Jun 29, 2007

கொத்து பரோட்டா

ஜீவா

ஜீவா. ரஷ்யாவில் ஒரு படப்பிடிப்பின்போது மாரடைப்பால் மரணமடைந்தார் என்று குறுஞ்செய்தி நேற்று வந்தபோது இது வதந்தியாக தான் இருக்கும் என்று நம்பினேன். ஆனால், உண்மையாகிப் போனது. ஜீவா, இதுவரை மூன்று படங்களை தந்த இயக்குநர். தமிழ்சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று இடைநிலை இயக்குநர்களை மறந்துப் போவது அல்லது பேசாமல் இருப்பது. ஒரு பக்கம், மணிரத்னம், ஷங்கர், பாலசந்தர் எனவும் இன்னொரு புறம் சேரன், பாலா, கெளதம் மேனன், அமீர் என வகைப்படுத்தினாலும், ஜீவா மாதிரியான இயக்குநர்களுக்கு என்ன இடம் என்று தெரியவில்லை. 12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே என மூன்று படங்கள். உள்ளம் கேட்குமே என்கிற படத்தினை வெளியிட ஜீவா பட்ட கஷ்டங்கள் ஒரு சினிமா விநியோகஸ்தர் மூலமாக தெரியும். பெப்சி என்று முதலில் பெயரிட்டு பல பிரச்சனைக்கு உள்ளாகி பின்பு ஒரு வருடம் கழித்து வெளியாகி, வெற்றியினை குவித்த படம். முக்காபுலா, சிக்கு புக்கு ரயிலே போன்ற ஜனரஞ்சக பாடல்களை ஒரு ம்யுசிக் வீடியோ தரத்திற்கு கொண்டு சென்ற ஒளிப்பதிவாளன். நிறைய பேருக்கு நினைவிருக்காது. ஜென்டில்மெனின் சிக்கு புக்கு ரயிலே பாடல் தான் மெட்ரோவில் [சன் டிவி அப்போது கிடையாது] வந்த முதல் தமிழ் பாடல். மும்பையே பிரபு தேவா பின்னால் பைத்தியம் பிடிக்கச்செய்து அலைய வைத்த பாடலுக்கு ஜீவா தான் ஜீவன்.ஜீவாவின் எந்தப்படமும் 'அறிவுரை' சொல்லியதில்லை. இந்தியா விவசாயிகள் கையிலும், பாகிஸ்தானுக்கு அந்தப்புறம் இருப்பவர்கள் எல்லாரும் வில்லன்களாகவும், ஒரு ஹீரோவினால் இந்தியாவில் லஞ்சம், ஊழல், கருப்புப்பணம், அடிமைத்தனம் ஒழிந்துவிடும் என்றெல்லாம் ஜல்லியடிக்காத, நகரத்து வாழ்வினை மையமாக கொண்ட படங்கள். எவ்விதமான பாசாங்குகளும் இல்லாத கொஞ்சம் தமிழ்சினிமா மசாலாவோடு அமைந்த படங்கள். ஒரு கலைஞனாக ஜீவா செய்தது ஏராளம், ஆனாலும், இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு "பீமா" ஜுரத்தில் எல்லாம் மாறி, 'சிவாஜி'க்கு சில்வர் ஜுப்ளி எடுக்கும்போது நினைவுக்கு வந்தாலும் வரலாம்.

ஒணான்

என் அடுக்ககத்திற்கு பக்கத்தில் ஒரு பெரிய அடுக்ககம் கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. பால்கனியில் இருந்து பல்துலக்கி வரும்போது ஒரு ஓணான் தென்பட்டது. ரொம்ப நாள் கழித்து ஒணான் என்கிற ஒரு ஜீவராசியினை அப்போதுதான் பார்த்தேன். பள்ளிக்கூட மைதானத்தில் பார்த்ததிற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஓணானை இப்போதுதான் பார்க்கிறேன். என் தங்கையின் 8 வயது மகளுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. நகரத்தில் மறந்து போவது எவையெவையெல்லாம் என்று திடீரென ஒரு பொறி தட்டியது. கார்ன் ப்ளேக்ஸ் வந்த பிறகு வறுத்த சோளம் தெரியவில்லை. நெல்லிக்காய் ஊறுகாய் தான் பார்க்கிறேன், அறுத்து உப்பு போட்டு விற்கிறார்களா என்று தெரியவில்லை. கிச்சிலிக்காய், பேரிக்காய்,விளாம்பழம் இருக்கிறதா தெரியவில்லை. நகரத்தில் வாழ்வதிலும், அதிலும் அடுக்ககத்தில் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பதிலும் இழப்பவை இன்னும் நிறைய இருக்கின்றன என்று தோன்றுகிறது. இன்னமும் ஜிகிர்தண்டா குடிக்கவில்லை, சென்னையில் கிடைக்கிறதா ?. ஒணானுக்கு ஆங்கிலத்தில் என்ன ?

ஊர் மேய்தல்

ரொம்ப நாள்களுக்கு பிறகு கொஞ்சம் வலைப்பதிவுகள் படித்தேன். சுகுணாதிவாகரின் (மிதக்கும் வெளி) சு.ரா பற்றிய பதிவு சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான பதிவாக நினைக்கிறேன். சினிமா ஆளுமைகளுக்கு இணையாக, இலக்கிய ஆளுமைகளை தூக்கி நிறுத்திக் கொண்டு அதன்பின் அலையும் மக்களுக்கு முன், இந்த பதிவு முக்கியமானதாகிறது. சமீபத்தில் ஒருநாள் நண்பர்களோடு ஒரு டாஸ்மாகில் இருந்துவிட்டு, உணவு உண்டபோது, என்னுடைய கருணாநிதிக்கான கடிதம் பற்றிய சிறுவிவாதம் வந்தது. அதில் நண்பர் சொன்ன முக்கியமான கருத்து, கருணாநிதிக்காவது ஸ்டாலின் 20 வருடங்கள் கட்சியில் இருந்து அதன்மூலம் அவரை முன்னிறுத்தல் ஒரு பிள்ளைப்பாச வெளிப்பாட இருக்கிறது. ஆனால் தன் மகனை ஒரு இலக்கிய பத்திரிக்கையின் ஆசிரியராக கொண்டு வந்த சு.ரா கருணாநிதியினை விட மிக மோசமான வம்சாவளி மிராசுதார் நிலையினை கொண்டிருக்கிறார். ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இதைவிட மிகமோசமான ஒரு நிலை தமிழ் இலக்கிய பரப்பில் நடக்காது என்று தோன்றுகிறது. இதைத் தாண்டி, உலகமயமானால் நாமெல்லாம் உருப்பட்டு விடலாம் என்றும், விவசாயிகள் பணப்பயிர்களை உற்பத்தி செய்தால் அவர்கள் எல்லாம் நன்றாகிவிடுவார்கள் என்று பல தலையில் அடித்து, சாமியாடி பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கும்போது நவோம் சோம்ஸ்கியின் இந்த கட்டுரை முக்கியமானதாகிறது. கட்டுரையினை படித்துப் பார்த்தாலோயொழிய அதன் வீரியமும், முக்கியத்துவமும் புரியாது.

கொறிக்க

சென்னையில் இருக்கும் 'குடி'யிடங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். வெர்ஜின் மேரி குடிப்பவனுக்கு இது வேண்டாதவேலை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனாலும், இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதிவாகவும், முன்னூறு, நானூறு ஆண்டுகளுக்கு பிறகு வருபவர்களுக்கு ஒரு ஆய்வு குறியீடாகவும் இருக்கும் என்கிற நம்பிக்கை இருப்பதால், சென்னையில் என்னோடு குடித்தவர்கள், குடிக்காதவர்கள் என பலரும் விஷயதானம் பண்ணீர்களேயானால் எழுதுகிறேன். மற்றபடி, எல்லோரும் முந்தாநாள் ராயர் மெஸ்ஸில் போண்டா சாப்பிட்டேன், இதாலோ கால்வினோ இந்தியாவிற்கு வந்தபோது இட்லி சாப்பிட்ட இடம் இதுதான் என்று இலக்கிய சேவை / தோசை / உப்புமா படைக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.

tag: , , , , ,

Labels: , , , , , ,


Comments:
ஒணானுக்கு ஆங்கிலத்தில் என்ன?
-Lizard
 
Its actually called a garden lizard.
-Ramji
 
. ரொம்ப நாள் கழித்து ஒணான் என்கிற ஒரு ஜீவராசியினை அப்போதுதான் பார்த்தேன். பள்ளிக்கூட மைதானத்தில் பார்த்ததிற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து ஓணானை இப்போதுதான் பார்க்கிறேன். என் தங்கையின் 8 வயது மகளுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. நகரத்தில் மறந்து போவது எவையெவையெல்லாம் என்று திடீரென ஒரு பொறி தட்டியது. கார்ன் ப்ளேக்ஸ் வந்த பிறகு வறுத்த சோளம் தெரியவில்லை. நெல்லிக்காய் ஊறுகாய் தான் பார்க்கிறேன், அறுத்து உப்பு போட்டு விற்கிறார்களா என்று தெரியவில்லை. கிச்சிலிக்காய், பேரிக்காய்,விளாம்பழம் இருக்கிறதா தெரியவில்லை. நகரத்தில் வாழ்வதிலும், அதிலும் அடுக்ககத்தில் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பதிலும் இழப்பவை இன்னும் நிறைய இருக்கின்றன என்று தோன்றுகிறது. இன்னமும் ஜிகிர்தண்டா குடிக்கவில்லை, சென்னையில் கிடைக்கிறதா ?. ஒணானுக்கு ஆங்கிலத்தில் என்ன ?
----------------------------------

அன்பு நாரயணன்!!!

தங்களின் மேற்ச்சொன்ன விஷயம் எனக்கென்னவோ ஜல்லியடிக்கும் விஷயமாகவே தெரிகிறது..

நகர வாழ்க்கை அப்படியொன்றும் தலை கீழாக மாறவில்லை.நகரமயக்காலிலும் இன்னும் பழமையை பார்க்கமுடியும் மனமிருந்தால்.
இங்கு பெங்களுரில் என்னால் தினமும் ஓனானை பார்க்கமுடிகிறது.சிட்டுகுருவிளை பார்க்க முடிகிறது.மடிவாளா சந்தையில் விளாம் பழம்,பேரிக்காய் கிடைக்கிறது..

"போரம்" என்ற மிகப்பெரிய அங்காடி வாசலிலே ஐந்து ரூபாய்க்கு நல்ல வறுத்த சோளம் கிடைகிறது.

போன வாரம் கூட என் மகளுக்கு சின்ன வயதில் தென்னங்கீற்று மூலம சுருக்கு போட்டு தவளை பிடிப்பதை சொல்லிகுடுத்தேன்..

ஜிகிர்தண்டா கோரமங்களா முருகன் இட்டிலி கடையில் கிடைத்திறது...
இன்னும் என் வீட்டு அருகில் குழந்தைகள் கண்ணாம் பூச்சி,கல்லா மண்ணா,திருடன் போலிஸ் விளையாடுகிறார்கள்.(இந்த கணினியுகத்திலும்)

அரசு பள்ளி வாசல்களில் இன்னும் மாங்கா பத்தை,நெல்லிக்காய் விற்கிறார்கள்...

நீங்கள் வசிக்கும் மேற்கு கே.கே நகரை சில வருடங்களுக்கு முன்பு வரை "ஊரு" என்றுதான் அழைப்பார்கள்.சில வருடங்கள் முன்பு வரை வேம்புலி அம்மன் கோவில்(உங்கள் வீடு அருகில்)மரத்தடி பஞ்சாயத்து)நடந்தது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.


அப்புறம் உங்களோடு அமர்ந்து சென்னையில் என் மாடியில் அமர்ந்து தண்ணியடித்த விஷயங்கள்....வேறொரு பதிவில் விவரமாக.
 
raj chandra, ramji Thanks. Aravindan, will answer this in detail later.
 
நாரயண்,

தங்களின் விரிவான பதிலுக்காக ...

அன்புடன்
அரவிந்தன்
 
Jiharthanda is available in Chennai in Abirami multiples mall. Not as good as the original in Madurai, but sort of OK
 
மடிப்பாக்கத்தில் ஓணான்களை நிறைய பார்க்க முடிகிறது. எங்கள் வீட்டு தென்னைமரங்களில் வசிக்கும் அணில்களை வைத்து அணில் சரணாலயமே அமைக்கலாம் :-)
 
Check tulleeho.com. The best Indian site ever. No, I am not spamming you. It has details about bars / pubs in various cities, including Chennai.
 
அரவிந்தனுக்கு சீக்கிரம் பதில் சொல்லுவீங்கன்னு காத்திட்டிருக்கேன்.. :)
 
narain,
city life is not only about onaan..bars etc. that is for men.the same city gives protection to countless people who need anonymity from our cultural habit of'concern 'for your neighbor.yes this is very much a woman's perspective, because obiviously i cannot go to a bar even if i dont drink ,not because i am holy , but i dont like the taste of alcohol,beer smells like kazhanithanni really,(ramadoss will be there to catch me)and our bars and pubs seem to be only for drinking alcohol.(except in bangalore).have you ever thot of including women in your 'literary discussions'?
regarding su ra why waste time i dont know .he promoted his son ,that is his levlel of integrity and it will not affect an ordinary person's life like the way stalin becoming chief minister would.i have never read su ra, probably never will for all the hype.
noam chomsky, yes i need to read slowly and then see what is all about. if it si about anti america..then i think we have ifno about the selfish working of america .infact if you can watch an aussie satire tv serial which includes american ignoramus it will keep you laughing all day.
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


情色貼圖,色情聊天室,情色視訊,情色文學,色情小說,情色小說,臺灣情色網,色情,情色電影,色情遊戲,嘟嘟情人色網,麗的色遊戲,情色論壇,色情網站,一葉情貼圖片區,做愛,性愛,美女視訊,辣妹視訊,視訊聊天室,視訊交友網,免費視訊聊天,美女交友,做愛影片

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]