நிலைப்பாடே என்றெல்லாம் நீளமாய் எழுதி உரையினை முடிக்குமுன் அவர் நாதுராமின் சகோதரரை பார்த்ததும், பத்தாயிரத்திற்கும் மேலாக செலவழித்ததையும் எழுதி ஒரு முழு நீள பேதாஸுக்கான வழிவகைகளை எழுதியிருக்கிறார். நல்லது. காந்தி படுகொலையின் உண்மையினையும், இதுவரை பேசப்படாத சில விஷயங்களையும் இங்கே எழுதுவது வரலாற்று கட்டாயமாகிறது.

முதலில் நாதுராம் கோட்சேயின் பின்புலம் பற்றி தெரியாமல், ஆர்.எஸ்.எஸ்ஸின் வெறித்தனமான பாசிச அடையாளங்களை உணராமல் இந்த கட்டுரையினைப் படித்தால் இது நூதுராமினை நியாயப்படுத்தலில் கொண்டு போய் முடியும்.

ஆர்.எஸ்.எஸ் [ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்] என்கிற அமைப்பு இந்தியாவில் 1925 விஜயதசமி அன்று உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் கேசவ பலராம் ஹெட்கேவார் என்கிற மராட்டிய சித்பவன பிராமணர். மராட்டிய பிராமணர்களுக்குள்ளேயே தங்களை உயர்ந்தவர்களாக கருதிக் கொள்பவர்கள் சித்பவனப் பிராமணர்கள். (அய்யங்கார்கள் அய்யர்களை விட உயர்ந்தவர்கள் என்று சொல்லுவதுப் போல) ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு, பிராமணர்களின் சமுக, அரசியல் மேலாண்மை குறைந்தது. ஆங்கிலேயனைப் பொறுத்தவரை எல்லோருமே அடிமைகள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வில் முதல்முறையாய் கல்வியறிவு பெறத் தொடங்கினார்கள். அரசன், ராஜகுரு, மந்திரிகள், மக்கள் என்கிற கோபுரம் சரியத் தொடங்கியது. பிரித்தானிய அரசின் கீழ் அனைவரும் சமம், அடிமைகள் என்கிற காலனியாதிக்க மனோபாவத்தில் அவர்கள் பெரும்பாலும் எல்லாரையும் சமமாக மதித்தார்கள். அப்போது, கீழ் சாதி, மேல் சாதி இல்லாமல் இல்லை. ஆனால், இது வரை குற்றேவல் புரிவதையே வாழ்க்கையாகக் கொண்ட மக்கள் மெதுவாய் ஒரு தளத்தில் வர ஆரம்பித்தார்கள். பிராமணரல்லாதாரின் வருகை ஆஸ்திக பிராமணர்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில் சமூக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருந்தன ( தெற்கே நாராயண குரு, வடக்கே மஹாராஷ்டிரத்தில் புலே). சமூக விழிப்புணர்வு வெளிப்பட்டு, கோயில் நுழைவு, இட ஒதுக்கீடு போன்றவைகள் பற்றிய தெளிவு வந்தது. அக்காலத்தில், உடன்கட்டை ஏறுதல் போன்றவைகள் சமூக இழிவுகள் என்று தெளியத் தொடங்கி விட்ட காலம். ஆக மாறிக் கொண்டிருந்த இந்திய சமூகம் உயர்சாதி பிராமணர்களின் மேலாண்மையினை ஒட்டு மொத்தமாக அசைக்க ஆரம்பித்தது. அவ்வாறான பிராமணர்கள் ஒன்று கூடி உருவாக்கியதுதான் ஆர்.எஸ்.எஸ்.

இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆயிரம் வருடப் போர் என்றும், கிறிஸ்துவர்களுக்கும், வந்தேறிகளுக்குமான போர் என்று ஆரம்பித்து, அவர்களுக்கு எதிராக இந்துக்களை ஒன்று படுத்துவது என்கிற முகமூடியில் வாகாக அமர்ந்திருக்கும் சாத்தான்களின் கூட்டமே ஆர்.எஸ்.எஸ். இந்து விரோதம் என்கிற அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்தது. இஸ்லாமியர்களே பிரிவினைக்குக் காரணமென்று இன்று வரை பொய் பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிதாமகரான சாவர்க்கார் தான் முதலில் இந்துகளுக்கு தனி நாடு வேண்டும் என்று ஊரறிய சொன்னவர்

"இந்துஸ்தானத்தில் இந்துக்களே ஒரு தேசமாக இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் சிறுபான்மையினரே. ஒரே மண்ணில் வாழ்வதனாலேயே அவர்கள் அந்த தேசத்தவர்கள் ஆகிவிட மாட்டார்கள். முகம்மதியர்கள் அல்லது கிறிஸ்துவர்கள் இந்தியாவை தங்களின் புனித பூமியாக கருதுவதில்லை. அவர்களது புனிதபூமி அரேபியா, பாலஸ்தீனம் என்று தொலைதூரத்தில் உள்ளது... அவர்களது பெயர்களும் கண்ணோட்டமும் அந்நிய மூலத்தினைக் கொண்டுள்ளது.... இந்த சூரிய மண்டலத்தில் இந்துக்களாகிய நாம் நமக்கென்று ஒரு நாட்டைக் கொண்டிருக்க வேண்டும்"

இதனை எழுதும்போது வழமையான ஒரு பல்லவி, சாவர்க்கார் ஆர்.எஸ்.எஸ். காரர் அல்ல என்று. உண்மை. சாவர்கார் இந்து மகாசபையின் தலைவர். ஆனால், ஹெட்கேவார் அவரின் "இந்துத்வா" நூலை படித்து உத்வேகம் அடைந்து, அவரின் ஆலோசனைப் படிதான் ஆர்.எஸ்.எஸ்ஸினை வடிவமைத்தார். இது தாண்டி, சாவர்க்கார், 1942-இல் "இந்து ராஷ்ட்டிரதள்" என்றொரு ரகசிய அமைப்பினை உருவாக்கினார். இவ்வாறாக, வெறித்தனமான ஹிந்து மேலாண்மையினை முன்னிறுத்திய சாவர்க்காரின் அத்யந்த சீடர் தான் நாதுராம் கோட்சே.

1944 மார்ச்சில், கோட்சே "அக்ரானி" என்கிற பத்திரிக்கையினை தொடங்குவதற்கு நிதி வழங்கியதே சாவார்கார் தான். காந்தியினை கொல்வதற்காக கோட்சேயும், திண்ணையில் மலர்மன்னனும் சொல்லும் காரணங்கள் முழுக்க முழுக்க பொய்யானவை. பாகிஸ்தானுக்கு இந்தியா அளிக்க வேண்டிய பணம் 55 கோடி. உண்மையில் காந்தியினை ஒரு முயற்சியில் கொன்றுவிடவில்லை. அவரை கொல்ல 1943-லிருந்து முயற்சிகள் நடந்தன. பாகிஸ்தான் படம் எல்லாம் 1947க்கு பிறகு. இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இணக்கமாக இருக்கும் காந்தியின் மீதிருந்த குரோதமும், இஸ்லாமியர்களின் மீதான வன்மமும் தான் கோட்சேயினைத் தூண்டி காந்தியினைக் கொல்ல வைத்திருக்கிறது.

ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி "இதுவரை கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் ஏழு முறை காபாற்றப்பட்டுவிட்டது. நான் நூற்று இருபந்தைந்து ஆண்டுகள் வரை உயிரோடு வாழ்வேன்" என்று கூறியிருக்கிறார். இதற்கு "அக்ரானி"யில் கோட்சே "அதுவரை உங்களை யார் உயிரோடு விட்டு வைக்கப் போகிறார்கள் என்பதையும் பார்த்து விடுவோம்" என்று எழுதியிருக்கிறார். ஆக, இது திண்ணையில் சொல்வதுப் போல எவ்விதமான குற்ற மனப்பான்மையும் இல்லாமல் செய்தது இல்லை. முழுக்க முழுக்க ஹிந்துத்துவ கொள்கையினை பரப்பவும், காந்தியினை கொல்வதின் மூலம், ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையினைக் குலைத்து அதன் மூலம் ஏற்படும் வன்முறையில், ஹிந்துக்களை காப்பாற்ற தாங்கள் இருக்கிறோம் என்று நிலைநிறுத்தி அதன் மூலம் ஹிந்து சாம்ராஜ்யத்தினை நிறுவிடும் "அகண்ட பாரத வர்ஷம்" கனவிலும் தான் இப்படுகொலை நிகழ்த்தப்படுத்தப் பட்டிருக்கிறது.

காந்தி மற்றும் அக்காலத்திய காங்கிரஸின் "முஸ்லீம்களை உள்ளடக்கிய தேசியத்திற்கு" (Inclusive Nationalism) மாறாக, இந்துத்துவா சொல்லும் தேசியம், ஹிந்துக்களை முன்னிறுத்தும், சிறுபான்மையினரை சேர்த்துக் கொள்ளாத, அப்படியே சேர்த்தாலும் அவர்களை "இரண்டாந்தர குடிகளாக" நடத்தும் உரிமையினை கையிலெடுக்கும் தேசியமாக (Exclusive Nationalism) உள்ளது. இந்த அடிப்படை மனிதநேய வேறுபாட்டில் தான் இன்றளவும் ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச இயக்கமாக உள்ளது. இன்றளவும், கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளை ஆர்.எஸ்.எஸ் வீர வணக்க நாளாக கொண்டாடி வருகிறது. கோட்சேயின் இறுதி ஆசையான, சிந்து நதியில் (பாகிஸ்தானில் தற்போது ஒடும் நதி) தன் அஸ்தியினை கரைக்கும் ஆசை நிறைவேறாததால், இன்றைக்கும் அவரின் அஸ்தி பாதுக்காக்கப் படுகிறது.

இவ்வளவு விவரங்களை தாண்டி, காந்தியினை சுடுவதற்கு முன் தன் கையில் "இஸ்மாயில்" என்று பச்சைக் குத்திக் கொண்டார். இதன் மூலம் கொன்றவுடன் தானும் கொல்லப்படுவோம், ஒரு முஸ்லீம் தான் கொன்றான் என்றதும் கலவரம் வெடிக்கும் என்று திட்டம் போட்டார். ஆனால், உயிரோடு பிடிக்கப்பட்டதால் அவரின் திட்டம் நிறைவேறவில்லை. (ஆதாரம்: கே.இ.என் மற்றும் கே.எஸ் ஹரிஹரன் எழுதிய "இந்துத்துவாவின் அரசியல் பரிணாம வளர்ச்சி" ) இறுதியாக மலர்மன்னன் சொல்லும் கோபால் கோட்சே ஊடகங்களுக்கு கடந்த பத்து வருடங்களில் தந்த நேர்காணல்களில் அவரின் செய்தி தெளிவாக இருக்கிறது.

கே: நாதுராம் ஆர்.எஸ்.எஸ்ஸில் தான் இருந்தாரா? அல்லது விலகி விட்டாரா?
ப: நாதுராம் ஆர்.எஸ்.எஸ்ஸில் அறிவுஜீவி ஊழியராக உயர்ந்திருந்தார். காந்தியின் கொலைக்குப் பிறகு கோவால்க்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைக்களைக் கருதி அதிலிருந்து அவர் விலகிச் சென்று விட்டதாக கூறினார். ஆனால் விலகி செல்லவில்லை.

(ஆதாரம்: ப்ரண்ட்லைன் - ஜனவரி 1994)

ரிடிப்.காம் அவரிடம் "காந்தி கொல்லப்பட்டதற்க்காக நீங்கள் வருந்தியது உண்டா"? என்று கேட்டதற்கு "இல்லை. கவலைப்படவே இல்லை. இந்தியாவின் பிரிவினை எனது சவத்தின் மீதுதான் நடக்கும் என்று காந்தி சொன்னார். ஆனால் தேசப்பிரிவினை நடந்துவிட்ட பிறகும் அவர் உயிரோடுதான் இருந்தார். எனவே நாங்கள் அவரை சாகடித்தோம்... காந்தி முஸ்லீம்களைத் திருப்திப் படுத்தவே ஆர்வம் காட்டினார். அதனால்தான் அவரைக் கொலை செய்தோம்"

ஆக, முழுக்க முழுக்க ஒரு ஹிந்து சாம்ராஜ்யத்தினையும், குறுகிய இனமனப்பான்மையும், பாசிச அடிப்படைகளுடன் இயங்கிய ஒரு தளத்திலிருந்து தான் கோட்சே இதனை செய்திருக்கிறார். இதனை எக்காலக்கட்டத்திலும், எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது. கோட்சேயினை நியாயப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனாலும், அடிப்படை மனிதநேயமும், சகிப்பு தன்மையும், பரஸ்பர நம்பிக்கையும், நேசமும் கொண்ட எவரும் அவற்றினை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள்.

மலர்மன்னனின் மொத்த கட்டுரையில் இரண்டே இடங்களில் மட்டுமே அவரோடு உடன் படும் தருணங்கள் இருக்கின்றது. பகத்சிங் மற்றும் சுபாஷ் சந்திர போஸினைப் பற்றி அவர் எழுதிய இடங்கள் மட்டுமே. சுபாஷ் சாவர்காரிடம் விடைப்பெற்று போன செய்தி எனக்கு புதிது. ஆனாலும், சுபாஷின் கொள்கைகளை காந்தி செவிமடுக்கவில்லை என்பது ஒரு தீராத சறுக்கல்.காந்தியினை பற்றிய என்னுடைய கருத்துகள் வேறானவை, அவரின் கருத்தாக்கங்களோடு பல்வேறு இடங்களில் நான் முரண்படுகிறேன். முக்கியமாக, காந்தியும், அம்பேத்காரும் இலண்டனிலும், இந்தியாவிலும் செய்த தர்க்கங்களும், பெரியார் காந்தியோடு முரண்பட்ட காரணங்களும் வரலாற்று ரீதியிலும், சமூக வெளியிலும் காந்தி சறுக்கிய தருணங்கள்.

தலைப்பு விளக்கம்:
நாதுராம் கோட்சே கொடுத்த வாக்குமூலம் தான் "மே இட் ப்ளீஸ் யுவர் ஹானர்" என்று அழைக்கப்படுகிறது. விவரங்கள் இங்கே

தகவல் உதவி:
காந்தி படுகொலை: பேசப்படவேண்டிய உண்மைகள்
பேரா. கே. ராஜூ
வாசல் பதிப்பகம்வெளியீடு

Comments:
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
திருமலை சார் லிங்குசாமியா எல்லோருமா வாசிக்கிறாபல அந்தா லிங்க இங்கே குடுங்களேன்.

thanks in advance
 
காந்திஜியின் அணுகுமுறையில் பல குறைபாடுகள் உண்டு. அவரை psychological blackmailer என்றே அறிந்தவர்கள் குறிப்பிடுகின்றனர். இதே காரணத்திற்காகவே அவரை சர்ச்சில் கூட வெறுத்தார். அதே போல அம்பேதகரும் காந்தியின் தலைமையை மிகமிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார். சுபாஷ் சந்திர போஸை காங்கிரஸை விட்டு வெளியேற்றி, ஹிம்சை புரிந்தவர் தான் காந்தி. பகத் சிங் தண்டனையை தடுத்து நிறுத்தக் கோரி, அனைவரும் வேண்டுகோள் வைத்த பொழுது மறுத்தவர் தான். இவற்றைப் பற்றியெல்லாம் விமர்சனங்கள் வைக்கலாமே தவிர, இப்படி நம் பாட்டுக்குப் பின் பாட்டு பாட மறுக்கிறாரே - கொன்று விடு அவரை என்று ஒருவர் முனைந்தால், அது நியாயமாகி விடாது. ஆர்.எஸ்.எஸ்.ற்கு அது தான் நியாயம் என்று வாதிட்டு தங்களை வெளிக்காட்டிக்கொள்வது அனைவருக்கும் நல்லதே. எத்தகைய ஒரு மோசமான இயக்கம் இந்த நாட்டின் வரலாற்றை தன் விருப்பிற்கு எழுதத் துடிக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள இது உறுதுணையாக இருக்கும்.

மேலே எழுதியது, டோண்டுவின் பதிவில் இடப்பட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி

கட்டுரையை எழுதிய திரு. நாராயணனுக்குப் பாராட்டுகளும் நன்றியும்.
 
நாராயண்,

உங்களது மேல் உள்ள மரியாதையினால் பேத்தல் என்ற வார்த்தையை கூறாமல் தவிர்க்க முயற்சிக்கிறேன்.

http://www.faithfreedom.org/oped/sina50823.htm

கொஞ்சம் விஷயம் தெரிந்தாலும் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு இந்தியாவில் வந்த வாட்டர்ட் டவுண் எதிர்வினைதான் ஆர்.எஸ்.எஸ் என்று தெரியும்

ஏன் இப்படியே போகலாமே..

சுதந்திர போராட்ட காலத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்துமகாசபா எல்லா மகா மகா விளிம்பு சக்திகள் என்பதையெல்லாம் தூரப்போட்டுவிடலாம்.

சவர்க்கர் இருந்ததனால்தான் பாகிஸ்தான் சாத்தியமாயிற்று. சவர்க்கரும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இல்லையேல் பாகிஸ்தானே வந்திருக்காது.

ஆர் எஸ் எஸ் கேரளாவில் மிகுந்த பலத்துடன் இருந்ததினால்தான் மாப்பிள்ளை கலவரத்தில் இந்துக்களை கொன்று கற்பழித்து கட்டாய மதமாற்றம் செய்யும்படி முஸ்லீம்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

ஆர்.எஸ் எஸினால்தான் வங்காளத்தில் டைரக்ட் ஆக்ஸன் டே செய்து இந்துக்களை கொன்று தள்ளும் கட்டாயத்துக்கு முஸ்லீம்கள் வந்தார்கள்.

ஆர்.எஸ் எஸ்ஸினால்தான் இன்றும் பாகிஸ்தானில் இந்துப் பெண்களை கடத்ஹ்திச் சென்று இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்யவைக்க முஸ்லீம்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஆர் எஸ் ஸின் குச்சி சுற்றலை பார்த்து பயந்து போய்தான் இன்று உலகெங்கு முஸ்லீம்கள் குண்டுகளையும், ஏகே47களையும் கொண்டு எல்லோரையும் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆர்,எஸ்.எஸ்ஸினால்தான் தாய்லாந்தில் முஸ்லீம்கள் தனி நாடு கேட்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸினால்தான் இலங்கையில் முஸ்லீம்கள் தனி நாடு கேட்கிறார்கள்

ஆர்.எஸ்ஸினால்தான் ஈராக்கில் ஷியா முஸ்லீம்களை சுன்னி முஸ்லீம்கள் தாக்குகிறார்கள்

ஆர்.எஸ்.எஸ்ஸினால்தான் தாலிபான் இந்துக்களையும் ஷியாக்களையும் கொல்லும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானது. அதேதான், அது பாமியான் புத்தர் சிலையை உடைப்பதற்கும் காரணம்.

ஆர்.எஸ்.எஸ் இருப்பதால்தான் கோபம் கொண்டு இரட்டை கோபுரங்களை உடைக்க பின் லாடன் கட்டாயப்படுத்தப்பட்டார். அதே ஆர்.எஸ்.எஸ் காரணம்தான் சூடானில் அரபு முஸ்லீம்கள் கறுப்பர்களை இன சுத்திகரிப்பு செய்வதற்கும் காரணம். ஆர்.எஸ்.எஸ் இருப்பதால்தான் கோபம் கொண்டு ஸ்பெயினில் குண்டு வைக்கும்படி முஸ்லீம்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அதே காரணம்தான் லண்டனில் குண்டு வைப்பதற்கும்.

நான் கூட உங்களை விட சூப்பர் செக்குலரிஸ்ட் ஆயிடலாம்...

ஆர் எஸ் எஸ் என்ற பேப்பர் புலிக்கு பயந்துதான் 1400 ஆண்டுகால இஸ்லாமிய பயங்கரவாதம் வருகிறது என்ற இந்த பேத்தல்கள் இந்திய அரசியலுக்கு வேண்டுமானால் "ஆழமான அர்த்தம் பொதிந்தவையாக" இருக்கலாம். ஏன் அதிமுக தொண்டர் படைக்கு எதிர்வினையாகத்தான் இஸ்லாமிய தீவிரவாதம் வருகிறது என்று வேண்டுமானால் எழுதிகொள்ளுங்கள். இது போன்ற ஆராய்ச்சிகளின் அபத்தங்களுக்கு பதில் எழுதுவது கூட எரிச்சல் ஊட்டும் செயல்.

Ennamopo.BLOGSOME.com
 
காந்திஜியை சுட்டுக் கொன்றது ஒரு பாப்பான். இந்த கொலைக்கு வித்திட்டவர்கள் பாப்பாரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். காந்தி எல்லோருடனும் குறிப்பாக முமதியர்களுடன் நட்புறவு கொண்டிருந்தது பாப்பான்களுக்கு பிட்டிக்காததாலேயே இக்கொலை நடந்தது.
 
ஜின்னாவை புகழ்ந்து கொண்டு இருக்கும் சில அறிவு ஜீவிகள் அவரின் Direct Action பற்றி கொஞ்சம் எழுதினால் நல்லது!
 
ஜேவிபி, ஜாதிக ஹெல உறுமய, அல்கெய்தா, தலிபான் இவற்றுக்கெல்லாம் இல்லாத பழம்பெருமையுடன் இந்துத்வ தீவிர வாதம் இயங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்
தடை செய்யப் பட்ட போதிலும் இந்து நிறுவனங்களில் இது ஊரறிந்த ரகசியமாகவே இயங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸை உலக நாடுகள் அனைத்திலும் ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும். பன்முகத் தன்மைகளை அங்கீகரித்துத் தனிமனித உரிமைகளை நோக்கி உலகம் இயங்கும்போது ஜேவிபியின் பௌத்த மேலாண்மைவாதமோ, ஆர் எஸ் எஸ்ஸின் இந்துத் தீவிரவாதமோ, வேறு இஸ்லாமியத் தீவிரவாதமோ எதுவாயினும், பெருத்த சறுக்கல்களையே உண்டாக்கும். தமிழ் ஊடகங்களில் அண்மைக் காலங்களில் வெளிப்பட்டு வரும், வெளிப்படையாக வெளிப்படுத்தப்படும் இனவாதம், சாதீயவாதம் கவலை கொள்ளச் செய்கிறது. இவ்வகை வார்த்தை வன்முறைகளுக்குக் காரணம் அவ்வூடகங்களின் புரவலர்களும், எழுத்தாளர்களும் இந்துத்துவ சாதீயத்தைக் கட்டிக் காக்க முனைவதேயாகும். இவர்கள் எவ்வித சமூகப் பொறுப்புக்களுமற்று (வெறும் பழிக்குப் பழி என்பதை விட்டு நீண்டகால இந்துமயப் படுத்து நோக்கில்) வார்த்தைகளையும் செய்கைகளையும் அமைப்பது மேலும் நம்மைப் பின்னோக்கியே இட்டுச் செல்லும். இந்துத்துவத்தை ஒரு மேலாதிக்க மனப்பான்மையுடன் தூக்கிப் பிடிப்பதை இந்திய சாதிக்காரர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது இந்தியாவை ஒரு மதச் சார்பற்ற நாடு என்று மார்தட்டிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
''ஜின்னாவை புகழ்ந்து கொண்டு இருக்கும் சில அறிவு ஜீவிகள் அவரின் Direct Action பற்றி கொஞ்சம் எழுதினால் நல்லது!''

சமுத்ரா,
அத்வானி தமிழ்ல வந்து ப்ளாக் எழுதுவார்னா நெனைக்கிறீங்க..?
 
ஒண்ணு மட்டும் புரியலீங்க.....

கோட்சேக்களை வெகுவாக நியாயப்படுத்தினாலும் இவர்கள் 'தேச பக்தர்'களாம்
பின் லேடன்களை கடுமையாக கண்டனம் செய்தாலும் அவர்கள் 'தீவிரவாதி'களாம்

சும்மாவா சொன்னாரு ஜவாஹர்லால் நேரு: "பெரும்பான்மையினரின் தீவிரவாதம் தேசபக்தி முகமூடி போட்டுக்கொள்ளும்'னு!
 
This comment has been removed by a blog administrator.
 
அதுதான் பல 'கோட்சேக்கள்' தமிழ் வலையுலகில் சுதந்த்திர உலா வருகிறார்களே - கோட்சே பேஎசுவதை வேறு கேட்கவேண்டுமா?

அந்தப் பு்த்தகம் முழுக்க முழுக்க இந்துத்துவ பார்ப்பனீய வெறியாளர்க்கானது என்பது தெளிபு..இன்னும் 'நல்லா' படிச்சு 'அருவா சுத்தியல் வேல்கம்பு வெட்டரிவா' எல்லாம் தூக்கி நடக்க சிலர் தயாராவது தெரிகிறது! :)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]