Mar 2, 2006

அருந்ததிராய், ஜார்ஜ் புஷ், சி.என்.என், கேத்ரீனா

புஷ்ஷின் வருகைக்கு எதிராக தொடர்ச்சியான அலைகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. அவருடைய நிகழ்ச்சி நிரல்களிலேயே, கடைசி நேர மாறுதல்கள் நிறைய நடந்திருக்கின்றன. உதா. காந்தி சமாதிக்கு போனது. இன்றைக்கு செங்கோட்டையில் ஒரு பெரிய கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் அருந்ததி ராயும் கலந்து கொள்வார் என்று டிவியில் பார்த்ததாக நினைவு. தி நேஷனில் அவர் எழுதியிருக்கும் கட்டுரை, எள்ளலும், காரமும் நிறைந்த கட்டுரை
Since the Purana Qila also houses the Delhi zoo, George Bush's audience will be a few hundred caged animals and an approved list of caged human beings, who in India go under the category of "eminent persons." They're mostly rich folk who live in our poor country like captive animals, incarcerated by their own wealth, locked and barred in their gilded cages, protecting themselves from the threat of the vulgar and unruly multitudes whom they have systematically dispossessed over the centuries
அருந்ததிராயின் கட்டுரை

இது தாண்டி, பெரும்புயல் கேத்ரீனா நடக்கவிருந்தது தெரிந்தும் புஷ் சும்மா இருந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் மரணமுற்றிருக்கிறார்கள், அல்லது புஷ்ஷின் கையாலாகதனத்தினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்றைய சி.என்.என்னில், கேத்ரீனா வருவதற்கு முன் அதிகாரிகள் சொன்ன எச்சரிக்கைகளையும், அதை செவிமடுக்காமல் புஷ் இருந்த வீடியோ ஆதாரங்களையும் முன்வைத்திருக்கிறார்கள்.
In dramatic and sometimes agonizing terms, federal disaster officials warned President George W. Bush and his homeland security chief before Hurricane Katrina struck that the storm could breach levees, put lives at risk in New Orleans' Superdome and overwhelm rescuers, according to confidential video footage
சி.என்.என் செய்தி

ஆக புஷ்ஷிற்கு போகிற இடமெல்லாம் "நல்ல வரவேற்பு" கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

Comments:
அருந்ததி ராயின் கட்டுரை எனக்கு நகைச்சுவையுணர்வையே அளிக்கிறது. varnam: Arundhathi Roy turns humor writer (கார்டியன், ஹிந்து போன்ற பல இதழ்களில் இந்தக் கட்டுரை சிண்டிகேட் செய்யப்பட்டிருக்கிறது.)

She wants to emulate literary activist luminaries. Thatz a good idea. By rejecting Sahitya prize probably like Sartre who rejected Nobel lit. prize (for a strong reason). But, she does not have a similar consistent stature; just by emitting the same action, she strives to achieve it...
 
Dont you know that this is a politically incorrect stand.So
you better revise it and start
telling Bush Murdabad,Arundathi
Roy Zindabad :)
 
உருப்படாதது! வாழ்த்துக்கள்

அருந்ததி ராய் கூறியிருப்பது போல் புஷ்ஷின் பேச்சை மந்திகள் (குரங்குகள்)தான் ரசிக்கும். அவரது பேச்சுவார்த்தைகள் இதைத்தான் நிரூபிக்கின்றன. இதுவரை நடைபெற்ற பல உயர்மட்ட பேச்சுக்கள் முக்கிய அரசு அதிகாரிகள் துணையுடன்தான் நடக்கும். ஆனால் இந்த முறை ஒருவருக்கு ஒருவர் என்ற முறையில்தான் புஷ் - மன்மோகன், புஷ் - சோனியா என சந்தித்து பேசியுள்ளனர். கதை வேண்டுமானால் இவ்வாறு தனித்தனியாக பேசலாம். இரு நாட்டின் விஷயத்தை பேசும்போது தனியாக எதற்காக பேச வேண்டும் என்பதுதான் எனது கேள்வி! அல்லது புஷ்ஷின் பேச்சு என்ன அவ்வளவு சகிக்க முடியாததாகவாக இருக்கும்?
 
பாஸ்டன் பாலாஜிக்கு சிரிப்பு வந்ததிலும், அவர் வர்ணம் 'கட்டுரைக்கு' லிங்க் தருவதிலும் ஆச்சரியம் எதுவுமில்லை. ஏற்கனவே அரஃபத் இறந்த போது எழுதிய கட்டுரையிலும், 'வான் புலிகள்' பற்றி எழுதிய போதும் அவர் கருத்துக்கள் என்னவென்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதுவரை 'எதிர்ப்பு அரசியல்' பேசுவதாய் வேஷம் போட்டு வந்த ரவி ஸ்ரீனிவாஸ் இங்கே முழுமையாய் (பாலாஜி மற்றும் வர்ணம் கட்டுரையுடன்)ஒத்து போவதும்(அவரின் அச்சுபிச்சு நகைச்சுவை கமெண்டை அப்படித்தான் எடுத்துகொள்ள வேண்டும்) அதை போட்டு உடைத்திருப்பதும் முக்கியமானது. அது எப்படியும் கிடக்கட்டும். பிரச்சனை இவரை ஏதோ பாதுக்காக்கப் படவேண்டியவர் போல மற்ற நண்பர்கள் (பெயர் சொல்ல நமக்கு என்ன தயக்கம், தங்கமணி, சுந்தரமூர்த்தி, சங்கரபாண்டி, பெயரிலி போன்றவர்கள்) வக்காலத்து பல இடங்களில் வாங்குவதுதான் வேடிக்கை.

(ஒருவேளை இதில் வேடிக்கை எதுவும் இல்லையோ?)
 
//ஆனால் இந்த முறை ஒருவருக்கு ஒருவர் என்ற முறையில்தான் புஷ் - மன்மோகன், புஷ் - சோனியா என சந்தித்து பேசியுள்ளனர். கதை வேண்டுமானால் இவ்வாறு தனித்தனியாக பேசலாம். இரு நாட்டின் விஷயத்தை பேசும்போது தனியாக எதற்காக பேச வேண்டும் என்பதுதான் எனது கேள்வி! அல்லது புஷ்ஷின் பேச்சு என்ன அவ்வளவு சகிக்க முடியாததாகவாக இருக்கும்?
/

ஐய்யோ! முருகா!

இதற்க்கு ஆங்கிலத்தில் Summit என்று பெயர் சந்திப்பு அவர்களே.
 
அருந்ததி ராயின் டெமகரசி நவ்! தளத்தின் ஆமி குட்மேனுக்கு அளித்த நேர்காணல், அவுட்லுக் இதழில் வந்திருக்கிறது
- அவுட்லுக் இதழ் சுட்டி
 
இது தாண்டி, பெரும்புயல் கேத்ரீனா நடக்கவிருந்தது தெரிந்தும் புஷ் சும்மா இருந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் மரணமுற்றிருக்கிறார்கள், அல்லது புஷ்ஷின் கையாலாகதனத்தினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்றைய சி.என்.என்னில், கேத்ரீனா வருவதற்கு முன் அதிகாரிகள் சொன்ன எச்சரிக்கைகளையும், அதை செவிமடுக்காமல் புஷ் இருந்த வீடியோ ஆதாரங்களையும் முன்வைத்திருக்கிறார்கள்.

தடுப்பணைகளை தாண்டி வெள்ள நீர் வழியலாம் என்றுதான் அதிபரிடம் சொல்லப்படுகிறது, நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள ஓளியூடகச் சான்றில்.

அமேரிக்க நடுவண்/மாநில அரசு(கள்) இயங்கும்/இயங்க வேண்டிய அடிப்படைகளை அலசி பார்த்தால் புரியும், கேத்ரீனா வினால் ஏற்பட்ட சேதங்களின் பெரும் பங்கு மாநில,நகர அரசுகளின் பொறுப்பு என்று. நிச்சயமாக நடுவணரசின் FEMA விற்கும் பொறுப்பு உண்டு. நேற்றிலிருந்து முந்தைய ஃபீமா தலைவர் பிரவ்னின் இரு நேர்காணல்களை கண்டேன். இவருக்கும், மைக்கல் சேர்டோஃபுக்கும் நடக்கும் பனிப்போர் வழியாக உண்மை தெரியவரும். எதற்கெடுத்தாலும் அதிபரை குறை சொல்வது பயனில்லை.

மற்றொன்று: சி என் என் ஐ மட்டும் பார்த்துவிட்டு இதுதான் உண்மை என தீர்மானிக்ககூடாது. ஃபாக்ஸ் செய்தியையும் பார்க்க வேண்டும். உண்மை இரு நிறுவனங்களின் நீட்டல்களுக்கு இடையில் கிடைக்கும்.
 
Narain,

There were more than one premonitions about imminent diaster in New Orleans. For e.g. see this Nature article.

Hurricane Ivan highlights future risk for New Orleans

Tony Reichhardt

SUMMARY: Wetland restoration could prevent disastrous flooding.

CONTEXT: ...was only narrowly avoided — Hurricane Ivan missed the deeply vulnerable city of New Orleans by a tiny margin. In the face of future such storms, they are calling for action...

Nature 431, 388-388 (23 Sep 2004) News
 
அண்ணே ரோசா வசந்து, பதிவூரிலே அடிக்கடி தலை காட்ட முடிகிறதாயில்லை. புச்சின் பற்றியோட்டுக்கு பயந்து ஒளிஞ்சிருக்கிறேன். புச்சு நாட்டிலே இல்லையே இப்பவாச்சும் தலையைக் காட்டுவோமேயெண்டு வந்தா, இப்பிடியா இழுப்பீங்க? ;-)

வேண்டுமானால், "தாங்கத் தங்கத்தூண்கள் இருக்கின்றன; தாக்கத் தெருநாய்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ரவி சீனிவாசினைத் தாங்கவுமில்லை; தாக்கவுமில்லை" என்று மாறுமிரட்சி தேய்சீய தீராவிட gangcross கட்சிகள் மாதிரி வக்கொழிந்த தமிழிலே நான் வசனம் பேசலாம்;-)

விசயத்துக்கு வருவோம். சீனிவாசு சொல்வதிலே சிலதை ஏற்றுக்கொள்ளமுடிகின்றது (சமக்கிருதம் குறித்த நகைச்சுவைப்பதிவினை; தலித்தினைப் பற்றித் தலித்தான் எழுதவேண்டுமென்ற படைப்புவெளிக்குறுக்கம் தேவையில்லை என்பதை); சிலவற்றினை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை (விபி சிங்-மண்டல் கமிஷன் குறித்த அவரின் கருத்தும் நிலைப்பாடும்; அருந்ததி ராய் சாகித்ய அகடமியினை நிராகரித்து குறித்த கருத்தினை).

அருந்ததி ராயின் புக்கர்பரிசு பெற்ற புதினம் பெரிதாக புதிதுமாதிரி தோன்றவில்லை. வாசகர்வட்டம் தமிழிலே தந்த மலையாளப்புதினங்கள் போலவும் நீல பத்மநாபன் எழுதிய புதினங்கள்போலவுமே ஓரளவுக்கு எனக்குப் பட்டது (98 இலே தமிழ்நெற்றிலே இது பற்றி ஒரு அஞ்சற்பதிவிட்டதாக ஞாபகம்). சொல்லப்போனால், ஈஎம்எஸ்ஸினைப் பகிடி பண்ணியிருக்கின்றாரென்று ஆத்திரம் கொஞ்சம் வந்ததுதான் மிச்சம். காலப்போக்கிலே அவருடைய 'பெயரை' எனக்கும் சரிதானெனத் தோன்றிய பக்கங்களிலே நின்றி சில விடயங்களிலே வாதிடப் பயன்படுத்தியது பிடித்துக்கொண்டது (நர்மதா அணை, 'பூகோளவடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது' விவகாரங்கள்). குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்னால், பில் மோயரின் Now நிகழ்ச்சியிலே, துணிச்சலாக செப்ரெம்பர் 11 இன் பின்னான தன் கருத்துகளைத் தெளிவாகச் சொன்னது பிடித்திருந்தது. அந்தளவிலே அவரிலே மிக மதிப்புண்டு.

மற்றப்பக்கத்தாலே, சாகித்ய அகடமி எல்லா மொழிகளிலும் துக்கடா எழுத்தாளர்களுக்கும் 'துணை'யிருப்பின் வழங்கப்படும் 'ஆண்டுப்பெட்டி'யாகத்தான் எனக்குப் படுகிறது. (மகன் தந்தைக்காற்றும் உதவி முடுக்கப்பட்டும் கிடைக்காமலே செத்துப்போன மொழிவாரி எழுத்தாளர்களை இங்கே கவலையுடன் நினைவு கூர்வோமாக). இந்நிலையிலே கிடைத்தும் மறுத்த அருந்ததி ராய், சாத்தர் உச்சத்துக்கு சிந்தனாவாதியோ இலக்கியவாலியோ அண்ணல் பிரதிவாதி பயங்கரமோ இல்லாவிட்டாலும் பரவாயில்லை... அதனால், சாகித்ய அகடமி பரிசு புனிதமோ புதினமோ பட்டிருக்கின்றதென்று நினைத்துக்கொள்கிறேன். சொல்லப்போனால், சாத்தரிலும்விடச் சிறப்பாக, மார்லன் பிராண்டோ மாதிரியாக, அகடமி விழாவழங்குமேடையிலே ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கலாமேயென்று தோன்றுகின்றது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]