Apr 22, 2006

ஊர்க்குருவி

கொல்கத்தாவில் மாவோயிஸ்ட்டுகள் இரவோடு இரவாக காபி ஷாபில் போஸ்டர் அடித்திருக்கிறார்கள் -
"Keep the war alive, boycott the votes"
ரிடிப். செய்தி

சுஹாசினி ஹைடர் நர்மதா பிரச்சனையின் சில முக்கியமான பகுதிகள் பற்றிய விஷயத்தினை அலசுகிறார். அரசுகள் எவ்வளவு மெத்தனமாக இருந்திருக்கின்றன என்று அவரின் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்

சுஹாசினி ஹைடர் பதிவு

சீனர்கள் நம்மை விட அதிகமாக எப் டி ஐ பெறுகிறார்கள் என்று பொருமுவர்களுக்காக............
"one reason why China attracted $47 billion in foreign investment last year compared to India's $5 billion, is that their officials are not accountable. They can, and do, chase farmers from their fields and repress union activity to attract foreign investment. That does not happen in India, where rights and property are protected."
கொஞ்சம் கிளிஷேவாக தெரிந்தாலும், இன்னமும் கம்யுனிஸ்டுகளும், மாவோயிஸ்டுகளும் இந்தியாவில் ஒரளவிற்கு "புரட்சியினை" கையில் வைத்திருக்கிறார்கள்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ப்ரூஸ் கில்லி - குட்நியுஸ் இந்தியா வழியாக

கடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா விளையாட்டுகாக செலவு செய்த தொகையை விட கடைசி நாளில், ஜஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி, லாரா தத்தா, சாயிப் அலிகான் போன்றவர்களை கொண்டு சென்று "கலை நிகழ்ச்சி" நிகழ்த்தியதற்கான செலவு 40 கோடி ரூபாய்கள். இன்னமும், ரத்தோருக்கோ, அஞ்சு ஜார்ஜுக்கோ, பதக்கங்கள் வென்ற பலருக்கோ ஒரு மண்ணாங்கட்டியும் செய்யவில்லை.

தெஹல்காவில் "தேசபக்தி விளையாட்டுகள்"

உலகம் முழுக்க தண்ணீர் என்பது வெறும் குடிநீர் சமாச்சாரமல்ல. அது $800 பில்லியன் பெறுமானமுள்ள தொழில். 5% உலக மக்கள் தனியார்களிடமிருந்து நீரைப் பெற்று வருகிறார்கள். இந்தியாவில் ஒரு லிட்டர் பால் 6 ரூபாய்க்கும், தண்ணீர் 12 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
"this was one part of Nallamada in Andhra Pradesh blessed with that element. Things had changed, though. "Please don't drink it," he said, finally. "See how it is?" he asked, showing us a tumbler. Tiny blobs of thingummy floated atop a liquid more brown than transparent. But then he brightened up. "Will you have Coca-Cola instead? That, this village has." And so it did. As in the Aamir Khan ad. The smaller bottle for Rs. 5"
"People pay more for water than corporates do. The bottled water brigade got treated and cleaned water in Hyderabad for 25 paise a litre for years. This goes into that bottle costing Rs. 12. In many parts of the country soft-drink giants get it almost free. Whole communities lose out as heavyweights like Coke step in. That company used 283 billion litres of water worldwide in 2004. Enough, points out the India Resource Centre, to "meet the drinking needs of the entire world's population for ten days." And the billions of litres it guzzles in India could meet the needs of whole districts. in Orissa or Rajasthan for a year."

நீர் மேலாண்மையும், நாம் எதிர்கொள்ளப் போகும் பிரச்சனைகளும் பற்றி ப்ரண்ட்லைனில்

"Get ready for cosmopolitan slums with thriving markets, aging residents, and the most creative economies in history."
நகரமயமாதல் எவ்வளவு விரைவாக நடந்து வருகிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் சொல்லும் கட்டுரை. (முழுதும் படிக்க பதிவு செய்தல் அவசியம்)

ஸ்ட்ரைடிஜி பிஸினஸில் - ஸ்டிவர்டு ப்ராண்ட்

Apr 20, 2006

அருந்ததிராய் - தெஹல்கா பேட்டி

அருந்ததி ராய் தெஹல்கா எக்ஸ்ளூசிவில் அமிலமாய் பொழிந்திருக்கிறார். பேட்டியிலிருந்து சில பகுதிகள்

" In India we are at the moment witnessing a sort of fusion between corporate capitalism and feudalism — it’s a deadly cocktail. We see it unfolding before our eyes. Sometimes it looks as though the result of all this will be a twisted implementation of the rural employment guarantee act. Half the population will become Naxalites and the other half will join the security forces and what Bush said will come true. Everyone will have to choose whether they’re with “us” or with the “terrorists”. We will live in an elaborately administered tyranny."

"State are more or less divided between the Gandhians and the Maoists. Sometimes — quite often — the same people who are capable of a radical questioning of, say, economic neo-liberalism or the role of the state, are deeply conservative socially — about women, marriage, sexuality, our so-called ‘family values’ — sometimes they’re so doctrinaire that you don’t know where the establishment stops and the resistance begins. For example, how many Gandhian/Maoist/ Marxist Brahmins or upper caste Hindus would be happy if their children married Dalits or Muslims, or declared themselves to be gay? Quite often, the people whose side you’re on, politically, have absolutely no place for a person like you in their social, cultural or religious imagination. "

" Money is like nuclear waste. What you do with it, where you dump it, what problems it creates, what it changes, these are incredibly complicated things. And eventually, it can all blow up in your face. I’d have been happier with Less. Yeh Dil Maange Less. Less money, less fame, less pressure, more badmashi. I hate the f***ing responsibility that is sometimes forced on me."

"People, ideologues who believe in a kind of redemption, a perfect and ultimate society, are terrifying. Hitler and Stalin believed that with a little social engineering, with the mass murder of a few million people, they could create a new and perfect world. The idea of perfection has often been a precursor to genocide."

Apr 10, 2006

குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி - சில விளக்கங்கள்

இப்போது தான் நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசி "என்னுடைய கவலைகளை" குமுதம் ரிப்போர்ட்டர் பகிர்ந்துக் கொண்டிருப்பதைப் பற்றிக் கேட்டார். என்னுடைய கவலைகள் இப்போதைக்கு என்னுடைய நிறுவனத்திற்கு தேவைப்படும் VC பணம், மேதா பட்கரின் உடல்நிலை, பார் கேம்ப் சென்னை நிகழ்வின் சிரமங்கள், ட்ராக்பேக்கின் தொழில்நுட்ப சிக்கல்கள் என விரிவாக இருக்கும்போது குமுதம் ரிப்போர்ட்டர் எப்படி என்னுடைய கவலைகளை பகிர்ந்துக் கொண்டிருக்க முடியும் என்று மண்டை காய்ந்திருந்தேன். இட்லிவடையினால் வெளியிடப்பட்ட பக்கங்களைப் பார்வையிட்டேன். [இன்னமும் புத்தகம் படிக்கவில்லை]

நினைத்தது நடந்திருக்கிறது. நான் பேசிய தகவல்கள் "பத்திரிக்கை தர்மத்திற்காகவும்", பதவி பறிபோய்விடும் அபாயத்தினாலும் பிரசுரிக்கப்படவில்லை. பத்ரியின் கவலைகளோடு ஒத்துப் போனாலும், நான் பேசியது மிக முக்கியமாக இந்தியாவில் எடுக்கப்படும் இரட்டை நிலைகளைப் பற்றி. இந்திய ஜனாதிபதிக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய ஒரு கோமாளியினைப் பிடிக்க இந்திய அரசும், தமிழக அரசும், சைபர் கிரைம் துறையும் அடித்த அமளிகள் மறந்திருக்காது. இதே சைபர் கிரைம் துறையில் நானும் பிரகாஷும் போய் பேசிய போது, அது "சென்னை லிமிட்டில்" இல்லை, சிபிசிஐடியினைக் கேளுங்கள் என்று பதில் வந்தது. ஜனாதிபதி என்றால் திருச்சி [திருநெல்வேலி?!]யில் இருக்கும் ஒரு ப்ரெளசிங் சென்டருக்கு சென்று அதன் ஐபி விவரங்களை கண்டுபிடித்து பெண்டு எடுக்க முற்படும் தமிழக/இந்திய சைபர் கிரைம் துறைகள், ஏன் ஒரு முக்கியமான வசவுவார்த்தைகளையும், ஆபாச விஷயங்களையும் எழுதும் ஒரு நபரினைப் பற்றிய தகவல்களை வாங்க மறுக்கிறது. டோண்டுவினைக் கேட்டால், அவர்கள் எழுத்து மூலம் கம்ப்ளெய்ண்ட் பிறகு பண்ணச் சொன்னார்கள் என்று சொல்கிறார். இதே நாட்டில் தான், பாசி.காம்மில் [தற்போது ஈபே.இன்] ஆபாச குறுந்தகடுகள் விற்றதனால், அதன் தலைவரை பிடித்து non-bailable offense-இல் உள்ளே வைத்திருந்தார்கள். கூர்ந்துப் பார்த்தால், ஜனாதிபதி விஷயத்திலும், ஈபே விஷயத்தில் குற்றம் என்று சொல்லப்படுவது ஒரு தனி நபரை மையப்படுத்தி முன் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இங்கே ஆபாச வசவுகள் என்பது ஒரு பொதுக் களத்தில் முன்வைக்கபடுகிறது, ஆனாலும், அரசாலோ, அரசு அமைப்புக்களாலோ ஒன்றும் செய்யமுடியவில்லை. இது கவனக்குறைவா, கையலாகததனமா? இது இரட்டை நிலைப்பாடு அல்லவா. ஜனாதிபதிக்கு ஒரு நீதி. குடிமகனுக்கு வேறொரு நீதியா?
"இப்படியொரு ‘குடைச்சலைக்’ கொடுத்துவரும் அவன் யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திறமையுடன் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்திச் செயல்படுகிறானாம். அத்துடன் அவன் எழுதும் தமிழ்நடை, உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்பதால் அவன் மெத்தப் படித்த அறிவாளி என்று ஒப்புக்கொள்ளும் இவர்கள்,
ஐயா, நான் எப்போது அவரை அறிவாளி என்று சொன்னேன். சர்டிபிக்கேட் கொடுக்க நானென்ன பல்கலைக்கழகமா? விட்டால், வசவு தலைவர் வாழ்க! என்று சொன்னேன் என்று போடுவார்கள் போலிருக்கிறது. மேலிருக்கும் சட்டப் பிரச்சனைகளும், இரட்டை நிலைகளையும் பற்றி தான் என்னுடைய பேச்சு அமைந்திருந்தது. இதில் சொன்ன எதையுமே போடாமல் "நான் கவலை தெரிவித்தேன்" என்றால் என்ன பொருள் ? என்னுடைய நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. நான் எழுதும் விஷயங்கள் அத்தனையும் "ஜனரஞ்சக" பத்திரிக்கைகளில் போட முடியாது [தினகரன் வசந்தம் விதிவிலக்கு. அதுகூட சினிமா சம்பந்த பட்டதனால் தான். என்னுடைய கெட்ட வார்த்தைகளின் அரசியலோ, சிலுக்கு சுமிதா புராணமோ அவர்களாலும் பதிய முடியாது ;)] நான் அதனால் தான், நண்பர்கள் கேட்டபோதும், எந்த பத்திரிக்கையிலும் எழுத முடியாது என்று அன்புடன் மறுத்திருக்கிறேன். இன்னொரு முறை என்னுடைய நிலைப்பாடினை நிருபித்தற்கு குமுதம் ரிப்போர்ட்டர்க்கு நன்றி. மற்றபடி என்னோடு உரையாடிய பத்திரிக்கை நிருபர்களோடு எவ்விதமான பிரச்சனைகளும் இல்லை.

இதற்கு சம்பந்தமில்லாமால், நேற்று தான் சென்னை பார்கேம்பில் Social Media, Web 2.0, Citizen media, Distributed Computing, Data DJing என்று ஜல்லியடித்திருந்தேன். சிடிசன் மீடியா பெருகினால் தான் இனி பேசவே முடியுமென்று தோன்றுகிறது ;)


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]