May 31, 2006

26 விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து.....

'வெற்றி கொடி கட்டு' என்கிற படத்தில் துபாயில் இருந்த இடத்தின் முகவரியினை வடிவேலு பார்த்திபனிடம் கேட்கும் போது ஆரம்பிக்கும் வாசகம் தான் மேற்கண்டது. நெ.26 விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு, துபாய் என்று சொல்லும் வசனத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தமென்று பார்க்காதீர்கள். சிலுக்கு லுங்கி, ஜிப்பா, மைனர் செயின் போன்ற விஷயங்களில்லாமல் ஒரு சாதாரண ஜீன்ஸ் டி சர்ட்டில் துபாயில் இறங்குகிறேன்.

உடனே வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய என் ரசிகர் மன்ற கண்மணிகள் பதட்டப்படாதீர்கள். சனிக்கிழமையன்று தான் தரையிரறங்குகிறான் உங்கள் தலைவன் ;) கண்டிப்பாக கெளரவ முனைவர் பட்டம் தேவையில்லை. வெறுமனே சமோசா இரானி டீ கொடுத்து தமிழ் சங்க கூட்டத்தில் ஒரங்கட்டி மேட்டர் வாங்கும் [சிநேகாவிற்கும் சரவண ஸ்டோர்ஸுக்கும் மேட்டரமாமே உண்மையா, நீங்க தி.நகர்ல தானே இருக்கீங்க] வேலை நடக்காது நைனா, நாங்க ஒரு மார்க்கமான ஆளுங்க. வணிக விஷயமாக ஒரு இரண்டு வாரங்கள், சென்னை வெயில் போக, இருக்கக் கூடிய பொன்நிற மேனியினை [டேய் ஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வரா இது!] வளைகுடா வெயிலில் கருக்குவதாக உத்தேசம். ஜூன் மூன்று தொடங்கி, பதினொன்றம் தேதி வரையில் துபாயில் இருக்கப் போகிறேன். துபாயில் வலைப்பதிவர்கள் இருப்பின் ஒரமாய் ஒரு மடல் போடுங்கள், நல்ல 'மால்' லாக பார்த்து வம்படிக்கலாம். இது தாண்டி, ஒரு மூன்று நாள் மஸ்கட்டிலும் வேலையிருக்கிறது. ஊர் உலகம் சுற்றி ஒரு வழியாக என் இனிய கூவமனமகிழும் சென்னைக்கு பதினாறாம் தேதி வருவதாக இருக்கிறது திட்டம்.

பார்க்க நினைப்பவர்கள், மடல் அனுப்புவர்கள் யோசித்து கொள்ளுங்கள். நான் கொஞ்சம் தொணதொணப்பு கேஸ், கொஞ்சம் ஆர்வக் கோளாறு பார்ட்டி, ஆகவே, அராபிய பாடல்கள், படங்கள், நம்மாட்களின் நிலைமைகள், வாணிகம், அமெரிக்க - இஸ்லாமிய சண்டைகள், தமிழ் படங்கள், வாளமீனுக்கும் வஜ்ரமீனுக்கும் கல்யாணம், புதுப்பேட்டை [யாருப்பா அது, விசா விஷயங்களில் அலைந்து கொண்டிருப்பதால் இன்னும் பார்க்கவில்லை. நான் ரெடி நீங்க ரெடியா ]ஷேக்குகளில் 36 வது சம்சாரத்தின் தூரத்து மச்சினனின் மூன்றாவது பையனின் மனைவியின் ஒன்று விட்ட சித்தப்பா பையனின் குழந்தை பேதியாவதன் காரணம் வரை பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஒரங்கட்டி ஒரு ஒன் டே மேட்சு ஆடலாம்.

இப்போதைக்கு அபீட்டு, உங்க ஊருக்கு வந்தா குதா ஃபஸ்!

Comments:
அண்ணே, துபாய்க்கு போயி திரும்பவும் சரவண பவன், அஞ்சப்பர் னு போகாதீங்க.

அங்கே ஸ்வர்மா என்ற சாப்பாடும் லெபனானின் ஷீஷ் டவுக் இவைகளை டிரை செய்ங்க. மற்ற அரேபிய பதார்த்தங்கள் முட்டாபால், கபூஸ், ஹம்மஸ், பிலாபில் ஆகியவை
 
இனிய நாராயண்,

பயணம் சவூதி வரையில் இல்லையென நினைக்கிறேன். ஒருவேளை சவூதி வருவதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

நான் இதனை தனிமடலில் சொல்லியிருக்கலாம்தான். பொறுமை இல்லை :)

அன்புடன்
ஆசாத்
 
சென்று வருக,வென்று (?) வருக.

வாழ்த்து(க்)கள்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]