Mar 3, 2006

இந்தியா இவ்வளவுதான்!

சோதனை சாலை - இந்தியா
சேவாகிராம் - மத்திய இந்தியாவில் இருக்கும் ஒரு சிற்றூர். அங்கே இருக்கும் மருத்துவமனைகளின் அடிக்கடி மின்சாரம் போகும். மருத்துவர்கள் தங்களின் செல்பேசிகளின் வெளிச்சத்தில் தங்களுடைய வேலைகளைப் பார்ப்பார்கள். மிகவும் பின்தங்கிய இந்திய கிராமங்களிலும், சிற்றூர்களிலும் இதற்கு மேல் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இந்த மருத்துவமனைகளுக்கு அரசிடமிருந்து என்ன நிதியுதவி வரும் என்கிற லாஜிகலான கேள்விகள் கேட்டால் அது வேறெங்கோ கொண்டு போய்விடும். பிரச்சனையதுவல்ல. இங்கே இருக்கும் மருத்துவர்கள் இப்போது நன்றாக இருக்கிறார்கள். மிக சுலபமாக, சில பன்னாட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சி சாலையாக இம்மாதிரியான சிற்றூர் மருத்துவமனைகள் மாற்றப்பட்டு வருகின்றன. கிளினிகல் டிரையல் என்றழைக்கப்படும், மனித உயிர்களின் மீது மருந்தினைப் போட்டு சோதிப்பது என்பது, கொஞ்சம் complex-ஆன விஷயம். முன்னேறிய நாடுகளில் இம்மாதிரியான சோதனைகள் செய்ய நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் அதற்கான சட்டங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. சேவாகிராம் மாதிரியான மருத்துவமனைகளில் நோயாளிகள் அவர்களுக்கு தெரிந்து/தெரியாமல், மருத்துவர்களால் இம்மாதிரியான பரிசோதனைகளுக்கு ஆட்கொள்ளப்படுகிறார்கள். சென்னையில் வில்லிவாக்கத்தில் இம்மாதிரியான ஏழை மக்கள், சிறுநீரகம் தானம் தந்தே [அல்லது எடுக்கப்பட்டு], அந்த ஏரியாவினை "கிட்னிவாக்கமாக" மாற்றியிருக்கிறார்கள். உடமை என்பது முக்கியமாயிருக்கும் இந்த தேசத்தில், உயிர்களுக்கு பெரிதாய் மரியாதை கிடையாது. இது சட்டரீதியாக அனுமதிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. ஆனாலும், படிப்பறிவில்லாத நோயாளிகளும், படித்த மருத்துவர்களும், பன்னாட்டு நிறுவங்களும் இருக்கும் வரையில் பெரிதாய் மாற்றங்கள் ஏதும் வாராது.

பார்க்க - A Nation of guinea pigs

மறக்கடிக்கப்படும் மன்னர்ஆறாம் வகுப்பு தாண்டிய எவருக்கும் இன்றைக்கு நடுவண் அரசினால் புறக்கணிக்கப்படும் ஒரு முகலாய அரசரினை தெரிந்திருக்கும். அவர் பெயர் அக்பர். இந்தியா என்றொரு நாடு முழுமையாக இல்லாதிருந்தபோது, தன் தாத்தா பாபரிடமிருந்து பெற்றிருந்த சொற்ப தேசத்தினை தன் வலிமையினாலும், "திருமணங்களினாலும்", ஒன்றிணைத்து அவரின் அடுத்த இரண்டு தலைமுறை ஒன்றும் பெரியதாக செய்யாமல், தாஜ்மஹால் கட்டவும், செங்கோட்டை கட்டவும் அஸ்திவாரத்தினை இட்டவர் அக்பர். அவரின் 400-வது நினைவுதினம் இந்த வருடம் நடக்க இருக்கிறது. இதனை இந்திய வரலாற்று கழகங்கள் நடுவண் அரசிடம் முன்வைத்து, விழாவினை கொண்டாட சொல்லியிருக்கிறார்கள். இன்றளவும், கிணற்றில் விழுந்த கல்லாய் இருக்கிறது அந்த திட்டம். காரணம், தேர்ந்தெடுத்த அரசியல், காங்கிரஸ் கட்சிக்கு அக்பரின் விழாவினைக் கொண்டாடி முஸ்லீம்களின் வெறுப்பினை சம்பாதித்துக் கொள்ளவேண்டுமா என்கிற கேள்வி இருக்கிறது. [அக்பர் தீன்-இலா-ஹி என்றொரு காக்டெய்ல் மதத்தினை இந்து/இஸ்லாமிய சன்மார்க்கங்களிலிருந்து எடுத்து பரப்ப முயன்று அதில் படுதோல்வியுற்றார்] காரணங்கள் பலவாக இருந்தாலும், 'மலர்மன்னர்கள்' கோல்வால்கர் நினைவு நாளையும், சாவர்க்கார் நினைவு நாளையும், சிவாஜி நினைவு நாளையும் கொண்டாடும் நாட்டில், இதை ஒரு நாடாக ஒருங்கிணைத்த அக்பர் மூலையில் வீசப்படுவதற்குப் பெயர் தான் secular state.

பார்க்க - தேவைப்படாத அக்பர்

Comments:
//முன்னேறிய நாடுகளில் இம்மாதிரியான சோதனைகள் செய்ய நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் அதற்கான சட்டங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. சேவாகிராம் மாதிரியான மருத்துவமனைகளில் நோயாளிகள் அவர்களுக்கு தெரிந்து/தெரியாமல், மருத்துவர்களால் இம்மாதிரியான பரிசோதனைகளுக்கு ஆட்கொள்ளப்படுகிறார்கள்.//
clinical trials ரொம்பவே விதிமுறைகளுக்கு உட்பட்டது. மருந்தாக எண்ணப்பட்ட ஒரு மூலக்கூறு (candidate எனச் சொல்வோம்) மனிதர்களில் சோதிக்கப்படுமுன்பே பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. ADME, Toxicology ,Bio analysis ( Bio Availability , Bio Equivalence) என்றெல்லாம் பரிசோதிக்கப்பட்டபின்னரே மனிதர்கள் பக்கம் வருகிறது.
USFDA மிகக் கடுமையாக இந்த ஆய்வுமுறைகளைத் தணிக்கை செய்கிறது. அனைத்து மருத்துவ நிறுவனங்களின் ஒரே பிரார்த்தனை USFDA தணிக்கை ஆய்வுகளில் தேர்வு பெற்றிடவேண்டும் என்பதுதான். ஒரு சிறிய தவறு நிகழ்ந்தாலும், தீட்டிப்புடுவார்கள். எனவே, இந்த சோதனைகளில் வாலாட்டமாட்டார்கள் பெரும்பாலும். இந்திய நிறுவனங்களும் ஒரே சொல்லுக்குத்தான் பயப்படுகின்றன- Compliance to USFDA protocols. எனவே விதிமுறைகள் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. நீங்கள் சுட்டியிருந்த கட்டுரையில் இந்தியா கினிபிக் எனக் காட்டுவதே உள்நோக்கமாக எனக்குப்படுகிறது.
அறிவியல் கட்டுரையென்றால் அதன் சாரங்களை தெளிவாகச் சொல்லவேண்டும். இது என் கருத்து.
ஆயினும், ஒன்றை ஏற்றுக்கொள்ளவேண்டும். முன்னேறிய நாடுகளில் சோதனைசெய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. அவர்கள் மரித்தால் எக்கச்சக்கம் பணம் தரவேண்டியிருக்கும். இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிகள் ஏற்றுக்கொள்ளும். கம்பெனிகளும், ஒரு குறிப்பிட்ட தொகையை "ஆய்வில் தெண்டம் அழுவதற்கு" என ஒதுக்கிவைக்கும். இந்தியாவில் subjects சுளுவாகக்கிடைக்கும். செத்தாலும், பிக்கல் பிடுங்கல் ரொம்ப இருக்காது. சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் காண்ட்ட்ராக்டில் அவை இடம்பெறுமா என்பது கேள்வி.
 
நீங்க சொல்றது சரி தன் நாரயண், இந்தியா இவ்வளவு தான், மாறி வரும் உலக நடப்புல , தத்தி தத்தி நம்ம மேல வரதுக்கு நிறைய காலம் பிடிக்கும். என்ன தான் ஆசியாவின் அடுத்த பொருளாதார புலி அப்படி, இப்படினு நம்மல பீத்திகிட்டாலும், அறியாமை, ஏழ்மை, நடந்த வந்த பாதையின் நற்குனங்களை கண்டறிந்து பெரும்பான்மை அறிவாளிகாளா ஆக எவ்வளவு காலம் புடிக்கும்னு தெரியாது, அதுவரை இந்தியா இவ்வளவு தான்!
 
//கோல்வால்கர் நினைவு நாளையும், சாவர்க்கார் நினைவு நாளையும், சிவாஜி நினைவு நாளையும் கொண்டாடும் நாட்டில், இதை ஒரு நாடாக ஒருங்கிணைத்த அக்பர் மூலையில் வீசப்படுவதற்குப் பெயர் தான் secular state.//

செக்கியூலர் ஸ்டேட்!! ;)
 
நாராயணன், களப் பரிசோதனை பற்றிய வெங்கட்டின் பதிவு இங்கே
இந்த சோதனைகள் மூலம் இந்திய வறியவர்களுக்கு ஒரு வருமானம் வருகிறது என்றால் அது நல்லதுதான். ஆனால் அரசு இயந்திரங்களும் தன்னார்வு நிறுவங்களும் அவர்களுக்கு முறையாகச் சேரவேண்டிய ஈட்டுத்தொகை உரியவர்களுக்கு சரியாகப் போய்சேர ஏற்பாடுகள் செய்யவேண்டும். மேலும் சோதனைகளின் பக்கவிளைவுகள் அவர்களுக்கு முழுமையாக விளக்கப் படவேண்டும்.சுருங்கச் சொன்னால் திரையுலகில் துனைநடிகர்களுக்கு இருப்பதுபோன்ற ஒரு அமைப்பு அவர்கள் நலனைப் பேண அமைக்கப் பட வேண்டும்.
 
சேவாகிராம் மருத்துவக்கல்லூரியில் என் சகோதரி உடற்கூறு துறை தலைவியாக இருந்தபோது போயிருக்கிறேன். அங்கே ஆசிரியை, மாணவிகள் கதர் மட்டுமே உடுத்த வேண்டும்,வெள்ளிக்கிழமை மாலை பஜனைக்கு வராவிட்டால் தற்காலிக பணிநீக்கம் இவை உண்டு. இப்போது எப்படியோ.AIIMS இலேயே மக்கள் உடன்பாடில்லாமல் பரிசோதனைக் உட்படுததப்படும்போது வார்தா என்ன செய்யமுடியும்.
இங்கே IRb மிகவும் கடின வரை முறைகள் கொண்டது. அப்படியும் சில நேரம் தவறு நடக்காமல் இல்லை.இந்தியாவில் சட்டங்கள் இருந்தாலும் மனித இரத்தம், உடல் biopsy போன்றவற்றை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். என்னுடைய ஆராய்ச்சியில் கூட நுரையீரலில் இருந்து நீர் சேர்த்திருக்கிறேன். கையொப்பம் தேவை இல்லை.நம்முடைய நாட்டிலும் IRB போல அரசியல் தலையீடு இல்லாத துறை வேண்டும்.என் பதிவின் சுட்டி:http://reallogic.org/thenthuli/?p=10
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]