Dec 29, 2006

போர்க்கும் கொஞ்சம் பாயாசமும்

டிஸ்க்ளெய்மர்: எனக்கு திருமணம் ஆகவில்லை. இந்த பதிவில் எழுதியது அனைத்தும் அடுத்தவரின் அனுபவங்களும், படித்தவைகளும், பார்த்தவைகளும் தான். இதுதாண்டி, இது ஒரு இணைய பத்திரிக்கைக்காக எழுதியது, பிரசுரமாகததால், இங்கே மறுபதியப்படுகிறது. இதுதாண்டி, Domestic Violence Act என்பதே, பெண்களின் கையில் அதிகாரத்தினை ஒட்டுமொத்தமாக தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதாக சொல்வதின் பின்னிருக்கும் உள்ளீடான அரசியலை கட்டுடைப்பதற்கும் இந்த பதிவு உதவலாம்

குடும்பம் என்பது ஒரு கட்டமைப்பு. குடும்பங்கள் திருமணம் என்கிற ஒரு வாயிலை முன்வைத்து நிறுவப்படுகின்றன. குடும்பம் என்கிற அமைப்பினை முன்வைத்த நம்பிக்கைகளும், நியதிகளும், கட்டமைப்புகளும்தான் பெரும்பாலான அளவில் ஒரு சமூகத்தினை நிர்ணயிக்கின்றன. ஒரு சமூகம் என்பது அதன் மக்களை சார்ந்தது. மாற்றங்கள் காணாத, காணப்படாத சமூகங்கள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. எது நியாயம் என்பதும், எது கலாச்சாரம் என்பதுமே காலவெளிகள் தான் தீர்மாணிக்கின்றன. மத்திய ஐரோப்பாவில் லூயி மன்னர்கள் காலத்தில் தாடி வைத்தால் அதற்கும் வரி போட்ட வரலாறு இருக்கிறது. தமிழகத்தில் பெண்கள் மேலாடை அணியவேண்டும் என்பதே போராட்டங்களுக்கு பின்தான் நிலைக்கு வந்தது. ஒரு ஐநூறு வருட கால அளவில் பல்வேறு பரிமாணங்களில் சமூகத்தின் பார்வையும், நோக்கமும் மாறியிருக்கிறது. இன்றைய சமூகத்தில் திருமணம், குடும்பம், லயம், சமரசங்கள், மாற்று அமைப்புகள் என பல்வேறு பார்வைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

இந்திய குடும்ப அமைப்பு ஆண்களை முன்வைத்த அமைப்பாக தான் இருந்து வந்திருக்கிறது. பரம்பரை பரம்பரையான தொழில்கள் கூட குடும்பத்திலிருக்கும் ஆண்களுக்குதான் கைமாற்றப்பட்டிருக்கின்றன. இந்திய குடும்ப அமைப்பினைப் பற்றி பேசும் ஒரு நண்பர் வழக்கறிஞர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது 5% of all marriages are great. 5% of all marriages are worst. The balance is in various stages of compromises. சமரசங்களோடு தான் வாழ்க்கையென்பதில் சந்தேகங்களில்லை. கொள்கைகளும், கோஷங்களும் பலவாறாக இருந்தாலும், இன்னமும் திருமணம் என்கிற ஒரு அமைப்புக்கு மாற்றாக சொல்லக்கூடிய அளவில், சமூக அங்கீகாரம் பெற்ற இன்னொரு அமைப்பு தோன்றவில்லை என்பது தான் நிதர்சனம். லிவிங்க் இன், கம்யூன் போன்றவைகள் இன்னமும் சித்தாந்த அளவிலும், மிக மிக சொற்ப அளவிலுமே பேசப்படுகின்றன. இதுதாணடி, பெரியார் போன்ற ஒரு ஆளுமை உருவாக்கிய சுய மரியாதை திருமணம் என்கிற வடிவம் தேசிய அளவில் இப்போதுதான் பேசப்படவே செல்கிறது. ஆக, திருமணம் தவிர்த்த பிற அமைப்பு ரீதியான முறைமைகளை தற்போதைக்கு மறக்கலாம்.

இந்திய திருமணங்கள் non negotiable social agreement என்கிற அளவில் தான் ஆண்களால் பார்க்கப்படுகின்றன. இந்திய ஆண்களால், இந்திய பெண்களின் உலகத்தினை முழுமையாக பார்க்க தெரியாமல், திணறுவதால் சுலபமாக சிலுவைகளை ஏற்றி விடுகிறார்கள்.ஆணாதிக்கம் குடும்ப பொறுப்பு, பெண், தெய்வம், பத்தினி,சுமங்கலி வகையறாக்களில் சிலுவைகளை அழகாக சுற்றி பரிசளித்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. இந்திய திருமணங்களில் பெண் தான் எல்லாவிதமான பொறுப்புகளையும் ஏற்று கொள்ளல் வேண்டும். ஆண் வெறுமனே, இவளின் மனம் கோணாமல் பார்த்துக் கொள்வேன் என்று தாலி கட்டினால் போதும். மனைவியாய், தோழியாய், தாதியாய்,தாசியாய் என இந்திய ஜனத்தொகையினை விட நீளமான பெறுமிதம் தரமிக்க சிலுவைகளின் குவியல் ஒரு தாலி சரடிலிருந்து உண்டாக்கப்படுகிறது. பெண்கள் தான், பெரும்பாலான நிகழ்வுகளில் இங்கே பலிகடாக்கள் ஆக்கப்படுகிறார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு தினந்தந்தியினை ஆக்ரமித்தவைகள் இரண்டு செய்திகள் - மேரி தன் காதலுனுடன் தன் கணவனை கொன்றது, தேனிலவு போன இடத்தில் பத்மினி தன் கணவனை கொன்றது. இதற்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தில் தெரியும், இந்திய ஆணாதிக்க சிந்தனையும், அதன் குடும்பம் பற்றிய பார்வைகளும். எல்லா ஊடகங்களும் கொதித்தெழுந்து பத்தினி தெய்வங்கள் சூலிகளாக மாறி விட்டார்களோ என்கிற பயத்தில், நடுநிசியில் வேப்ப மரத்தில் ஊடக ஆணிகளை அடித்து விரட்ட வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு பதிவாகும் வழக்குகளில் மனைவியினை மிரட்டியது, மனைவியல்லாமல் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொள்வது என நீளும் வழக்குகளில் ஒரு வழக்கினைக் கூட ஊடகங்கள் பேசியதில்லை.

குடும்பத்தின் நெறி என்பது பெண்களுக்கானது. பெண்கள் மட்டுமே பார்க்கவேண்டிய, பாதுகாக்க வேண்டிய கட்டாயம். இந்த சூழ்நிலையிலிருந்துதான் இந்திய திருமண பந்தங்களை பார்வையிட வேண்டியிருக்கிறது. ஒரு மகா மோசமான உளவியல் சிந்தனையை, அடக்குமுறையை, ஆண் அதிகார நிலைநிறுத்துதலையும் நம் செவ்வியல் பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மிக சுமூகமான சமரசங்கள் உள்ளடக்கிய ஈருயிர் ஒருடல் திருமண பந்தங்கள் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு கட்டமைப்பு என்று வரும் போது பெரும்பாலான நிகழ்வுகள் அந்த கட்டமைப்புக்குள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைப் பொறுத்தே கட்டமைப்பின் மீதான நம்பிக்கைகளையும், அவநம்பிக்கைகளையும் பேச இயலும்.

இந்திய திருமணங்களின் அடிநாதமாக சொல்லப்படும் ஆயிரங்காலத்து பயிர், உறவுகள் போன்றவைகள் இன்றைக்கு கேள்விக்குள்ளாக்கப்படலாம். இரண்டாயிரம் வருட பாரம்பரியத்தில், தொழில் நிகழ்வுகளில், வாழ்வியல் முறைகளில், கேளிக்கைகளில் இவ்வழக்காறு அன்றைக்கு சரியாக இருந்திருக்கலாம். கிருஷ்ண ஜெயந்திக்கும், விநாயகர் சதுர்த்திக்கும் பலகாரங்கள் சமைக்க முடியாமல் / தெரியாமல் / இயலாமல், கிருஷ்ணா சுவிட்ஸ்லிருந்து டப்பாக்கள் வாங்கி விநியோக்கிக்கூடிய அளவில் தான் இன்றைக்கு வாழ்க்கையிருக்கிறது. ஒரு வேகமான சக்கரம் கட்டிய உலகில், எல்லோருக்குமான நேரமும், அவரவர்களுக்கான நேரமும் குறுகிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்னமும் பெரும்பாலான இந்திய ஆண்கள் இரண்டாயிர வருட கலாச்சார உப்புமூட்டையினை தூக்காமல் வாழ்வதில்லை. இந்நிலையில் மனமுறிவுகளும், ஏக்கங்களும், ஆதங்ககளும், மன அழுத்தங்களும், எரிச்சலும், கோவமும், இயலாமையும், எதிர்பார்ப்புகள் பொசுக்கி போவதின் வலிகளுமாய் தான் வாழ்க்கை நீண்டு கொண்டிருக்கிறது. திருமண உறவுகள் ஏன் சரியாக இருப்பதில்லை என்கிற காரணங்களை வெளியே ஆராயாமல், கொஞ்சம் உள்ளே போய் ஆராய்ந்தால், பெரும்பாலான காரணங்கள் ஆண்களை சார்ந்தே இருக்கும். கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் மனமுறிவுகள் அதிகமாகி விட்டன என்பது ஒரு மேம்போக்கான பார்வை. உள்ளளவில் பத்தாண்டுகளாக ஏன் அதிகமாகி விட்டன என்பதை பற்றிய தெரிதல்களும், தேடல்களும் மிக குறைவாகவே இருக்கின்றன. இன்னமும், தாம்பரம் தாண்டி விரிகின்ற தமிழகத்தில் இருக்கும் பெண்கள் திருமணம் என்பது ஒரு கட்டாய நிகழ்வாகவும், கணவன் என்பவன் ஒரு சமூக அடையாளமாகவும், பாதுகாப்பு ஷீல்டாகவும் ஏற்றுக் கொள்ளும் அளவில் தான் இருக்கிறார்கள். என்னால், இதை ஒரு கழுகுப்பார்வையாக தான் சொல்ல முடியுமே தவிர, ஆராய்ச்சி புள்ளிவிவரங்கள் கிடையாது.

இன்னமும் இந்திய படுக்கையறைகள் ஆண்களின் வெளிகளாகவும், சல்மாவின் கவிதையில் வரும் கொஞ்சம் சுதந்திரம், கொஞ்சம் அவகாசம் என்பது போன்ற சின்ன சின்ன சலுகைகளை எடுத்துக் கொள்ள விரிகிற யோனிகளும், பத்து நிமிட உறவு கொள்ளல்களில் திருப்தியாகி குரட்டை விட்டு தூங்கும் ஆண்களாகவும்தான் இருக்கிறது. marital rape என்பது பற்றிய தெரிதல்கள் கூட இல்லாமல், 'அவரு ஆம்பள, இது எல்லாம் சகஜம்' என்கிற அளவில் தான் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுதான் சோகத்தின் உச்சம். பாலியல் உறவுகள் இருக்கும் போலித்தன்மைகளும் அதன் அடிப்படையில் மனதில் உருவாகும் கோட்டு சித்திரங்களுக்குமான வெளியில் உறவுகள் ஊசலாடுகின்றன. திருமண உறவுகளின் கொள்கைரீதியிலான விளக்கங்களில் நல்லவை இருந்தாலும், இயங்குதளத்தில் அவற்றின் interpretation வேறானவகையாக இருக்கிறது. ஆக, பெரும்பாலானவர்களுக்கு மேலோட்டமான அளவில் இது ஒரு அமைப்புரீதியான முறைமையாக தெரிந்தாலும், உண்மையில் பரவலான விரிசல்கள் உள்ளடக்கிய வகையில் தான் உண்மையான அமைப்பு இருக்கிறது. பல்வேறான காரணங்களில் விரியும் நம் சிந்தனைகள், இறுதியில் நிலைப்பது இங்கே தான். நாம் புரிந்தோ புரியாமலோ, இன்னமும் பாயசத்தினை ஃபோர்க்குகளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஃபோர்க்குக்கான உபயோகத்தின் புரிதலையும், பாயசத்தினை வேறாக பருகுவதின் அருமையும் தெரியாதவரை திருமண உறவுகளும், குடும்ப அமைப்புகளும், கையில் ஃபோர்க்கோடு பாயசத்திற்காக காத்திருக்கின்றன.

சமூகம், குடும்பம், பெண்கள், ஆணாதிக்கம், அரசியல், வாழ்க்கை

Comments:
Good Subject, Good thinking, Good Paragraphs!
 
நல்லதொரு பதிவு. நன்றி.
 
நிறய விசயம் உண்மையாக நன்றாக ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள்.

இந்தப் பிரச்சினைகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புரையோடிப்போனவை. ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் மிகமுக்கியமாக மாறவேண்டும். சமூகமாகப் பார்க்கும்போது, சமூக விவாதங்களாக பேசும்போது ஆண்களின் குரல்களே availableஆக இருப்பதால் ஆண்களின் குறைகள் மட்டுமே இதுவரை ஆராயப்பட்டது. கமுக்கமா வீட்டுக்குள்ள இருக்கிற பொண்னுங்க என்னா போடு போடறாங்கன்னு தெரியாதுல்ல :-)

1)
//திருமண உறவுகள் ஏன் சரியாக இருப்பதில்லை என்கிற காரணங்களை வெளியே ஆராயாமல், கொஞ்சம் உள்ளே போய் ஆராய்ந்தால், பெரும்பாலான காரணங்கள் ஆண்களை சார்ந்தே இருக்கும்.//

இல்லை. பெரும்பாலும் பெண்களைச்சார்ந்தே இருக்கும். காரணம்: 1அ) பெண்கள் பொதுவாக வெகு sensitive ஆனவர்கள். women get stuck in detail and small things, because of their sensitive nature. இதற்குக்காரணத்தை ஆராயவேண்டுமென்றால், கற்காலத்தில் ஆரம்பிக்க வேண்டும். ஆண் இரை கொண்டுவர செல்லுவான். பெண் குகைக்குள் இருந்து தன் குழந்தைகள்/குடும்பம் கவனித்துக்கொள்ளுவாள். ஆண் has to look for bigger picture, ignoring all little things to find food, women has to be very sensitive to any noise or any change in her sourrounding which might danger her shelter. :-)

this has a long term effect that women get stuck in detail and are very sensitive. Men get irritated by detail and think that women are silly.

1b) because men look for bigger picture, men go around a lot, get exposed to different environment, different conditions, his adaptability/felxibility is well developed (my nagging husband sitting next to me is bugging me to write that his map readings skills developed like this, and what not). But since women live in their small shelter all the time, their adaptability is not well developed.

This has a long term effect in the women species in general that women are not flexible. they cannot adjust with changes (that easily). Even in today's situation, if you look at/compare the life and development of any woman/man, girls live/play inside the house, whereas boys go out and play with many other boys/characters and develope adaptability skills. even in cities the limiation still applies, i mean the difference does exist.

But it is true that men cannot/donot bother to know/learn women's issues at all.

look at a simple example. வீடு கட்டும்போது எத்தன வீட்டுல சமையல் கட்டை பெண்களின் "தேவை"கள் தெரிந்து கட்டுறாங்க? பெண்களின் தேவைகளை ஆண்கள் மட்டுமல்ல அந்தப் பெண்ணேகூட யோசிப்பதில்லை. நாள்முழுதும் வீட்டுல இருக்கும் பெண்ணிற்கு எந்தவிதமான psychological problemகளும் வரக்கூடாதுன்னு எத்தனைபேர் யோசிச்சு அதற்குரிய வசதிகளை செய்து கொடுக்கிறாங்க? TV இருக்கில்ல அப்படின்னு நினைச்சா, tv மட்டிமே வடிகாலா இருக்கிற பெண்ணோட மனநிலை developments எப்படியிருக்கும்னு எத்தனை பேர் ஆராயராங்க?

(Will do the rest later as hubby dearest is not co-operating).

Good post, btw.
 
one more point.

Women have to be "accepted" by her man and her சமூகம். this makes her to develop in such a way that she looks for "characteristics" that are generally considered under "good girl" category.

Whereas men just have to "earn good money". So, that makes him develop in such a way that he "achieves" higher heights and brings good money. :)
 
"ஆண் ஏன் அடிமையானான்? அவனை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுத்துச் சுதந்திரமாக வாழவைப்பது எப்படி? ஆணடிமைக்காகப் பெண்கள் கூடிக் கலந்தாலோசித்துக் கண்டுபிடித்த ஆயுதங்கள் என்ன? கோணிச்சாக்குகளில் கற்கள் பொறுக்கிவைத்து ஆண்களை இரத்தம் ஒழுக அடித்து வதைத்துக்கொண்டிருக்கும் பெண்விடுதலை பேசுகிற பெண்களைக் கொண்ட அமைப்புகளின் வக்கிரம் என்ன?" என்ற ஆராய்ச்சித் தொடரின் அறிவுப்பெருமழையில் பலரும் நனைந்துகொண்டிருக்கையில் உங்களிடமிருந்து இப்படியொரு பதிவா:))

நன்றி நாராயணன், இந்த இடுகைக்கும், நீண்ட இடைவெளிக்குப்பின் இங்கு தலைகாட்டியதற்கும்.
 
கார்த்திக், டிசே நன்றிகள்.

பிரேமலதா, நீங்கள் சொல்லும் பெண்களின் பிரச்சனைகளில் உண்மையில்லாமல் இல்லை. ஆனாலும், இன்னமும் ஜீன்ஸ் போடுவதையே அனுமதிக்காத வீடுகளும், கல்யாணம் செய்து கொடுப்பதையே, பெண் பெற்றதின் உச்ச கடமையாக நினைக்கும் குடும்பங்களும் இருக்கும் ஒரு சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. தடா போன்ற வன் கொடுமையான சட்டங்கள் வந்த போது கூட வரிந்து கட்டாத ஊடகங்கள், சடாலென domestic violence act-ற்கு பக்கங்களை தாராளமாக தாரை வார்க்கும் ஒரு ஆணாதிக்க சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லா சட்டங்களிலும் இரு வேறு பக்கங்கள் இருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.

சதாமிற்கு தூக்கு தண்டனை அளித்ததை கண்டிக்கும் இந்தியாவில் தான் 6 வருடங்களாக தண்ணீர் கூட குடிக்காமல் மணிப்பூரில் இந்திய ராணுவத்தின் எதேச்சதிகாரத்திற்காக தன்னை வருத்திக் கொண்டிருக்கும் ஐரோம் சர்மிளாவை இன்னமும் யாரும் வந்து கூட பார்க்கவில்லை. பெண்களின் போராட்டங்கள் எல்லாமே முனை மழுங்க வைக்க கற்பு என்கிற ஆயுதம் முன்வைக்கப்படுகிறது. போன மாத தீராநதியில் லீலா மணிமேகலையின் நேர் காணலில் அவர் சொன்ன முக்கிய விஷயம் இந்த gender discrimination [ லீனாவோடு நிறைய விஷயங்களில் என்னால் ஒத்து போக முடியாது என்பது வேறு பிரச்சனை]

முந்தாநாள் ஏர் டெக்கானில் பயணிக்கும் போது பின்னிருந்த இருக்கையில் இரண்டு மென்பொருள் நிறுவன பெண்கள். பயணமுழுதும் ஆங்கிலத்தில்தான் பேச்சு என்றாலும், கல்யாணம் என்று வந்தவுடன், ஒரு பெண் சொன்னதுதான் ஆச்சர்யம். i went to Jyothika's marriage-ya, Surya is off our same community and i will get married to some useless guy in the community ya. I can't come out of my house. லட்ச லட்சமாக சம்பாதிக்கும், தன் காலில் நிற்கக்கூடிய வலு இருக்கக்கூடிய பெண்களே இன்னமும் இந்த மனநிலையிலிருக்கும் போது அடுப்படியில் இருக்கக்கூடிய பெண்களின் நிலை மாற நாளாகும். ஆனால், அதை முன் வைத்து சட்டத்தையும், சமூகத்தையும் பார்க்க இயலாது.

இரண்டாயிரம் வருட பாரம்பரிய சமூகத்தில் இப்போது தான் உளவியல் ரீதியாக பெண்களை பாதுகாக்க ஒரு சட்டம் வந்திருக்கிறது. இது சரியாக execute செய்யப்படுமா இல்லையா என்கிற கவலைக்குள் போகாமல், சமூகத்தின் இன்றைய நிலையில் இம்மாதிரியான ஒரு சட்டத்தின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. திருமணம் என்கிற பந்தத்தின் உள்ளிருக்கும் மஹா அபத்தங்களையும், ஒரு சாரியான ஆளுமையையும் தான் இந்த இடுகையில் சுட்டிக் காட்ட விரும்பினேன்.
 
செல்வநாயகி,

எங்கேயும் போகவில்லை. அவ்வப்போது பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் வலையுலகத்தையும் அதன் போக்கினையும். நிஜமான மனிதர்கள் நிறைய பேர் கண்களுக்கு தெரிகிறார்கள். கண்களுக்கு தெரிகிறார்கள் என்பதை விட அவர்களின் பதிவுகளில் இருக்கும் வாதமும் கருத்துக்களும் இன்னமும் நாம் ஒரு 'அகண்ட தமிழகத்தில்' தான் வாழ்கிறோம் என்பதை உறுதியுறச் செய்கிறது. இதுதாண்டி, வேலைகள் கொஞ்சமதிகம் அவ்வளவே.
 
Narain,

Will write more this weekend.

May be because I am not affected anymore I have started looking at things from a different perspective. Particuarly at the psychological issues and the social developments. When we are talking in general arguements we can all talk about developments, things denied to girls, but when you go to specific houses and try to talk to the girls the first objection you get from girls.

Just want to let you know that I have been through all the issues and have fought quite a lot to come where I have come. :) I am from a family circle, where education to girls were denied. I am highly educated now. I had to fight a lot to be where I am. Remember the fight was and still is not with men, but with women mainly. Still, including just last week, it was with women.
 
Premalatha,

I do agree with you on certain counts. I am not here to pinpoint men alone in the discussion everywhere. Relevant to the current environment only, i have outlined the issues with Men over women.

Will write in detail sometime later.
 
நாராயண்
நீண்ட நாளைக்கு பிறகு பதிவுலகம் பக்கம் வந்ததற்கு மகிழ்ச்சி. பிரேமலதா சொல்வது போல பெண்கள் மாற வேண்டும் என்பது உண்மையானாலும் சமுதாய அமைப்பும் புரையோடிப்போன சிந்தனைகளும் பல ஆண்டுகளாக சலவை செய்து இதுதான் சரி என்று ஆணித்தரமாக நம்பும் நிலையும், உளவியல் ரீதியாக பலவும், பொருளாதார சுதந்திரம் போன்ற இன்னபிறவும் வரவேண்டும். வலப்பதிவுலகில் வரதட்சிணை வாங்குவது பெண் தன்னை தகுதியானவளாக்கி கொள்ளாதவரை சரிதான் என்றெல்லாம் போதனை நடக்கிறது. அதையும் மீறி சிந்திக்கிற ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மகிழ்ச்சியாயும் இருக்கிறது.
 
பத்மா/நாராயண்,


என்னப் பொறுத்தவரைக்கும் தனக்கு என்ன தேவையே அத தான் அடைய தனக்குத்தெரியணும். இல்லேன்னா there is no body to be blamed other than self. Flightல பேசிக்கிட்ட பெண்களப் பத்தி நாராயண் சொல்றாரே, அந்தப் பெண்ணுங்களா யார் தடுத்தா? see, they are travelling in flight means, that explains quite a lot about them that they are educated, had good exposure, going to celebrity marriage means, they are not poor either.... தனக்கு பிடிச்ச மாதிரிதான் தன் வாழ்க்கை அமையணுங்கிற முடிவ அந்தப் பொண்ணுதான் எடுக்கணும். அத தெளிவா தெரியப்படுத்தணும். தன் குடும்பம் எந்த அளவுக்கு எதிர்க்கும், அத எப்படி நேர்கொள்ளணும்கிற plan மற்றும் முடிவு அந்தப் பொண்ணோட கையிலதான் இருக்கு. arranged marriage worng/right-ங்கிறது வேற topic. தன் வாழ்க்க தன் கையில்.


என்ன சொல்லுங்க, தன் வாழ்க்கைக்கு தான்தான் காரணம். I agree it is not easy, but it is not impossible. யாருக்கு சுதந்திரம் வேணுமோ அவஙக கண்டிப்பா அமைச்சுக்குவாங்க. சிலருக்கு வழிமுறை தெரியாம இருக்கலாம். ஆனா எல்லோரும் அப்படி இல்லை. நிறயப் பேர் house-wifeஆ விரும்பித்தான் இருக்காங்க. எல்லா such குடும்பங்களிலும் ஆண் domination இல்லை. சில இடங்களில் இருக்கத்தான் செய்யுது. At the end of the day, the bread winner would like to have the final say, which I agree. தனக்கு சுதந்திரம் வேணும்னா கஷ்டமும் படணும். மாவும் ஒட்டக்கூடாது அப்பளமும் வேணும்னு சொல்ற சில "talented but stuck in house" great womenஐயும் பார்த்திருக்கேன். working in an office is a tough life. they (some of the women) don't want it. Ask all those greatly talented, well educated, (I used to be first ranker, 100 in maths) girls in UK to get a job and maintain their job. no. they won't do it. why would they go through tough life when they can talk about how to perfection rasam all day and ask their husbands to clean the house as well and get them look after their babies as well? This is what I see here Padma. All around me. I sometime wonder whom I am fighting for? It questions my objective. I know the situation is not the same in India. But, if anyone who gets the chance to live independant life, still continues to live in the name "suppression", who can help them? வாழ வழி இருப்பவர்கள் வாழ்ந்து காட்டினாத்தான், வாழ முடியாதவங்களுக்கு நம்பிக்கை வரும், மாற்றம் வரும்.

வீடுதான் வாழ்க்கைனு முடிவெடுத்துட்டு கம்ப்ளையின் பண்ணாதவங்களும் இருக்காங்க.

ஆண்கள் பக்கம் வரிஞ்சுகட்டிக்கிட்டு பேசல நான். ஆண்களப் பத்தியே பேசவே இல்ல நான். பொண்ணுங்களப் பத்தி மட்டும் பேசறேன். நிறயப் பொண்ணுங்க simply complain, but enjoy and take advantage of the current சமூக அமைப்பு. சமூக அமைப்பு is certainly wrong, but if someone wants a better life, அது தன்னைத்தவிர வேறு யார் கையிலும் இல்லை.

பெண்-சுதந்திரம் யாரும் தந்து பெறுவது இல்லை. தனக்கு தானே அமைத்துக்கொள்வது. சில சமூக அமைப்புகளில் சுலபமாகவும் சில இடங்களில் கடினமாகவும் இருக்கலாம். ஆனால் முடியாதது இல்லை. தேன் வேணும்னா ஈ கடிக்கு பயப்படக்கூடாது. ஈ கடிக்குதுன்னு complain பண்றவங்களுக்காக நாம பக்கம் பக்கமா பேசி என்ன பிரயோசனம்? கம்ப்ளையினே பண்ணாதவங்களுக்காக நாம பேசறது தப்பில்லயா, as, it is after all, their choice, and they don't seem to have problem with it.

சில குடும்பங்களில் வேலைக்கும் போகாம, வேலைக்குப் போயிட்டுவர்றவனையும் குடைஞ்சு எடுத்துக்கிட்டிருக்கிற பொண்ணுங்க மேலதான் எனக்குக் கோபம் வரும் அப்பப்ப. ஆனா, அவங்களும் ஒரு வகையில பாவம்தான், ஏன்ன, அவங்களோட insecurity, depression, எல்லாம் சேர்ந்துதான் அவங்கள அந்தமாதிரி நடந்துக்க வைக்குது.

கடேசியா ஒரே வார்த்தை (para) about our great tamil men, ஏதேனும் காரணத்துனால பாலன் இல்லாம நான் மட்டும் வாழ்க்கையைத் தொடர வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால், அத்தோட ஒழிஞ்சுது, எனக்கும் இந்த தமிழ் ஆம்பிளைங்களுக்கும் உள்ள சங்காத்தம். தலை வைச்சே படுக்க மாட்டேன் இந்தப் பக்கம். This is to give you an idea about what I think of our Tamil men. No matter how many Narains write in their blogs about "போர்க்கும் கொஞ்சம் பாயாசமும்", when it comes to real life real day to day issues, every day blah blah, I have my doubts.
 
This comment has been removed by a blog administrator.
 
நாராயண்,

current சமூக அமைப்பு, திருமணம்ங்கிற வேடிக்கைக்கூத்து... I agree with you.

Btw, have you read my Stockholm syndrome series? இன்னும் முடிக்கல. தொடரணும். .. :)
 
Premlatha
I agree with you that one need to make their own life.It is difficult, but not impossible. women like us have a life and we are self made. To make a life of choice, women need to learn that there are choices available. There are women who are still ignorant of eveything. And also there are rules like the hostel issue that you were working on. a woman who is victimized chose a path that gives less of a trouble atleast to her family. Women are taught to sacrifice for their kids. They are constantly blackmailed. I also have met women who manipulate men to get what they want. This goes both ways.

People are still not aware of stockholm syndrome or any such thing. Whether you like it or not, society still has derogatory notions on single mother. kids without a father's name wil still be mocked at. the easy way out is to compromise. Many people think life is food, house and bank balance, and if a man provides that he is great. Women are included in that. we can write in detail on such issues.At times both men and women act ignorant to get a easy life. It is difficult to say who is at fault unless you go case by case, even then it is difficult. But in today's situation even in United States, a country with full protection for women, rape victims do nto get full justice.Only 5% report to cops, and the rest avoid to safe their faces!!
 
This comment has been removed by a blog administrator.
 
//கடேசியா ஒரே வார்த்தை (para) about our great tamil men, ஏதேனும் காரணத்துனால பாலன் இல்லாம நான் மட்டும் வாழ்க்கையைத் தொடர வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால், அத்தோட ஒழிஞ்சுது, எனக்கும் இந்த தமிழ் ஆம்பிளைங்களுக்கும் உள்ள சங்காத்தம். தலை வைச்சே படுக்க மாட்டேன் இந்தப் பக்கம். This is to give you an idea about what I think of our Tamil men. No matter how many Narains write in their blogs about "போர்க்கும் கொஞ்சம் பாயாசமும்", when it comes to real life real day to day issues, every day blah blah, I have my doubts.//

இதை தான் சொல்றது. சுதந்திரம் இருக்கா இல்லையா, எடுத்துக்கிட்டாங்களா, இல்லையா அப்படிங்கறது பெரிய விவாதம். பிரச்சனை எடுத்துக்கறதுல இல்ல,but, சுதந்திரம் இருக்குன்னுனே தெரியாம நிறைய பேரு இருக்காங்க அப்படிங்கறது தான் பாயிண்ட். I go with Padma Arvind on various counts.

முதலில் திருமணம் என்கிற அமைப்பினையே ஒழுங்காக புரிந்துக் கொள்ளாமல் தான் 90% திருமணங்கள் நடக்கின்றன. பிரச்சனையின் அடியாழம் அங்கேதான் ஆரம்பிக்கிறது. பெண்களின் குரல்கள் வெளிவரவில்லை என்பது உண்மைதான். எனக்கு தெரிந்த தமிழின் மிக முக்கியமான பெண் கவிஞர், அவரின் அந்தரங்க வாழ்க்கை கொஞ்சம் சிக்கலான சமூக கட்டமைப்பில் இருக்கிறது. ஒரு இலக்கியவாதியோடு பேசிக் கொண்டிருந்தப்போது அவர் சொன்ன ஒரு வார்த்தைதான் தமிழ் ஆண்கள், எவ்வளவுதான் பெண்கள் முன்னேறினாலும், அவர்களால், அதனை பொறுத்துக் கொள்ள முடியாது + அங்கீகரிக்க முடியாது என்பதை உணர்த்தியது.

பெண்களால் பிரச்சனை இல்லை என்று சொல்லவேயில்லை. ஆனால், பெரும்பாலான பந்தங்கள் உடைவது ஆணின் அதிகாரமும், அடக்குமுறையும், அந்தரங்க வன்முறையினாலும் தான். தங்களுக்கான 'space' இல்லாமல் குழந்தைகளுக்காகவும், சமூக அங்கீகாரத்துக்காகவும் இன்னமும் திருமண அமைப்பினை விட்டு விலகாமல் இருக்கக்கூடிய பெண்கள் அதிகமாகி வருகிறார்கள். ஒரு ஒட்டை பானையில் நாம் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஒட்டை சிறியதாக இருப்பதால், வெளியேறும் தண்ணீர் பெரியதாக தெரிவதில்லை. ஒரு நாள் ஒட்டை பெரிதாகும் போது பிரச்சனையின் தீவிரம் புரியும்.

பத்மா சொன்னதுப்போல, single mother என்பதை அரிதாக இருக்கும்போது சமரசங்களோடு சகித்துக் கொண்டுதான் நீள்கிறது வாழ்க்கை.
 
This comment has been removed by a blog administrator.
 
you just have to prove yourself that you are a man, don't you?

Think to figure out what I mean.
 
A smilie was missed in the previous comment. Have one please.

:-)
 
i am a bit late narain..but what i wnat to say is i am surprised by premalatha's post. the concept of woman itself seems to be dependent on whta a man will think. so how can a woman fight . and if she succeeds is she still a'alive' at the end of the fight to enjoy?often when people say 'it is with the women to get what they want' ,i cannt help thinking that when there is so much heterogenesity involved how can such blanket statements do justice?ayan hirshi ali ..we all know how she is living as a fugitive.she is trying bto have a life.yes women need to change thier attutudes, but dont we know what happend to kushbu?imagine the ordinary women. when jayalaitha's saree was pulled a girl told me'she deserves it'?!!!i was shocked beyond speech.so long as women are 'object' it takes a long while for the puppet to realise that the pupet is alive.
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


成人電影,微風成人,嘟嘟成人網,成人,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,成人文章,成人影城,愛情公寓,情色,情色貼圖,色情聊天室,情色視訊

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]