Jul 2, 2006

கலகக்காரர்களும், காட்சி ஜோடனைகளும்

கொஞ்சம் காலம் கழித்து வந்து பார்த்தால் தமிழ் வலைப்பதிவுகளின் முகங்கள் புதிதாக இருக்கின்றன. ஒரு வேளை எனக்குதான் வி.ஆர்.எஸ் வாங்க வேண்டிய காலம் வந்துவிட்டதோ என்கிற சந்தேகம் வந்துவிட்டது. ஆனாலும், பழைய காரம் குறையாமல், இடஒதுக்கீடு, கண்ணகி சிலை, டெட்டி பியர் பொம்மை, இலங்கைப்பிரச்சனை, பாலசிங்கத்தின் மன்னிப்பு என நன்றாக "தெளிவாக" இருக்கிறது.இந்தியாவிலிருக்கும் கண்மூடித்தனமான அதிகாரவர்க புலிகள் எதிர்ப்பின் அடையாளமாய் ஒரு செய்தி தெஹல்காவில் வந்திருக்கிறது. இந்த வார தெஹல்காவில் இந்திய "ரா" அமைப்பு, கருணாவின் அமைப்பிற்கும், விடுதலைப்புலிகளுக்கான ஒரு எதிர் அமைப்பினை நிறுவனப்படுத்த முயன்று கொன்றிருப்பதையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

"A group which supports the cause of an independent Tamil Eelam homeland in Sri Lanka, create by India's external intelligence Agency, The Resarch and Analysis Wing (RAW), has been accused of recruting cadres for the renegade LTTE leader Karuna from the refugee camps in Tamilnadu.

The group in question is the Eelam National Democratic Liberation Front (ENDLF) headed by Paranthan Rajan, who is allegedly being used by RAW to neutralise LTTE's influence in Tamill nadu and serve as a rallying point of anti-LTTE groups...... According to the report, the new recruits were paid Rs.10000 on joining, with more promised when they reached Sri Lanka. They Jayalalitha government had arrested Rajan in 2004, but according to the report, he was released at the behest of RAW.

..... Rajan's unusally lengthy stay in India - he first arrived in India in 1990 - and his unrestricted movement here, coupled with his anti-LTTE activities on Indian, soil are seen as concrete proof that he is a RAW agent."
[Is RAW baiting the Tamil tigers, Tehelka 01/07/06]
இதைப் பற்றியெல்லாம் பேசினால் "இந்திய தேசிய ஒம்மாச்சி" கண்ணைக் குத்தும் என்பதால் படித்து விட்டு சும்மா இருக்கலாம். ஆண்டன் பாலசிங்கம் பேசியதை [பொதுவாக மன்னிப்பு என்று கேட்டாரா என்று தெரியவில்லை] வைத்துக் கொண்டு "வார்த்தை வேங்கைகள்" ராஜீவ் காந்தியினை மறுபடியும் "உயிர்த்தெழுத்து" உய்யுமாறு உப்புமா கிளறிக் கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரே பிரச்சனை நம்மவர்களுக்கு "அடிப்படை பிரச்சனைகள்" என்றெக்கும் புரியாது. அவரவர்களுக்கு தேவை அனில் சேமியா மாதிரியான இன்ஸ்டன்ட் உப்புமாக்கள், கிளறி, அடிப்பிடிக்காமல் கிண்டி விட்டு கொஞ்சம் சாப்பிட்டு, கொஞ்சம் அடுத்தவர்களுக்குக் கொடுத்து போய்விடுவது. ரோசாவசந்த் சொல்லுவதில் இருக்கும் அடிப்படை நியாயங்களும், either you are with us or aganist us என்கிற புஷ்த்தனமான குதர்க்க கேள்விகளுக்கும் பதில் சொல்லுவதில் என்னளவில் வசந்த் அளவிற்கு பொறுமையில்லை. நள தமயந்தியில் சொல்லுவதுப் போல, முழு கையையும் நன்றாக இருக்கி மூடி, நடு விரலை நேராகக் காட்டிவிட்டு போய்விடுவேன். நிற்க. இலங்கை பிரச்சனையின் தீவிரம் புரியாமலேயே இன்னமும் இந்திய தேசியம், விடுதலைப் புலிகள் எதிர்ப்பு, ராஜீவ் கொலை என "நேர்மையான மனிதநேய" அல்வாக்கள் கிண்டுபவர்களுக்கு, இந்த வார குமுதத்தில் கவிஞர் ஜெயபாலனின் நேர்காணலில் வரும் ஒரு வாக்கியத்தினை "புரிந்துக் கொள்ளுமாறு" பரிந்துரைக்கிறேன்.
"புலிகளின் வன்முறைகளை நான் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இப்போது அவர்களின் எதிர்த்தாக்குதல் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்ணின் எதிர்த்தாக்குதல் போன்றதுதான்."
ஒரு பிரச்சனையின் தீவிரத்தினையொட்டியே கருத்து மாறுதல்களோடு [கவனிக்க, கருத்து வேறுபாடுகள் அல்ல] அதனை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் நடக்கும். சமரசங்களற்ற புலிகளின் ஆதரவாளர்களோடு கண்டிப்பாக விவாதங்கள் நடத்தியதுண்டு, ஆனால் அதையும் தாண்டி ஒரு இணை அரசினை நடத்தி வரும் புலிகளற்ற தமிழீழம் என்பதும், big brother மனசு வைத்தால் மேட்டர் முடியும் என்பதும் சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது. வடசென்னையில் ஒரு தெருவில் பிரச்சனை நடந்து சம்பந்தப்பட்டவர்களை மீறி யாராவது சமரசம் பண்ண முயன்றால் ஒரு வழக்கு மொழியுண்டு - "வாசுவை மூடிட்டு இருக்கணும்" இதில் வா என்பது வாயினையும், சூ என்பது பின்புறத்தினையும் [சென்னை தமிழில் எழுதினால், சென்சார் பிரச்சனைகள் உண்டு] குறிக்கும். பிரச்சனையின் ஆணிவேரினைப் பற்றிய அக்கறையில்லாமல் அலம்பும் மக்களுக்கான ஒரே பதில் - வாசுவை மூடிட்டு வேலைய பாருங்க!

போன மாத எமிரெட்ஸ் பயணத்தில் நான் ஒவ்வொரு மாலிலும் தேடியது நல்ல சூஃபி பாடல்களையும், சூஃபி பற்றிய புத்தகங்களையும். ஆனால், வெஸ்டர்னைஸ் செய்யப்பட்ட மால்களில் பிரிட்டினி ஸ்பியர்ஸும், யூ2வும் இருக்கிறார்களையொழிய அரேபிய பாடல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கவிதா சரணில் நா.மம்மது. சூஃபி ஞானி குனங்குடி மஸ்தான் - சூஃபித் தத்துவமும் இசையும் பற்றி ஒரு விரிவான அலசலை தந்திருக்கிறார். எனக்கிருந்த நிறைய சந்தேகங்கள் இதில் நிவர்த்தியாயிருக்கின்றன. உருவ வழிபாடுகளை மறுதலித்த இஸ்லாமிலிருந்து சற்றே விலகி நிற்கும் சூஃபி ஞானிகளின் சமாதிகளில் மத நல்லிணக்கமிருக்கிறது. தர்காக்களுக்கு எல்லா மதத்தினரும் போகிறார்கள். கந்தூரி விழாக்கள் பல்சமய விழாக்களாக மாறியிருக்கின்றன. சூஃபி சமாதிகளில் எல்லோருக்கும் மந்திரிக்கிறார்கள். மதங்களின் அடிப்படையில் முதலில் மீறல்களும், கலகங்களுமிருந்து பின் அவையே நிறுமனமாகின்றன. இந்து மதத்தின் அநிதிகளை சுட்டிக் காட்டி வெளியேறிய புத்தனைக் கூட நிறுவனமயமாக்கி தான் கொஞ்சம் ஒய்ந்திருக்கிறோம். கொஞ்சம் தடித்த வார்த்தையாக தெரிந்தாலும் கொஞ்சம் உண்மைகள் இருக்கிறது.
"பள்ளிவாசல்கள் நிறுவன இசுலாத்தின் ஆன்மீக மையமாகவும், தர்காக்கள் பெருந்திரள் அனைத்து மதத்தினரின் ஆன்மீக மையமாகவும் நம் சமூகத்தில் மாறியுள்ளதை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.நிறுவனச் சமயத் தலைவர்களுடன் உறவாடினால், நம்மை மதமாற்றம் செய்து விடுவார்களோ என்ற அச்சம் பிற சமயத்தாருக்கு உண்டு. ஆனால் சூஃபியர்கள் மதம் மாற்றி விடுவார்கள் என்று யாரும் அச்சப்படுவதில்லை."
மேற்சொன்ன இரண்டு விஷயங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை கலகக்காரர்களினால் தான் ஒரு மாற்றத்தின் விதையினை ஊன்ற முடியும். கலகக்காரர்களை கயமைவாளிகளாக சித்தரிப்பதாலும், கீழ்மைப்படுத்துவதுனாலும் ஒன்றும் பெரியதாய் நடக்காது... வரலாறு அவர்களை விடுதலை செய்யும்!

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]