Feb 12, 2006

ஈகோ டிரிப் (அ) முதுகு சொறிதல்

சில வாரங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழோடு வரும் வசந்தம் என்கிற துணேயேடு என்னுடைய புதுப்பேட்டை-நிழலுலகம் பற்றிய பதிவினை வெளியிட்டிருந்தது. போனவாரம் நான் கமலின் மருதநாயகம் குறித்து எழுதிய பதிவும் 4 பக்கங்களுக்கு பதிவாயிருக்கிறது. ஒரு வலைபதிவாளனாய் இவை என்னுள்ளே ஒரமாய் குவார்ட்டர் அடிந்து குந்தியிருக்கும் ஈகோவுக்கு ராவாய் மானிட்டர் வாங்கி தரும் வேலைகள் செய்தாலும், இரண்டொரு நாட்களுக்கு முன்பு வசந்தம் வெளியீட்டின் ஆசிரியரோடு மதிய உணவு உண்ணும் போது அவர் சொன்ன சில தகவல்கள் கீழே:

1. புதுப்பேட்டை பற்றிய பதிவிற்கு வரவேற்பு ஏராளம். முக்கியமாய் தமிழகத்தின் மிக முக்கியமான ஜனரஞ்சக பத்திரிக்கையிலிருந்து சொன்னது "இது நாங்க போட்டிருக்க வேண்டிய மேட்டர்" இதுதாண்டி புதுப்பேட்டை படத்திற்கு வசமெழுதும் இன்றைய "எழுத்து சித்தர்" அலுவலகத்திற்கு ஆள் அனுப்பி புத்தகத்தினை வாங்கி வர சொல்லியது.

2. அதிரடியாய் என் கவுண்டர் [என்கவுண்டர் என்று சேர்த்து படித்தால் நான் பொறுப்பில்லை] ஏறியிருக்கிறது. இன்னமும் என் மின்னஞ்சலில் புதுப்பேட்டை படித்து மக்கள் எழுதும் கடிதங்கள் அவ்வப்போது ஒரிரண்டு வரச் செய்கிறது.

3. மருதநாயகம் எழுதி வெளியான அன்று சில விஷயங்கள் தினகரன் அலுவலகத்தில் நடந்திருக்கின்றன. மரியாதையும், கவனமும் கருதி சில விஷயங்களை சொல்ல முடியாது. ஆனாலும், மருதநாயகம் படத்திற்கான விவாதத்தினை மறுபடியும் ஆரம்பித்துவிட்டார் என்று குமுதமும், தினமலரும் சொல்லுகின்றன.

நல்லது நடந்தால் சரி. நாராயண! நாராயண!

Comments:
மருதநாயம் ஸ்டோரி டிஸ்கஷனுக்கு தயாரா இருங்க :-)))
 
வாழ்க!

பதிவுலகத்தால் நாராயணன் தகுதி பெற்றதும், நாராயணனால் பதிவுலகம் தகுதி பெற்றதும்!!

:-)

ஸ்ரீகாந்த்.
 
மாணிட்டர் effect-க்கு மேலயே இருக்கும்ல..சும்மா 'சுர்ர்ர்ர்ர்ருன்னு'...
வாழ்த்துக்கள். யார் கண்டது அடுத்தது என்னென்னு? அங்க யாருங்க உங்க பின்னால..யாரோ producer மாதிரி இருக்கு..ஒரு படத்துக்கு 'பேட்ட கதை' ஒண்ணு தாங்கன்னு சொல்லிக்கிட்டு நிக்கிறாறு.

முதுகு சொறிதல்:பழைய புதுக்கவிதை ஒண்ணு:

விமர்சனங்கள்:
அவர் முதுகை இவர் சொறிந்தார்; இவர் முதுகை அவர் சொறிந்தார்.

ஈகோ டிரிப்புக்கு வேறு வார்த்தை சொல்லுங்களேன்.
 
wah!
 
நல்லது நாராயணன். கலக்குங்க!
 
இன்னமுமா "உருப்படாதது" என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும்?
 
//இன்னமுமா "உருப்படாதது" என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும்?//

இனிமேல தான் இதனை பேடண்ட் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நேற்றைய வலைப்பதிவர் சந்திப்பிலும் இக்கேள்விகள் எழுந்தன. ஏதோ என்னாலானது, தமிழில் ஒரு வார்த்தையின் பொருளை கொஞ்சம் மாற்றுவது ;) (அ) சிதைப்பது :)
 
Good. Nalladu nadantha sari
 
good, good. wishing you good luck.
 
That's nice Narin.
....
//புதுப்பேட்டை படத்திற்கு வசமெழுதும் இன்றைய "எழுத்து சித்தர்" அலுவலகத்திற்கு ஆள் அனுப்பி புத்தகத்தினை வாங்கி வர சொல்லியது.//
Which book is it?
 
மகிழ்ச்சியாய் இருக்கிறது.பாராட்டுக்கள்
 
நல்லது நாராயணன். கலக்குங்க!
 
வாழ்க..வளர்க.. !!
 
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

//புதுப்பேட்டை படத்திற்கு வசமெழுதும் இன்றைய "எழுத்து சித்தர்" அலுவலகத்திற்கு ஆள் அனுப்பி புத்தகத்தினை வாங்கி வர சொல்லியது.//
Which book is it?

"வசந்தம்" பற்றித்தான் நாராயண் குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன்.
 
எவ்ளோ பெரிய விஷயம்யா இது...வாழ்த்துக்கள் நாராயண்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]