Jun 4, 2007

முகமது பின் துக்ளக் - வெர்ஷன் 2.0

அன்புள்ள திரு. கருணாநிதிக்கு,

வணக்கம். என்னைப் போன்றவர்களை நீங்கள் மறந்திருக்கக்கூடும். என் பெயர் ரேஷன் அட்டையில் குடும்ப தலைவன் என்கிற முறையிலும், திமுக அரசு வரவேண்டும் என்கிற ஆதங்கத்தோடு உங்கள் தலைமைக்கு ஒட்டுப் போட்டவன் என்கிற முறையிலும் சில விஷயங்களை உங்களுக்கு சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். என்னைப் போன்றவர்களுக்கான ஊடகங்கள் அனைத்தும் முற்றுப்பெற்றமையால் [ஒன்று உங்களுக்கு ஜால்ரா அடிக்கின்றன அல்லது வாய் மூடி இருக்கின்றன] இங்கே எழுத வேண்டிய கட்டாயாமாகிறது.

நீங்கள் வெற்றி பெற்ற உடனேயே உங்களுக்கு ஒரு மடல் எழுதி அதை பதியாமல் வைத்திருந்தேன். அதில் முக்கியமாய் எழுதியது உங்கள் பேரன்களை கொஞ்சம் கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று. ஆனால், நீங்களோ, உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் பேரன்களையே ஒரங்கட்டி, உங்கள் வாய்மையால் ஊர் வாயினை அடைக்க முயற்சித்து, கொண்டிருக்கிறீர்கள். பாவம், உங்களுக்கு இன்னமும் பழைய நிலை, முரசொலியில் உங்களுக்கு பிடிக்காதவர்களை ஒரங்கட்டி, கட்டம் கட்டினால், உலகத்திற்க்கே பிடிக்காமல் போனது அந்தக் காலம். காலம் மாறிவிட்டது ஐயா.

காவிரி விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம், நடுவண் அரசினை நிர்பந்திக்க முடியாது என்று காரணம் கூறிவிட்டு, உங்களுக்கு மாற்றாக ஒரு மேலாண்மை மையம் உருவாகிடப்போகிறது என்கிற பயத்தில் ஒரே நாளில் இந்தியாவில் மேன்மையான அமைச்சர்களுள் ஒருவராக விளங்கிய உங்கள் பேரனை நீக்கச் சொல்லி வற்புறுத்தி, இப்போது உங்கள் மகளை எம்.பியாக்கி இருக்கிறீர்கள். தயாநிதி மாறனை அமைச்சராக்கும்போது நீங்கள் சொன்னதாக சொன்ன வாக்கியம் இன்னமும் நினைவில் இருக்கிறது. அவருக்கு நன்றாக ஹிந்தி பேச தெரியும், அதனால், அவர் நல்ல தொடர்பினை மாநில-மத்திய அரசினிடையில் ஏற்படுத்துவார் என்று. டி.ஆர். பாலு போன்ற மூத்த அமைச்சர்கள் இருக்கும்போது, எல்லா தகவல்களும், தயாநிதி வழியாக வரட்டும் என்று சொன்னீர்கள். இன்றைக்கு தயாநிதிக்கு ஹிந்தி செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்துப் போய் விட்டதா ? உங்களுக்காக தேவைப்பட்ட போது, தயாநிதி திமுகவின் முகமூடி, இப்போது அதிகாரத்தினை கையிலெடுத்துக் கொண்டு ஆட்டமாடும் அகம்பாவம் கொண்டவர். கனநேரத்தில் காற்றோடு போய்விட்டது உங்களுடைய தாத்தா-பேரன் உறவுகள், உங்கள் குடும்பத்தினர் முன்பு. சன் டிவி செய்தி பிரிவில் இருந்த ஒரு நண்பர், உங்களைப் பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், உங்களை ஜெயலலிதா ஆட்சியில் சிறையிலடைத்தப் போது, சன் டிவி பட்ட கஷ்டங்களையும், அதையும் தாண்டி மன உறுதியோடு கலாநிதி மாறன் உங்களுக்காகவும், ஒட்டு மொத்த திமுகவிற்குமாய் துணிந்து செயல் பட்டதையும் விரிவாக விளக்கினார். உங்களுக்கு தெரிந்திருக்கக்கூடும், வெறும் மேரி பிஸ்கெட்டும் தண்ணீரோடும், உங்களுக்காக, தமிழகத்தையே உங்கள் மீது திரும்ப வைத்தவர்கள் அவர்கள். போகட்டும் விடுங்கள். கனிமொழி நன்றாக பேசுவார் என்கிறீர்கள். உங்கள் கட்சியில் வெற்றிகொண்டான் என்றொரு பேச்சாளன் முப்பது வருடங்களாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று சகட்டுமேனிக்கு பேசியவர் இருக்கிறார். ஓவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும், வெற்றிகொண்டான் வெளியில் இருந்ததை விட ஜெயிலில் இருந்தது அதிகம். அவருக்கென்ன செய்யப் போகிறீர்கள் - பேசுவது மட்டுமே எம்.பியாவதற்கான தகுதியென்றால் ? விடுங்கள். அது உங்கள் குடும்ப பிரச்சனை.

சில மாதங்களுக்கு முன்பு வண்டலூர் தாண்டி துணை நகரம் அமைக்கப்படும் என்றொரு அறிவிப்பினை வெளியிட்டீர்கள் ? வெளியிட்ட உடனேயே உங்கள் கூட்டணியில் இருக்கக்கூடிய பா.ம.க பிரச்சனை செய்ய, இரண்டாவது நாளே அதை கை கழுவி விட்டீர்கள். ஒரு அரசு எடுக்கக் கூடிய முடிவு என்பது, பல்வேறு காரணங்களைப் பார்த்து, வகைப்படுத்தி, பிறகே ஒரு உத்தரவினையோ, முடிவினையோ எடுக்க முடியும். எடுக்க வேண்டும். எடுத்தேன், கவிழ்தேன் என்று ஆள்வதற்கு பெயர் அரசாட்சியல்ல. மன்னராட்சி. ஆனால், நீங்களோ, உங்களின் கூட்டணி கட்சியில் குரலுக்காக சென்னை போன்ற ஒரு மாநகரத்தின் மிக முக்கியமான ஒரு தேவையினை சர்வசாதாரணமாக ஒரங்கட்டிவிட்டீர்கள். இந்த மாநகரத்தில் பிறந்ததிலிருந்து வசித்துவரும் என்னைப் போன்றவர்களுக்கு, அது ஒரு பேரிடி. சரி என்னைப் போன்ற மடையர்கள் 6 கோடி மக்கள் தொகையில் கொஞ்ச பேர் தான், இதை விடுங்கள்.

6 மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் போகும் எல்லோரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற ஒரு உத்தரவினை நீதிமன்றம் வழியாக சொன்னீர்கள். 6 மாதம் போய், அரக்க பரக்க, மே 29/30/31 தேதிகளில் தங்கள் குடும்பத்தினையே இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லும் நடுத்தர வர்க்கத்தினர்கள் குடும்பத்திற்கு மூன்று, நான்கு ஹெல்மெட்கள் வாங்கினார்கள். பண வாசனை தெரிந்த முதலாளிகள், ரூ.300 ஹெல்மெட்டினை ரூ.500-கும் ரூ-800க்கும் விற்றார்கள்.ஜூன் 1 அன்றைக்கு சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஜூன் 2-ஆம் தேதி நீங்கள் ஒரு அறிக்கை வெளியிடுகிறீர்கள், ஹெல்மெட் அணிவதினை நிர்பந்திக்கக்கூடாது என்று. என்ன நடக்கிறது இங்கே. நேர்மையாய் சட்டத்தினை மதித்து ஹெல்மெட் வாங்கிய அனைவரையும் முட்டாள்ளாக்கி விட்டீர்கள். ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தினனுக்கு ரூ.1500 - 2000 என்பது பெரிய தொகை, அவனுடைய சம்பளத்தில் அது 20% மேல். இப்போது ஹெல்மெட் இல்லாமலும் வண்டியோட்டலாம் என்று சாதாரணமாய் சொல்கிறீர்கள். இது முழு நம்பிக்கை துரோகம். முதலாளிகள் வாடிக்கையாளர்களை பல்வேறு வார்த்தைகள் பேசி ஏமாற்றுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு அரசாங்கமே, குடிமக்களை ஏமாற்றுவதை இப்பொதுதான் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய இழப்பு இது. இரட்டை நாக்கு என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம், எதிர் கட்சிகளையும், எதிரி கட்சிகளையும் முரசொலியில் கட்டம் கட்டிய தாங்கள் செய்வது என்ன ? நேர்மையாய் இருப்பதின் பலன், ஏமாளியாய், இளிச்சவாயனாய் இருப்பதா? ஹெல்மெட் என்ன தங்கநகையா, இல்லாமல் போனால், அடகு வைத்து குடும்பம் நடத்துவதற்கு. உங்களை நம்பி ஒட்டுப்போட்ட மக்களுக்கு உங்களாலான பலன் ரூ.2000 நஷ்டம். சரி இதையும் விட்டு விடுமோம்.

மூன்று அப்பாவி உயிர்கள் உங்கள் மகனின் ஆதரவாளர்களால், கொல்லப்பட்டதற்கு, நான் என்ன ரெளடியின் அப்பனா என்று சீறுகிறீர்கள். சிபிஐக்கு உத்தரவிட்டேன் என்று கூறி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்கள். உங்களது பவளவிழாவிற்கு ராஜ் தொலைக்காட்சியினை வரவழைத்து, அவர்களுக்கு நேரடியான தொலைதொடர்பு வசதிகள் இல்லாத காரணத்தினால், தூர்தர்ஷனின் வேனினை வாங்கி வைத்துக் கொண்டு வர்ணஜாலம் காட்டிய உங்களுக்கு, சிபிஜக்கு உத்தரவிடுவதா பெரிய விஷயம்.

சன் தொலைக்காட்சி இல்லையென்றானதும், திமுக அரசும், ராஜ் தொலைக்காட்சியும் சேர்ந்து 'கலைஞர் டிவி' நடத்தும் என்று அறிக்கை வெளியிடுகிறீர்கள். நீங்கள் தேர்தல் கமிஷனில் கொடுத்த கட்சியின் நிதி அறிக்கையினையும், இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக முதலீடு செய்யப்போகும் தொகையினையும் உங்களால் ஈடு கட்ட முடியுமா ? விவரமறிந்த ஊடகங்களில் இருக்கும் என் நண்பர்கள் 50 -100 கோடி ரூபாய்கள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இது திமுக அரசியல் கட்சியின் டிவியா ? அப்படியென்றால், 50 கோடி ரூபாய்கள் திமுகழகத்திற்கு எங்கிருந்து வந்தது ? இல்லை இது உங்கள் குடும்ப நபர்களின் முதலீட்டில் வெளியிடப்படும் தொலைக்காட்சியா ? அப்படியேயென்றாலும், 100 கோடி ரூபாய்களுக்கு சொந்தமானவர்கள் யார் யார் ? அப்பாவி தமிழனுக்கு 'சிவாஜி' உரிமையினை 4 கோடி ரூபாய்க்கு வாங்கிவிட்டீர்கள் என்று சொல்கிறீர்கள். 4 கோடி ரூபாய்கள் என்பது மென்பொருள் புத்தியில் ஊறிப் போன என்னைப் போன்ற மரமண்டையர்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள். ஒரு படமே ஒரு மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கினால், அத்தொலைக்காட்சியினை நிர்வகிக்க எங்கிருந்து வந்தது பணம் ? இதில் கல்லா கட்டியவர்கள் ராஜ் உரிமையாளர்கள். நல்லது அதுவும் போகட்டும்.

விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்ட மீனவர்கள் என்கிற ஒற்றை சொல்லாடலிலும், அவர்கள் திரும்பி வந்த பின் ஒரு ஊடகத்திற்கும் அவர்களின் பேட்டியினை தராமல், அவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும் என்று ஒரம்கட்டி நடுவண் காங்கிரஸ் அரசிற்கு உங்களின் விசுவாசத்தினை நிரூபித்து விட்டீர்கள். மனதினை தொட்டு சொல்லுங்கள், இன்றளவும், என்றைக்காவது புலிகள் உங்களையோ, இல்லை தமிழகத்தில் ஆளுபவர்களையோ பகைத்துக் கொண்டார்களா ? தமிழீழம் கிடைத்தால் சந்தோசமடைவேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், தொடர்ச்சியாக புலிகளை ஒரங்கட்டி வைத்திருக்கிறீர்கள். உலகில் இலங்கை பிரச்சனையினை கவனித்து வரும் குழந்தைக்குக் கூட தெரியும், புலிகள் இல்லாத ஈழம் சாத்தியமற்றது என்று. உங்களின் அரசியல் லாபத்திற்காக, ஏன் தமிழ், தமிழன் என்று ஜல்லியடிக்கிறீர்கள். நாளை ஈழம் மலர்ந்தவுடன் நீங்கள் ராஜ் டிவி நிறுவனர்களுக்கு சொன்னது போல, நாங்கள் வெகு காலமாக களவியல் காதலில் முழ்கி இருந்தோம் என்று உங்களை முன்னிறுத்திக் கொள்வீர்களா ?

திடீரென அதிமுக கட்டிடம் இடிக்கப்படும் என்று உங்கள் மகன் மேற்பார்வையில் இருக்கும் CMDAவிலிருந்து ஒரு அரசாணை வருகிறது. இதற்கு ஜெயலலிதா அம்மையார் சபதம் போட்டது, அறிக்கை விட்டது எல்லாம் வேறு விவாதம். 1972-இல் கட்டப்பட்டு, கிட்டத்திட்ட 35 வருடங்களாக இருக்கும் ஒரு கட்சியின் அலுவலகம் எப்படி திடீரென விதிகளை மீறியதாகும். அப்படியே விதிகளை மீறி கட்டப்பட்டது என்றே வைத்துக் கொள்வோம், கொஞ்சம், என்னுடைய அலுவலகத்திற்கு பின்னாடி இருக்கும் வடக்கு உஸ்மான் சாலைக்கு வாருங்கள். போத்தீஸ், நல்லீஸ், சரவணா, ஜெயசந்திரன், ஜி.ஆர்.டி, ஆரெம்கேவி என வரிசையாய் கட்டிடங்கள். வண்டி நிறுத்த கொஞ்சமும் இடமில்லாத வகையில் தொடர்ச்சியாய் நெரிசலை உண்டாக்கக் கூடிய கட்டிடங்கள். இவையெல்லாம் விதிமுறைகளை மீறவில்லையா ? ஏன் வருடக்கணக்கில் எதுவும் மாறவில்லை. கேட்டால், நீங்கள் புள்ளிவிவரப்புலியாய் மாறி 'சென்ற ஆட்சியிலே...... கழக ஆட்சியிலே' என வாய்ப்பந்தல் போடுவீர்கள். நீங்கள் சொல்லும் புள்ளிவிவரங்களில் பெரும்பாலானவை மக்களின் பார்வைக்கு இல்லை. ஆகவே நீங்கள் தப்பித்து விடுவீர்கள். இதைத் தாண்டி, கழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி என்று வசைப்பாடிய நீங்கள், எப்படி இப்படியொரு விஷயத்தினை கையிலெடுத்து பேச முடியும்.

ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் "எம்ஜிஆரை நம்பினேன், கவுத்தான். வைகோவை நம்பினேன் கவுத்தான். சரி உள்ளுக்குள்ளேயே இருக்கட்டுமேன்னு பேரனுக்கு குடுத்தேன், அதுவும் சரியில்லை, நான் யாரைதான் கட்சியை பாதுக்காக்க நம்பறது, அதுதான் குடும்பத்திலிருந்தே பார்க்கறேன்" என்கிற ரீதியில் நீங்கள் சொன்னதாய் படித்தேன். இதை நம்பினேனா இல்லையா என்பது ஒரு புறமிருக்க, இவ்வாறு பேசக் கூடிய நபர்தான் நீங்கள் என்பதும் [நினைவிருக்கிறதா, நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! - எமர்ஜென்சிக்கு பிறகு] தெரிந்ததே.இதில் புரியாதது, எப்படி ஒரு ஜனநாயக கட்சியில் கட்சியினை நிர்வகிக்கும் பொறுப்பும், பாதுகாவலும், உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கிறீர்கள். டெல்லியில் அழகிரியினை ப் பற்றி பேச்சு வருகையில், "அவன்தான் கொன்னான்னு நீ பாத்தியா ? " என்று சீறி இருக்கிறீர்கள். நீங்கள் பார்த்தீர்களா, மூன்று மாணவிகளை பக்கத்திலிருந்து எரித்தததை ? மதுரை முழுக்க தெரியும் அழகிரி அவர்களது ஆளுமை. அந்த மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டதன் காரணமும், ஒரு அலுவலகம் சீரழிக்கப்பட்ட காரணமும். பாசம் கண்களை மறைக்கிறதா ஐயா ? இந்த வார குமுதம் பேட்டியில் வைரமுத்துவின் கேள்வி பதிலில் நீங்கள் "தசரதனுக்கு கீரிடம் வந்த போது தானே, கேடு வந்தது" என்று சொன்னதாக மனமுருகியிருக்கிறார் கவிஞர். பிரச்சனை கீரிடத்தில் மட்டுமல்ல, கட்டிக் கொண்டவர்களின் தொணதொணப்பும் தான். அவுட்லுக் எக்ஸ்பிரஸில் உங்களுடைய குடும்ப கிளை படம் போட்டிருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னார். உண்மையில் பிரச்சனை அங்கேயிருந்து தான் தொடங்கியிருக்கிறது. கொஞ்சம் திமுகவின் வரலாற்றினை திரும்பி பாருங்கள். பெரியார் மணம் செய்து கொண்டது தெரிந்து, அண்ணா முதற்கொண்ட ஐம்பெரும்குழுவினர் ஒரு இயக்கும் ஒரு குடும்பத்தின் பிண்ணணியில் போய்விடக் கூடாது என்கிற தார்மீக அடிப்படையில் வெளியில் வந்து தொடங்கியது தான் திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் இன்றோ உங்கள் குடும்பத்தினருக்காகவும், அவர்களின் செட்டில்மென்டிற்காகவும் திமுகவினை திருக்குவளை கருணாநிதி குடும்பத்தினர் முன்னேற்றக் கழகமாக மாற்ற துடிப்பது 20 வருடங்களாக, திராவிட பாரம்பரியத்தோடும், உங்களின் தலைமையோடும் இருந்து வந்த என்னைப் போன்றவர்களுக்கு வருத்தத்தையும், வெறுமையையும், வெறுப்பினையும் உண்டாக்கியிருக்கிறது.

84 வயதில் இன்னமும் உங்களை கர்வத்தோடும், பிரம்ம்பிப்பொடும் பார்க்கிறேன். ஆனால், செயல்கள் உயராத போது, சொற்பேச்சு உயர்ந்து என்ன பயன். என்னை போன்றவர்கள் உங்களின் அரசியல் அனுபவத்தில் 50 விழுக்காடுக் கூட வாழாதவர்கள். ஆனாலும், செயல்களைக் கொண்டே ஒருவரின் நிலையினை எடையிட இயலும் என்கிற நிலையில் உங்களின் செயல்களுக்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை. முகமது பின் துக்ளக்கினையொட்டிய வகையில் உங்கள் முடிவுகளும், நிலைப்பாடுகளும் மாறிக் கொண்டே இருக்கின்றன.உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. குறளோவியம் கண்டவர் நீங்கள், அதிலிருந்து ஒரு குறள்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பதி ழுக்கு.

இன்னமும் திராவிட இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவன்.

tag: , , , , , ,

Labels: , , , , ,


Comments:
சாட்டையடி....

மாறுதல்தான் நிரந்தரம் என்பதனை நன்கு புரிந்துகொண்டவர் மு.க..

ஆதனால்தான் மாறியிருக்கிறார்...இதனால் அவரை நீங்கள் பச்சோந்தி என்று எண்ணக்கூடாது...
பின்ன வேறு என்ன என்று கேட்காதீர்கள்....
உங்களுக்கே புரியும்

அன்புடன்
அரவிந்தன்
 
This comment has been removed by a blog administrator.
 
கலக்கல் நாராயணன், சாட்டையடி.

//மாறுதல்தான் நிரந்தரம் என்பதனை நன்கு புரிந்துகொண்டவர் மு.க..

ஆதனால்தான் மாறியிருக்கிறார்...இதனால் அவரை நீங்கள் பச்சோந்தி என்று எண்ணக்கூடாது...
பின்ன வேறு என்ன என்று கேட்காதீர்கள்....
உங்களுக்கே புரியும்//

:))
 
நீங்கள் எழுதிய மற்றதெல்லாம் விவாதத்துக்குரியன.
ஆனால், ஹெல்மட் காரணமாக தலைவரை சாடுவது சரியல்ல.
ஹெல்மட் அணியாமல் சென்னை சாலைகளில் மட்டுமல்ல, எந்த தமிழ்நாட்டு சாலைகளிலும் செல்வது உகந்ததல்ல. உயிர் பணயம் வைத்து செல்வதை தடுக்க வேண்டியது அரசாங்க கடமை.
அதே நேரத்தில் ஹெல்மட் காரணமாக போலீஸால் மக்கள் தொந்தரவுக்கு உள்ளாகக்கூடாது என்று தளர்த்தியதும் பாராட்டுக்குரியதுதான்.

தமிழ்நாட்டில் திமுகவுக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாதபோதும் அவர் உறுதியுடன் நின்று பாமகவை பகைத்துக்கொள்ள வேண்டும் என்று கோருவதும் சரியல்ல. பாமக மக்கள் பிரதிநிதிகள் அல்லவா?

குடும்பத்தினரிடம் அவர் அதிகாரத்தை கொடுக்கலாம். ஆனால், அது திமுகவினர் ஆதரவு இல்லையென்றால் நீடித்து நிலைக்காது. அந்த வகையில் பார்த்தாலும் அது மக்களின் விருப்பமே. அது இமாலய தவறாக தமிழ் மக்களுக்கு தோன்றினால், பிள்ளைகள் ஆட்சிக்கு வர முடியுமா?
 
எழில்,

//தமிழ்நாட்டில் திமுகவுக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாதபோதும் அவர் உறுதியுடன் நின்று பாமகவை பகைத்துக்கொள்ள வேண்டும் என்று கோருவதும் சரியல்ல. பாமக மக்கள் பிரதிநிதிகள் அல்லவா?//

இந்த அறிவு திட்டத்தினை அறிவிக்கும்போது இருக்க வேண்டாமா. வெறும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனைக் கூட பரிட்சைக்கு முன் நன்றாக படித்தப்பின்னரே அனுப்பும் நாம், ஒரு அரசினை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர், இப்படியா இருப்பது. என்னுடைய கோவம், கருணாநிதி என்கிற தனிநபர் மீதல்ல. முதல்வர் என்கிற பதவியில் இருக்கும் ஒரு திராவிட கட்சியின் மூத்த தலைவர் மீது.

மற்றபடி நீங்கள் ஒரு 'தலைவர்' அபிமானி என்று தெரிகிறது. அதனால், வெறுமனே விவாதங்கள்தான் வளரும், வேறெதும் நிகழாது. நன்றி.

நன்றிகள் - அரவிந்தன், சந்தோஷ்
 
Superb ! Superb!! Superb!!! very very very well written.. 84 vayasula ..nadakkevaa mudiyadha kezhathukku padhavi aasai innamum pogala.. ada mudalla sollanum.

I HATE THAT MAN
 
எதனையெல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் நாம் விரும்பாமல் தி.மு.க. ஆட்சி வரவேண்டும்
என்று எண்ணினோமோ, அவற்றையெல்லாம் இந்த ஒரு வருடத்தில் பார்த்துவிட்டோம்.

1. பொது இடங்களில் பெரிய அளவில் வன்முறை
2. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவுகள்
3. மக்களின் மனமறியாது திட்டங்களை அமல்படுத்துதல் / பின்னர் வாபஸ் வாங்குதல்
4. கோபத்தில் வார்த்தைகளை / திட்டல்களை / உளறல்களை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்துதல்
5. உட்கட்சி ஜனநாயகம் என்பதை பற்றி கவலையே படாமை.
6. விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமை
என எல்லாமுமே..

அவருக்கும் இவருக்கும் இப்போது இருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் பத்திரிகைத்துறையில்
இருக்கும் நண்பர்கள் மட்டுமே.

மிக நல்ல பதிவு நரேன்.!
 
மிகவும் நேர்த்தியாக அழகாக பல விஷயங்களை அலசி இருக்கிறீர்கள்.

சிறப்பான பதிவு.
 
// ஒரு அரசாங்கமே, குடிமக்களை ஏமாற்றுவதை இப்பொதுதான் பார்க்கிறோம். //

:-)))

நாரயணன்,
என்ன காமெடியா :-) . ஊங்களுக்கு ஒரு 30 வயசுன்னு வச்சுக்கிவோம். 15 வயசுல இருந்து இந்திய அரசியல் தெரிய வந்ததுன்னு வச்சுக்குவோம். இந்த 15 வருடத்தில் இப்பத்தான் அரசாங்கம் குடிகளை ஏமாத்துறதைப் பார்க்குறீங்களா?

:-)))

******

அதுக்கு இது தேவலை என்ற அளவில்தான் அரசியல் இருக்கிறது.ஏதாவது சொன்னால் முந்தைய ஆட்சி பற்றிப் பேசுவதே புதிய ஆட்சியாளர்களுக்கு வேலையாய் போய்விட்டது.

யாராலும் திருத்தமுடியாத அளவுக்கு இந்திய அரசியல் உள்ளது. :-(((((

***


தேர்தல் அலசல்3: கலைஞர் இன்னும் கலைஞரா?
http://kalvetu.blogspot.com/2006/05/3.html
 
சிவா, வெங்கட்ராமன், கல்வெட்டு நன்றிகள்.

சிவா,

வருத்தமே அதுதான். எது வேண்டாமென்று நினைத்தோமோ, எது நடக்கக்கூடாது என்று பாடுபட்டோமோ, அதுதான் நடக்கிறது என்னும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.

கல்வெட்டு,

வயது 32 :) அரசு குடிகளை ஏமாற்றுவது என்பது தெரிந்ததே, ஆனாலும் ஒரு ஊடகமும் இதைப் பற்றிய குறைந்தபட்ச சிந்தனைக் கூட இல்லாமல் இருப்பதும், காழ்ப்புணர்ச்சி என்று வசைப்பாடியவர் இன்று காழ்ப்புணர்ச்சியோடும், நிலைதடுமாறலோட்டும் இருப்பதுதான் விவாதத்திற்குரியது.
 
என்னமோ நடக்குது
மர்மமாய் இருக்குது.

ஒண்ணுமே புரியலை ...
 
அடடே உடன்பிறப்பும் சிந்திக்க துவங்கிவிட்டார்களா? என்ன ஆச்சர்யம்!

//வெற்றிகொண்டான் என்றொரு பேச்சாளன் முப்பது வருடங்களாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று சகட்டுமேனிக்கு பேசியவர் இருக்கிறார். ஓவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும், வெற்றிகொண்டான் வெளியில் இருந்ததை விட ஜெயிலில் இருந்தது அதிகம். அவருக்கென்ன செய்யப் போகிறீர்கள்//

தீப்பொறி ஆறுமுகத்துக்கு கிடைத்த இடம் தான்! ;)

//இது திமுக அரசியல் கட்சியின் டிவியா ? அப்படியென்றால், 50 கோடி ரூபாய்கள் திமுகழகத்திற்கு எங்கிருந்து வந்தது ? இல்லை இது உங்கள் குடும்ப நபர்களின் முதலீட்டில் வெளியிடப்படும் தொலைக்காட்சியா ? அப்படியேயென்றாலும், 100 கோடி ரூபாய்களுக்கு சொந்தமானவர்கள் யார் யார் ?//

அட என்ன கேள்விங்க இது! எல்லாரும் (99%)ஹெல்மெட் வாங்கியாச்சா? டி.விக்கு காசு ரெடி அப்புட்டுத்தான் ;) அரசியலே புரியமாட்டீங்குது உங்களுக்கு!!!!

//உங்களை நம்பி ஒட்டுப்போட்ட மக்களுக்கு உங்களாலான பலன் ரூ.2000 நஷ்டம். சரி இதையும் விட்டு விடுமோம்.//

உண்மை. 3 அல்லது 4 ஆயிரத்துக்கு செக்ண்டு ஹாண்டு டி.வி.எஸ் 50 வாங்கியவ பாவம் 2000 செலவு செய்து ஹெல்மெட் வாங்க வைத்தது! அப்படி மக்கள் மேல் உண்மையில் பாசமிருந்தால் 2ஆம் தேதி சொன்னதை 31ஆம் தேதியே சொல்லியிருக்க வேண்டும்! நம்ம கடனை வாங்கி ஹெட்மெட் வாங்காம எஸ்கேப் ஆயிருக்கலாம்! :(

மொத்ததில் அசத்தல் பதிவு வாழ்த்துக்கள்! என் உள்மனதில் நினைத்த அனைத்தும் எழுத்து வடிவில் அதற்கு நன்றியும் கூட!!!
 
பலரின் உள்ளத்தில் இருக்கும் குமுறலை அருமையான பதிவாக காண்கிறேன்.

நல்லா எழுதி இருக்கீங்க.. ஆனா ஒன்னும் ஆவப்போறது இல்லங்கறதுதான் வேதனையா இருக்கு.. தமிழனுக்கு சமீபத்தில விடிவு காலம் இருக்கற மாதிரி தெரியல.
 
வி.பு. பற்றி கலைGங்னரின் பார்வையை பிரிச்சு MஏGன்சிருக்கிறீன்க
மெத்தப் Pஎரிய உபகாரம்
யாழ் னந்பன்
 
நாரயணன்...

கலைஞர் தொலைக்காட்சி பெயரில் வசூல் வேட்டை ஆரம்பித்தாகிவிட்டது...ஜூன் 3ம் தேது சுபவேளையில் வசூல்வேட்டைக்கு பிள்ளையார்சூழி போட்டாச்சு...
அனைத்து மாவட்ட செயளாலருக்கும் வசூல் வேட்டை நடத்த தலைமை கழகத்தில் இருந்து உத்தரவு அனுப்பட்டுள்ளது..

நன்றாக வசூல் செய்யும் மாவட்ட செயளாலருக்கு பரிசு உண்டாம்..தொழிம் அதிபர்கள் வரிசையில் நின்று அண்ணா அறிவாலயத்தில் கலைஞரிடம் நிதி அளிக்கும் காட்சியினை விரைவில் பார்க்கலாம்...

முதல் வசூல் பியாரிலால் என்ற மார்வாடியிடம்..பாவம் கலைஞர் தொலைக்காட்சியில் நல்ல தமிழ் நிகழ்ச்சிகள் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் வாரி வழங்கியிருப்பார் என்றே நம்புவோம்..

அன்புடன்
அரவிந்தன்
 
உண்ணாவிரதம்,மறியல்,பொரியல் என்று நடத்த வேண்டியது.
வேறென்ன வாழ்கிறது?இதில் எந்தக்கட்சியில் என்ன நடந்தால்தான் என்ன?
நானும் உங்கள் மாதிரி 1963 முதல் கனவு கண்டவ்ன்.காங்கிரஸ்
ஆட்சியின்போது எங்கும் எதிலும் பெர்மிட் ஊழல் புரையோடியதைக்
கண்டு மனம் வெதும்பி ஆட்சி மாறாதா ஊழல் ஒழியாதா என்று ஏங்கியவன்.
ஆனாலின்று வரை நடப்பதென்ன?திராவிடப் பாரம்பரியம் கொடிகட்டிப்
பறக்கிறது.கூடவே மானமும் பறந்து போகிறது. இதில் என்ன நியாயம்
பேசி என்ன தீர்வு கிடைக்கப் போகிறது?தங்கள் வலைப் பக்கத்தின்
தலைப்பில் சுட்டியிருக்க்கிறீர்களே?"ஆடுகள் தங்களை ஆடுகள் என்று
உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன-கலீல் கிப்ரான்"என்று.
அட்சர லட்சம் பெறும் வரிகள்.
என்ன?
மந்தையிலிருந்து விலகியபின் அடுத்து என்ன செய்வது என்று
தெரியாமல் அலைகின்றன.பலி கொடுப்பவன் போடும் மாலையை நம்பி
அவன்பின்னால் போய் பலியாகின்றன.

இதிலிருந்து விடிவே கிடையாதா?
 
I have tagged you as a thinking blogger. see here: http://premalathakombai.blogspot.com/2007/06/thinking-blogger-award.html
 
Hatts off!!!

Muthalil avaru manjal thunduku viLakkam tharattum. Mooda nambikkaiyum, manjal thundum!!!

Anbudan,
Na.Anandkumar
 
Good article. The complaints that are pointed out against are only a tip of an iceberg. If everything shall be written, it will become a NEDUNTHODAR!

I wish Mr.MuKa to live longer and face all the problems with no peace of mind. That can be a good punishment.
 
நமக்கு தெரிந்து என்ன
நடக்க போகிறது
படித்த முட்டாள் உள்ள வரை
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


成人電影,微風成人,嘟嘟成人網,成人,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,成人文章,成人影城,愛情公寓,情色,情色貼圖,色情聊天室,情色視訊

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]