Mar 28, 2006

காக்டெயில்

இந்தியா வெற்றி ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம் சாந்தி தியேட்டர் பிச்சைக்காரன் சார்பியல் தத்துவம் ஹர்பஜன்சிங் ஆண்டிப்பட்டி crossing the chasm மூட்டெரிச்சல் பார்கேம்ப் செவன் அப் பெப்சி டிவி சிதம்பர ரகசியம் face the nation தேன்கூடு மீபோ.காம் அ.முத்துலிங்கம் கதைகள் ஏர்டெல் பில் உடைந்து போன பென்சில் முனைகள் நோக்கியா 9500 கொசுறு கேரளா நேந்திரங்கா சிப்ஸ் சென்செக்ஸ் 11000 கருணாந்தி எஸ்.வி.சேகர் ஒ.பன்னீர்செல்வம் ஒமேகா வாட்சு ராணி வாராந்தரி user,data,function -Dion Hinchcliffe ஆனந்தவிகடன் ராஜ்தீப் சர்தேசாய் லூசான சாக்ஸூகள் ப்யுஸ் போன ஹால் விளக்கு கோவிந்தா கோவிந்தா 26 சதாசிவம் தெரு மேஷராசி நேயர்களே கானாவுல கலாய்க்கலாம் விர்ஜினியா அலுவலகம் வென்சர் கேபிட்டல் டாக்குமெண்டுகள் கடித்ததுப் போக மீந்திருக்கும் இடப்பக்க மீசை கானா கானா வடபழனி ஒருவழிப்பாதை புடலங்காய் வெண்டைக்காய் கத்திரிக்காய் கேரட் ஜூஸ் ஒரு ரூபாயில் தினகரன் தெஹல்கா ப்ரண்ட்லென் உன்னதம் சுபவீ ஆதவன் தீட்சண்யா கேரி ஹேமல் competing for the future c.k பிரஹாலாத் ராம்ஸின் தயிர்சாதம் ஸ்டெப்ளர் பின்கள் ஆரஞ்சு நிற போர்டு மார்க்கர் கழுவாத கோப்பைகள் சர்விஸ் விடாத டூவீலர் ஆர்.சி.புத்தகம் போலிஸ்காரரிடம் பல்லிளித்தல் அண்ணா பல்கலைக்கழகம் ரைஸ்பொளல் ஒவாயா ஈகோ ஃகேபே ப்ராங்களின் டெம்ப்ள்டென் எச்.டி.எப்.சி கிரெடிட் கார்டு வாக்காளர் அட்டை சுடுதண்ணீர் ட்ராக்பேக் வெப் 2.0 உப்பிய பர்ஸ் செந்தில் பாபு சங்கரா சாயிபு வாளமீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம் மாளவிகா வேட்டையாடு விளையாடு நார்நியா The Coast Guard டைசின் 25எம்.ஜி கூவமாறு நாலாயிர திவ்விய பிரபந்தம் பீக்கதைகள் திருமா pitch brand reporter usp age business and economy கபாலி கோபாலு முத்துகிருஷ்ணன் தெரு மிக்சி ரிப்பேர் காஸ்க்கு போன் மிட்நைட் சூம் டிவி டிராவல் & லிவிங் ரெட்டை ஜடை வயசு அரிச்சுவடி புது ஏர்டெல் விளம்பரம் ஜாக்கி ஜட்டிகள் கதர்சட்டை சாந்தா குருஸ் விமான நிலையம் 47A வள்ளுவர் கோட்டம் நந்தனம் "த்தா ஒழுங்கா போடா" ஆயிரந்தாமரை மொட்டுக்களே மீண்டும் ஒரு காதல் கதை flex django ruby on rails ajax dom எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இதுக்கு முன்னாடி எங்க இருந்தீங்க www.techcrunch.com கீற்று திண்ணை மொட்டை தலை சன்னியாசினிகள் அன்னை சோனியா தியாகம் கவுண்டமணி-செந்தில் காமெடி ராஜாவின் திருவாசகம் இன்டெல் பென்டியம் டூயல் கோர் ப்ராசசர் ரம்யா ஆதித்யா அஜய் மேத்தா மெட்லின் ஹார்ப்பர் கோவிந்தசாமி அப்துல் பாரி "கொள்கை வேந்தன்" கோ.மா.சி. குணசேகரன் துறைமுகம் இளைஞரணி ம.தி.மு.க சிகப்பு கருப்பு பில் கிளிண்டன் பீமா ஜார்ஜ் புஷ் கமிலா பார்க்கர் அருந்ததி ராய் தண்டர்பேர்டு we thank you for requesting our service. as we are working hard to deliver the best possible experience இளங்காற்று வீசுதே var domEl = function(e,c,a,p,x) {
if(e||c) { c=(typeof c=='string'||(typeof c=='object'&&!c.length))?[c]:c;e=(!e&&c.length==1)?document.createTextNode(c[0]):e; var n = (typeof e=='string')?document.createElement(e) : !(e&&e===c[0])?e.cloneNode(false):e.cloneNode(true); if(e.nodeType!=3) { மதன் குட்டே பிஸ்கேட் டீ டீ டீ டீ டீ டீ டீ டீ டீ டீ ஹெட்லைட் சரியா இருக்கா பிஸினஸ் ஸ்டாண்டர்டு ஸ்டெரஜிஸ்ட் டைரி தண்ணீர் change agent ஸ்கோபுலஸர் மைக்ரோசாப்ட் ஆப்பிள் பிக்சர் டிஸ்னி அம்பானி ஐபிடிவி கன்டெண்ட் சூத்ரா எதையெடுத்தாலும் பத்து ரூபாய் யண்ணா யண்ணா வாங்கிகண்ணா 07 06 05 04 03 02 01 பச்சை ஸ்கூல் டெர்ம் பீஸ் ஈ.பி பில் ஒரே நாள் உனைநான் நிலாவில் பார்க்கிறேன் பட்டியல் ஆதி கண்டநாள் முதல் நூறாவது நாள் பொய் திமுக கொடி கம்பம் டிராபிக் போத்தீஸ் சிக்னல் ஸ்கூட்டி தேவதைகள் ஆக்டிவா அம்மணிகள் அரியர்ஸ் அப்பா போன்விடா ஹெட் & ஷோல்டர்ஸ் ஸ்கோர்ல் மவுஸ் 98422 23686 காற்று வெயில் கரும்பு சாறு டிரான்ஸ்பார்மர் ஹெல்மெட் கோழி முட்டை ஜிமையில் ஸ்பானிஷ் கலெக்ஷன் லீ ஜீன்ஸ் நைக்கி ஷூஸ் ரப்பர் செருப்பு சாணி முருகனுக்கு 375 சாப்பிட்டது கிரெடிட் கார்டில் 836 ஏடிஎம் 1200 அழுக்கு துணி மெக்கானிக் ஷெட் மாப்பிள செளக்கியாமாடா விக்கிபிடியா மீடியாவிக்கி பி.எச்.பி தீராநதி கண்ணாமூச்சி ரேரே

இப்படியும் வாழ்வினை tag செய்யலாம்

Mar 22, 2006

விற்பனைக்கு - கிட்னிகள், இந்திய கிராமங்கள்

"Kidney Sale Centre," proclaims a banner sprawled across a ramshackle bamboo tent at Shingnapur village in Amravati district of Maharashtra. The farmers here are threatening to sell their kidneys. "We have invited the Prime Minister and the President to inaugurate this kidney shop. They should allow us to sell our kidneys."
இந்திய கிராமங்களின் கதைகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. மேலே சொன்ன விஷயம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமத்தின் நிலை. மஹாராஷ்டிராவில் ஷிங்காபூர், டோர்லி, லெஹேகான் மற்றும் ஷிவானி ரசுல்பூர் என்கிற நான்கு கிராமங்கள் பகிரங்கமாக தங்கள் கிராமங்களை விற்க முன்வந்திருக்கிறார்கள். பிற விவசாயிகள் தங்கள் கிட்னிகளை விற்க முடிவு செய்திருக்கிறார்கள். ஜூன் 2005லிருந்து இன்று வரை கடன் தொல்லை தாங்காமல் 309 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசின் பஞ்சு கொள்முதல் விலையில் ஏற்பட்ட மாறுதல்களும், உலக சந்தையில் ஏற்பட்ட சரிவாலும் இந்த நிலை.

மகாகனம் பொருந்திய ஸ்ரீஸ்ரீ புஷ் கோமகனார் வந்து, விவசாயம் மற்றும் பிற துறைகளுக்கு "இணைந்து பணியாற்றும்" [Indo-US Knowledge Initiative in Agriculture - KIA] ஒப்பந்தத்தினை நிறைவேற்றி, H1B விசா கனவுகளுக்கு தாற்காலிக ஒத்தி வைத்தல் போட்டு போயிருக்கிறார். ஆனால், இந்தியாவின் விவசாயிகள் இதனால் உண்மையிலேயே பயனடைவார்களா என்றால், பதில் கிடையாது. அந்த ஒப்பந்தத்தினை முன்னின்று நடத்தியவர்கள் வால்-மார்ட், மான்சான்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள். நிலைமை இப்படியிருக்க, வல்லரசு கனவுகளோடு நாம் பங்களாதேஷோடு இணைந்து "தீவிரவாதத்தினை எதிர்த்து போராடுவோம்" என்று அமெரிக்க பாணியில் பேச ஆரம்பித்திருக்கிறோம்.

ஒரு பக்கம் சென்செக்ஸ் 11,000 யிரத்தினை தாண்டி ஒடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் எப்.டி.ஐ வரவுகள் பில்லியன் டாலர்களில் அதிகரிக்கின்றன. புதிது புதிதாக கட்டிடங்களும், மால்களும் வந்து கொண்டிருக்கின்றன. பொருளாதார சீரமைப்பிற்கு முந்திய இந்தியாவிலாவது மோசமும், மிக மோசமுமான இரண்டு இந்தியாக்கள் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், பெயரளவில் இந்திய கிராமங்களை முன்னேற் வைத்திருப்பதாக சொல்லியிருந்தாலும், நிதர்சனம் முகத்தில் பளீரென்று அறைகிறது. இப்போதும் இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன. ஒரளவு நல்ல வசதிகளும், இன்னமும் மாறாமல் மிக மோசமான பின்தங்கிய நிலையில் இருக்கும் இன்னொரு இந்தியாவும் இந்தியாவினுள் இருக்கின்றன. போன வார சி.என்.என் ஐ.பி.என் னில் Red Corridor என்றொரு நிகழ்வினை சொல்லியிருந்தார்கள். எப்படி இந்திய கிராமங்களும், வட கிழக்கு மாநிலங்களும் மெதுவாக, ஆனால் உறுதியாக மாவோயிஸ்டுகளிடத்திலும், ஆயுதம் தாங்கிய போராளிகளிடத்திலும் நகர்ந்துக் கொண்டு இருக்கிறது என்பதை சொன்ன நிகழ்ச்சி. ஒரு மிகப் பெரிய பிளவிற்கு நாம் தயாராகி வருகிறோம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.


Mar 14, 2006

பார் கேம்ப் சென்னை - ஏப்ரல் 8 & 9

அஃடால்ப் ஹிட்லரின் மெயின் கேம்பிற்கு இதற்கும் எந்த சம்பந்தமில்லை. பார் கேம்ப் என்பது உலகெங்கும் தற்போது ஜுரமாக பரவி வரும் ஒரு புதிய ஒருங்கிணைவு. தொழில்நுட்ப ஜித்தர்கள், முதலீட்டாளர்கள், அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தினைப் பற்றி யோசிப்பவர்கள், செய்பவர்கள் என மண்டை பெருத்த அல்லது மண்டை குழம்பிய மக்களால் நடத்தப்படுவது இது. இதன் சிறப்பே, சிற்றிதழ் புத்தக வெளீயீடுகள் போல, மரபினை உடைத்து ஒரு புதிய அலையினை உண்டாக்க முயற்சிக்கிறது. வழக்கமான அரங்குகளில், ஒரு பேச்சாளர், பல தூக்கம் போடுபவர்கள் என்கிற நடைமுறையினை நடு தெருவில் போட்டு நாசமாக்கிவிட்டு, எல்லோரும், எதைப் பற்றியும் [தொழில்நுட்பம் சம்பந்தமாக] பேசலாம் என்கிற கட்டுப்பாடற்ற நிகழ்வும், பங்கேற்றல் என்பதே பிரதானமாக உள்ளதும் தான் இதனை இவ்வளவு சிறப்பாக உலகெங்கிலும், எல்லா ஊர்களிலும் நடக்கும் தொழில்நுட்ப திருவிழாவாக மாற்றியிருக்கிறது.

இந்தியாவில் முதலில் இதனை டெல்லி செய்தது. அதற்கு பிறகு, க்ருபா ஷங்கர் என்னிடம் பேசியவுடன், வழக்கம்போல தலையாட்டிவிட்டு, இதோ இறங்கியாயாச்சு. பார் கேம்ப் சென்னை. சென்னையில் இருந்து, அடுத்த தலைமுறை இணையம், இணையம் 2.0, தொழில் நுட்ப சித்து விளையாட்டுகள், மொபைல், திறமூலம் சார்ந்த நிகழ்வுகள் போன்றவற்றில் உங்களுக்கு ஆர்வமும், அக்கறையும் இருந்தால், உங்கள் நாட்காட்டியில் ஏப்ரல் 8 & 9 குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கிருபா, நான் இன்னும் பல தொழில்நுட்ப ஜிகினாக்களில் ஆர்வமுள்ளவர்கள் இதனை ஒருங்கிணைக்கிறோம். இந்நிகழ்வு பற்றிய பிற விவரங்கள் பார் கேம்ப் சென்னை விக்கிபீடியாவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இருப்பின் ஸ்பான்ஸர் செய்யுங்கள். சென்னையின் முக்கியமான தொழில்நுட்ப நபர்களை சந்தியுங்கள். முடிந்தால் தூண்டில் போட்டு உங்கள் நிறுவனத்திற்கு அழையுங்கள். யோசனையும், திறமையும் இருந்து பணமில்லாததால், பரண் மீது யாராவது ஐடியாக்களை கொட்டி வைத்திருந்தால், ஒரு மடிக்கணினி [இலவச வை-ஃபை உண்டு] கொண்டு உங்களின் வணிக திட்டத்தினை சொல்லுங்கள். இது தென்னிந்தியாவில் முதலாய் நடக்கும் [ ஹைதராபாத்தும் அதே நாளில் தான் நடக்கிறது. ஆனாலும், நாங்க சீனியர் ;)] தொழில்நுட்ப திருவிழா. வந்து கொஞ்சம் சிலிக்கன் சிப்ஸுக்களையாவது மென்றுவிட்டு போங்கள்.

, , , ,

Mar 7, 2006

வாரணாசி குண்டு வெடிப்புகள்

வாரணாசியில் நான்கு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடந்திருக்கிறது. சத்யேந்திர தூபே (ஐபின் லைவ்) நேரடியாக அவ்விடத்திலிருந்து வலைப்பதிவில் பதிந்திருக்கிறார். லஷ்கர் - இ - தொய்பாவீன் மீது சந்தேகம் இருக்கிறது. பன்னிரண்டு பேர்களுக்கு மேல் இறந்திருக்கக்கூடும் என்று சொல்கிறார்கள். மேலும் விவரங்களுக்கு

ஐபின் லைவ் | சத்யெந்திர தூபே வலைப்பதிவு

Mar 6, 2006

"சொட்சி" ஜெயித்தது

ஆஸ்கார் தேர்வில் நான் ஒவ்வொரு தடவையும் பார்ப்பது வெளிநாட்டு படங்கள் பிரிவு தான். இந்த முறை வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட்ட அத்தனை படங்களின் டிரைய்லர்களையும் ஆஸ்கார்.காமில் பார்ததிலிருந்து "சொட்சி" தான் ஜெயிக்கும் என்று நம்பினேன். ஆனாலும், எனக்கு ஆஸ்கார் தேர்வு குழுவினரின் "அரசியல்" மீது அபாரமான நம்பிக்கை இருப்பதால், ஜெர்மன் படமோ, பிரெஞ்சு படமோ தட்டிக் கொண்டு போய்விடும் என்றிருந்தது. நல்லவேளையாக, நினைத்தது நடந்தது. சொட்சி ஜெயித்திருக்கிறது.

Mar 3, 2006

இந்தியா இவ்வளவுதான்!

சோதனை சாலை - இந்தியா
சேவாகிராம் - மத்திய இந்தியாவில் இருக்கும் ஒரு சிற்றூர். அங்கே இருக்கும் மருத்துவமனைகளின் அடிக்கடி மின்சாரம் போகும். மருத்துவர்கள் தங்களின் செல்பேசிகளின் வெளிச்சத்தில் தங்களுடைய வேலைகளைப் பார்ப்பார்கள். மிகவும் பின்தங்கிய இந்திய கிராமங்களிலும், சிற்றூர்களிலும் இதற்கு மேல் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்த மருத்துவமனைகளுக்கு அரசிடமிருந்து என்ன நிதியுதவி வரும் என்கிற லாஜிகலான கேள்விகள் கேட்டால் அது வேறெங்கோ கொண்டு போய்விடும். பிரச்சனையதுவல்ல. இங்கே இருக்கும் மருத்துவர்கள் இப்போது நன்றாக இருக்கிறார்கள். மிக சுலபமாக, சில பன்னாட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சி சாலையாக இம்மாதிரியான சிற்றூர் மருத்துவமனைகள் மாற்றப்பட்டு வருகின்றன. கிளினிகல் டிரையல் என்றழைக்கப்படும், மனித உயிர்களின் மீது மருந்தினைப் போட்டு சோதிப்பது என்பது, கொஞ்சம் complex-ஆன விஷயம். முன்னேறிய நாடுகளில் இம்மாதிரியான சோதனைகள் செய்ய நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் அதற்கான சட்டங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. சேவாகிராம் மாதிரியான மருத்துவமனைகளில் நோயாளிகள் அவர்களுக்கு தெரிந்து/தெரியாமல், மருத்துவர்களால் இம்மாதிரியான பரிசோதனைகளுக்கு ஆட்கொள்ளப்படுகிறார்கள். சென்னையில் வில்லிவாக்கத்தில் இம்மாதிரியான ஏழை மக்கள், சிறுநீரகம் தானம் தந்தே [அல்லது எடுக்கப்பட்டு], அந்த ஏரியாவினை "கிட்னிவாக்கமாக" மாற்றியிருக்கிறார்கள். உடமை என்பது முக்கியமாயிருக்கும் இந்த தேசத்தில், உயிர்களுக்கு பெரிதாய் மரியாதை கிடையாது. இது சட்டரீதியாக அனுமதிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. ஆனாலும், படிப்பறிவில்லாத நோயாளிகளும், படித்த மருத்துவர்களும், பன்னாட்டு நிறுவங்களும் இருக்கும் வரையில் பெரிதாய் மாற்றங்கள் ஏதும் வாராது.

பார்க்க - A Nation of guinea pigs

மறக்கடிக்கப்படும் மன்னர்ஆறாம் வகுப்பு தாண்டிய எவருக்கும் இன்றைக்கு நடுவண் அரசினால் புறக்கணிக்கப்படும் ஒரு முகலாய அரசரினை தெரிந்திருக்கும். அவர் பெயர் அக்பர். இந்தியா என்றொரு நாடு முழுமையாக இல்லாதிருந்தபோது, தன் தாத்தா பாபரிடமிருந்து பெற்றிருந்த சொற்ப தேசத்தினை தன் வலிமையினாலும், "திருமணங்களினாலும்", ஒன்றிணைத்து அவரின் அடுத்த இரண்டு தலைமுறை ஒன்றும் பெரியதாக செய்யாமல், தாஜ்மஹால் கட்டவும், செங்கோட்டை கட்டவும் அஸ்திவாரத்தினை இட்டவர் அக்பர். அவரின் 400-வது நினைவுதினம் இந்த வருடம் நடக்க இருக்கிறது. இதனை இந்திய வரலாற்று கழகங்கள் நடுவண் அரசிடம் முன்வைத்து, விழாவினை கொண்டாட சொல்லியிருக்கிறார்கள். இன்றளவும், கிணற்றில் விழுந்த கல்லாய் இருக்கிறது அந்த திட்டம். காரணம், தேர்ந்தெடுத்த அரசியல், காங்கிரஸ் கட்சிக்கு அக்பரின் விழாவினைக் கொண்டாடி முஸ்லீம்களின் வெறுப்பினை சம்பாதித்துக் கொள்ளவேண்டுமா என்கிற கேள்வி இருக்கிறது. [அக்பர் தீன்-இலா-ஹி என்றொரு காக்டெய்ல் மதத்தினை இந்து/இஸ்லாமிய சன்மார்க்கங்களிலிருந்து எடுத்து பரப்ப முயன்று அதில் படுதோல்வியுற்றார்] காரணங்கள் பலவாக இருந்தாலும், 'மலர்மன்னர்கள்' கோல்வால்கர் நினைவு நாளையும், சாவர்க்கார் நினைவு நாளையும், சிவாஜி நினைவு நாளையும் கொண்டாடும் நாட்டில், இதை ஒரு நாடாக ஒருங்கிணைத்த அக்பர் மூலையில் வீசப்படுவதற்குப் பெயர் தான் secular state.

பார்க்க - தேவைப்படாத அக்பர்

Mar 2, 2006

அருந்ததிராய், ஜார்ஜ் புஷ், சி.என்.என், கேத்ரீனா

புஷ்ஷின் வருகைக்கு எதிராக தொடர்ச்சியான அலைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அவருடைய நிகழ்ச்சி நிரல்களிலேயே, கடைசி நேர மாறுதல்கள் நிறைய நடந்திருக்கின்றன. உதா. காந்தி சமாதிக்கு போனது. இன்றைக்கு செங்கோட்டையில் ஒரு பெரிய கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் அருந்ததி ராயும் கலந்து கொள்வார் என்று டிவியில் பார்த்ததாக நினைவு. தி நேஷனில் அவர் எழுதியிருக்கும் கட்டுரை, எள்ளலும், காரமும் நிறைந்த கட்டுரை
Since the Purana Qila also houses the Delhi zoo, George Bush's audience will be a few hundred caged animals and an approved list of caged human beings, who in India go under the category of "eminent persons." They're mostly rich folk who live in our poor country like captive animals, incarcerated by their own wealth, locked and barred in their gilded cages, protecting themselves from the threat of the vulgar and unruly multitudes whom they have systematically dispossessed over the centuries
அருந்ததிராயின் கட்டுரை

இது தாண்டி, பெரும்புயல் கேத்ரீனா நடக்கவிருந்தது தெரிந்தும் புஷ் சும்மா இருந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் மரணமுற்றிருக்கிறார்கள், அல்லது புஷ்ஷின் கையாலாகதனத்தினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்றைய சி.என்.என்னில், கேத்ரீனா வருவதற்கு முன் அதிகாரிகள் சொன்ன எச்சரிக்கைகளையும், அதை செவிமடுக்காமல் புஷ் இருந்த வீடியோ ஆதாரங்களையும் முன்வைத்திருக்கிறார்கள்.
In dramatic and sometimes agonizing terms, federal disaster officials warned President George W. Bush and his homeland security chief before Hurricane Katrina struck that the storm could breach levees, put lives at risk in New Orleans' Superdome and overwhelm rescuers, according to confidential video footage
சி.என்.என் செய்தி

ஆக புஷ்ஷிற்கு போகிற இடமெல்லாம் "நல்ல வரவேற்பு" கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]