Oct 22, 2007
[பொது] கைக்காட்டி - அக்.22, 2007
- 20 வருடங்களுக்கும் முன்பு நடந்த மிகப்பெரிய பங்குச்சந்தை சரிவினை நினைவு கூறி, அதன் பாடங்களை விரிவாக விளக்கும் பினான்சியல் டைம்ஸின் பதிவு
- இரும்பு மனிதர் என போற்றப்படும், முன்னாளைய நியுயார்க் மேயர் ரூடி கிலானியின் கரை படிந்த கைகளும், எரிபொருள் பேரத்திற்காக அவர் செய்த காரியங்களையும் முன்வைத்து, முகமூடியினை கிழித்தெறியும் தி நேஷனின் பதிவு
- உலகமயமாக்கலின் முன்னோடி தாதா என புகழ்ப்படும் ஐ.எம்.எப் தலைகுனிந்து ஒத்துக் கொள்ளும் [சில நேரங்களில் ஒட்டு மொத்தமாக சமாளிக்கும்] உலகமயமாக்கலும், அதன் பின்விளைவுகளும். 20 வருடங்கள் கழித்து ஐ.எம்.எப் தன்நிலையிலிருந்து கொஞ்சம் மாறி எழுதியிருக்கும் World Economic Outlook - Oct.2007 Edition [PDF கோப்பு]
- அன்புள்ள ராகுல் காந்திக்கு என ஆரம்பித்து கிழித்தெடுத்திருக்கும் அமித் வர்மாவின் பதிவும், அதன் பின்னுள்ள குரூரமான நிஜங்களும், வருத்தங்களும்
- ஊழல், அரசாங்க மெத்தனம் [கொஞ்சம் அராஜகம்] என பட்டியிலிடப்பட்டிருக்கும் மொத்த நாடுகளில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் 72வது இடம். பாகிஸ்தானுக்கு 138வது இடம்.இலங்கைக்கு 94வது இடம். உலகின் ஊழலற்ற நாடாக முதலிடம் பெறுவது டென்மார்க். வரிசையில் கடைசியாக இடம்பெற்றிருப்பது சோமாலியா மற்றும் பர்மா - 179வது இடம்.
Labels: அரசியல், இந்தியா, உலகம், தமிழ்ப்பதிவுகள்
Subscribe to Posts [Atom]