Feb 17, 2006

கொஞ்சம் சுயதம்பட்டம்

இது முழுக்க, முழுக்க சுய விளம்பரமும், ஒரு புதிய இணைய சேவையின் அறிமுகத்துக்கான பதிவு. ஆகவே, வழமையான பதிவினை எதிர்ப்பார்ப்பவர்கள் இங்கேயே கட்டாகி, வேறு வேலை பார்க்க போகலாம்.

கொஞ்ச நாளாய், என் பதிவுகள் சீராய் வராமல் போனது, அதற்கு காரணம் வேலை. சாதாரண வேலையல்ல கொஞ்சம் கலக்குவதுப் போன்ற வேலை. இரண்டு நாட்களாய் இந்த பதிவுக்கு வருபவர்கள் வலப்பக்கம் புதிதாய் TracBac என்கிற ஜந்துவினை பார்த்திருக்கலாம். அதனை உருவாக்குவதில் மும்முரமாக இருந்ததுதான் குறைவான பதிவுகளுக்கு காரணம். TracBac -இன் வருகை தளம் இங்கே, வலைப்பதிவு இங்கே.

ஒரே வார்த்தையில் சொல்லுவதானால், TracBac ஒரு இணைய ப்ரெளசரில் இருந்து கொண்டு, மற்றவர்களுடன் ஊடாடும் [interact], இணைந்து செயலாற்றும் [collaborate] ஒரு தளம். சாமானியர்களுக்கு இந்த தளத்தில் பெரியதாய் வேலைகள் இல்லை. ஆனால், நீங்கள், இணையத்திலோ, விளம்பரத் துறையிலோ, டிசைனிங்கிலோ, அச்சு துறையிலோ, செய்தித்தாள் துறையிலோ, மார்க்கெட்டிங்கிலோ அல்லது ஒரு சிறு/பெரு நிறுவனத்தில் உங்களின் டிசைன்கள், விளம்பரங்கள் போன்றவற்றினை மேற்பார்வையிடும் துறையிலோ இருந்தால், கைக் கொடுங்கள். இனி மேல் உங்களுக்கு பிரச்சனைகள் இல்லை. இங்கே நான் சொல்வது முழுக்க உண்மை, சும்மா தெருவோரம் லேகியம் விற்கும் நபர் போன்ற ஒவர் பில்ட்-அப்கள் இங்கில்லை ;)

TracBac னைக் கொண்டு உங்களின் டிசைன்களையும், அச்சு விளம்பரங்களையும், அழைப்பிதழ்களையும்,விளம்பரங்களையும் மிக எளிதாக சரி பார்க்கலாம். சுழிக்கலாம். டிசைனரை ஆடியோ நோட்ஸ் கொண்டு திட்டலாம். பென்சில் கொண்டு நுணுக்கமாக சுழித்து வார்த்தைகளையோ, வாக்கியங்களையோ, புகைப்படங்களையோ இடமாற்றம் செய்ய சொல்லலாம் [அந்த லோகோவை கீழே கொண்டுவாம்மா, மூணாவது பேராவுல, with our service க்கு அப்புறம் இதை சேர்த்துருங்க ;)] கொஞ்சம் காசு அதிகமாக கொடுத்தீர்களேயானால், பல இடங்களில் பல் குத்திக் கொண்டிருக்கும் உங்கள் சகாக்களை ஒன்றிணைத்து நிறுவனம் சார்ந்த முடிவுகளை எடுக்கலாம். முக்கியமாய் விளம்பரத்துறை, அச்சுத்துறை, நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றாற் போல வடிவைக்கப்பட்ட [அல்லது வடிவைக்கப்பட்டதாக நம்பியிருக்கும்] சேவையிது.

மார்ச் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளிவரும். நீங்களோ, அல்லது உங்களின் நண்பர்களோ, தெரிந்தவர்களோ, வணிக சந்திப்புகளோ, மேற்கூரிய துறைகளில் இருந்தால், தமிழ் வலைப்பதிவுகள் படிக்கும் நேரத்தில் TracBac இன் லிங்கினை அனுப்பி சேவையினைப் பார்க்க சொல்லுங்கள். நீங்கள் அவருக்கு [அல்லது முக்கியமாய் எனக்கும், என் நிறுவனத்திற்கும் ;)] செய்யும் நல்ல காரியமிது ;)

ஆஹா, நாராயணன், தன் வலைப்பதிவினை வைத்துக் கொண்டு வியாபாரம் பண்ண ஆரம்பித்தான் என்று ஆரம்பித்து, வலைப்பதிவுகளில் வணிகம் வேண்டுமா, வேண்டாமா என்று ஆர்பரித்து, கத்தி அடித்துக் கொள்வீர்களேயானால், அந்த RSS feed மட்டும் அனுப்புங்கள். வெட்டியாய் இருக்கும் ஒரு நாளில் படிக்கிறேன் ;)

"இந்த அருமையான சேவையினை உங்களுக்கு வழங்குபவர்கள், சென்னை தி.நகரிலிருக்கும் 360 degree interactive நிறுவனத்தினர்..... எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை" [இது ரேடியோவுக்கு, அல்லது ரேடியோ விளம்பரங்கள் போல படிப்பதற்கு ]

இதுவரை இந்த சேவையினை எழுதியவர்கள் கீழே:

1 | 2 | 3 | 4 | 5 | 6 |

Comments:
ஆஹா.. தலைவரே... all the best...
 
நரேன்,

உங்க வலைத்தளம் writely.com மாதிரிங்களா?
 
இது ரைட்லி.காம் மாதிரி இல்லை. அப்படிச் சொல்லப்போனால், இணையமெங்கும் பரவியிருக்கும் அலுவலக மென்பொருள் வெப் 2.0 தளத்தில் எதிலும், இதைப் போல ஒரு சேவையினை பார்க்க முடியாது. இது வேறு மாதிரியான சேவை. ப்ளாஷ் + ஆர்.எஸ்.எஸ் + கொஞ்சம் திறமூலம் என கலந்துக் கட்டி அடித்திருக்கிறோம் ;)
 
வாழ்த்துகள் நாராயன். இன்னும் கொஞ்சம் புரியிற மாதிரி எழுதி இருக்கலாம்? :)
 
வெற்றி மீது வெற்றி வந்து சேர வாழ்த்துக்கள்.
 
வாழ்த்துகள் நாராயன்.
 
வாழ்த்துக்கள், நாராயணன். இணையத்தில் அதிக நேரம் செலவிடமுடியாத கட்டத்தில் இருக்கிறேன், இதெல்லாம் பார்த்து ஹும்...என்று பெருமூச்சு விடுவதோடுசரி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]