Mar 21, 2007

நான் ரொம்ப பிசி......

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்றொரு நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இந்தியாவில் வந்துக் கொண்டிருக்கிறது. ரியாலிடி டிவி வகையறாவில் வரும் இந்நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமியர்களின் குரல்வளம் சோதிக்கப்பட்டு, நல்ல பாடல்கள் (?!!) பாடுபவர்களை தேர்வு செய்து சூப்பர் சிங்கர் ஜுனியர் என்று பட்டம் கொடுக்கிறார்கள். "காலைலைக்கு ராத்ரி மெல் காதலேலல" என விவரம் புரியாமல் குழந்தைகள் பாடுவதை தேர்வு செய்ய ஒரு கூட்டம் உட்கார்ந்துக் கொண்டு மதிப்பெண் போடுகிறது. வாரவாரம் சில குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை தொடர்ச்சியாக கேமரா கண்கள் விழுங்குகின்றன. தேர்வாகாத குழந்தைகள் கண்கள் கலங்கி, அழுது, மனமொடிவதை கொஞ்சமும் லஜ்ஜையில்லாமல் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மிகப்பெரிய ஊடக வன்முறையும், குழந்தைகளின் உலகத்தில் மீது வரைமுறையில்லாமல் திணிக்கப்படும் கட்டாயமாகமும் இது தெரிகிறது. குழந்தைகளின் உலகம் வேறானது, அங்கே தோழமையும், நட்பும், நேசமும் பெருகி ஒடும். ஆனால், இம்மாதிரியான நிகழ்ச்சிகள் அவர்களுடையே competitive spirit-னை உருவாக்குகிறேன் என்கிற பெயரில் அவர்களின் தன்னம்பிக்கையினை முளையிலேயே கிள்ளி எறிகின்றன. அவர்களின் கண்ணீரும் புன்னகையும் ஊடக விருந்தாக பரிமாறப்படுகின்றன. இதைப் பார்க்கும் மற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊடகங்களில் காட்டப்படும் குழந்தைகளோடு ஒப்பு நோக்கி கரித்துக் கொட்டுகிறார்கள். என் எதிர் ப்ளாட்டில் இருக்கும் அம்மணிக்கு என் மொத்த ப்ளாக்கே கேட்பதுப் போல தன் 8 வயது பெண்ணை சொல்லால் சித்ரவதை செய்யாமல் ஒரு நாள் போகாது. ஒப்புநோக்கல் என்பது இந்தியர்களுக்கே உரிய குணமாகி போனதாலோ என்னமோ, நாம் அமெரிக்காவில் முதல் நாள் குடிக்கப்படும் காபியினைக் கூட இந்திய ரூபாயில் ஒப்பு நோக்காமல் இருக்க மாட்டோம். 'அவ எப்படி பாடறா பாரு', 'உன்னோட கூடப் படிக்கிறவன் மேத்ஸ்ல 100 out of 100 நீயும் இருக்கியே' என வார்த்தை விளாசல்களுக்கு தப்பாத குழந்தைகள் தமிழகத்தில் இருக்க முடியாது. Peer pressure என்றால் என்ன என்பதை இன்றைய குழந்தைகளைப் பார்த்து கற்றுக் கொள்ள முடியும்.

இதோ இரண்டு மாதத்தில் தேர்வுகள் முடிந்தால், புற்றீசல் போல ஆயிரத்தெட்டு சம்மர் கேம்புகள் வந்து விடும். பிரெஞ்சு படி, நீச்சல் கற்றுக் கொள், பியானோ கற்றுக் கொள், ஒரிகமி பார், நடனமாடு, கொலாஜ் பார், கிளாஸ் பெயிண்டிங் வரை என அந்த சின்ன குழந்தைகளின் நாட்கள் CEO களை விட பிசியான ஷெட்டுயுலகளில் மாற துவங்கியிருக்கும். எந்த கலையையும் மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒரு சராசரி குழந்தையின் ஒரு நாள் காலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணிக்கு முடிகிறது. எட்டு மணி நேர பள்ளி, இரண்டு மணி நேர ஹோம் வொர்க் தாண்டி, பாட்டு கிளாஸ், டியுசன், ஹிந்தி கிளாஸ் என பங்கிடப்பட்டு விளையாட நேரமில்லாமலும், இயற்கையினை மனிதர்களை புரிந்துக் கொள்ளக்கூடிய சூழலில்லாமலும் தான் வளர்கிறார்கள். இப்படி வரும் குழந்தைகளுக்கு சமூக பொறுப்பும், குடும்ப பொறுப்பும் எப்படி இருக்கமுடியும் என எதிர்ப்பார்க்க முடியும். இவ்வாறு வளரும் குழந்தைகள் பொய் சொல்ல, சாக்கு சொல்ல, ஏமாற்ற எளிதில் கற்றுக் கொள்கிறார்கள். ஸ்பெஷல் கிளாஸ் போறேன் என்று சொல்லிவிட்டு தன்னிஷ்டத்திற்கு ஆடுவதும், ஆடம்பர பொருட்களின் மீது மோகம் கொண்டு அலைவதுமாய் மாறியிருக்கிறது அவர்களின் வாழ்க்கை

என்னுடைய வீட்டிலிருந்து நான்கைந்து தெருக்கள் தள்ளி தான் தமிழகத்தினையே மூன்று மாதங்களுக்கு முன்பு உலுக்கிப் போட்ட அந்த கொலை நடந்தது. 18 வயது தாண்டாத மூன்று சிறுவர்கள் செல்போனுக்காகவும், ஜாலியாக ஊர் சுற்றுவதற்காகவும் ஒரு 13 வயது பையனை 'போட்டுத் தள்ளி' விட்டார்கள். எந்த ஊடகமும் இப்போது அதைப் பற்றி பேசவில்லை. ஊடகங்களுக்கு தேவை ஒரு வார பரபரப்பு செய்தி, அவ்வளவே. இதற்கான உண்மையான காரணம் என்ன ? குழந்தைகளை ஒரு பக்கம் பெரியவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய சொல்வது, இன்னொரு புறம் அதை பார்த்து அவர்கள் கற்றுக் கொண்டு ஏதாவது செய்தால் 'பிஞ்சிலேயே பழுத்தது' என ஏச வேண்டியது என ஒரு உச்சக்கட்ட ஹிப்போகரசியில் இயங்கிக் கொண்டிருக்கிறது தமிழ் மனம். எஸ்.எஸ்.எல்.சியில் தேர்வாதவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. குழந்தை மனநல மருத்துவர்கள் என்றொரு பிரிவு நாய் படாத பாடு பட்டு ஊடகங்களில் அடித்துக் கொண்டாலும் ஒன்றும் பெரியதாக மாறிவிடவில்லை. நாம் நம் குழந்தைகள் எப்படியாவது டிவியில் தெரிந்தால் போனால் போதும் என அவர்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த பிஞ்சுமனங்களில் என்ன இருக்கிறது என்பது பற்றிய ஒரு யோசனையும் இல்லாமல், 'பெரியவர்கள்' தோரணையில் நாம் நம் verbal/non verbal வன்முறையினை தினமும் பல் தேய்ப்பது போல நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம் எவ்வித சொரணையும் இல்லாமல்.

இந்தியாவில் செய்து கொள்ளப்படும் மொத்த தற்கொலைகளில் 3% பேர்கள் 15 வயதுக்கு குறைவானவர்கள் என்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது. என்ன கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம் ? மாறி வரும் உலகில் போட்டி போட வேண்டிய கட்டாயம் இல்லாமல் இல்லை. ஆனாலும், நாம் மனிதர்களை உருவாக்குவதற்கு பதில் போட்டியாளர்களையும், மனிதம் குறைந்த தன்வயபார்வை (self-centric) கொண்டவர்களையும் உருவாக்கிக் கொண்டு வருகிறோமோ என்கிற பயம் எழாமல் இல்லை. இது தெரியாதவரை நாம் நம் குழந்தைகளை கண்ணுக்கு தெரியாமல் சித்ரவதை செய்வதையும், அவர்களின் மென்மையான மனங்களை ரணமாக்குவதையும் நிறுத்த போவதில்லை.

Labels: , , , ,


Comments:
குழந்தைகளில் ஆரம்பிக்கும் இந்த Peer pressure சாகும் வரைக்கும் இவர்களை விடுவது இல்லை.அடுத்தவன் கார் வாங்கிட்டான் ,அடுத்தவன் மேனஜராயிட்டான்,.....இப்படி அடுத்தவனை ஒப்பு நோக்கியே வாழும் கூட்டம் :-((

**

தனக்கு என்ன தேவை என்று சுயமாக சிந்தித்து அதன்படி மெத்தப் படித்த கணவான்களாலேயே வாழமுடியவில்லை.காரணம் பிஞ்சிலேயே இவர்களுக்கு கொடுக்கப்படும் Peer pressure விஷம்.


**

சின்ன வயசுல டவுசர்ல ஒண்ணுக்குப் போனோம்..மாடு மாதிரி வளர்ந்த பிறகும் அதையே செய்தால்...

***
கொஞ்ச நாளைக்கு முன் நடந்த உரையாடல்...

"ஏன் இந்த டப்பா செல் போனையே வச்சுருக்க"

"இல்லையே நல்லா பேசவும் முடியுது அது போல கேட்கவும் முடியுது. மாத்த வேண்டிய தேவை இல்லை"

"இப்பல்லாம் கேமிரா வச்ச கலர் டிஸ்பிலே போன பிச்சைக்காரன்கூட வச்சுருக்கான்"

"ஒரு வேளை புகைப்படம் எடுப்பது அவன் ஹாபியா இருக்கும்.நான் பேசுவதற்கு மட்டுமே செல் உபயோகிப்பதால் எனக்கு கேமிரா போன் தேவை இல்லை.

"ஏன் காசு அதிகம்ன்னு பாக்கிறியா?"

"இல்லை இலவசமாக் கெடைச்சாலும் எனக்கு தேவை இல்லாதது ஒரு சுமையே. ஒரு வேளை பிற்காலத்தில் தேவைப்பட்டால் வாங்கிக் கொள்வேன்.இப்போது அதன் தேவை எனக்கு இல்லை."

***

என்ன ஆளையே காணோம் என்று கேட்கத் தோணியது..தலைப்பைப்பார்த்தவுடன் சார் ரொம்ப பிஸின்னு தெரிஞ்சு போச்சு :-))
 
நீங்க சொல்றது கூட கரெக்ட் தான் , ஆனா எல்லாம் அந்த 2 லட்ச்த்துக்காக தான் , பாவம் பல நடுத்தர குடும்பங்கள் , திருச்சி ,மதுரை , கோவை என அலைந்து கலந்து கொள்கிறார்கள்..

நல்ல பதிவு , நல்ல சிந்தனை
 
சாட்டையடி.....
 
சோக்கா சொன்ன சார்.
குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை தருவதோடு தன்னையும் மன அழுத்ததிற்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள் பல பெற்றோர்கள்.

கல்வெட்டின் பின்னூட்டு அருமை.
 
நாராயண் - மிகச் சரியான பார்வை.

சமூகத்தில் வாய்ப்புக்குறைவுகள் இருப்பதுதான் பொதுவில் ஒப்பீட்டுக்குத் தள்ளுகிறது என்று நினைக்கிறேன். இந்த நாடுகளில் டவுன் பஸ் ஓட்டுபவருக்கும் வங்கியில் பணம் எண்ணுபவருக்கும் (அவர் இல்லை, மெசின்தான்) சம்பளத்தில் நிறைய வித்தியாசம் இல்லை என்பதால் இரண்டு பேராலும் குளிர்காலத்தில் ஒரு வாரம் க்யூபா போய்விட்டு வரமுடிகிறது. நம்மூரில் இது சாத்தியமில்லை என்பதால் ஒப்பீடுகளும் பொறாமையும் தவிர்க்க முடியாதவையாகிவிடுகின்றன.

எனக்குப் பிடித்த பழைய பாடல் ஒன்றில் "அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேன்டீ" என்ற அடுத்த வரியிலேயே "அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறான்டீ" என்று வரும்.
 
ஹூம்.. இந்த ஸ்ரெஸ்ட், ஸ்ரெயின்னு இல்லாம எண்பது மார்க்கு வாங்கினாலே மிக அதிகம் என்றூ பிள்ளைகளை வளர்த்தாச்சு.
இந்த அழகுல, கொஞ்சம் கம்மியா போச்சுன்னு பிள்ளைங்க முகத்தை தூக்கி வெச்சிக்கிட்டா, படிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு உதவாதுன்னு அட்வைஸ் தருகிற நம்மாளு. இவுங்கள இழுத்துக்கிட்டு, நம்ம ஊருக்குப் போயி நா என்ன பாடு பட போகிறேனோ :-)
 
நாராயணன்!!!

உங்கள் பதிவுப்பற்றி எனது எட்டு வயது மகளிடம் சொன்னபோதும் அவள் சொன்ன ஒரு வாக்கியம்!!!

ஏன் இந்த அங்கிள் இதை இத்தனை பெருசா எடுத்துக்கறார்..எல்லாமே ஒரு ஜாலிக்குத்தானே...

இதை ஏன் ஒரு குழந்தைகள் மீது திணிக்கும் வன்முறை என்ற அளவில் பார்கிறீர்கள்!!!

அன்புடன்
அரவிந்தன்
 
//ஏன் இந்த அங்கிள் இதை இத்தனை பெருசா எடுத்துக்கறார்..எல்லாமே ஒரு ஜாலிக்குத்தானே...//

அரவிந்தன், இது போன்ற விஷயங்கள் நமக்குச் சொல்லும் சங்கதிகளும், உணர்த்தும் சங்கேதங்களும் நுட்பமானவை. அதை குழந்தைகளால் புரிந்து கொள்ள முடியாது.
 
பிரச்சனையின் தீவிரம் குழந்தைகளுக்கு தெரியாது. முக்கால்வாசி பெரியவர்களுக்கே பிரச்சனையின் தீவிரமும், அவசியமும் தெரியாதபோது குழந்தைகள் பற்றி பேச வேண்டியதே இல்லை.

உளவியல் ரீதியான பாதிப்புகளை பற்றிய சிந்தனை நம்மிடையே இல்லை. சமீபத்தில் ஒரு உளவியல் மருத்துவரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு விஷயம் முக்கியமானதாயிருந்தது. பேருந்தில் கல்லூரிக்கு, வேலைக்கு செல்லும் பெண்களால் முழுமையாக தாம்பத்யத்தில் ஈடுபடும் ஈர்ப்பு குறைவு, ஏனெனில் அவர்கள் தொடர்ச்சியாக பாலியல் ரீதியான அத்துமீறல்களை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள், அதனால் பாலுறவு என்பதை ஒரு கசப்பான நிகழ்வாக அவரவர் வீட்டில் இருக்கிறது. இந்த முடிவு எந்தளவிற்கு உண்மை என்கிற விவாதங்கள் ஒருபுறமிருக்க, தன்னையறிந்த matured பெண்களே தங்களையறியாமல் ஒருவிதமான ஒவ்வாமைக்கு தள்ளப்படும் போது, குழந்தைகளின் நிலையினை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டியிருக்கிறது.
 
Really wonderful thoughts... dude.. I agree with u completely.. on this.
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


情色貼圖,色情聊天室,情色視訊,情色文學,色情小說,情色小說,臺灣情色網,色情,情色電影,色情遊戲,嘟嘟情人色網,麗的色遊戲,情色論壇,色情網站,一葉情貼圖片區,做愛,性愛,美女視訊,辣妹視訊,視訊聊天室,視訊交友網,免費視訊聊天,美女交友,做愛影片

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]