Apr 10, 2006

குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி - சில விளக்கங்கள்

இப்போது தான் நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசி "என்னுடைய கவலைகளை" குமுதம் ரிப்போர்ட்டர் பகிர்ந்துக் கொண்டிருப்பதைப் பற்றிக் கேட்டார். என்னுடைய கவலைகள் இப்போதைக்கு என்னுடைய நிறுவனத்திற்கு தேவைப்படும் VC பணம், மேதா பட்கரின் உடல்நிலை, பார் கேம்ப் சென்னை நிகழ்வின் சிரமங்கள், ட்ராக்பேக்கின் தொழில்நுட்ப சிக்கல்கள் என விரிவாக இருக்கும்போது குமுதம் ரிப்போர்ட்டர் எப்படி என்னுடைய கவலைகளை பகிர்ந்துக் கொண்டிருக்க முடியும் என்று மண்டை காய்ந்திருந்தேன். இட்லிவடையினால் வெளியிடப்பட்ட பக்கங்களைப் பார்வையிட்டேன். [இன்னமும் புத்தகம் படிக்கவில்லை]

நினைத்தது நடந்திருக்கிறது. நான் பேசிய தகவல்கள் "பத்திரிக்கை தர்மத்திற்காகவும்", பதவி பறிபோய்விடும் அபாயத்தினாலும் பிரசுரிக்கப்படவில்லை. பத்ரியின் கவலைகளோடு ஒத்துப் போனாலும், நான் பேசியது மிக முக்கியமாக இந்தியாவில் எடுக்கப்படும் இரட்டை நிலைகளைப் பற்றி. இந்திய ஜனாதிபதிக்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய ஒரு கோமாளியினைப் பிடிக்க இந்திய அரசும், தமிழக அரசும், சைபர் கிரைம் துறையும் அடித்த அமளிகள் மறந்திருக்காது. இதே சைபர் கிரைம் துறையில் நானும் பிரகாஷும் போய் பேசிய போது, அது "சென்னை லிமிட்டில்" இல்லை, சிபிசிஐடியினைக் கேளுங்கள் என்று பதில் வந்தது. ஜனாதிபதி என்றால் திருச்சி [திருநெல்வேலி?!]யில் இருக்கும் ஒரு ப்ரெளசிங் சென்டருக்கு சென்று அதன் ஐபி விவரங்களை கண்டுபிடித்து பெண்டு எடுக்க முற்படும் தமிழக/இந்திய சைபர் கிரைம் துறைகள், ஏன் ஒரு முக்கியமான வசவுவார்த்தைகளையும், ஆபாச விஷயங்களையும் எழுதும் ஒரு நபரினைப் பற்றிய தகவல்களை வாங்க மறுக்கிறது. டோண்டுவினைக் கேட்டால், அவர்கள் எழுத்து மூலம் கம்ப்ளெய்ண்ட் பிறகு பண்ணச் சொன்னார்கள் என்று சொல்கிறார். இதே நாட்டில் தான், பாசி.காம்மில் [தற்போது ஈபே.இன்] ஆபாச குறுந்தகடுகள் விற்றதனால், அதன் தலைவரை பிடித்து non-bailable offense-இல் உள்ளே வைத்திருந்தார்கள். கூர்ந்துப் பார்த்தால், ஜனாதிபதி விஷயத்திலும், ஈபே விஷயத்தில் குற்றம் என்று சொல்லப்படுவது ஒரு தனி நபரை மையப்படுத்தி முன் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இங்கே ஆபாச வசவுகள் என்பது ஒரு பொதுக் களத்தில் முன்வைக்கபடுகிறது, ஆனாலும், அரசாலோ, அரசு அமைப்புக்களாலோ ஒன்றும் செய்யமுடியவில்லை. இது கவனக்குறைவா, கையலாகததனமா? இது இரட்டை நிலைப்பாடு அல்லவா. ஜனாதிபதிக்கு ஒரு நீதி. குடிமகனுக்கு வேறொரு நீதியா?
"இப்படியொரு ‘குடைச்சலைக்’ கொடுத்துவரும் அவன் யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திறமையுடன் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்திச் செயல்படுகிறானாம். அத்துடன் அவன் எழுதும் தமிழ்நடை, உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்பதால் அவன் மெத்தப் படித்த அறிவாளி என்று ஒப்புக்கொள்ளும் இவர்கள்,
ஐயா, நான் எப்போது அவரை அறிவாளி என்று சொன்னேன். சர்டிபிக்கேட் கொடுக்க நானென்ன பல்கலைக்கழகமா? விட்டால், வசவு தலைவர் வாழ்க! என்று சொன்னேன் என்று போடுவார்கள் போலிருக்கிறது. மேலிருக்கும் சட்டப் பிரச்சனைகளும், இரட்டை நிலைகளையும் பற்றி தான் என்னுடைய பேச்சு அமைந்திருந்தது. இதில் சொன்ன எதையுமே போடாமல் "நான் கவலை தெரிவித்தேன்" என்றால் என்ன பொருள் ? என்னுடைய நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. நான் எழுதும் விஷயங்கள் அத்தனையும் "ஜனரஞ்சக" பத்திரிக்கைகளில் போட முடியாது [தினகரன் வசந்தம் விதிவிலக்கு. அதுகூட சினிமா சம்பந்த பட்டதனால் தான். என்னுடைய கெட்ட வார்த்தைகளின் அரசியலோ, சிலுக்கு சுமிதா புராணமோ அவர்களாலும் பதிய முடியாது ;)] நான் அதனால் தான், நண்பர்கள் கேட்டபோதும், எந்த பத்திரிக்கையிலும் எழுத முடியாது என்று அன்புடன் மறுத்திருக்கிறேன். இன்னொரு முறை என்னுடைய நிலைப்பாடினை நிருபித்தற்கு குமுதம் ரிப்போர்ட்டர்க்கு நன்றி. மற்றபடி என்னோடு உரையாடிய பத்திரிக்கை நிருபர்களோடு எவ்விதமான பிரச்சனைகளும் இல்லை.

இதற்கு சம்பந்தமில்லாமால், நேற்று தான் சென்னை பார்கேம்பில் Social Media, Web 2.0, Citizen media, Distributed Computing, Data DJing என்று ஜல்லியடித்திருந்தேன். சிடிசன் மீடியா பெருகினால் தான் இனி பேசவே முடியுமென்று தோன்றுகிறது ;)


Comments:
பத்ரிகை அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. அழுவாத

உன்னோட பேரு பப்ளிசு ஆகி வந்ருக்குன்னு செம மூட்ல இருப்பியா, இல்லே இப்புடில்லாம் நியாயதூரெடுப்பியா?
ராசா நீ பொழக்கமாட்டாய் போ.

அதெல்லாம் சரி. இண்டர்வியூ எடுக்கவந்த ஆசாரபத்ரிகை குமுதம் ரிப்போட்டரே வாசிச்சு நொந்து நூடில்ஸாபோட்டாராமே? மெய்யாலுமா?
 
தினமலரில் பதிவு வந்ததுக்கு நன்றி சொல்லிப் பதிவு போடுவதுபோல நீங்களும் ஒரு நன்றிப்பதிவு போடுவீங்களெண்டெல்லோ நினைச்சேன்.
நன்றி கெட்ட மனுசங்களப்பா.
 
பத்திரிகையில முழுமையா வரல்லைன்னாலும் கொஞ்சமாவது வந்ததே? போலி டோண்டு எப்படி மற்ற பிளாக்கர்கள் விவரத்தை கண்டுபிடிக்கிறான்....
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]