Jan 26, 2006

மருதநாயகம் பற்றி கமலுக்கு ஒரு கடிதம்

கொஞ்சம் தாமதமாய் எழுதும் பதிவு. பொங்கலுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் மதனின் நிகழ்ச்சியில் கமல். வழக்கம் போல, கமலினைப் போற்றி, புகழ்ந்து முடித்தவுடன் இப்போது கிளிஷேவான, அந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. மருதநாயகம் எப்போது வரும்? வழமையாக கமலும், மருதநாயகம் தொடங்கும்போது மொத்த செலவு 15-20 கோடியாகவும், இப்போது 30-40 கோடி தேவைப்படுவதாகவும் கூறி, அதனால் பணத்திற்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். கமல் என்கிற கலைஞன் மீது எனக்கு பெரிய அளவில் மரியாதை இருக்கிறது, ஆனாலும், இப்படி சொல்வதன் மூலம் கமலின் ஜல்லியடித்தல்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. வெறுமனே பணம் தேவை என்று சொல்வதை விட வேறு முயற்சிகள் என்ன எடுத்தார் என்று சொல்ல வேண்டிய கட்டாயமிருக்கிறது. என்னளவில் இன்னமும் பொறுப்பற்று இருக்கிறார் என்று கவலையுடன் சொல்ல வேண்டியதிருக்கிறது.

உண்மையிலேயே கமலுக்கு இந்த படத்தின் மீது அவ்வளவு மதிப்பும் அக்கறையும் இருந்தால், இன்றைய நிலையில் 50 கோடி ரூபாய்கள் ஒன்றுமில்லை. உதாரணத்திற்கு சஞ்சய் லீலா பன்சாலியினை எடுத்துக் கொள்வோம். இதுவரை மொத்தமே 4 படங்கள் தான் வந்திருக்கிறது. அதிலும் தேவதாஸ் படத்திற்கு (குப்பையாயிருந்தாலும் கூட) மொத்த செலவு 50 கோடி. அமீர்கானின் மங்கள் பாண்டே - தி ரைசிங்கின் மொத்த செலவு 30 கோடிக்கும் மேல். ஆக, இந்தியாவில் 30 கோடி ரூபாய்கள் ஒரு படத்திற்கு செலவு செய்வது என்பது ஒரு பெரிய விஷயமில்லை. இங்கே இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டியதிருக்கிறது. மேலே சொன்ன ஹிந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருக்கிறது என்கிற ஜல்லி. உண்மையில் ஹிந்தி படங்களுக்கு பிறகு தமிழ் படங்களுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது. விஜய் படங்கள் கனடாவிலும், லண்டனிலும், இலங்கையிலும், தென்னாப்பிரிகாவிலும் திரையிடப்பட்டு ஒடுகின்றன. தமிழ்நாட்டில் டூபாக்கூரான மாதவன், சதா நடித்த "பிரியசகி" தென்னாப்பிரிகாவில் நூறு நாட்கள் தாண்டி ஒடியிருக்கிறது. ஆக தமிழ்படங்களுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது. சும்மா யாரும் பணம் முதலீடு செய்வது இல்லை என்பது வெற்று கதை. அந்நியன் படத்திற்கு ஐடிபிஐ முதலீடு செய்திருக்கிறது. நிறைய தெலுங்குப் படங்கள், ஹிந்தி படங்கள் இப்போது வங்கிகளிடமிருந்து கடன் பெற்று படங்கள் தயாரிக்கின்றன. கமலுக்கு இருக்கும் brand powerக்கும் market acceptatnce ற்கும் கண்டிப்பாக வங்கிகள் கடன் கொடுக்கும். நான் போனாலாவது மதிக்க மாட்டார்கள். கமல் போனால் கண்டிப்பாக கொடுப்பார்கள். ஒரு வாதத்திற்கு வங்கிகள் வெறுமனே 10 கோடி கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

கமலினை வைத்து படமெடுப்பவர்கள் குறைந்தது 8-10 கோடியினை கையில் வைத்துக் கொண்டு தான் எடுக்கிறார்கள். ஆக தமிழ் சினிமா சந்தையிலேயே கமலுக்காக குறைந்தது 10-12 கோடிகள் முதலீடு செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து எடுக்கவேண்டும் என்கிற பிடிவாதத்தோடு இருப்பதால், வெளியாட்கள் குறைவாக தான் முதலீடு செய்வார்கள் என்றொரு வாதத்தினை வைத்தாலும், 6 கோடிகள் கமலினை நம்பி முதலீடு செய்ய முன்வருவார்கள். இங்கும் ஒரு 5 கோடி வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

வட இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் corporatise ஆகிவிட்டன. யாஷ் ராஜ் பிலிம்ஸ், பிரிட்டிஷ் நந்தி பிலிம்ஸ், ஐட்ரிம் ப்ரொடக்ஷன்ஸ், ராம் கோபால் வர்மா பிலிம்ஸ் என்று தொடர்ச்சியாக நிறுவனங்களை பட்டியிலிடலாம். இதுதாண்டி, விது வினோத் சோப்ரா, கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, ராம் கோபால் வர்மா போன்ற இயக்குநர்களே 25 கோடி ருபாய் வரையிலான முதலீட்டினை கொண்டு வரும் திறன் படைத்தவர்கள். இன்றைக்கு ஆட்லாப்ஸினை அனில் அம்பானி நிறுவனம் கையகப்படுத்தி விட்டது. அவர்கள் இந்தியாவெங்கும் திரையரங்குகளை கையகப் படுத்தும் திட்டத்தில் சுமார் 1500 கோடி ரூபாய்களை செலவழிக்கப் போகிறார்கள். தென்னிந்தியா முழுவதும் மிகவும் தெரிந்த முகம் கமல். ஏற்கனவே 'விருமாண்டி'யினை ரிலையன்ஸ் இன்போகாம் மூலம் விளம்பர படுத்தியிருந்தார்கள். அந்த நட்பில், கண்டிப்பாக அட்லாப்ஸினை இன்னொரு தயாரிப்பாளாராக கொண்டு வரலாம். அப்படிக் கொண்டு வந்தால், ஒரே கல்லில் நிறைய மாங்காய்களை அடிக்கலாம். இந்தியா முழுவதும் சப்-டைட்டில் வைத்து படத்தினை ரிலிஸ் செய்யலாம். கிராஸ் ஒவர் படங்கள் இந்தியா முழுக்க பார்க்கப்படும்போது, கமலின் முகத்திற்காக கண்டிப்பாக மல்டி-ப்ளக்ஸுகளில் குறைந்தது ஒரு வாரம் ஒடும். ஹிந்தி சினிமாக்களின் தற்போதைய அடிப்படை மிக சுலபம். ரிலிஸ் செய்யும் போது நிறைய திரையரங்குகளில் ரிலிஸ் செய்வது. போனமாதம் மும்பையில் இருக்கும்போது தான் Bluffmaster ரிலிஸ்ஸானது. குறைந்தது ஒரே நாளில் 500க்கும் மேலான காட்சிகள் இருக்கும். ஆக, வெள்ளி,சனி, ஞாயிறு மூன்று நாட்களில் 1500 காட்சிகள் (ஒரு காட்சிக்கு 300 பேர்கள் என்று வைத்துக் கொள்வோம்) - குறைந்தது 100 ரூபாய் டிக்கெட் என்று வைத்தாலும் (அங்கே 300 ரூபாய்க்கெல்லாம் டிக்கெட்கள் இருக்கிறது) ஆக மும்பையில் மட்டும் வீக் எண்ட் கல்லா 6 கோடி. இந்தியா முழுக்க வென்றால் கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். இதுதாண்டி, அம்பானியோடு இருந்தால், ரிலையன்ஸ் செல்பேசியில் விளம்பரம் வரும். ரிங் டோன்கள் விற்கலாம். கேம் (Marudhanayagam Game) ஆடச் சொல்லலாம். இதிலெல்லாம் வருமானமிருக்கிறது. ஆக அட்லாப்ஸ் மட்டுமே குறைந்தது 25 கோடி கொண்டு வரும். ஆக இப்போதே 40 கோடி ரூபாய்கள் கையில் இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த பிஸினஸ் வேர்ல்டு பார்த்தால், ஹிந்தி ஸ்டுடியோக்கள் 1000 கோடி ரூபாய்களை குறி வைத்து நகர்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியும். இங்கே நாம் 50 கோடி ரூபாய்க்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் அது சோம்பேறித்தனம். பொறுபில்லாத தன்மை.

கமல் ஒரு வேளை வட இந்திய நிறுவனங்கள் இதை புரிந்துக் கொள்ளாது என்று நினைத்துக் கொண்டால், சோனி, ட்வெண்டியத் சென்சூரி பாக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களோடு பேசலாம். இந்திய படங்களில் முதலீடு செய்வது என்பது இப்போதைக்கு பன்னாட்டு நிறுவனங்களின் மிக முக்கியமான காரியம். காரணம் சந்தை. இது ஒன்றும் புதிதல்ல. 'ஆளவந்தானின்' ஆடியோ உரிமை யூனிவர்சல் என்கிற பன்னாட்டு நிறுவனத்திற்கு தான் போனது. ஆக, வழிகள் இருக்கின்றன. பன்னாட்டு நிறுனங்களின் இன்னொரு லாபம், உலகளாவிய தொழில்நுட்ப கலைஞர்கள் கிடைப்பார்கள். நினைத்துப் பாருங்கள், கமலால், ரான் ஹாவர்டையோ, ரிட்லி ஸ்காட்டினையோ, ராபர்ட் ஸெமிக்ஸையோ convince பண்ண முடிந்தால், உலகளாவிய சந்தையினை குறிவைத்து படத்தினைப் பார்க்கலாம். கண்டிப்பாக இந்த இயக்குநர்களின் சம்பளமே பல மில்லியன் டாலர்கள் இருக்கும். ஆனால், அதற்கான சந்தை இருக்கும். மெல் கிப்சனின் Passion of the Christ [அரமிக் மொழி] ஆங்கில சப்-டைட்டில்களோடு தான் உலகமெங்கும் வெளியாகி சக்கைப்போடு போட்டது. ஆக ஒரு தமிழ் படமோ, இல்லை, இதை பிரெஞ்சில் எடுத்து, பிரெஞ்சு படமாகவோ இருந்தாலும், உலக சந்தை கிடைக்கும். ஆக, இது நடக்காது என்பது இல்லை. இப்போதே அமெரிக்க ஸ்டுடியோக்கள் சீன திரைப்படங்களை குறிபார்க்க தொடங்கிவிட்டன. ஆக, இந்திய படங்கள் வெகு தொலைவில் இல்லை. இத்தனைக்கும் காரணம், உலகமெங்கும் வேகமாக பரவிவரும் ஆசிய வந்தேறிகளின் கூட்டம். ஆக, ஆசிய மக்களுக்கு பொழுதுபோக்கு என்பது மிகப் பெரிய சந்தை. ஏற்கனவே, இந்திய நிறுவனங்கள் ஹிந்தி செல்பேசி ரிங் டோன்களை லண்டனிலிருக்கும் வோடாஃபோனுக்கு விற்று காசு பார்க்கின்றன. ஆக இதற்கு உலக சந்தையிருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே வந்தால் பணம் ஒரு பிரச்சனையே இல்லை. சந்தையும் பெருகும்.

இது தாண்டி, ஸ்டீபன் சோடன்பர்க் Bubble செய்வது போல செய்யமுடியுமா என்று பாருங்கள். படம் திரைக்கு வந்த நான்காவது வாரத்தில் டிவிடி கொண்டு வாருங்கள். படத்தினை மூன்று மொழிகளில் தயாரியுங்கள். மூன்று மொழி சேனல்களுக்கு விற்று விடுங்கள். தமிழக அரசோடு பேசுங்கள். கான் சாகிபு உலாவிய இடங்களை தேடி கண்டறிந்து, அதை வரலாற்று சுற்றுலா தளமாக அறிவிக்கச் சொல்லுங்கள். 2006-இல் இருந்துக் கொண்டு வெறுமனே ஜல்லியடிக்காதீர்கள். ஹிந்தியில் தம்மாத்தூண்டு பசங்கள் எல்லாம், நியுயார்க் மேயரோடு பேசி funding வாங்குகிறார்கள். உங்களின் மரியாதைக்கு கண்டிப்பாக நிறைய விஷயங்களை செய்ய முடியும், நீங்கள் நினைத்தால்.

இதெல்லாம் கமலுக்கு தெரியுமா, தெரியாதா என்கிற விவாதத்தில் நான் இறங்க விரும்பவில்லை. இவ்வளவு வழிவகைகள் இருக்கின்றன என்பது தான் விசயம். இதற்கு சில விஷயங்களை கமலும் செய்யவேண்டியதிருக்கும். கமல் செய்ய வேண்டியதெல்லாம், முதலில் ராஜ்கமல் பட நிறுவனத்தினை corporatise பண்ணுவதுதான். சும்மா எதற்கும் சந்திர ஹாசனையும், தன்னையும் முன்னிறுத்தாமல், professional ஆட்களை கொண்டு வரவேண்டும். ராஜ்கமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தயாரிக்கலாம். கமலுக்கு மிகவும் ஜுனியரான ராதிகாவால் ராடன் நிறுவனத்தினை 100 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள நிறுவனமாக உயர்த்த முடிந்த போது, கமலால் கண்டிப்பாக முடியும். இவையனைத்தும் சொல்லுவதற்கு காரணம், கமலின் மிகத் தீவிரமான ரசிகர்களில் ஒருவன் என்கிற முறையிலும், ஒரு தமிழனின் (கான் சாகிபு) கதை [இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பல்வேறு இனக்குழுக்களின் வரலாற்றில் இதுவும் ஒன்று] இப்படி வெறுமனே காகிதங்களுக்குள் சிறைப்பட்டிருக்கக் கூடாது என்கிற அக்கறையும் தான் காரணம். இதையும் தாண்டி, தமிழ் சினிமா என்பது கோடம்பாக்கத்தில் தொடங்கி அங்கேயே முடிந்து போவதல்ல. நம்மை விட சின்ன தேசங்கள் எல்லாம் ஆஸ்கார் பரிசுகள் வாங்கும்போது நாம் இன்னமும் தகுதி சுற்றுக்குள்ளே நுழைவதையே கொண்டாடிக் கொண்டிருக்கும் அவலம் மாற வேண்டுமானால், நாம் முதலில் நம் கட்டுப்பெட்டித் தனங்களிலிருந்து வெளியே வரவேண்டும். அதற்கு மேற்சொன்ன வழிகளில் எதையாவது பற்றிக் கொண்டு மேலே வந்து தான் ஆகவேண்டும். உலகளாவில் முன்னேற வேண்டுமானால், காரியம் முக்கியம், சும்மா காரணங்களை அடுக்குவதை விட.

இதற்கு பின்னாலும், இன்னுமொரு பேட்டியில் கமல் மருத நாயகத்தினைப் பற்றி கவலைப்படுவாரானால், அக்கவலையில் என்னளவில் popularity, image building தான் இருக்கிறது, உண்மையான அக்கறை இல்லை என்றுதான் சொல்வேன். கொஞ்சம் அதிகப்படியாய் இருந்தாலும், All i can show is my middle finger.

Comments:
தலைவரே... ரொம்ப டீப்பா இறங்கியிருக்கீங்க... என்னோட்டா ரெண்டு நயா பைசா :-)

1. மருதநாயகம் வராது. கமல் நெனைச்சால் வர வெக்க முடியும். ஆனால், i presume, he has lost interest. கமல் அந்தப் படத்தை எடுத்த போது, பீரியட் படங்கள் எல்லாம் ரொம்ப அபூர்வம். ஆனால் இப்போது நிலைமை வேறு. பகத் சிங் பத்தி, மூணு பெரிய பட்ஜெட் படங்கள், வெவ்வேற நடிகர்களை வெச்சு வர மாதிரியான சூழ்நிலை.

2. மருதநாயகத்துக்காக சேத்து வெச்சிருந்த எனர்ஜி மொத்தத்தையும், ஹே ராமுக்காக செலவழிச்சாச்சு. ஹே ராம் ஓடியிருந்தாலாவது, மருதநாயகம் எடுக்கறதுக்கு ஒரு இன்சென்ட்டிவ் உண்டு. மருதநாயகம் ஊத்திகிச்சுன்னா? மங்கள் பாண்டே, ஊத்தி மூடினாலும், ராகேஷ் மெஹ்ரா மாதிரி ஒருத்தர் வந்து ரங் தே பசந்தி எடுப்பார். ஆனால், நம்ம தமிழ் சினிமாவோட எகனாமிக்ஸ் வேற.

3. தனிப்பட்ட முறையிலே, இது போல மேக்னம் ஒபஸ் படம் மீதெல்லாம் எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை. என்ன மாஞ்சு மாஞ்சு எடுத்தாலும், இந்த சீனை, அந்த ஆங்கிலப் படத்துலேந்து சுட்டாங்க, அந்த சீனை, இந்த கொரியா படத்துலேந்து சுட்டாங்கன்னு குறை சொல்லத்தான் போறாங்க.. நம்மோட பலம், விஷ¤வலாக மிரட்டறதிலே இல்லை. ஸ்க்ரிப்டிலே இருக்கு. இது வரை மருதநாயகம் பற்றி கேள்விப்பட்டதிலேந்து, அது, பார்த்து மிரள வைக்கிற மாதிரியான படமாகத்தான் ப்ரொஜக்ட் செய்யப்பட்டிருக்கிறது.

4. இவ்வளவு கூத்துக்குப் பிறகு, மருதநாயகத்தை எடுக்காமல் இருக்கிறதுதான் பெட்டர். எடுக்கறது, தினத்தந்தியின் கன்னித்தீவுக்கு முற்றும் போடுவதற்கு சமம். அதை விட, கௌதம் மாதிரி புது பசங்களோட படத்திலே நடிக்கலாம். திரும்ப திரும்ப, கே.எஸ்.ரவிக்குமார், கிரேசி மோகன் கும்பலோட, படம் எடுக்கிறதை விட, இது பெட்டர்.
 
கமல் ரசிகர் சொல்லுவதும் ஞாயமாகத்தான் இருக்கு .கீழே ரஜினி ரசிகர் சொல்லுவதும் சரியாத்தான் இருக்கு .என்னைப்போல சாதாரண கமல் ரசிகர்களுக்கு குழப்பம் தான் மிச்சம்..ரஜினிக்கு அரசியல் நுழைவு .கமலுக்கு மருதநாயகம் .
 
// நம்மை விட சின்ன தேசங்கள் எல்லாம் ஆஸ்கார் பரிசுகள் வாங்கும்போது நாம் இன்னமும் தகுதி சுற்றுக்குள்ளே நுழைவதையே கொண்டாடிக் கொண்டிருக்கும் அவலம் மாற வேண்டுமானால், //

நாராயணன்,
நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனா இந்த ஆஸ்கார் விசயத்துலதான் சொதப்பபீட்டிங்க.

1.ஆஸ்கார் என்பது அமெரிக்கத் திரைப்படங்களுக்கான அமைப்பு.
2.உப்புக்குச் சப்பாக பிறமொழித் திரைப்படங்கள் வரிசையில் ஒரே ஒரு படத்தை மட்டும் எடுத்து அதற்கும் பரிசு கொடுப்பர்கள்.
3.இது ஒலிம்பிக் போல் அனைத்து நாடுகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் போட்டி அல்ல.
4.இது பிலிம்பேர் விருதுக்கு ஸ்டீபன் ஸ்பில்பர்க் போட்டிபோடுவது போல.
 
கல்வெட்டு அவர்களே ,நீங்கள் சொல்லுவது ஏறத்தாழ உண்மை..ஆஸ்கார் விருதுக்கு உரிய பிரிவுகளில் 'வெளிநாட்டு சிறந்த படம்' என்ற ஒரே ஒரு பிரிவில் மட்டுமே மற்ற நாட்டு படங்கள் போட்டி போட முடியும் .மற்ற படி சிறந்த நடிகர் விருதெல்லாம் ஹாலிவுட் படத்திற்கு மட்டும் தான்.
 
Do you believe Kamal isn't aware of these funding avenues?

It is rumored some where that controversies on the real story of khan sahib was brought to Kamal's notice after he started filming the story. So, he is using the ruse of 'lack of finance' to abandon the project.
 
இரண்டு காமெண்டுகளை பெரிதும் ரசித்தேன் :-)))

----இந்த சீனை, அந்த ஆங்கிலப் படத்துலேந்து சுட்டாங்க, அந்த சீனை, இந்த கொரியா படத்துலேந்து சுட்டாங்கன்னு குறை சொல்லத்தான் போறாங்க----
&
----பிலிம்பேர் விருதுக்கு ஸ்டீபன் ஸ்பில்பர்க் போட்டிபோடுவது போல---

இந்த வார ஆனந்த விகடனில் ஹிந்தி சினிமா குறித்த ஞாநி கட்டுரை படித்தீர்களா?

கருத்து சொல்லாவிட்டால் கீபோர்ட் என்னைத் திட்டும்....

1. மங்கள் பண்டே வருவதற்கு முன் ஆமிர் 'லகான்' ஹிட் கொடுத்திருந்தார். இரண்டரை வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு பெரிய ஹீரோ படம் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது. பாபா தோல்விக்குப் பின்பு ரஜினி காத்திருந்ததும் Rajni Fatigue-ஐ தவிர்க்க பயன்பட்டிருக்கும்.

2. கமல்தான் படத்திற்கு எல்லாமே என்னும்போது கடன் கொடுப்பவர்களுக்கு தயக்கம் எழலாம். அதுவும் வெற்றிகரமான திரைக்கதையாளராகவோ, இயக்குநராகவோ அறியப்படாத நிலையில் உலக நிறுவனங்கள் நிச்சயம் risk diversification-க்கு வேண்டுகோள் விடுக்கும்.

3. ஸ்டீவன் சோடர்பெர்க் நல்ல உதாரணம். வித்தியாசமான பேர்வழி. புகழ் பெற்ற நண்பர்களைக் கைகோர்த்துக் கொண்டு ஓசியன்ஸ் 11,12 எடுப்பார். அட்வைஸ் வழங்காமல் ஆனால் செம சீரியஸாக ட்ராஃபிக் கொடுப்பார். மூன்று, நான்கு பேரை வைத்துக் கொண்டு மாற்றுசினிமாவாக 'பபிள்' பக்கம் ஒதுங்குவார்.

'பபிள்' இண்டி திரைப்பட வகையறா. போட்ட முதலும் குறைவு; முதலீடுக்கு மோசம் வைக்காமல் பணம் பட்டுவாட ஆகிவிடும்.

மருதநாயகத்தில் நடிக்க ரஜினி, விஜய், அஜீத் எல்லாம் தலையசைத்தாலும், கடைசியில் காலை வாரி விடலாம்; அல்லது முக்கிய ஏரியாக்களைக் கொடுக்குமாறு கேட்டு விடுவார்கள். நட்பை விட இமேஜும், சம்பளமும் முக்கியமாக கருதுகிறார்கள். ஸ்டீவனுக்கு இந்தப் பிரச்சினை கிடையாது (அல்லது வெகு குறைவு).

ஹிந்தியில் பல ஹீரோக்கள், ஹீரோயின்கள் சேர்ந்து நடிக்கும்போது, செலவு எகிறுவதில்லை. ஆனால், தமிழில் மார்க்கெட் இழந்தவர்கள்தான் பாசக்கிளிகளாக ஒரே படத்தில் தோன்றுகிறார்கள். நட்சத்திர அணிவகுப்பை மருதநாயகத்தில் கொண்டு வந்து, முதல் வாரத்தில் வசூலை அள்ளலாம் என்பதும் கஷ்டம்.

4. மெல் கிப்ஸன் எடுத்தது உம்மாச்சியின் கதை. அப்படி சொல்லித்தான் மேற்கத்திய உலகில் விற்றார். தேவாலயங்களுக்கும், பாதிரியார்களுக்கும் ப்ரிவ்யூ போட்டுக் காட்டி, புனித வெள்ளி சமயத்தில் 'படத்திற்கு சென்று தரிசிக்கு'மாறு சர்ச்சுக்கு வருபவர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. முதல் வாரம் படம் சூப்பர் ஹவுஸ் ஃபுல்லானதுக்கு இதுதான் காரணம்.

இரண்டாவது வாரத்தில் இருந்து, 'அப்படி என்ன இருக்கிறது?' என்னும் ஆர்வத்தில் மற்றவர்களும், தூஷிக்க விரும்புபவர்களும் செல்ல ஆரம்பித்து ஒட்டோ ஒட்டு என்று ஓட்டி விட்டார்கள்.

'ஹே ராம்' கூட அப்படி ஒரு முயற்சிதான். காந்தியைக் கடுமையாக விமர்சிக்கும் கதை என்னும் பிம்பத்தை உலாவ விட்டார். இதே போல் தும் படத்தில் மனீஷா துகிலுரிந்திருக்கிறார் என்று பரபரப்பு கிளப்புவது போல், 'ஹே ராம்' பிரச்சினையும் பிசுபிசுத்து விட்டது.

என்னவாக இருந்தாலும் கமலஹாஸனால், 'அம்மா'வுக்கு எதிராக ரஜினி மிரட்டுவது மாதிரி buzz செய்ய முடியாது ;-)

கடைசியாக, உங்களை மட்டும் ராஜ்கமலின் COO-வாக ஆக்கிவிட்டால், நிச்சயம் மருதநாயகம் ஆரம்பிக்க வைத்துவிடுவீர்கள். அவ்வளவு விதவிதமான ஐடியா வெள்ளம்.
 
நாராயண்ஜி,

தமிழ்ப் படத் தயாரிப்பு நிறுவனங்களில் பங்குகள் விற்று படமெடுக்கக்கூடியவகள் எத்தனை பேர் தேறுவார்கள். ஜீவி சாஹேப் பங்குதாரர்கள் / பங்குகளை வாங்கியவர்களைச் சேர்த்ததாகக் காற்றில் என்றோ ஒரு செய்தி கிடைத்தது. தஞ்சைக்கு அருகிலுள்ள ஒரு ஊரிலிருந்து தெரிந்த நபர் துபாய்க்கு வந்து பங்குதாரராகப் படமெடுப்போம என பங்கொன்றுக்கு ஐம்பதாயிரம் வீதம் வாங்கிச் சென்றார். படம் எடுத்தாரா? முதலீடு செய்தோர்களுக்கு லாபம் கிடைத்ததா போன்ற சமாசாரங்களில் 'ஃபாலோ அப்' எனக்கு இல்லை.

அந்நியனில் வங்கி முதலீடு இருந்தது.

ஆனாலும் ஜி, இன்னமும் நமது படத் தயாரிப்புகள் வெள்ளை வேட்டி ஃபைனான்சியர்களிடம்தான் இருப்பதாக எனது எண்ணம்.

இதோ அக்பர் கான் நூறுகோடி செலவிட்ட தாஜ்மஹலும் அடி வாங்கிவிட்டது. இருப்பினும், பிரகாஷ் சொல்வதுபோல,
//மங்கள் பாண்டே, ஊத்தி மூடினாலும், ராகேஷ் மெஹ்ரா மாதிரி ஒருத்தர் வந்து ரங் தே பசந்தி எடுப்பார். ஆனால், நம்ம தமிழ் சினிமாவோட எகனாமிக்ஸ் வேற.// இப்படி எதாவது நடக்கும்.

பாத்திரத் தேர்வுகளிலும் அங்கே வேறு வழக்கம். பகத் சிங்கின் அஜய் தேவ்கன் கம்பெனியில் வந்தாலும் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளப் போவதில்லை. நமது கூட்டல் கழித்தலில் இப்படி மாறுபட்ட பாத்திரப் படைப்புகளை ஏற்றுக்கொள்ளும் ரசிக மனப்பான்மை இன்னும் வளரவில்லையென்றே தோன்றுகிறது. இந்தக் கூட்டிலிருந்து வெளியே வந்தவர் கமல் மட்டுமே. (எம்.ஜி.ஆரும் 'சபாஷ் மாப்பிள்ளே'யை சிரிப்புப் படமாக முயற்சி செய்துவிட்டு பிறகு இதெல்லாம் வேண்டாம் என்று 'புரட்சி' சமாசாரத்திற்கே மீண்டும் சென்றாராம்).

மருதநாயகத்தை நாராயண் / நாம் விரும்புவதற்கும், பெருவாரியான தமிழ் ரசிகர்கள் விரும்புவதற்கும் வித்தியாசம் இதுதான்.

ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுத்து இந்திய அளவில் வெளியிடுவது கமலுக்குத் தெரியாதது அல்லவே. அபூர்வ சகோதரர்கள் - அப்பு ராஜா அப்படித்தானே எடுக்கப்பட்டது. இந்தியத் திரையில் வடக்கு தெற்கு அரசியல் நீண்ட நாள்களாகவே இருக்கிறது (ராம் அவுர் ஷ்யாம் - எங்க வீட்டுப் பிள்ளை தயாரிப்புக்குப் பிறகும் நாகிரெட்டி வடக்கில் குறிப்பிடத்தக்க படங்களைத் தயாரிக்கவில்லை என்பது தெளிவு).

மருதநாயகம் அதில் மாட்டிக்கொள்ளுமோ எனத் தயங்குகிறாரோ.

அன்புடன்
ஆசாத்
 
இங்கே நான் சொல்ல வருவது சரியாக சொல்லப்படவில்லை என்று நினைக்கிறேன். படமெடுக்கும் dynamics மாறிவிட்டது என்பது தான் வாதம். வெள்ளை வேட்டி ஃபைனான்சியர்களும், ஜிப்பாப் போட்ட மார்வாடிகளும் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். ஆனால் பிரச்சனை அங்கேயில்லை. நாம் மாறாமல் இருப்பதை விட மோசமான சிந்தனை வேறெதுவும் இருக்கமுடியாது.

படங்களை வெறுமனே படங்கள் என்கிற வகையில் பார்த்த காலங்கள் கண்டிப்பாக மலையேறி விட்டது என்பதை முதலில் ஒத்துக் கொள்வோம்.பீரியட் படங்களுக்கான காலம் முடிந்துவிட்டது என்றெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒதுக்க முடியாது. 4 பெரிய பட்ஜெட் பிரியட் / ராஜா காலத்திய படங்கள் ஊத்திக்கொண்டது ஒரு பக்கமென்றால், பக்கா கமர்சியல் இயக்குநர் என்று பேரெடுத்த சங்கர் ஒரு வரலாற்று/ராஜா படம் தயாரிக்கிறார். ஆக மார்க்கெட் எல்லாவற்றுக்கும் இருக்கிறது. கமல், இதனை Braveheart பார்த்த பிண்ணணியில் தான் யோசித்திருக்கிறார் என்று எங்கோ படித்திருக்கிறேன். ஆனால், இங்கே நான் சொல்லவிரும்புவது தமிழ் படங்களின் சந்தை என்பது பற்றிதான்.

இந்திய சினிமாவுக்கு venture capital எல்லாம் வந்துவிட்டது. யாருமே அறியாத, சினிமா பற்றி பெரிதாக தெரியாத நாகேஷ் குக்கூனூர் எல்லாம் Hydrabad Blues மாதிரியான படங்கள் எடுத்து, நம்பகத்தனமை சம்பாதித்து இன்றைக்கு Iqbal உலகப் படவிழாக்களில் கலந்து கொள்கிறது என்றால் parallel cinema விற்கும், கமர்சியல் சினிவாவிற்குமான எல்லைகள் குறுகுகின்றன என்று அர்த்தம். இதை வேறு விதமாகவும் பார்க்கலாம். பெருகிவரும் மல்டி பள்க்ஸ் சாம்ராஜ்யத்தில், எல்லா படங்களுக்கும் ஒரு இடமிருக்கும். இங்கே சத்யம் காம்ப்ளெக்சில் ஸ்டுடியோ 5 என்று ஒரு அரங்கு இருக்கிறது. வெள்ளி தோறும் ஒரு சிறந்த படத்தினை வெளியிடுகிறார்கள். கல்லா குறைவு என்று சொன்னாலும், சந்தை இருக்கிறது.

கமலுக்கு ஆர்வம் போய்விட்டது என்று பிரகாஷ் சொல்வதை ஒத்துக் கொள்ள மாட்டேன். கமலுக்கு ஆர்வமிருக்கிறது. அதே சமயத்தில், ஆர்வத்தினை களமிறக்கக்கூடிய support team இல்லாமலிருக்கலாம். ஒரு படம் ஒடாததினால், மற்ற படங்கள் வாராது என்பது எல்லாம் ஹம்பக். தமிழ் சினிமா நிலை பார்த்தால் தெரியும்.

இங்கே Professionalism கிடையாது. திட்டமிடல் கிடையாது. ராம் கோபால் வர்மா இரண்டு மாதத்துக்கு ஒரு படம் விடுகிறார். 10க்கு 3 ஹிட் ஆனாலும் லாபம்.திரைப்படங்களை FMCG போல பார்த்தாக வேண்டிய காலம் வந்துவிட்டது. சும்மா, கலைச்சேவை என்று சொல்வதெல்லாம் ஜிகினா வேலை. வொர்க்கவுட் ஆகாது.
 
I read over your blog, and i found it inquisitive, you may find My Blog interesting. So please Click Here To Read My Blog

http://pennystockinvestment.blogspot.com
 
நாராயண்ஜி,

புரிந்துகொண்டேன்.

பூனைக்கு யார் மணி கட்டுவது பிரச்சனை இதிலும் இருக்கும்போலத் தோன்றுகிறது. ஃபைனான்சியர்களை ஒரு வழி பண்ணி தொழில்முறை முதலீட்டாளர்களைக் கொண்டு வரலாம். ஆனால், அவர்கள் வருவார்களா?

தொழில்முறை முதலீட்டாளர்கள் ஒதுங்கியிருப்பதற்கான காரணங்களுள் சில சங்கச்சங்கதிகள். தமிழகத்திலிருக்கும் அனைத்து சங்கங்களையும் பட்டியல் போட்டாலும், தென்னக திரைத்துறையில் இருக்கும் சங்கங்களின் எண்ணிக்கையை மிஞ்சுமா :) வடபழனி முருகன் கோயிலுக்கு எதிர் தெருவில் ஸ்டண்ட் நடிகர் சங்கம், நூறு அடி ரோட்டில் ஃபர்னீச்சர் கடைகளைத் தாண்டி வந்தால் இயக்குனர்கள் சங்கம், வடபழனி பஸ் ஸ்டாண்ட் வந்தால் துணை நடிகர் சங்கம், உள்ளே குமரன் காலனிக்குப் போனால் எழுத்தாளர் சங்கம், ப்ரொடக்ஷன் மேனேஜர்கள் சங்கம், மன்னிக்கவும், ஹபீபுல்லா சாலை பக்கம் போகவில்லை.

சங்கங்களின் கைகள் அத்தனை ஓங்கியில்லாத சமயத்தில் ஸ்ரீதரே ஸ்டண்ட் நடிகர்களிடம் வருத்தம் தெரிவித்ததான வதந்திகள் உண்டு. எதற்குத் தெரியுமோ? இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் வைக்காமல் கமலும் ரஜினியும் இரண்டு குத்துகளை குத்திக்கொண்டது. வதந்தி இப்படியிருக்க, இன்றைய நிலையில், ஒரு சிறு பிரச்சனை என்றாலும் மீண்டு வெளியே வருவது பெரும்பாடு.

இதில் எங்கே தொழில்முறை முதலீட்டாளர்கள் தைரியமாக உள்ளே வருவது? யாரேனும் 'பெரிய கை' வந்தால் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாம்.

கமல் பெரிய கைதான். ரசிகர் மன்றத்தின் உதவியில்லாமல் அ.ச.வின் வெற்றி விழாவைக் கொண்டாடிக் காட்டியவர். இப்போதைக்கு, நீங்கள் சொல்வது போல், அவரைப் போன்ற பெரிய கைகளால்தான் தொழில்முறை முதலீட்டைக் கொண்டு வர முடியும்.

அன்புடன்
ஆசாத்
 
This comment has been removed by a blog administrator.
 
நாரயண்,

இப்படி தொலைக்காட்சி செவ்விகளில் "மருதநாயகத்துக்கு"
பஞ்சப்பாட்டு பாடுவது குறித்து விமர்சிக்கலாம்தான் என்றாலும்,
எந்த அளவுக்கு, எந்த வழிகளில் ,எத்தனை கோடிகளை பிரட்டலாம் என்பதெல்லாம் நாம் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்.

கமலுக்காக நாம் ரிஸ்க் எடுக்க முடியாது, அதாவது
'இப்படி ரிஸ்க் எடுங்கள்' என்று நாம் சொல்ல முடியாது!!
வேண்டுமானால் "மருதநாயகத்தைப் பத்தி பேசாதே!!" என்று
பேரணியோ , இலக்கியக் கூட்டமோ நடத்தலாம். ;-)
 
Nan kamal rasikanthan annalum neengal itta kuttuvuku amothikiran pinnutam ettavargal rathika radan 100crores patri evarum solla villai, radan oru example pothum kamal maruthanayakam chokku solkirar enbathadku,mudiyumna mudiyum, maruthanayakam en kanavu endru solli vittu ?????
sorry anbarkala ennaku englishil elutha varathu, i dont tamil typing
 
நாராயணன்,

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். "புலி வருது" மாதிரி அடிக்கடி இந்தப் பஞ்சப்பாட்டைப் பாடுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

மனமிருந்தால் முடியும். பண ரீதியாக இது மிகப்பெரிய ரிஸ்க் என்பதில் சந்தேகமில்லை. விக்ரம் போன்ற ஒன்றுமில்லாததுக்கு அப்போதே (1986) ஆறு கோடி செலவழித்திருக்கும் கமலால் மருதநாயகத்தைக் கொண்டுவர முடியும். ஆளவந்தானுக்கும் 9 கோடிக்கு மேல் செலவாகிற்று என்று கேள்விபட்டேன்.

ஒருவேளை ஹே ராம் போன்று இதுவும் பெரிய சர்ச்சைகளில் சிக்கிவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையாக இருக்கலாம்.

கலையைக் கலையாக இங்கு பார்க்காமல், "எப்படி இந்தப் பெயர் வைக்கப் போச்சு" என்று சண்டியர்த்தனம் செய்பவர்களும் ஒத்து ஊதிப் பெரிதாக்கும் மீடியாக்களும் நிறைந்த சந்தையில் மருதநாயகத்திற்கு எந்த அளவிற்கு ஊக்கம் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான். கான்சாகிப் பற்றி எதிர்மறையாகவும் சொல்லி இக்கதையைப் படமாக்கக் கூடாது என்று லேசாக எதிர்ப்பு அலையும் ஏற்கெனவே வந்திருக்கிறது. மிகப் பெரிய சவாலே "உள்ளதை உள்ளபடியே" சொல்ல முடியுமா என்பதாகவும் இருக்கலாம்.

இன்னொன்று - கமலுக்கு பிரம்மாண்டங்கள் தேவையில்லை. சாணக்யன் (மலையாளம்), மஹாநதி, குருதிப்புனல், நம்மவர் போன்ற எளிய படங்களிலும் அவரால் மின்ன முடியும். கோடிக்கணக்கில் கொட்ட வேண்டியிருக்காது. ஆளவந்தான் மாதிரி அநியாயமாக ரத்தம் சிந்திய உழைப்பும் விரயமாகாதிருக்கும்.

ஏற்கெனவே ப்ரேவ் ஹார்ட் போன்ற பிரம்மாண்ட ஹாலிவுட் படங்கள் வந்துவிட்டபடியால், இதை எவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்தாலும் எந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியே.

ஷாங்காய் நைட்ஸ்ஸில் ஜாக்கி சந்தைப் பகுதியில் மரப்பெட்டிகளை வைத்து வித்தை செய்துகொண்டே சண்டைசெய்ததை வசூல்ராஜாவில் (கருமமான க்ராபிக்ஸ்) காப்பியடித்த மாதிரி எளிய வகைப் படங்களை எடுப்ப்துதான் இப்போதைக்கு அவருக்கு வசதிப்படும் போல.

வேட்டையாடு விளையாடு இன்னொரு ஆளவந்தானாக ஆகாமலிருக்க பிரார்த்திக்கிறேன்.

உண்மையான வலி என்னவென்று அவருக்குத்தான் தெரியும். இம்மாதிரி பதிவுகளையும், பின்னூட்டங்களையும் அவர் படிக்க நேரிட்டால் இன்னும் வலிக்கலாம்.

அவருக்குத்தான் உண்மை நிலவரம் தெரியும். அதுவரை "நிதி கிடைக்கவில்லை; கிடைத்தால் எடுப்பேன்" என்ற வசனத்தை அவர் பேசாதிருப்பதே உத்தமம். அதேபோல மருதநாயகத்தைப் பற்றி அவரிடம் கேட்காமலிருப்பதும் உத்தமம்!

-கமல் ரசிகன்
 
இன்னும் கமல் வந்து பின்னூட்டமிடவில்லையே?
முன்பொருமுறை வெங்கடேஷ் பதவில் கமல் வந்து கருத்துச் சொல்லி எல்லோரையும் அசத்தியதுபோல இதிலும் செய்வாரென்று நம்புகிறேன்.
 
தாத்தா! நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?

தெரியலயேப்பா!

இருபது வருஷமா ராயல் பில்ஹார்மானிக் சிம்பொனி னு ஏமாத்திகிட்டு இருக்காரே இளையராஜா அவர சிம்பனி விடச்சொல்லு நான் மருதநாயகம் எடுக்கறேன்.

இதெல்லாம் பெருசுங்க பிலீம் லிஸ்ட் தலீவா!

* * *

சீரியஸாக; நாராயண், இதெல்லாம் கவைக்கு உதவுற காரியமில்லை. சும்மா கலைச்சேவை அப்படின்னு சொல்லி பிலீம்வுட்றதுக்குத்தான் மதுரநாயக்கம் எல்லாம். அப்பப்ப, இலக்கியச் சேவை, நல்ல கதையெல்லாம் யாரும் படம் எடுக்கறதில்லை-ன்னும் சொல்லுவாரு. ஜிகினா சண்ட போட்டு முண்டா காட்டி ராஜாவாட்டம் வசூல் பண்ணின பணத்துல ராஜ்கமல் வழியா பாரலல் சினிமான்னு ஒன்னுரெண்டு புதுப்பசங்கள வச்சு ரெண்டு கோடில நல்ல கதைய தயாரிப்பாரான்னு மொதல்ல கேளுங்க. அப்புறமா மருதநாய்க்கம் முப்பதுகோடி இடியாப்பச் சிக்கலை அவுக்கறதப்பத்தி யோசிக்கலாம்.

இன்னும் மருதநாயகத்தைப் பத்திப் பேசுறத கேட்டுப்புட்டு சிரிச்சுப்புட்டுப் போகாம இப்படி உங்களால எப்படி சீரியஸா எழுதமுடியுது?
 
Please see the vettaiyaadu vilaiyaadu film review's. Kamal and Jothika went to overseas but Gowthami also followed them specially for fuck. please see.
 
kurudar dhesaththil oviyan padaiththaal enna, padaikkaavittaal enna?
panam mattum alla paarattum karanam thaan
paarvai varatum
pinnar padaikkalaam
 
//It is rumored some where that controversies on the real story of khan sahib was brought to Kamal's notice after he started filming the story. So, he is using the ruse of 'lack of finance' to abandon the project.//

உண்மைதான். யூசுஃப் கானின்(மருத நாயகத்தின் - இந்த வார்த்தைக்குப் பின்னே அரசியல்/ஏமாற்று ஒளிந்துள்ளது, அது பற்றி விரிவாக எப்போதேனும் எழுத உத்தேசம்) சரித்திரத்தை 'உள்ளது உள்ளபடி' எடுத்தால் நிறைய கூக்குரல்கல் எழும். படமும் ஓடாது.

யூசுஃப் கானின் சரித்திரம் என்னிடம் உள்ளது(அவரைப் பற்றி வெளிவந்த முதல் நூல் - வெளிவந்து ஒரு நூற்றாண்டு இருக்கலாம்). அப்பட்டமான மதவெறியன்(ர்) மருதநாயகம் என்பதே அந்த சரித்திரத்திலிருந்து நான் அறிவது - மத விஷயத்தில் வேறெந்த முஸ்லிம் மன்னனுக்கும் சளைத்தவன் அல்ல இந்த யூசுஃப் கான்.

உதாரணமாக, திப்பு போன்ற மன்னர்கள் கூட தாம் ஆண்ட பகுதிகளில் இருந்த கோவில்களுக்கு கொடைகள் கொடுத்திருக்கின்றனர். ஆனால் யூசுஃப் கான் எந்த இந்துக் கோவிலுக்கும் கொடையளிக்கவில்லை(மீனாட்சியம்மன் கோவிலுக்கு தானம் அளித்ததாகச் சொல்வது பொய்). இந்துக்களைப் பற்றிய தரக்குறைவான வாசகங்களையும் பயன்படுத்தியுள்ளான்(ர்).

இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் படங்களை கமல் எடுத்துத் தள்ளட்டும் - வரவேற்கிறேன். ஆனால் சரித்திரப் புரட்டி திரித்து, கூட்டம் கூட்டமாக தமிழர்களைக் கொன்று அவர்களை 'ஷைத்தான்கள்' என்று விளித்த ஒரு 'முன்மாதிரி முஸ்லிமை' ஹீரோவாக்க வேண்டாம்.

யூசுஃப் கான் பற்றிய பதிவை நேரம் கிடைக்கும்போது உள்ளிடுகின்றேன்.
 
ada paairaanigale,

avar sonnathu 40 to 50 crores in dollors not in indian rupees.
 
தல.. இந்த பதிவை பார்த்தீங்களா?
 
Here is one 'novel' that deals with the history of Khan Sahib.

"Pon andhi" by S. Balasubramanian.
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


情色貼圖,色情聊天室,情色視訊,情色文學,色情小說,情色小說,臺灣情色網,色情,情色電影,色情遊戲,嘟嘟情人色網,麗的色遊戲,情色論壇,色情網站,一葉情貼圖片區,做愛,性愛,美女視訊,辣妹視訊,視訊聊天室,視訊交友網,免費視訊聊天,美女交友,做愛影片

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
(法新社倫敦四日電) 英國情色大亨芮孟a片的公司昨天說,芮孟av日前成人影片av女優世,享壽八十二歲;這位身價上億的房地產日本av開發商,部落格a片經在倫成人av推出第一場脫衣舞表演。

成人網站
芮孟的財產估計av女優達六億五千萬英鎊成人影片(台a片av女優情色近四成人百億),由於他名下事業大多分布在倫敦夜生色情a片色情區蘇活區sex,因此擁有「蘇成人網站情色之王」的稱號。
部落格

他的公司「保羅芮成人影片孟集團」旗下發a片行多種情色雜誌,包括「Raavdvdzzle」、情色電影「男性世界」以及「Mayfair」。色情影片


芮孟本名傑福瑞.安東尼.奎恩,父親色情為搬運承包商。芮孟av成人光碟五歲離開學校,矢言要在表演事業留名,起先表演讀av心術,後來成為巡迴歌舞雜耍表演的製作人。


許多評a片下載論家認為,他把情色情色電影表演帶進主流社會成人電影,一九五九年主成人網站持破情色視訊天荒的脫衣舞表演,後來更靠著在蘇活部落格區與倫敦色情西區開發房地產賺得大筆財富。

a片下載
有人形成人電影容芮孟是英國的海夫納,地位AV片等同美國的「花花公子」創辦人海夫納。


 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]