Jun 10, 2006

திராம் தேசம் - 1

"சாலா ஃசூத்தியா" என்று என்னுடைய பங்காளி கத்தியவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பர்கர் நழுவி சாஸினை சிதறடித்து கீழே விழுந்தது. விஷயம் பெரிதாக இல்லை, இருக்கும் குறுகிய இடைவெளியில் இன்னொரு கார் சரக்கென்று ஊடால புகுந்ததுதான். என்னுடைய கார் இப்போது 15 கீமி வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. ஷேக் ஸையித் சாலை அகலமான சாலை என்று பெயர். ஹாலிவுட் படங்களில் பார்த்த மன்ஹாட்டன் நிலபரப்பு நினைவுக்கு வருகிறது. ஏதேனும் ஒரு அறுவதுமாடி கட்டிடத்தில் ஃகாட்சிலா கோன் ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறதா என்று பார்த்தேன், அது மட்டும் நடக்கவேயில்லை. துபாயில் எவனாவது 15 கீமி வேகத்தில் போவானா, கேணயன் என்று முன்பு சொல்லியிருப்பேன். இங்கேயிருக்கும் டிராபிக் அவஸ்தை இப்போது அல்லவா தெரிகிறது. "பேரு பெத்த பேரு, ஊரு சொத்த ஊரு" என்பது துபாய்க்கு பொருந்தும். எல்லா இடங்களிலும் தீப்பெட்டிகளை அடுக்கி வீடு கட்டுவது போல சர்வ சாதாரணமாக 30,40,50 மாடிகள் கொண்ட கட்டிடங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், துபாய் ஒரு சரிவுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் கன்னா பின்னா என்று ஏற்றி வைத்திருக்கிறார்கள். யாராவது துபாய் இண்டர்நெட் சிடி, துபாய் மீடியா சிட்டி 3 வாரத்தில் கிளியரன்ஸ் என்று சொன்னால், ஒரங்கட்டி நைய புடையுங்கள். ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இன்னமும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்களுடைய இன்னொரு அலுவலகத்தினை [கம்யுட்டர் பொட்டி தான் அப்பு, வேறென்ன வேலை தெரியும் நமக்கு] இங்கே துவங்க இருப்பதன் இறுதி கட்ட பேச்சு வார்த்தைகளுக்காக தான் துபாய், சார்ஜா வந்திருக்கிறேன். துபாய் என்றவுடன் நினைவுக்கு வரும் எந்த விஷயங்களும் இங்கே சொல்லப்போவதில்லை. அகலமான சாலைகள், "துடைச்சு வைச்சாப் போல இருக்குறா" என்பது எல்லாம் சும்மா. வெயில் கொளுத்துகிறது. கொளுத்துகிறது என்பது சாதாரண வார்த்தை, எரித்துக் கொண்டு இருக்கிறது என்பது சரியாக இருக்கும். இங்கே வந்தபின்பு தான் தெரிகிறது, ரயில்களை இல்லாத ஊர் என்பது. மெட்ரோ இல்லையா என்று கேட்டால், 2010-இல் வரும் என்று சொல்லுகிறார்கள். விளங்கிடும். டிராபிக் மகா மோசம். கார்கள், கார்கள், கார்கள், கண்ணெட்டும் தூரம் வரை வெறுமனே கார்கள், டிரக்குகள் மட்டுமே. என்னுடைய ஒரு வார இருப்பில் நான்கு டூவிலர்களை பார்த்திருப்பேன். அதுவும் பிட்சா விற்பவர்கள் மட்டுமே.

எதற்கும் நடுவில் இருந்து ஆரம்பித்தால் நன்றாக இருக்காது ஆரம்பமே அமர்க்களம் என்பது போல லேட்டாக போன இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் என்னை இறக்கிவிடும் போது 11.30 மணி. வணிக சம்பந்தமாக போனதால், எக்ஸ்பிரஸ் விசாவில் தான் இறங்கினேன். கையில் பிரிண்ட் அவுட்டோடு போய் இந்தியர்கள் விசா பெறும் துறையில் நின்றால், என் விசா வரவில்லை.

அவ்வளவு தான்டா மேட்டரு மறுநாள் காலை தினந்தந்தியில் விசா இல்லாமல் போன வாலிபர் திருப்பி அனுப்பப்பட்டார் என்று கட்டம் கட்டிடுவாங்களே என்று. நான் அந்த அரபி ஆபிசரிடம் ஆங்கிலம், எனக்கு தெரிந்த "பேல் பூரி" இந்தியில் கேட்டால் மொட்டையாய் No visa. No entry என்று தேய்ந்து போன பழைய ரிக்கார்டினைப் போல சொல்லிக் கொண்டிருந்தான். சரிதான், சிவராத்திரி இன்றைக்கு துபாய் விமான நிலையத்தில் தான் என்று நினைத்துக் கொண்டே என்னுடைய நண்பரை அழைத்தால் அவருடைய செல்பேசி போகவில்லை. அவர் தான் எனக்கு ஸ்பான்சர். அப்புறம் கொஞ்சம் இரானி, இங்கிலிஷ்காரிகளை ஒரம் கட்டி [யோவ் ஒழுங்கா படிங்கய்யா! ஒரங்கட்டிட்டேன்னு படிச்சிங்கன்னா மேட்டர் மாறிடும்] ஒரு வழியாக நம்மாளை பிடித்து ரெப்ரென்ஸ் நெம்பர் வாங்கி மறுபடியும் அந்த அரபி உம்மானமூஞ்சியிடம் போய் சொன்னால், No i cant call. Keep it with you. Your visa will come என்று சொல்லி இப்போது என்னை ஒரங்கட்டி உட்கார சொல்லிவிட்டார்கள். நைஜீரிய மாணவர்களோடு கோக் குடித்து கொண்டே [f**k this airport] என்று திட்டிக் கொண்டே நின்றால், நல்ல புடவை ரவிக்கையில் ஒரு பெண்மணி தேமே என்று விழித்துக் கொண்டிருந்தார். போய் கேட்டால், வேலைக்காரியாக ஏதோ ஒரு அரபி வீட்டிற்காக, பெரம்பலூரிலிருந்து ஏற்றி விட்டிருக்கிறார்கள். கையில் ஒரு மஞ்சள் பையோடு ஆங்கிலமும் தெரியாமல், இந்தியும் தெரியாமல் அந்த அரபி ஆபிசரிடம் பேச தெரியாமல் நின்று கொண்டிருந்தார். போய் விவரம் கேட்டு ஹிந்தி ஆங்கிலம் சைகை பாஷை என்று எல்லாம் முயற்சித்து விசாவினை வாங்கி கையில் கொடுத்தேன். நிலைமை உள்ளே மகா கேவலமாக இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தானுக்கு மட்டும் தனியாக ஒரு கவுண்டர், அதுவும் நீங்கள் வேலைக்காக வருகிறீர்கள் என்று தெரிந்தால், அரபிகள் அவர்கள் இஷ்டப்படி நடத்துவார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை. இதெல்லாம் தாண்டி, அரபிகள் மகா மந்த கூடாரங்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை அவர்களுக்கு. நண்பர் சொன்னது சரியாக தான் இருந்தது "ஆயில் இருந்தா அறிவு இருக்காது. அறிவு இருந்தா, ஆயில் இருக்காது. அரபி ஆயிலை கையில எடுத்துட்டான்" ஒரு வழியாக விசா கிடைத்தது.

இந்த களேபாரத்திற்கு நடுவில் நான் வந்த இந்தியன் ஏர்லைன்ஸிற்கு பிறகு மூன்று விமானங்கள் இந்தியாவிலிருந்து வந்து இறங்கியிருக்கிறது. என்னுடைய பேக்கேஜ் காணோம். சரிதான், நமக்கு சனி இறங்கியவிடனே பிடித்து விட்டது என்று இந்தியன் ஏர்லைன்ஸினை தேடி, கிடைக்காமல், பின் ஒரு காவல் அதிகாரியோடு கூத்தாடி, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் அறையிலிருக்கக் கூடும் என்கிற மேலதிக தகவல் பெற்று அங்கே போய் உட்கார்ந்தால், அவன் ஒரு பிரிட்டிஷ் அதிகாரி. கோராகளைப் [பிரிட்டிஷ்காரர்களுக்கு நம்மாளுங்க வைத்திருக்கும் செல்ல பெயர் : ) ] பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப் பட்டிருக்கிறேன். அன்று கண் முன்னால் பார்த்தேன்.இந்தியா என்றவுடன் சுறுசுறுப்பாக Yes, baggages arrived என்று சொன்னான். அவனுடைய தாத்தா, இந்தியாவில் வேலை பார்த்த விசுவாசம் போல இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே போனால், Are you coming from hydrabad, that was the last flight from India என்று கடிக்க ஆரம்பித்தான். ஹை-பிட்சில் பசுபதி போல டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்று கத்தலாம் என்று தோன்றியது. பின் ஒரு வழியாக இந்திய வரலாறு, புவியியல், நிலப்பரப்பு, தமிழ்நாடு போன்ற விஷயங்களை சொல்லி, 15 நிமிடம் கழித்து தேடி கொண்டு வந்து கொடுத்தான். வேறு வழியில்லாமல், அங்கேயிருக்கும் ஏர் ஹோஸ்டஸ்களையும், உலக 'அழகிகளையும்' சும்மா ;) பார்த்துக் கொண்டேயிருந்து காலத்தினை கழித்தேன். சும்மா சொல்லக் கூடாது நடு ராத்திரி 12 மணிக்கு மோகினிகள் லோ-ஹிப் ஜின்ஸில் உலா வருகிறார்கள். இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், அமெரிக்கர்கள், பிரிட்டிஷர்கள், கென்யர்கள், சீனர்கள் என ஒரு மினி உலகமே துபாய் விமான நிலையத்துக்குள்ளே இருக்கிறது.

இப்படியாக அதிகாலை, சுபயோக சுபதினமான மூன்றாம் தேதி துபாய் மண்ணில் காலெடுத்து வைத்தேன். இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நான் மஸ்கட்டுக்கு பேக்-அப் ஆகியிருப்பேன், ஆக, ரியால் தேசம் என்றொரு தொடரினை கூடிய விரைவில் "குங்குமத்தில்" எதிர்பாருங்கள். "நீ மல்லுதானே", "பெங்களூர் சென்னையில் தானே இருக்கிறது" "தென்னிந்தியாவில் கேரளா, தமிழ்நாடு மட்டும்தானே இருக்கிறது" "ஜெயலலிதாவினை மும்பாய்க்கு அனுப்ப முடியுமா" "தென்னிந்தியர்கள் பெண்களை ஏன் ஏறெடுத்து பார்க்க மாட்டாமல் இருக்கீறீர்கள்" போன்ற வாழ்வின் மிக அத்தியாவசியமான கேள்விகளும், வரும் போது விமானத்தில் நான் சந்தித்த மனிதர்களும் அவர்களின் சாதி/சமூக நுண்ணியலும் அடுத்த பதிவில்

Comments:
நாராயண்,

கலக்குங்க! அதென்னது அது ஆயில் இருந்தா ஆஃப்பாயில்...சூப்பர்!

சரிங்க நாராயண், தமிழ்ல எழுதவே முடியாத வார்த்தைய உருதுன்றதால ஜாலியா எழுதி பதிவைத் துவங்கியிருக்கீங்க.

துபாய் ரியல் எஸ்டேட்டு பத்தி "ஈஸ் இட் பபிள்"னு MEEDல போட்டிருந்தத குழுக்கள்ள எழுதுன நெனைப்பு இருக்கு.

நேரம் கெடைக்கும்போது ரியல் எஸ்டேட் சமாசாரம் விஷயமா பெருசா பின்னூட்டம் தரேன்.

அன்புடன்
ரியால்தேசவாசி ஆசாத்
 
நாராயணா, ஒருமுடிவோடுதான் எழுத ஆரம்பிச்சா மாதிரி தெரியுது :-)

ஆசாத்ஜி, ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் கையைப் பிடிச்சி இழுக்குது. இங்க வீட்டூல அடிதடி நடக்குது. சட்டங்களில் நிறைய குளறுபடிகள் இருக்கு, வேணாம் என்று சொல்லிக்கிட்டு இருக்கேன். எனக்கு
சாதகமா எழுதினா, உங்க ரெண்டும் பேரையுமே கேட்கிறேன். பிரிண்ட் எடுத்து வூட்டிக்காரரிடம் காட்டுவேன். தயை செய்யுங்கள் :-)
 
தங்கள் வரவு 'நல்வரவாக' இல்லாமல் போனதற்கு காரணம்? ஆயில் இல்லாத அரேபியர்களா அல்லது கார்கள் மட்டுமே ஊரும் சாலைகளா?

துபாயில் இருந்த சில நாட்களில் உங்கள் கண்ணுக்கு 'எந்த விதமான' நல்லதுமே தெரியாமல் போனது வருந்தத்தக்கதே!

உங்களது அடுத்த பயணத்தில், அந்த ஊரிலாவது, ஏதாவது ""நல்லது"" தெரிந்தால் அதைப்பற்றி 'கொஞ்சம்' எழுதுங்கள்!
 
ஆசாத், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, இங்கே ஏழு கிணறு பின்பக்கம் நிறைய இஸ்லாமியர்கள் இருக்கும் இடமிருக்கிறது. பாரெக்ஸ் என்று சொல்லுவார்கள். ஸ்டேன்லி ஹாஸ்டலுக்கு எதிரே நேராய் போய் இடப்பக்கம் திரும்பினால், அங்கே கொஞ்ச நாள் சுற்றியதால், இந்த broken urdu ஒரளவுக்கு அத்துப்படி.

துபாய் வாசி, கோவித்துக் கொள்ளாதீர்கள். நிறைய விஷயங்கள் வரும் நல்ல விஷயங்களும் வரும்.மஸ்கட் பற்றி பேச வேண்டுமானால், நிறைய காமெடிகள் சொல்லலாம். அப்புறம் எழுதுகிறேன்.
 
நாராயண்,

அச்சச்சோ உங்களுக்கு உருது தெரியலேன்னா சொல்றேன், ம்ஹூம்.

அந்த வார்த்தையோட பயன்பாட்டைத்தான் சொல்றேன். நம்ம சென்னைப் பக்கத்துல அதே அர்த்தம் வர்ர வார்த்தைய வேறமாதிரி சொல்லுவாங்க.

நீங்க எழுதுனது வடக்கத்தி பாணி.

தெக்கத்தி பாணிக்கும் வடக்கத்தி பாணிக்கும் அர்த்தத்துல வித்தியாசம் இல்லை; வார்த்தைல வித்தியாசம் உண்டு.

மெட்ராஸ் உருதுவில் திட்டுவது,
ஹைதராபாத் உருதுவில் திட்டுவது,
கராச்சி உருதுவில் திட்டுவது,
பஞ்சாபி உருதுவில் திட்டுவது..இப்படி
நான்கு திட்டுகளில் கொஞ்சம் பழக்கம் உண்டு.

*

உஷாஜி,

ஜித்தாவிலிருந்து ப்ளாக் பதிய முடியவில்லை. மூன்றாவது நாளாக பிரச்சனை.

ரியல் எஸ்டேட் சமாசாரங்கள் மொத்தத்தையும் நாராயண்ஜியின் ப்ளாக்கில் இங்கேயே பின்னூட்டமாக இடலாமா என யோசிக்கிறேன்.

1.
பசங்க பாரிஸ்டர் அட் லா அது இதுன்னு லண்டன் பக்கம் ஒதுங்கப் போறாங்கன்னா வாங்காதீங்க.

2.
வெலை ஏறுனதும் வித்து காசு பாக்கலான்றது இன்னிக்கு உடான்ஸு; நேத்துவரைக்கும் ஓக்கே.

எல்லா ஃபைனான்ஸும் புது ப்ராஜெக்டுங்களுக்குதான் போவுது.

நாம மார்ட்கேஜுல வங்குனா நம்மட்டேர்ந்து வாங்குறவனும் மார்ட்கேஜுதான போடுவான்.

மார்ட்கேஜுக்காரவுங்க புது ப்ராஜெக்டுங்க பின்னாலதான் சுத்தறாங்க.

3.
என்னண்ணே வாங்கட்டுமா? - நானு.

போடா டேய், வாங்கு வாங்குன்னு கத்தும்போது சும்மா இருந்த. இப்ப என்னடா ஞானோதயம். இந்தப் பக்கமே வராத...வயசாகிட்டுவருது ஊரப்பாக்கப் போய் உக்காரு. வெலையெல்லாம் கன்னாபின்னான்னு ஏறிப்போய் கெடக்குது - இது அண்ணன் (உடன் பிறவா).

நமக்கு துபாய் மண்ணுல பணத்தப் போட விதியில்ல.

அன்புடன்
ஆசாத்
 
என்னுடைய புத்தகம் ஒன்றிற்காக
(http://nilavunanban.blogspot.com/2007/03/blog-post.html)
இந்தத் தகவலை நான் உபபோயகித்துக் கொள்ளலாமா?
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


情色貼圖,色情聊天室,情色視訊,情色文學,色情小說,情色小說,臺灣情色網,色情,情色電影,色情遊戲,嘟嘟情人色網,麗的色遊戲,情色論壇,色情網站,一葉情貼圖片區,做愛,性愛,美女視訊,辣妹視訊,視訊聊天室,視訊交友網,免費視訊聊天,美女交友,做愛影片

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Nice content thanks for sharing,good writeup ,admin of this site is working
review my website RAJAWALIQQ

 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]