Oct 1, 2007

சேது சமுத்திரம்: உணர்ச்சி, எழுச்சி மற்றும் சில உண்மைகள்

Disclaimer: ஏற்கனவே முகமது பின் துக்ளக் எழுதிய காரணத்தினால், நான் திமுகவின் எதிரியாக பார்க்கப்படுவதாக நினைக்கிறேன். இக்கட்டுரை திமுகவிற்கு ஏதிராகவோ, பி.ஜே.பி / ஜெயலலிதாவிற்க்கு ஆதரவாகவோ எழுதப்படவில்லை. அரசியல் காரணங்கள் தாண்டி பிற காரணங்களுக்காக இத்திட்டத்தின் உண்மையான விஷயங்களை எழுத வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை.

இப்போது சென்னையில் பந்த் [திமுகவின் பாஷையில் ஸ்ட்ரெக்] ஒரு வேலையும் நடக்காமல், வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு என்.டி.டி.வி ப்ராபிட் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூடவே சேது சமுத்திர திட்டம் பற்றி பல்வேறு தளங்களையும், பத்திரிக்கை செய்திகளையும் படித்து இதை எழுதுகிறேன். எப்படி இராமாயணத்தினை வட இந்திய intrusion-ஆக தெற்கில் முக்கியமாக தமிழ்நாட்டில் பார்க்கிறோமோ அதைப் போல "சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்" என்பதை தென்னிந்திய, முக்கியமாக தமிழகத்தின் intrusion-ஆக வடக்கு பார்த்து கொண்டிருக்கிறது.

அரசியல் பிரச்சனைகள்

தமிழகத்தில் இந்த திட்டத்தினை ஒரு larger than life ஆக பார்த்து அதன் வழியாக எல்லா அரசியல் வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. திமுக மற்றும் கருணாநிதி இதனை 'தமிழின கனவு" என ஒரு தோற்றத்தினை உருவாக்கி ஆதாயம் தேட பார்க்கிறார்கள். ஜெயலலிதா சார்ந்த கட்சிகள், இதனை திட்ட பிரச்சனையாக ஆராயாமல், கருணாநிதிக்கு எதிரான வலுவான அரசியல் பிரச்சனையாக ஆக்கி, உச்சநீதிமன்றத்தினை அனுகி, அரசினை கலைக்க உதவும் ஒரு தூண்டுகோலாக பார்க்கிறார்கள். இது போக, அம்பிகா சோனிக்கு கீழ் வரும் தொல்பொருள் ஆராய்ச்சி துறை, எடுத்தேன் கவிழ்தேன் என்று, ராமர் இருந்ததை நிரூபிக்க முடியாது என்று சொல்லப் போக, பழம் நழுவி,பால்,வாய் தாண்டி, குடலுக்குள் விழுந்தது போல வட இந்திய ராம் நம்பிக்கைவாதிகளுக்கு அமைந்து விட்டது. உட்கட்சி பூசல்களாலும், முறையான தீர்வுகளின்மையாலும் தடுமாறிக் கொண்டிருந்த பி.ஜே.பி க்கு, ராமர் பாலம் என்கிற பிரச்சனை லட்டு சாப்பிடுவது போல மாட்டியிருக்கிறது. இதனை பிஜேபி தேசிய பிரச்சனையாக ராமரை முன்னிறுத்தி ஒட்டுகளாக மாற்றப் பார்க்கிறது.

ஜல்லி No.1: பி.ஜே.பி நாக்கை வெட்டுவேன், கழுத்தை அறுப்பேன் என்று பேசிய வேந்தாந்தியினை கண்டித்திருக்கிறது. உங்களால், அதைப் போல, தமிழகத்தில் கருணாநிதியினை கண்டிக்க முடியுமா ?
Fact: நீங்கள் தமிழகத்தில் இருப்பின் சத்தியமாக கண்டிக்க முடியாது.

உண்மையில் நடந்தது, நடப்பது என்ன ? ஒரு திட்டத்தின் உள்நோக்கங்களையும், திட்ட மதிப்பீட்டினையும், பயனையும் பாராமல், அதை "ராமர் இருக்கிறாரா, +2வில் 1100 மதிப்பெண்கள் வாங்கி பொறியியல் கல்லூரி சேர்ந்தாரா என்று ஒரு பக்கமும், ராமரையும், அவரின் பயணங்களயும் reality TV Show அளவிற்கு பார்த்ததாக நம்பிக் கொண்டு ராமர் இங்கே எச்சில் துப்பினார், செருப்பு விட்டார், பாத்ரூம் போனார் என்று இந்தியாவின் பாதி இடங்களை தெய்வீகமாக்கி, ராமரை politicise பண்ணும் கூட்டம் இன்னொரு பக்கமும் இருந்து கொண்டு முக்கியமான ஆதாரமான விஷயங்களை ஒட்டு மொத்தமாக கோட்டை விட்டு விட்டார்கள். பிரச்சனை ராமரா, இல்லையா என்பது இல்லை. திட்டம் எவ்விதமான அண்மை மற்றும் நீண்ட நாள் பயன்களை பெற்று தரும் என்பது பற்றிதான். ஆனால், ஒரு கட்சியும், தலைவர்களும் இதைப் பற்றி பேசவில்லை, அல்லது ஒட்டுமொத்தமாக தவிர்க்கிறார்கள்.

சேது சமுத்திரம் திட்டம் என்றால் என்ன ?

சேது சமுத்திரம் என்பது ஒரு கால்வாய். இந்தியாவின் தூத்துக்குடியில் ஆரம்பித்து ராமேஸ்வரம், தனுஷ்கோடியினூடாக இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிற ஆதம் பாலம் வழியாக இலங்கையின் தலைமன்னாரினை அடைவது. தற்போதைய சூழ்நிலையில் இப்பாதையின் மணல் திட்டுகள், பவள பாறைகள், மற்றும் சீற்றமான கடலடி அடங்கியிருப்பதாலும், கடலாழம் குறைவாக இருப்பதாலும், கப்பல்கள் இப்படி போவதினை தவிர்த்து இலங்கையினை சுற்றி போக வேண்டியிருக்கிறது. இக்கால்வாயின் மூலம் கடலாழத்தினை அதிகப்படுத்தி, மணல்திட்டுகளை அப்புறப்படுத்தினால், குறைவான எடை சுமக்கும் கப்பல்கள் இப்பாதையினை பயன்படுத்தி நேரத்தினை குறைத்து வேகத்தினை அதிகரிக்க முடியும் என்கிற சிந்தனையோடு ஆரம்பித்தது தான் இத்திட்டம். 1950களில் பேச ஆரம்பித்து போன NDA அரசாங்கத்தினால் சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Sethu Samudaram Canal Project - சுருக்கமாக SSCP) என்கிற ஒரு நிறுவனம் நிறுவ பட்டது. இந்திய கப்பல் துறையின் வழியாக நிர்வகிக்கப்படும் இந்நிறுவனத்தின் திட்டம் தான் SSCP.

ஏன் இத்திட்டத்தினை ஆதரிக்கக் கூடாது ?

திட்ட அடிப்படையிலான பிரச்சனைகள்

தூத்துக்குடியில் ஆரம்பித்து தனுஷ்கோடி, ராமேஸ்வரம், சர்ச்சையில் சிக்கியிருக்கிற ஆதம் பாலம் [ராமர் பாலம்] வழியாக பாலக் பே - தலைமன்னார் [இலங்கை] வழியாக கால்வாயினை ஆழப்படுத்துவதுதான். இதன் மூலம் கப்பல்கள் இவ்வழியாக செல்ல முடியும். இதனால் தூத்துக்குடியில் தொடங்கி இலங்கையினை சுற்றிக் கொண்டு போகும் 21 மணிநேரம், 400 நாடிகல் மைல்கள் மிச்சமாகும் என்று சொல்கிறார்கள். இதுதான் 2,400 கோடி ரூபாய்களை கொட்டி நாம் தேடும் வளர்ச்சி. ஆனால், இந்த 21 மணி நேர சேமிப்பு என்பதே பல மாலுமிகளாலும், கப்பல்களில் தொடர்ச்சியாக பணி புரிந்தவர்களாலும் மறுக்கப்படுகிறது.

இந்திய கப்பற்படையில் 32 வருடங்களாக வேலை பார்த்த பாலகிருஷ்ணன் அவர்கள் ரிடிப்க்கு அளித்த பேட்டியில் சொன்ன சாராசம்சம், 21 மணி நேரம் என்பது கப்சா. அவருடைய வாதத்தின் சாராம்சம்.

உதாரணத்திற்கு ஒரு கப்பல் கொல்கத்தாவில் புறப்பட்டு தூத்துக்குடிக்கு இலங்கை வழியாக வருகிறது எனின் மொத்த கடற்தூரம் 1227 கடல் நாடிகல் மைல்கள் [Nautical Miles இனி NMs] சேது சமுத்திர திட்டத்தின் வழியாக வந்தால் 1098 NMs மொத்த சேமிப்பு 129 NMs. இது சேமிப்பு தானே என்று கேட்கலாம், ஆனால் விஷயம் அங்கே முடியவில்லை. சாதாரணமாக ஒரு கப்பல் 10-12 கடல் நாட்டில் (knot) பயணிக்கும், அப்படி போனால் இலங்கை வழியாக, தூத்துக்குடி துறைமுகத்தினை அடைய ஆகும் நேரம் 102 மணி நேரம், 15 நிமிடங்கள்.

சேது சமுத்திரத்தின் வழியாக போனால், ஏற்படக்கூடிய முதல் இழப்பு கப்பலின் வேகம். கப்பலின் வேகத்தினை பாதியாக குறைக்காமல், அவ்விதமான சீற்றமான கடலில் பயணிக்க முடியாது. ஆகவே வேகம் 6 கடல் நாட்டாக இருக்கும். இதில் இன்னொரு விஷயமும் முக்கியம், சேது சமுத்திர திட்ட வரைவின் படி, 30000 டன்னிற்கு மேலான கப்பல்கள் இக்கால்வாயில் பயணிக்க முடியாது. இன்னொரு விஷயமும் இங்கே நடக்கும், சேது சமுத்திர கால்வாய் திறந்த வெளி கடல் அல்ல.ஆகவே ஒரு உள்ளூர் பைலட் கப்பலில் ஏறவேண்டும், ஏனெனில் அவருக்கு தான் கடலின் அசைவுகள் தெரிந்திருக்கும். இப்படி ஒரு உள்ளூர் பைலட்டினை ஏற்ற / இறக்க மொத்தமாய் இரண்டு மணி நேரங்களாகும். 6 கடல் நாட்டில் பயணித்தால் ஆகும் மொத்த நேரம் 100 மணி 30 நிமிடங்கள்.

இலங்கை வழியாக பயணிப்பதற்கும், சேது சமுத்திர கால்வாய் வழியாக பயணிப்பதற்கும் இருக்கக்கூடிய வித்தியாசம் உண்மையில் 1 மணி 45 நிமிடங்கள் மட்டுமே. இதற்காகவா 2,400 கோடி ரூபாய்களை செலவு செய்வீர்கள். ?

[
மொத்த நேர்காணல் இங்கே ]

ஆக, இத்திட்டத்தினால் நேரம் மிச்சமாகும். கப்பல் வளம் பெருகும். வளர்ச்சி திட்டங்கள் நலமடையும் என்பதெல்லம் utopian wish. இது தாண்டி இன்னொரு விஷயத்தினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ரிலையன்ஸ் முதலான பெரும் குழுமங்கள், கப்பல் கட்டும் துறையில் இறங்க இருக்கின்றன. இவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் சாதக/பாதக் அம்சங்களை கண்டிப்பாக அலசி இருப்பார்கள். இந்திய கப்பல் கட்டும் துறை என்பது $20 பில்லியன் டாலர் [by 2020 -
யாஹூ செய்தி ] ஈட்டும் என்று கணித்திருக்கிறார்கள். ஆனால் இத்துறையில் முதலீடு செய்யும் எவரும் தூத்துக்குடி உள்ளடக்கிய தெற்கு பெல்டினை சாராமல் இருக்கிறார்கள். அதற்கான காரணம் தான் மேலே சொன்னது.

சுற்று சூழல் இழப்புகள்

மன்னார் வளைகுடா என்பது 10,500 சதுர கிலோமீட்டர் இடம். அது 3,600 வகையான கடற்தாவரங்கள், உயிரினங்கள் மற்றும் 117 வகையான அரிய பவள வகையறாக்களை உள்ளடக்கியது. இந்தியாவின் 2,200 வகையான மீன் இனங்களில் 450 இங்கே மட்டுமே கிடைக்கக் கூடியதாக தெரிகிறது. இது தாண்டி, 5 வகையான கடலாமைகள் இவ்விடத்தில் மட்டுமே பார்க்கக் கூடியன. இத்திட்டம் செயல் படுத்தப்பட்டால் இவை மொத்தமும் வரலாற்று புத்தகங்களில் மட்டுமே பார்க்க கூடிய விஷயமாக மாறி போய்விடும்.
ஜல்லி No.2: இதற்கு முன் சுற்றுச்சூழல் பாதிப்புகளே இல்லாமல்
திட்டங்கள் இந்தியாவில் நிறைவேறி இருக்கிறதா ? தமிழினம், கலைஞர் என்று வந்தால் மட்டும் எதற்கு பாரபட்சம் பார்க்கிறீர்கள். நர்மதா சரோவர் திட்டத்தில் ஆகாத
பாதிப்பா, சேது சமுத்திரத்தில் வரப் போகிறது ?

Fact: Two wrongs can't make a thing right. முதலில் இதனை ஒரு
இனத்தின் பிரச்சனையாக பாராமல், ஒரு வளர்ச்சித் திட்டமாக பாருங்கள். நர்மதாவிலாவது, இடம்பெயரப்பட்ட மக்களுக்காக போராட மேதா பட்கர், அருந்ததி ராய் போன்ற ஆட்கள்
இருக்கிறார்கள். ஆனால், இங்கே கொல்லப்படபோவது, கடலின் eco-system, temparature, plants, fisheries, coral. யார் பேசப் போகிறார்கள். இது தாண்டி, இது ஒரு நாட்டுக்கான பிரச்சனையல்ல, பல கடல் எல்லைகளடங்கிய பிரச்சனை.
இது தாண்டி, பவள தாவரங்கள் கடல் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ்ற்கு மேல் மட்டுமே வளரும். ஆதம் பாலத்தின் சராசரி வெப்பநிலை 25 - 32 டிகிரி செல்சியஸ். ஆதம் பாலத்தினை [ராமர் பாலம்] ஆழப்படுத்தினால் சுமார் 85 மில்லியன் கியுபிக் மீட்டர் மண் வெளியேற்றப்படும். இதனை சுற்றுச்சூழல் மேற்பார்வை நிறுவனம் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறது.
The course of water currents may be altered causing unprecedentd harm to marine life. இதுதாண்டி, போன ட்சுனாமியில் கேரளா அதிகமாக பாதிக்கப்படாமல் போனதற்கு இம்மணல்திட்டுகள் தான் காரணம். இயற்கை அரணாக இவை செயல்பட்டு வந்தவை அழிக்கப்பட்டால், ஏற்படக்கூடிய இயற்கை வெஞ்சினங்கள் கணக்கிலடங்காதவை. மூன்று நான்கு வாரங்களுக்கு முன்பு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால், தமிழக கடல் எல்லையில் ட்சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். பசிபிக் ட்சுனாமி எச்சரிக்கை மையத்தின் கணக்கு படி இந்திய பெருங்கடலில் தொடர்ச்சியாக சிறியதும் பெரியதுமான எழுச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன [பார்க்க:
பசிபிக் ட்சுனாமி மைய இந்திய பெருங்கடல் பகுதி]
ஜல்லி No.3: ட்சுனாமியினை ஆடம் பாலம் [ராமர் பாலம்] தடுக்கும் என்பது நிரூபிக்கப்படாத உண்மை. இதை வைத்துக் கொண்டு பி.ஜே.பி பூச்சி காட்டுகிறார்கள்.
Fact: இயற்கை அரணாக அமைந்த மண்திட்டுகள் மற்றும் பவள பாறைகளினால் தான் அவ்விடத்தில் கடற் சுழல்கள், மாற்றுகள் அமைந்திருக்கின்றன. இதுவரை பாலக் ஜலசந்தியினை நீந்தி கடக்க முயன்ற நிறைய பேர் தோற்றிருக்கிறார்கள். அவர்கள் சொல்லிய காரணம் "the belt has heavy undercurrents, strong, steady breezes and a rough sea played the villan" 18 கீமீ தூரமடங்கிய இத்திட்டு (தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை) உண்மையான இயற்கை அரண். இதை ராமர் வானரங்களை வைத்து கட்டினாரா, இயற்கையாக அமைந்ததா என்பது வேறு விவாதம்.

சமூகம், தொழில்சார்ந்த இழப்புகள்

இது தவிர தூத்துக்குடி உள்ளடக்கிய கடற் சார்ந்த பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் மீன்பிடி தொழிலை சார்ந்து உள்ளார்கள். பவள பாறைகளையும், இயற்கையான மீன்வளங்களையும் இத்திட்டத்தின் மூலமாக நிர்மூலமாக்கினால், லாபமடைபவர்கள் யார் ? லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவில் மட்டுமல்லாது, இலங்கையின் கடற்சார்ந்த பகுதி உள்ளடக்கியவர்களின் வாழ்க்கை இத்திட்டத்தின் மூலம் கேள்விக்குறியாகும் நிலையில் எப்படி இத்திட்டத்தினை ஆதரிக்க முடியும் ?

பொருளியல், முதலீடு சார்ந்த இழப்புகள்

ஒரு வாதத்திற்காக இத்திட்டம் அனுமதிக்கப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும், உண்மையில் திட்டத்தினை நிறைவேற்ற பணமில்லை என்பதுதான் யதார்த்தம். செப். 25-ஆம் தேதி
மின்ட் என்கிற வணிக செய்தித்தாளில் வெளியான தகவல் கீழெ

"I don’t think this project will ever see the light of day because there is no money,” said Ashish Kumar Singh, vice-president of capital markets at Axis Bank Ltd.
Axis, formerly known as UTI Bank, was appointed “loan arranger” for the project in 2005.

Since the project’s inception in 2004, costs have skyrocketed to at least Rs4,000 crore, interest rates have crawled higher and old loan terms have lapsed. Singh says the project is languishing because no company will dredge the channel for cheap and Indian dredging companies don’t have the required equipment.

Even before the first dredger began its work in 2005, costs had already spiralled to more than Rs3,500 crore, Singh said. The loan sanctions, valid only up to Rs2,400 crore, lapsed. To secure more money, Singh said Sethusamudram Corp. Ltd would have to return to the drawing board, draw up new reports, sit with parliamentary committees and receive fresh approval.


இது தாண்டி ஜூலை 2005-ஆல், முன்னாளைய சென்னை போர்ட் ட்ரஸ்டின் சேர்மனான திரு.
ராமகிருஷ்ணனின் குறிப்பில், SSCP சொல்லும் பண சேமிப்பினை ஒட்டு மொத்தமாக திருப்பி அடித்திருக்கிறார்.

This justification will be readily valid if the SSC is a free seaway which ships can sail through without any payment to the project authority. But the SSC can not be a free seaway… as ships will be allowed to pass through the canal only under regulated pilotage, and pushed /pulled by tugs belonging to the SSCP.

Obviously, even while saving on the cost of fuel, a ship passing through the canal will be expected to make a payment to the SSCP for using the facility.
The likely pilotage charge to be levied by the SSCP has not been made public, but an approximate figure can be guessed by extrapolating similar charges levied by the Chennai and Tuticorin Port at present.

The approach channel to the Chennai port has a length of 7 km. A 36,000 tonne coal ship calling at Chennai has to pay approximately Rs.21.75 a tonne, or a total of Rs.7.83 lakh, as pilotage charges averaging Rs.1.11 lakh per km. Tuticorin's approach channel is only 2.4 km long and an identical coal ship calling at this port is levied Rs.17 a tonne, or a total of 6.12 lakh, towards pilotage, working out to Rs.3 lakh per km. (The comparative lower rate per km at Chennai is because the capitol cost of digging the much older channel has been amortised a long time ago.)

The projected length of the Sethusamudram channel is 56 km. Both capital and recurring cost will be much higher for the SSCP than for the Chennai and Tuticorin ports, and its levy of pilotage per km is likely to be substantially higher than that of even the latter if it has to have a 9 per cent return on the capital. Even if the Chennai rate is assumed, the same ship will have to pay over 60 lakhs to the SSCP for passing through the canal.

But the cost of fuel that will be saved by the same ship by taking the shorter route through the Sethusamudram canal instead of sailing round Sri Lanka will be less than Rs. 7 lakh, which is even less than 1/8 of SSCP's likely levy.

The saving in sailing time for that ship will also be substantially less than the 36 hours projected by the SSCP because the ship can not be towed through the canal at its normal speed through the canal, and the time will also be lost in embarkation/disembarkation of pilots and other inspection procedures. The saving in sailing time of just about a day will not justify the incurring of over 8 times the cost of fuel saved.


இத்திட்டம் நிறைவேறினால், இதனை பின்பற்றப்போவது இந்திய கப்பல்கள் மட்டுமே. அவையும் மேற்கூறிய விஷயங்களை கணக்கிலெடுத்தால் பின்பற்றுவது கடினம். SSCP-யின் ப்ரொஜக்ட் ரிப்போர்டின் படி ஒரு கப்பலுக்கு $6,063 கட்டணமாக செலுத்தப்பட வேண்டும். அப்படி கணக்குப் போட்டு பார்த்தால் முடிவு பூச்சியமாக தான் இருக்கமுடியும். எவ்விதமான உலக கப்பல்களும் இவ்வழியினை பின்பற்றப் போவதில்லை. [ஆதாரம் -
டவுன் டூ எர்த்]

DPR (SSCP's Detailed Projcect Report) proposes to charge such ships us $6,063 (around 50 per cent of the estimated savings). At this tariff rate, ships from Europe and Africa will spend more money by using the canal. Ships will therefore not use the canal unless sscp lowers its tariffs significantly.

They could use the canal if tariffs are lower: maybe 15- 20 per cent of the estimated savings in the dpr. But at these tariff levels, the pre-tax returns on investments on the project will fall to around 3 per cent, making the project even more unviable than stated in the dpr.

இவ்வளவு பிரச்சனைகளையும், குழப்பங்களையும் யாரும் பேசவில்லை. வெறுமனே ராமரையும், அவரவர்களின் பலூனாக்கப்பட்ட ஈகோகளின் வாயிலாகவும் தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவும் தாண்டி, வளர்ச்சி என்பது என்ன ? இப்போதுள்ள சமூகத்திற்காகவும், மக்களுக்காகவும் மட்டுமே, இல்லை நாளை வரப்போகும் தலைமுறைக்கும் சேர்த்தா ? நாளைய சமூகத்திற்கு நாம் விட்டு போக போவது இயற்கை வளங்களையா இல்லை சுரண்டப்பட்ட, பிச்சை எடுக்கக்கூடிய கடற்கரைகளையா ? ஏற்கனவே நர்மதா அணைப்பிரச்சனையில் ஏற்பட்ட பின்விளைவுகளையும், மக்கள், சமூகம், சுற்றுச்சூழல் சார்ந்த இழப்புகளையும் இன்னமும் நம்மால் பேசி தீர்க்க முடியவில்லை. இந்நிலையில் சேது சமுத்திர திட்டம் வாயிலாக இன்னொரு ட்சுனாமியினை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேண்டுமா ?


தெஹல்காவில் ஆனந்த் எழுதிய கடைசி பாரா தான் இப்பிரச்சனையின் அடிநாதமாக தெரிகிறது.

The geophysical reality of Adam’s Bridge gets sandwiched between these contesting myths. For over a 100 years, the idea of the Sethusamudram canal — first envisaged not by a Tamil but by AD Taylor, a British commander of Indian Marines in 1860 — has animated the Dravidian imagination. The Raj cold-shouldered it. Till 2004, various committees sat on it and seven feasibility studies were undertaken along different routes.

It was considered economically unsound and geologically unfeasible. But Dravidian parties have always projected Sethusamudram as “the dream of Tamils”. For Dravidianists, the construction of the Sethusamudram Canal comes closest to a modern realisation of the Lemuria myth. For the BJP and its cohorts, it is the demolition of the Aryan myth of conquest. The scientific, economic and environmentalist viewpoints have been rendered invisible by the turbid debate triggered by these myths.

சுட்டிகளை நிதானமாக படித்து ஒரு முடிவுக்கு வரவும்

  1. http://www.downtoearth.org.in/full6.asp?foldername=20070615&filename=croc&sec_id=10&sid=1
  2. http://tamilnation.org/forum/sivaram/041006.htm
  3. http://www.telegraphindia.com/1050129/asp/weekend/story_4283464.asp
  4. http://in.news.yahoo.com/070928/43/6lbtp.html
  5. http://in.rediff.com/news/2007/oct/01inter.htm
  6. http://sethusamudram.gov.in/WhatisSethu.asp
  7. http://www.prh.noaa.gov/ptwc/?region=3
  8. http://www.sethusamudram.in/htmdocs/Articles/Article%201.htm
  9. http://www.tehelka.com/story_main34.asp?filename=Ne290907UNBRIDGEABLE.asp
  10. http://www.livemint.com/2007/09/25005959/Money-runs-dry-for-Sethusamudr.html

Labels: , , , , ,


Comments:
இக்குறிப்பு நடைமுறையினை நிதானமாகவும் அறிவியல்பூர்வமாகவும் அணுகியிருக்கின்றது.
 
பெனாத்தலாரின் பதிவு ஒன்றின் நான் கேட்ட சில கேள்விகளுக்கு இங்கு ஓரளவு பதில் கிடைத்து இருக்கிறது. இப்படி அறிவியல்பூர்வமாகப் பேசப்படாமல் மதப்பிரச்சனையாக இது போவதுதான் நம் நாட்டின் தலையெழுத்து.

(Can you remove word verification and enable comment moderation please.)
 
நல்ல பதிவு நரேன். நீங்க சொல்லி இருப்பது போல பல சுற்றுச்சூழ்நிலையாளர்கள் கரடியாக கத்தினாலும் அதை வழக்கம்போல் பொருட்படுத்தாது, இந்த அரசுகள் இதை ஒரு ego issue வாக கொண்டு எப்படியாவது நிறைவேற்ற துடிக்கின்றன.
 
ராமர் இருந்தாரா இல்லையான்றதைக் கொஞ்சம் மறந்துட்டு, இயற்கையாக உள்ள அமைப்பைப்பாழாக்கணுமா என்பதுதான் இப்போதைய சிந்தனை.


இதைப்பற்றிய முழு விவரமும் கொடுத்ததுக்கும், சுட்டிகளுக்கும் நன்றி நரேன்.
 
நண்பரே, வணக்கம்.

>>
ஆனால், இந்த 21 மணி நேர சேமிப்பு என்பதே பல மாலுமிகளாலும், கப்பல்களில் தொடர்ச்சியாக பணி புரிந்தவர்களாலும் மறுக்கப்படுகிறது.
<<

பல மாலுமிகள் என்று சொல்ல வேண்டாம். எந்த மாலுமிகள் ?
எந்த கப்பல் துறை அதிகாரி?
அரசா? தனியார் துறைகளா?
அவர்களின் தகுதி என்ன? ஓய்வு காலப்
பொழுதுபோக்கில் எழுதுகிறவர்களா
அல்லது நிறுவனங்களா என்பன பற்றி
தங்கள் கருத்தறிய ஆவல்.

21 மணி நேரச் சேமிப்பு என்பது கப்சாவாகவே இருக்கட்டும்; வேகம் பாதியாக குறைவதால் 10.30 மணி
சேமிப்பாக இல்லாமல் எப்படி 1.45 மணி நேர சேமிப்பாக குறைந்து போனதற்கு என்ன காரணமோ தெரியவில்லை.

ஏன் கொல்கத்தா கப்பல்களை காட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.


>>
ஆக, இத்திட்டத்தினால் நேரம் மிச்சமாகும். கப்பல் வளம் பெருகும். வளர்ச்சி திட்டங்கள் நலமடையும் என்பதெல்லம் utopian wish
<<

தூத்துக்குடியில் இருந்து சென்னை விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கான
நேர தூரங்கள் என்ன சொல்கின்றன ?

தூத்துக்குடியில் இருந்து சென்னை வரவும் 1.45 மணி நேரம்தான் சேமிப்பாகுமா?

பல கேள்விகளை நாம் படிக்கும்வாறே எடுத்துக் கொள்வது நம்மிடம் இருக்கும்
தனித்தன்மையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நல்ல வேளை தூத்துக்குடியில் இருந்து
சிட்னிக்குச் செல்லும் கப்பல்கள்
சேமிக்கும் நேரம் பற்றி எதுவும் ஆய்வுகள் செய்யாமல் இருக்கிறார்கள் :-))

>>
கப்பலின் வேகத்தினை பாதியாக குறைக்காமல், அவ்விதமான சீற்றமான கடலில் பயணிக்க முடியாது
<<

இதற்கான ஆதாரமாக அதாவது
வேகக் குறைப்பிற்கான ஆதாரமாக
இதே சீற்றம் உள்ள கடல்பகுதிகளில்
ஏதாவது சோதித்துப் பார்த்திருக்கிறார்களா என்று அறியத்தந்தால் நலம்.

விஞ்ஞானமும் கப்பல் திறனும் பெருகிக் கொண்டே போகும் காலச்
சூழல்களில் இது மிகப் பெரிய காரணம்
என்று நம்புவது கடினமாக இருக்கிறது.

அதிலும் பறனை நுட்பியலை விட
கப்பல் நுட்பியல் மிக மூத்தது.

ஆச்சரியமான கவலைகள்.

>>
ரிலையன்ஸ் முதலான பெரும் குழுமங்கள், கப்பல் கட்டும் துறையில் இறங்க இருக்கின்றன. இவர்கள் அனைவரும் இத்திட்டத்தின் சாதக/பாதக் அம்சங்களை கண்டிப்பாக அலசி இருப்பார்கள். இந்திய கப்பல் கட்டும் துறை என்பது $20 பில்லியன் டாலர் [by 2020 - யாஹூ செய்தி ] ஈட்டும் என்று கணித்திருக்கிறார்கள். ஆனால் இத்துறையில் முதலீடு செய்யும் எவரும் தூத்துக்குடி உள்ளடக்கிய தெற்கு பெல்டினை சாராமல் இருக்கிறார்கள். அதற்கான காரணம் தான் மேலே சொன்னது
<<

நண்பர் நரேன், இதைக் கண்டு
நான் மலைத்து விட்டேன் :-)
காரணம் கண்டு பிடிக்கிறோமோ என்று
படுகிறது :-))

அம்பானி எந்த ஊர் ? அவர்களுக்கு
மராட்டிய, கோவா, குசராத், கேரளக்
கடற்கரைகளில் அவர்களுக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதும் அவர்களின் வலு குறிப்பாக மராட்டிய,
குசராத்திய கடற்கரைகளில் எப்படி என்பதும் நாடறிந்த உலகறிந்த சேதி.

அவர்கள் அதற்கெல்லாம் முன்னுரிமை
அளிக்காமல், தூத்துக்குடிக்கும் சென்னைக்கும் நடுவே வருவதற்கு
என்ன இருக்கிறது என்று புரியவில்லை.

அவர்களின் சீரங்காடிகளையே
இங்கு முழுதாக இறக்க முடியாமல் இருக்கையில் இதெல்லாம் கொஞ்சம்
மிகையான காரணமாகத் தோன்றவில்லையா?

அதே நேரத்தில் கப்பல் செலுத்துவோர்
இந்த வழியில்தான் வரவேண்டிய
கட்டாயம் என்று ஒன்றும் இல்லை.

இரிலையன்சு நினைத்தால் அவர்கள்
இலங்கையைச் சுற்றிக் கொண்டே
வரலாம்.

இரிலையன்சுக்கு மட்டுமல்ல
யாருக்குமே இந்தக் கட்டாயம் இல்லை.

அரசுக் கப்பல்களைத் தவிர தனியார்
மற்றும் வெளிநாட்டுக் கப்பல்களை
யாரும் கட்டுப்படுத்த முடியாது.

அப்புறம் எப்படி இரிலையன்சு போன்றோர் முதலீடு செய்வதற்குத்
தயங்குகிறார்கள் என்று சொல்கிறீர்கள்?

மேலும் தொடர்வேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
 
//
மன்னார் வளைகுடா என்பது 10,500 சதுர கிலோமீட்டர் இடம். அது 3,600 வகையான கடற்தாவரங்கள், உயிரினங்கள் மற்றும் 117 வகையான அரிய பவள வகையறாக்களை உள்ளடக்கியது. இந்தியாவின் 2,200 வகையான மீன் இனங்களில் 450 இங்கே மட்டுமே கிடைக்கக் கூடியதாக தெரிகிறது. இது தாண்டி, 5 வகையான கடலாமைகள் இவ்விடத்தில் மட்டுமே பார்க்கக் கூடியன. இத்திட்டம் செயல் படுத்தப்பட்டால் இவை மொத்தமும் வரலாற்று புத்தகங்களில் மட்டுமே பார்க்க கூடிய விஷயமாக மாறி போய்விடும்.
>>

நண்பரே, நண்பர்களே,

10,500 ச.கி.மீ என்பது என்ன?
தோராயமாக?
100 x 100 கி.மீ !!
அல்லது 200 x 50?


சேது முனையலின் அளவென்ன?

மொத்த நீளம் 167 கி.மீ.
அதில் மன்னார் வளைகுடாக்குள்
வரக்கூடிய பகுதி எவ்வளவு?

167 ஐயுமே எடுத்துக் கொள்வோம்.
அகலம் = 0.3 கி.மீ.
= 167 x 0.3 = 50.1 ச.கி.மீ.

ஏங்க 10500 சதுர கி.மீ பரப்புள்ள
பகுதியில் 50.1 ச.கி.மீ அகழ்ந்தால்
ஆமையையும் அங்கே யிருக்கிற அத்தனையையும் புத்தகத்தில்தான்
படிக்க முடியும் என்று எப்படிங்க
சொல்ல முடியும்?

not even a percentage!
do i miss some thing here?
pl do point!

இதற்கு என்ன அடிப்படை ?

கப்பல்கள் போவதால் அவை செத்துப் போய்விடுமா?

அல்லது அங்கே பள்ளம தோண்டிக் கொண்டிருப்பதால் செத்துப் போய்விடுமா?

நோண்டுவதால் செத்துப் போய்விடும்
என்றால், ஏற்கனவே மூன்றில் இரண்டு பகுதியை நோண்டியாகிவிட்டது.

எத்தனை செத்துப் போயின என்று
சொல்ல முடியுமா?

கப்பல் போவதால் போகும் என்றால்,
மற்ற இடங்களில் கப்பல்கள் போகும்
இடங்களில் எல்லாம் செத்துப் போகின்றனவா?

நரேன் மற்றும் நண்பர்கள் இதில் கருத்து அறிய ஆவல்.(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்
 
//இப்போது சென்னையில் பந்த் [திமுகவின் பாஷையில் ஸ்ட்ரெக்] ஒரு வேலையும் நடக்காமல், வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு என்.டி.டி.வி ப்ராபிட் பார்த்துக் கொண்டிருக்கிறேன்//

போராட்டத்திற்க்கு தார்மீக அதரவு கொடுத்து வீட்டில் இருந்த உங்களுக்கு நன்றி

//இது போக, அம்பிகா சோனிக்கு கீழ் வரும் தொல்பொருள் ஆராய்ச்சி துறை, எடுத்தேன் கவிழ்தேன் என்று, ராமர் இருந்ததை நிரூபிக்க முடியாது என்று சொல்லப் போக, பழம் நழுவி,பால்,வாய்//

இல்லாத கற்பனை கதாபாத்திரத்தை இல்லை என்று சொல்ல ஏன் தயங்க வேண்டும்.?

//ஜல்லி No.1: பி.ஜே.பி நாக்கை வெட்டுவேன், கழுத்தை அறுப்பேன் என்று பேசிய வேந்தாந்தியினை கண்டித்திருக்கிறது. உங்களால், அதைப் போல, தமிழகத்தில் கருணாநிதியினை கண்டிக்க முடியுமா ?//

கண்டிக்க வேண்டிய அளவிற்க்கு அவர் என்ன சொன்னார்.தர்க்க ரீதியாக கேள்வி கேட்டார் அது தவறா..

தர்க்க ரீதியாக கேள்வி கேட்பதும்,தலையை கொய்து வர சொல்வது ஒன்றா எந்த ஊர் நியாயம் நாரயண் இது..?

1950- முதலியார் குழு கொடுத்த அறிக்கையில் இது 9 கோடியில் முடிக்ககூடிய லாபம் தரும் திட்டம் என்று சொல்லபட்டுள்ளேதே அது தெரியுமா.

இந்திய அரசாங்கத்தின் NEERI என்ற சுற்றுப்புற சுழல் அமைப்பு இத்திட்டத்திற்க்கு பச்சை கொடி காட்டியுள்ளேதே பார்க்கவில்லையா அல்லது பார்க்க மனமில்லையா

//சேது சமுத்திர திட்ட வரைவின் படி, 30000 டன்னிற்கு மேலான கப்பல்கள் இக்கால்வாயில் பயணிக்க முடியாது.//

ஏன் 30 ஆயிரம் டன் சுமக்கும் கப்பல்களே இவ்வுலகில் இல்லையா எராளமான உள்ளூர் கப்பல்கள் 30 ஆயிரம் டன் மட்டுமே சுமக்கும் திறன் கொண்டவை.

//ஜல்லி No.2: இதற்கு முன் சுற்றுச்சூழல் பாதிப்புகளே இல்லாமல்
திட்டங்கள் இந்தியாவில் நிறைவேறி இருக்கிறதா ? தமிழினம், கலைஞர் என்று வந்தால் மட்டும் எதற்கு பாரபட்சம் பார்க்கிறீர்கள். நர்மதா சரோவர் திட்டத்தில் ஆகாத
பாதிப்பா, சேது சமுத்திரத்தில் வரப் போகிறது ?//

எந்தவித வளர்ச்சி திட்டத்திலும் சில சுற்றுபுற சீர்கேடுகள் இருக்கத்தான் செய்யும்.அது எந்த அளவிற்க்கு நம்மை பாதிக்கச்செய்யும் என்று பார்க்கவேண்டும்.
மீன் கிடைக்கவில்லையென்று இலங்கை கடற்பகுதிக்கு சென்று மீன் பிடித்துவிட்டு குண்டடிப்பட்டு சாவுறான் தமிழன் இந்த லட்சனத்தில மீன் இனம் பாதிக்குதுன்னு நீங்க சொல்றிங்க.

பொருளாதார பாதிப்புகள் குறித்து உங்கள் கருத்திற்க்கு நாளை விரிவான பதில் கொடுக்கிறேன்


அன்புடன்
அரவிந்தன்
 
//
ஜல்லி No.2: இதற்கு முன் சுற்றுச்சூழல் பாதிப்புகளே இல்லாமல்
திட்டங்கள் இந்தியாவில் நிறைவேறி இருக்கிறதா ? தமிழினம், கலைஞர் என்று வந்தால் மட்டும் எதற்கு பாரபட்சம் பார்க்கிறீர்கள். நர்மதா சரோவர் திட்டத்தில் ஆகாத
பாதிப்பா, சேது சமுத்திரத்தில் வரப் போகிறது ?
Fact: Two wrongs can't make a thing right. முதலில் இதனை ஒரு
இனத்தின் பிரச்சனையாக பாராமல், ஒரு வளர்ச்சித் திட்டமாக பாருங்கள்.
//

நானும் ஒரு மேதாபட்கர் அம்மையாரின் ஆதரவாளன். இன்னும் சொல்லப் போனால்
அவரின் இரசிகன் என்றும் சொல்லலாம்.

நர்மதா அணை முனையலை இதனோடு ஒப்பிடவே முடியாது.

நர்மதா அணையின் சரவல் சூழமைவு
குறித்தது மட்டுமல்ல.

ஆயிரக்கணக்கான குடும்பங்களின்
பெயர்வுகளும், அவர்களுக்கு முறையாகக் கொடுக்கப் படாத
இழப்பீடும் பெரும் காரணங்களில் சில.

அங்கே கெட்டுச்சே இங்கே கெட்டால்
என்ன என்று கேட்பதற்கு நான் வரவில்லை.

ஆனால், அவ்வளவு பெரிய கடல் பரப்பில், 50 கி.மீ அளவிற்கு மண்ணைத் தோண்டிப் போடுவதால்
என்னென்னவோ பூச்சாண்டிகள்
காட்டிக் கொண்டு இருக்கிறார்களே
என்பதுதான் எனது வியப்பு.

நான் கேள்வி கேட்டால், நர்மதா கெட்டுச்சே இப்ப ஏன் இதுக்கு மட்டும்
என்று கேட்கவே மாட்டேன்.

ஆனால், சென்னை நகரத்தில்,
வாகனப் புகைமாசு சூழமைவுக்கு ஏற்படுத்தியிருக்கும் பங்கத்தினால்,
எல்லோரும் மாட்டு வண்டி அல்லது
குதிரை வண்டியில் மட்டும்தான்
அலுவலகம் போக வேண்டும்
என்று ஆமைக்கும் மீனுக்கும் இன்று
அழுது புலம்புபவர்கள் சொல்வார்களானால் முதல் ஆளாக
வண்டி பூட்ட நான் தயாராக இருப்பேன்.

சூழமைவு, மாசு என்று சொல்லும்போது ஒற்றைப் பார்வை
பார்ப்பது சரியல்ல.

150 வருடமாக நினைத்தவர்கள்,
1960ல் இதனை ஐந்தாண்டு திட்டத்துள்
கொண்டு வந்தவர்கள்,
அப்பொழுதில் இருந்து இன்று வரைக்கும் பல் வேறு வழிகள்,
மற்றும் துறை சார்ந்த ஆய்வுகள்
நடத்தியவர்கள் எல்லாமே மடையர்கள்
என்பது போலவும், இன்றைக்கு
இணையத்திலே ஆங்காங்கு சில சுட்டிகளில் "நடுவு நிலை பிறழாமல்(?)" எழுதிக் கொண்டிருப்பவர்கள்
மட்டுமே அறிவாளிகள் என்றும்
எண்ணுவது கடினமாக இருக்கிறது.

ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தில் சேர்ப்பது
என்பதுவும், ஆங்கிலேயே காலத்தில்
முனையப்பட்ட ஒன்று என்பதுவும்,
தமிழ்நாட்டுக்கு எந்த வித மதிப்பும்
நடுவண் அரசில் இல்லாதபோதும்
கடந்த 8 ஐந்தாண்டுத் திட்டங்களிலும்
சேர்க்கப் பட்ட முனையல் என்பது
வெறும் தமிழினத்தின் சல்லி என்று
தாங்கள் எழுதியிருப்பது பற்றி
மீள் பரிசீலனை செய்ய வேண்டும்
என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

நீளமான பின்னூட்டுக்கு வருந்துகிறேன். ஆயினும் இவற்றை
நீங்களும் பிறரும் சிந்திக்கவும் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்
 
சந்தடி சாக்கில் சுனாமியையும் இழுத்து இருக்கிறீர்கள். ஜப்பானிற்கு
இது சம்பந்தமாக உங்கள் ஆராய்ச்சிமுடிவை அனுப்பி வைக்கவும். பாவம் அவர்களும் கடந்த 40-50 வருடங்களாக நிலநடுக்கத்திற்கும், சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும் தற்காப்பிற்காக பல வீணான ஆராய்ச்சிகள் செய்து நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறார்கள்..

உங்கள் பாசையில் சொல்வதானால், எல்லா நாடுகளும், தங்கள் துறைமுகம் தவிற மற்ற பகுதிகளில் செயற்கை மணல்திட்டுகளை உருவாக்கிவைத்து கொண்டால் சுனாமியில் இருந்து தப்பி கொள்ளலாம்.

அப்படியே உங்கள் அதிபுத்திசாலிதன கருத்தின் அடிப்படையில் பார்த்தாலும், பாவம் அவர்கள் அனைத்து மணல்திட்டுகளையும் அகற்றவில்லையே. மணல் திட்டுகள் அப்படியே இருக்க போகின்றன, நடுவே, கப்பல்கள் சென்று வரகூடிய அளவில் கால்வாய்தானே வெட்டபடுகிறது.

இந்த உலகில் இதுவரை செய்யப்படாத மரேயின்(marine) கட்டுமான பணி இல்லையே..ஓவ்வொரு நாடும் எவ்வளவு தூரம் தொழில்நுட்ப அளவில் முன்னேறி கொண்டு இருக்கின்றனர்.

என்னை பொறுத்தவரையில், லாபம் என்று சொல்வதை விட, நமக்கு ஓரு புதிய நீர்வழிதடம் உருவாகிறது, மிகசிறந்த தொழில்நுட்பமுயற்சி, கடலில் ஓரு பகுதியை தோண்டுவதற்கே இவ்வளவு கூப்பாடு என்றால், நதிகள் இணைப்பு என்று எல்லாம் பேசுவது..கொஞ்சம் அதிகம்.

கண்டிப்பாக இந்த அனுபவம் நமக்கு நல்லவகையில் உதவும்.

நீங்கள் ரெடிபில் வருவதெல்லாம் உண்மை என்று நம்புபவரா........
 
>>
இது தாண்டி, இது ஒரு நாட்டுக்கான பிரச்சனையல்ல, பல கடல் எல்லைகளடங்கிய பிரச்சனை
<<

மன்னிக்கவும், என்னென்ன கடல்கள்?
எந்தெந்த நாடுகளுடையது ?

இந்திய எல்லை, பன்னாட்டு எல்லை,
இலங்கை எல்லை என்ற எல்லைகள் மட்டுமே இதில் உண்டு.

இந்தச் சரவலுக்கு டி.ஆர்.பாலுவும்
கருணாநிதியும் கதறித் துடிப்பதற்குக் காரணமே இந்த மூன்றெல்லைகள்தான்,


ஆறு வழிகளை ஆராய்ந்து, இந்தப் பன்னாட்டு எல்லை, இலங்கை எல்லை
சிக்கலைத் தரக்கூடாது என்ற நெருக்குதலினால்தான் அந்தக் குறுகிய இடத்தில் ஆதம் தூரினை (அதாவது ஆதம் பாலம், அதாவது இராமர் பாலம்) 300 மீட்டருக்கு மட்டும்
அகற்ற வேண்டி இருக்கிறது.

அந்தக் கடற்பரப்பிலே மற்ற நாட்டுச்
சிக்கல் வராமல் நமது எல்லையிலேயே செய்வதனால்தான்
மாற்றுவழிகள் சாதகாமாக இல்லை என்று சேதுமுனையல் காரர்கள் சொல்கிறார்கள்.

நம்ம எல்லையில் செய்வதற்கு ஏன்
நாம் பயப்பட வேண்டும் ?

>>
இதனை சுற்றுச்சூழல் மேற்பார்வை நிறுவனம் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறது.
The course of water currents may be altered causing unprecedentd harm to marine life.
<<

இவ்வளவு அக்கறை உள்ளவர்களை
நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

அதே வேளையில், ONGC நிறுவனமும்
இன்ன பிற நிறுவனங்களும் மேற்குக் கடற்கரைகளில் பல இடங்களில்
எண்ணை, வாயு விற்காக கடலில்
எப்படியான கட்டுமானங்களைச் செய்திருக்கிறார்கள் ?

அங்கே நீரோட்டம் பாதிக்கப் பட்டுவிட்டதா? இல்லை படாதா?

கடல் வாழ் உயிர்கள் செத்தனவா
இல்லவே இல்லையா?

இங்கு மட்டுமல்ல. மற்ற நாடுகளையும் எண்ணிப் பாருங்கள்.
பிறகு சொல்லுங்கள்.

(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்
 
நண்பரே..
இந்தப் பதிவிலும் தலைப்பைப் போலவே உணர்ச்சி முதலிலும் எழுச்சி இடையிலும் 'சில உண்மைகள்' கடையிலுமாக இருக்கிறது.
'பல உண்மைகள்' இல்லவே இல்லை.
 
பயனுள்ள விவாதம். வாழ்த்துக்கள். மத, சாதிய உண்ர்வுகளைத் தாண்டிய இத்தகைய ஆரோக்கியமான விவாதங்களே சூழலை பயனுள்ளதாக மாற்றும்.
 
>>
இது தாண்டி, பவள தாவரங்கள் கடல் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ்ற்கு மேல் மட்டுமே வளரும். ஆதம் பாலத்தின் சராசரி வெப்பநிலை 25 - 32 டிகிரி செல்சியஸ்.
<<

எழுதிக் கொண்டிருக்கும் நாம் கடலியல்
விஞ்ஞானிகள் அல்ல.

ஆயினும், ஆதம் தூரின் வெப்ப நிலை
25-32செ என்று சொல்கிறீர்கள். ஆதம் தூரின் நீளம் 30 கி.மீ. அதில் 0.3 கி.மீ அகற்றுவதால் என்ன பாதிப்பு
வந்து விடும் ? மொத்த நீளமும்
அப்படியே குளிர்ந்து போய்விடுமா?
அல்லது கருகிப் போய் விடுமா?

>>
இதுதாண்டி, போன ட்சுனாமியில் கேரளா அதிகமாக பாதிக்கப்படாமல் போனதற்கு இம்மணல்திட்டுகள் தான் காரணம். இயற்கை அரணாக இவை செயல்பட்டு வந்தவை அழிக்கப்பட்டால், ஏற்படக்கூடிய இயற்கை வெஞ்சினங்கள் கணக்கிலடங்காதவை. மூன்று நான்கு வாரங்களுக்கு முன்பு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால், தமிழக கடல் எல்லையில் ட்சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். பசிபிக் ட்சுனாமி எச்சரிக்கை மையத்தின் கணக்கு படி இந்திய பெருங்கடலில் தொடர்ச்சியாக சிறியதும் பெரியதுமான எழுச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன
<<

ஐயா, இந்த சுனாமி பற்றிய ஒன்றுதான் என்னை ஆதம் தூர்
பற்றி எதிராகப் பேசும் அறிவாளிகளைக்
கண்டு அச்சமுறச் செய்கிறது.

இதே கருத்தை சிஃபியில் ஒருவர்
எழுதியிருந்தார். அவர் முன்னாள் இராணுவ அதிகாரி. ஆனால், அவர்
கடல் புவியையும் கடலியலையும்
கரைத்துக் குடித்தவர் மாதிரி
எழுதியிருக்கிறார்.
அவரின் கட்டுரை குறித்து நான்
எழுதிய பதிவினை
nayanam.blogspot.com/2007_09_02_archive.html என்ற எனது பதிவின் சுட்டியில் காணுங்கள்.
என்ன ஒன்று என்றால் பதிவில்
வெப்ப நிலை அதிகமாக இருக்கும் :)

அதன் பகுதியை இங்கே இட்டு வைக்கிறேன்.
(from nayanam)
3) மலையாளக்கரையை, மேற்குக் கரையை, இந்தோனேசிய பூகம்பங்களால் சுனாமி தாக்கும் வாய்ப்பு வந்துவிடுமாம்.

(Many express fear that the breaching of Ram Sethu will subject the western coast to tsunami threat since Indonesia and sea around it are prone to earthquakes)

கேப்பையிலே நெய் ஒழுகுகிறது என்று சொல்லி கேட்பவர்களையும் மடையர்களாக ஆக்கும் சங்கதி இது. தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெரியேறும் என்பது போல் பேச மடையர்களால் மட்டுமேமுடியும்,
இதை ஆழ்ந்து கவனித்தால் இதன் அரசியல் புரியும். மீண்டும்தமிழகத்திற்குப் பதகம் செய்ய வைதீகத் தலைமையில் மலையாளமும், மராட்டியமும் இருப்பது புரியும்.

மலையாளம் ஏறத்தாழ தமிழர்களுக்குப் பகை நாடு போலவே ஆகிவிட்டது. மராட்டியருக்கு, மும்பையை விட வேறெந்த ஊரும் நிதியம் நிறைந்த ஊராகி விடக்கூடாது.

ஆகவே வேறு வழியில் முடியாதவர்கள் இராமரை இழுத்து வந்துதமிழர்களுக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை 6 அடிகள் உயர்த்தினால் அணை உடைந்து பல இலட்சம் மலையாளிகள் மாண்டு விடுவார்கள்என்று அச்சுதானந்தன் கட்டி விட்ட கதையை நினைவுக்குக் கொண்டுவந்தால், எப்படி இந்தோனேசியப் பூகம்பம் மேற்குக் கரையை பாதிக்கும் என்பது புரியும். ஆக, இது பச்சைக் கேரள பாணியிலான பொய்த் தண்டோரா.

கிழக்கில் இந்தோனேசியாவில் பூகம்பம் வந்து, அது கிழக்கே இலங்கையை ஒன்றும் செய்யாமல், இலங்கையின் மறைவில் இருக்கும் இராமேச்சுரத்தை ஒன்றும் செய்யாமல் அப்படியே வடக்கு நோக்கி போய்இலங்கையைச் சுற்றிக் கொண்டு பின்னர் அப்படியே தெற்கே திரும்பி, சேதுக்கால்வாயிற்குள் புகுந்து, பவ்வியமாகச் சென்று கன்னியா குமரியில்குமரி அன்னையை வணங்கி, அப்படியே திருவள்ளுவரையும்விவேகானந்தரையும் பார்த்து கண்ணடித்து விட்டு மீண்டும் திசை திரும்பிமேற்காகப் போய், அப்படியே மலையாளக் கரை, கோவா, மராட்டியக் கரைகளைஎல்லாம் பதம் பார்த்து கேரளக் கரையில் உள்ள கனிமங்களை எல்லாம்பாதித்து விடுமாம்.
(What that will do to the rich thorium, monazite, zircon and other mineral deposits on Kerala
beaches is a huge question mark.)

புளுகுணிகளின் கற்பனை வளத்தினைப் பாருங்கள்! இதுவே சதிகாரர்களின் எண்ணத்தைச் சொல்லப் போதுமானது.
(/from nayanam)

நண்பர் நரேன், மேலே நான் எங்கேனும் கடினமான சொற்களைப்
பயன்படுத்தியிருந்தால் அது தங்களையோ இங்கே வேறு யாரையோ குறிப்பதல்ல.

மேலும், சுனாமியை நமக்கு எவ்வளவு நாளாகத் தெரியும் ?
3 வருடங்கள்.

சரி - இதற்கு முன்னர் வரலாற்றில்
மாமல்லபுரம், பூம்புகார், வெகு அண்மையில் கடலில் மூழ்கிய தனுசு கோடி, அதற்கு முன்னர் கி.முக்களில் ஏற்பட்ட பயங்கர கடல்கோள்கள்,
அதனால் விழுங்கப்பட்ட கணிசமான
நிலப்பரப்பு, விழுங்கப்பட்டு தெற்கே
உள்ளே இருக்கும் மலைகள் ஆறுகள்
பற்றி எவ்வளவோ படித்திருந்தும் எப்படி இந்த இந்தோனேசிய பூகம்பம்
மட்டும் நமக்கு பூச்சாண்டி காட்டுகிறது.
அதுவும், யாராவது சென்னை, மற்றும்
கிழக்கு கடற்கரை முழுதும் பாதிக்கப் படும் என்று சொல்லியிருந்தால் ஓரளவு நம்பலாம்.

இலங்கையின் கிழக்குக் கடற்கரை,
அதன் மேற்குக் கடற்கரை, இந்தியாவின் கிழக்குக் கடற்கரை
இதெல்லாம் விட்டு விட்டு
மேற்கே புகுந்து விடுமா?

என்னங்கயா நம்ம ஞாயம்?

இவ்வளவு ஏங்க,
இராமரின் பின்னால் அவதாரம் எடுத்ததாகச் சொல்லப்படும்
கிருட்டிணர் பிறந்த பூமியே கடலுக்குள்
தானே இருக்கிறது. அங்கே அரண்மனை அப்படியே இருக்கிறது
என்று சொல்கிறார்களா இல்லையா?

அது எப்படி ஏற்பட்டது ? அதை ஏன்
இராமர் பாலம் தடுக்க வில்லை?

கிருட்டிணருக்கு முன்னாலேயே
இராம அவதாரம் ஆகிவிட்டது அல்லவா?

அப்படியென்றால் இராமர் பாலம் அப்பொழுதே இருந்திருக்கும் அல்லவா?

அப்ப எப்படி கிருட்டிணர் பிறந்த அல்லது ஆட்சி செய்த நிலம் நீருக்குள் மூழ்கியது?

அதை மூடிய சுனாமி எது?

இந்தோனேசிய சுனாமியா?
அல்லது வேறெது?

யோசித்துப் பாருங்கள் நண்பர்களே.
எவ்வளவு பிற்போக்கான வாதங்களை வைக்கிறார்கள் என்று புரியும்.

(தொடரும்)
அன்புடன்
நாக.இளங்கோவன்
 
>>
இது தவிர தூத்துக்குடி உள்ளடக்கிய கடற் சார்ந்த பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் மீன்பிடி தொழிலை சார்ந்து உள்ளார்கள். பவள பாறைகளையும், இயற்கையான மீன்வளங்களையும் இத்திட்டத்தின் மூலமாக நிர்மூலமாக்கினால், லாபமடைபவர்கள் யார் ? லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவில் மட்டுமல்லாது, இலங்கையின் கடற்சார்ந்த பகுதி உள்ளடக்கியவர்களின் வாழ்க்கை இத்திட்டத்தின் மூலம் கேள்விக்குறியாகும் நிலையில் எப்படி இத்திட்டத்தினை ஆதரிக்க முடியும் ?
<<

மீண்டும் மீண்டும் சிறிய சரவல்
பூதக்கண்ணாடியில் பார்க்கப் படுகிறது.

மொத்தம் உங்கள் கணக்குப் படியே
10,500 ச.கி.மீ.

10500 க்கு கோவணம் கட்டி விட்டது
போல வெட்டப் படுவது 50 ச.கி.மீ.

அதிலும், ஆதம் தூரின் பகுதியான 0.3 கி,மீ அகலம் எவ்வளவு ? மிகக் குறைவு. கணக்கிற்கே வராத இந்தச்
சிறிய நிலப்பரப்பில்/கடல்பரப்பிற்கு
இவ்வளவு எதிர்மறைச் சிந்தனையா?

தூத்துக்குடி முதல் சென்னை வரை
கடல் என்ன வற்றியா விடப் போகிறது?

பச்சையாகச் சொன்னால், வெளிப்படையாகச் சொன்னால்,
தமிழகத்தில் இருந்து இலங்கைக் கடலுக்குள் போய் மீன் பிடித்து
அடிக்கடி இம்சை பட்டு, அரசியல் இம்சைகளும்
படுத்தும் மீனவர்களுக்கு மட்டும்தான்
இது பாதிப்பு. அதுபோல இலங்கை மீனவர்களுக்கும் இந்த வகையில் அது
இடர். இந்த இடத்தில்
நான் விரித்தால் அது எங்கெங்கோ போய்விடும். மீன்பிடிச் சரவல்கள்
சூக்குமமும் கொண்டவை. வீணாக அதில் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கவேண்டாம் நாம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
 
நண்பர்களே,

எங்கெனும் இழவொலி போல்
இந்தத் திட்டம் உருப்படாது, தேறாது
என்று சொல்லி எதிர்மறைச் சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்வதை விட,

ஆழம், வேகம், பெரியகப்பல்-சின்ன கப்பல்,ஆமை, பாசி என்று நாம் கவலைப்படுவதை விட,

ஐயோ, 2700 கோடி என்று அழுவதை விட, (இந்த 2700 கோடி என்பது இந்தியப் பொருளாதாரத்தின் மிகச் சிறு பகுதி.... ஒரு சென்செக்சு புள்ளியின் ஏற்ற இறக்கத்தில் சரியாகிவிடக்கூடிய பணம்.... ஒரு பெரிய முதலீடு இந்தியாவிற்குள் வருவதில் கிடைக்கக் கூடிய வருவாய்)

முதலில் ஒரு சாலை அமையட்டும்,
குறைந்த வசதிகளே ஆயினும்,
அதைப் பயன்படுத்துவோம்,,,மேலும்
மேலும் அது வளர விரிய வழி வகுக்கும் என்ற சிந்தனை தேவை
என்று சொல்ல விரும்புகிறேன்.

சாலையில்லா ஊருக்கு சாலை போடும் முன்னே, "இதிலே நாலு வழியில்லை, ஓரத்திலே விளக்கில்லை" என்றெல்லாம்
பார்த்தோமா?

சென்னையில் இருந்து திண்டிவனத்துக்கு இப்போ போக ஆகும் நேரம் எவ்வளவு, 3/4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆன நேரம் எவ்வளவு?

மெல்லத்தாங்க வளரும்.
இடர்கள் வரும். குறைகள் இருக்கும்.
ஆனால் வேரிலேயே வெண்ணீர் ஊற்றினால் எப்படி ???

கடைசியாக,

பல கட்டுரைகள் கருத்துகள் படிக்கிறோம். நான் படித்ததில்
அறிஞர் மறவன் புலவு சச்சிதானந்தம்
அவர்களின் கருத்துரை மிகவும்
என்னைக் கவர்ந்தது.

சர்ச்சைக்குள்ளான பகுதியை நன்கு
அறிந்த அந்த அறிஞர் இந்த முனையலுக்குச் சார்பாக பல
கருத்துகளைச் சொல்லி ஒரே ஒரு தவறை சுட்டிக் காட்டினார்.


ஆதம் மேடை, பாலம் என்று விளித்ததுதான் தவறு. அது பாலமல்ல
தூர் என்றார். அந்தக் கட்டுரை நக்கீரனில் வந்தது என்று எண்ணுகிறேன்.

ஆகவே, ஆதம் தூர் என்பதற்கும் பாலம் என்பதற்கும் பெரிய வேறுபாடு
உள்ளது. ஆதம் தூர் என்று அவர் சொன்ன வழக்கு நல்லது.

அதோடு, நமது ஊரிலே, விசயகாந்த்
திரைப்படத்திலே பேசுவது போல,
சில எண்களை அள்ளி வீசினாலே
அறிவியல் பூர்வம் என்ற சான்றிதழ் கிடைத்து விடுகிறது. நரேனின் கட்டுரையை குறை சொல்ல அல்ல.
பொதுவில் சொல்கிறேன்.

அந்த அறிவியல் தன்மை பல தடவை
நம்மை திகைக்க வைத்துவிடுகிறது :))

இதில், ஒரு கட்டுரை படிக்கும் நேரத்தில் ஒரு நூலையே படித்து முடிக்கக் கூடிய, அற்பம் எது அறிவு எது என்று நொடியில் கணிக்கக் கூடிய என் அருமை நண்பர் பெயரிலியும் திகைத்துப் போய்விட்டது
எனக்கு வியப்பாக இருக்கிறது :)

அன்புடன்
நாக.இளங்கோவன்
 
என்னை பொறுத்தவரையில், லாபம் என்று சொல்வதை விட, நமக்கு ஓரு புதிய நீர்வழிதடம் உருவாகிறது, மிகசிறந்த தொழில்நுட்பமுயற்சி, கடலில் ஓரு பகுதியை தோண்டுவதற்கே இவ்வளவு கூப்பாடு என்றால், நதிகள் இணைப்பு என்று எல்லாம் பேசுவது..கொஞ்சம் அதிகம்.
வாத பிரதிவாதங்கள் நன்றாக இருந்தது.இந்த பதிவை படிக்க ஆரம்பிக்கும் போதே மேலே சொன்னது தான் எனக்கும் ஞாபகம் வந்தது.
நம்மால் எப்போதுமே ஒன்றுபட்டு பார்க்கமுடியாதோ??
நா
 
நரேன் ந்ல்ல முயற்ச்சி.இளங்கோவன்,

நீங்கள் எழுதியதற்க்கும்,ந்ரேன் எழுதியதற்க்கும் என்னைப்போன்றோருக்கு வித்யாசம் காணுவது சற்று கடினம். மன்னிக்கவும்.

if we could leave out all the emotional factors ,mk,bjp ,amma etc then if we attempt to have a discussion probably it will be useful.
 
கருத்தினை சொன்னவர்களுக்கு நன்றி.நாக.இளங்கோவனுக்கு நன்றி, பல கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள். நல்லதுதான். இதன்மூலம் ஒரு ஆரோக்கியமான விவாதத்தினை முன்னிறுத்த முடியும் [அதிலும், என்னைப் போலவே போகிற போக்கில் நக்கலடித்து இருக்கிறீர்கள் ;) சிட்னி கப்பல்களை பற்றி எழுதாமல், எதற்கு கொல்கத்தாவிலிருந்து வரும் கப்பல்களை பற்றி எழுதி இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதற்கான விளக்கம் டவுன் டூ எர்த்தில் இருக்கிறது] மற்றபடி உங்களின் பெரும்பாலான கேள்விகளில் இருக்கும் தார்மீக கோவம் எனக்கு போகிறது. நமக்கான பிரச்சனையை, பிரச்சனையாக பார்க்க வேண்டும். நேற்று நீங்கள் எழுதிய [http://nayanam.blogspot.com/2007/10/blog-post.html] பதிவினை படித்தேன். கண்டிப்பாக சில உண்மைகள் இருக்கின்றன. ஆனால், ஒட்டு மொத்தமாக ஒரு பக்கம் சாய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. போகிற போக்கில், விசயகாந்த் போல புள்ளிவிவரங்களை வீசி இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் தமிழ்நாடில் யார் புள்ளிவிவரங்களை அள்ளி வீசுவார்கள் என்பது உங்களுக்கு தெரிந்ததே. நீங்கள் திமுக அரசினைப் பற்றி பேசியதால், நானும் ஒரே ஒரு வரி பேசி விட்டு போய்விடுகிறேன். மிகத்தெளிவாக என்னுடைய disclaimer-இல் சொல்லி இருக்கிறேன். ஜெயலலிதா ஆட்சியில், அரசு கேபிள் டிவியினை எடுத்து நடத்த வேண்டும் என்று சொன்னபோது, நண்பரும், கவர்னருமான பர்னாலாவினை உடனடியாக பார்த்து தடை மனுவினை கொடுத்தாரே கருணாநிதி, அப்போது எவ்விதமான வருணாசிரம சிரம்பரிகாரங்கள் நடந்தன ? இத்தனைக்கும் மத்தியிலும், மாநிலத்திலும் இப்போது உங்களுடைய ஆட்சிதான் நடந்து வருகிறது. பல கேள்விகளை உணர்வும், உணர்ச்சியாகவும் அணுகாமல் அடிப்படை பிரச்சனைகளையொட்டி அணுகவேண்டும் என்பது என்னுடைய சிறிய அபிப்ராயம். நாளை இவையனைத்துமே முட்டாள்தனம் என்று நிருபிக்கப்பட்டால் என்னுடைய நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ள கண்டிப்பாக தயங்க மாட்டேன், ஆனால் நீங்கள் எடுத்திருக்கும் நிலையிலிருந்து உங்களால் மாற இயலுமா ?

நட்புடன்
நாராயணன்
 
nayanan (நாக.இளங்கோவன்?),

//ஏங்க 10500 சதுர கி.மீ பரப்புள்ள
பகுதியில் 50.1 ச.கி.மீ அகழ்ந்தால்
ஆமையையும் அங்கே யிருக்கிற அத்தனையையும் புத்தகத்தில்தான்
படிக்க முடியும் என்று எப்படிங்க
சொல்ல முடியும்?//

நீங்கள் கூறியுள்ளபடி அகழ்வின் அகலத்தை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு பாதுகாக்கப்பட்ட bio-reserve பகுதியில் இராட்சத இயந்திரங்களுடன் கடலுக்கடியில் சென்று குடைவது பல பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எடுக்காட்டுக்கு turbidity (கலங்கல்?) - அங்கு பரவலாகக் காணப்படும் பவளம் ஒரு தாவர இனம். அதற்குத் தேவைப்படும் சூரிய ஒளியைக் கொண்டுதான் அதனால் photosynthesis எனப்படும் உணவு உற்பத்திச் செயல்பாட்டைச் செய்ய முடியும். அவ்வாறு photosynthesis செய்வதால்தான் அதனால் உயிர் வாழ முடிகிறது, மற்றும் இதர உயிரினங்களுக்குத் தேவைப்படும் பிராண வாயுவை உற்பத்தி செய்யவும் முடிகிறது. தோண்டுவதால் ஏற்படும் கலங்கல் காரணமாக அதற்குக் கிடைக்கும் சூரிய ஒளி குறைய வாய்ப்புள்ளது, அதனால் அது அழிய வாய்ப்புள்ளது என்பதே சூழலியலாளர்களின் வாதம். அது அழிந்தால் அதை நம்பியிருக்கும் இதர உயிரினங்களுக்கும் ஆபத்துதான். (மீனவர்கள் நம்பியுள்ள மீன்வளத்திற்கும்தான்)

மூன்றில் இரண்டு பங்கு தோண்டும் வேலை முடிந்து விட்டது என்கிறீர்கள். நல்ல செய்திதான். இது வரை தோண்டியதால் ஏதாவது பின்விளைவுகள் ஏற்படுள்ளனவா, அல்லது அங்குள்ள எல்லா உயிரினங்களும் பாதுகாப்பாகவே உள்ளனவா என்று உங்களுக்கு ஏதாவது தகவல் இருக்கிறதா? எனக்குத் தெரிந்த வரை, சில திமிங்கிலச் சாவுகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிய வருகிறது. ("whale deaths in Sethusamudram" என்று கூகிளில் தேடினால் சில சுட்டிகள் கிடைக்கலாம்) மற்ற உயிரினங்கள் பற்றி தகவலில்லை. (இது பற்றி ஏதாவது கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளனவா என்றும் தெரியவில்லை) மேலும், 0.3கி.மீ. அகலப் பகுதியில் தோண்டியெடுக்கப்பட்ட மண்ணை மற்ற 199.3 கி.மீ. பகுதியில்தான் எங்காவது கொட்ட வேண்டும். அதனாலும் சூழல் பாதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. இன்னொன்று, கடலுக்கடியிலுள்ள currents காரணமாக, தோண்டிய இடங்களெல்லாம் மீண்டும் நிரம்பி விடும்் சாத்தியமுமிருப்பதால், இது ஒரு முறை தோண்டுவதோடு நின்று விடாது. அடிக்கடி தோண்டிக் கொண்டே இருக்க வேண்டும். (அம்பத்தூர் தொழிற்பேட்டை மாதிரி ஆகி விடும் அந்த கடல்பரப்பு என்று வைத்துக் கொள்ளுங்களேன் :))

என்னோட favorite கொசுறு: தமிழன் என்றொரு இனமுண்டு, அவனை முழு நேர வேலையாக எதிர்க்கும் பிறருமுண்டு என்ற ரீதீயில் கட்டமைத்துக் கொண்டே போகலாம் வாதங்களை (எந்த பிரச்சனை குறித்தும்). என்னைப் பொறுத்தவரை, அவனவனுக்கு வாழ்க்கையில் வேறு பிரச்சனைகள் நிறைய உள்ளன. நம்மைக் குழி தோண்டிப் புதைப்பதை ஒரு குறிக்கோளாக வைத்திருப்பவர்களுக்குக் கூட (மலையாள, மராட்டிய, etc etc.) அதை விட முக்கியமான தலை போகும் பிரச்சனைகள் உள்ளன என்று உறுதியாக நம்புகிறேன். ்
 
ஒரு வளர்ச்சி திட்டத்தை இல்லாத கடவுளின் பெயரால் முட்டுக்கட்டை போடும் போது அந்த கடவுளை கேலி செய்வதில் என்ன தவறு.

பரதேசி கட்சியினர் சுற்றுப்புறசுழல் பாதிப்பு பற்றி மட்டும் பேசியிருந்தால் கலைஞர் ஏன் ராமனைப்பற்றி பேசியிருக்கபோகிறார்.

ராமன் பெயரால் முட்டுக்கட்டைபோட நினனைக்கும் போது அந்த ராமனை முச்சந்தியில் நிறுத்தி விமர்சனம் செய்வதில் என்ன தவறு.

ராமன் நூறு கோடி மக்களின் நம்பிக்கை அதனால் அவரை கிண்டல் செய்யகூடாது என்று சொல்கிறிங்க. அந்த ராமனின் பெயரால் சாதரண பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை யார் தடுப்பது.

பரதேசி கட்சியினரை "சேது சமுத்திரம் " திட்டத்தில் உள்ள பொருளாதார,சுற்றுப்புற சூழல் பற்றி மட்டும் பேச சொல்லுங்கள். அதன்பிறகு நாங்கள் ஏன் ராமரைப்பற்றி பேச போகிறோம்.?

கலைஞர் புட்டபர்த்தி சாய்பாபா வயை பாராட்டினார் ஆம் உண்மைதான் அதே பாபா எதாவது மக்கள் நல திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டால் அவரை முதலில் கலாய்ப்பது கலைஞர்தான்

அன்புடன்
அரவிந்தன்
 
>>Seetha said...
நரேன் ந்ல்ல முயற்ச்சி.இளங்கோவன்,
.....

if we could leave out all the emotional factors ,mk,bjp ,amma etc then if we attempt to have a discussion probably it will be useful.
<<

Seetha - I like what you said.
I dont think that ALL the people take the lines of mk/bjp.

The one thing that tamil nadu people and politicians need to learn is to have
..... responsibility & care on common state benefits.

Kerala and Karnataka are the nearest best examples. People and
politics unite on common issues.

But, TN is the one place where
the common interests are put behind individual interests.

This is the shameful culture we have been witnessing.

Interestingly, to justify the idividual interests, the TN public will use the statistics and all their generosity. I have been a bit hard on this for quite some time in the net.

Increasingly this is becoming a sickness in TN.

I wish some day TN becomes better.

Thanks
Elangovan
 
//
Voice on Wings said...

நீங்கள் கூறியுள்ளபடி அகழ்வின் அகலத்தை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு பாதுகாக்கப்பட்ட bio-reserve பகுதியில் இராட்சத இயந்திரங்களுடன் கடலுக்கடியில் சென்று குடைவது பல பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எடுக்காட்டுக்கு turbidity (கலங்கல்?)

//

ஐயா,

வேறு என்ன செய்யலாம் சொல்லுங்கள்.

ஆதம் தூரினை இடிக்காமல், மாற்று
வழியில் போனால் இந்தச் சரவல்
உண்டல்லவா?

அப்படிப் பார்க்கையில் தங்கள்
கூற்றுப் படி மண் தூரெடுத்துப் போடவே முடியாதே?

மண் அள்ளாமல் இதைச் செய்ய என்னதான் வழி?

வேறு வழியில்லை என்றால்
விட்டு விடலாம் என்பதுதான்
தங்கள் கருத்தாகத் தெரிகிறது.

இது எந்தளவுக்கு ஏற்புடையது
என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

அதோடு, கீழ்க்கண்டவற்றையும்
எண்ணிப் பாருங்கள்.

1) நமது நாடு மட்டுமல்ல பல நாட்டுக்
கடல்களிலும் எண்ணெய், வாயுவிற்காகத் தோண்டுகிறார்கள்.
அப்போது கலங்காதா கடல்?

2) எண்ணெய் கப்பல்கள் பல உடைந்து
பல கரைகளில் அதன் படிவுகள் எத்தனை பாதிப்புகளை கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றன?

3) எத்தனை நாடுகள் கடலுக்கடியில்
அணுச்சோதனைகளை நடத்து கின்றன.

4) அண்மையில் சென்னைத் துறைமுகத்திற்கு வந்த அணுசக்தியால்
இயங்கும் கப்பல் கடல்களுக்கு எவ்வளவு ஆபத்தானவை?

5) இதெல்லாம் விட, நம் கண்ணுக்குத் தெரியாமல் இந்தியாவின்
கழிவுகள் எத்தனை வகையில் கடலில் கொண்டு போய் கொட்டப்படுகின்றன?

6) கல்பாக்க அணுமின் நிலையக் கழிவுகள் கடலில் தான் கொண்டு போய்க் கொட்டப்படுகின்றன என்று நான் படித்திருக்கிறேன்.

இன்னும் இது போல எத்தனையோ
சொல்லலாம் கடல் சூழமைவுக்கான
பதகங்களை.

இப்படியான கொடுமைகள் எதையும்
சேதுக்கால்வாய் ஏற்படுத்தி விடாது என்று நாம் உறுதியாக நம்பலாம்.

சிறு இழப்புகள் சிறு இடர்கள்
அங்கிருக்கக் கூடிய உயிரினங்களுக்கு
ஏற்படக் கூடும் என்பதில் ஐயமில்லை.

மனிதகுலத்திற்கே உரிய அந்தத் தன்னலமே வளர்ச்சியாகவும், வசதி
வாய்ப்பாகவும் உலகில் அமைந்து வருகிறது.

இராமர் போன்ற ஒவ்வொரு சாமியும், தாம் படைத்த எந்த உயிரினத்திற்கும் ஆபத்தே வரக்கூடாது
என்று நிலையெடுத்தால் மனித குலம்
அறவே புவியில் இராது என்பதனை
ஒத்துக் கொள்வீர்கள் என்று கருதுகிறேன்.

//
மேலும், 0.3கி.மீ. அகலப் பகுதியில் தோண்டியெடுக்கப்பட்ட மண்ணை மற்ற 199.3 கி.மீ. பகுதியில்தான் எங்காவது கொட்ட வேண்டும். அதனாலும் சூழல் பாதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.
//

இது பற்றி என்னைப் பொறுத்தவரையில் கவலைப்பட வேண்டியது ஏதும் இல்லை.

ஏனெனில் இந்தக் கால்வாய்க்கும்
மண்ணில் வெட்டப்படும் பல துணை ஆறுகள், வாய்க்கால்கள், கால்வாய்கள்
பெரிய வேறுபாடு கிடையாது.

சென்னையைச் சேர்ந்தவராயின்,
கிருட்டிணா கால்வாயைப் பார்த்திருக்கக் கூடும். அதன் அகலம் குறைவென்றாலும், சம தரையில் இருந்து 8-10 மீட்டர் இருக்கும்.

திருச்சி, தஞ்சை பகுதிகளில் நிறைய பார்க்கலாம். தஞ்சை பெரிய கோயிலுக்கருகே ஓடும் காவிரியாற்றைப் பார்த்தால் அதன் ஆழம் புரியும். அகலம் அதை விட அதிகமாக இருக்கும்.

மண்ணை வெட்டினால் கரையில் அல்லது கடலில் போட்டுத்தான் ஆக வேண்டும்.

இது எனக்கு அதிர்வை ஏற்படுத்தவில்லை.

//
இன்னொன்று, கடலுக்கடியிலுள்ள currents காரணமாக, தோண்டிய இடங்களெல்லாம் மீண்டும் நிரம்பி விடும்் சாத்தியமுமிருப்பதால், இது ஒரு முறை தோண்டுவதோடு நின்று விடாது. அடிக்கடி தோண்டிக் கொண்டே இருக்க வேண்டும். (அம்பத்தூர் தொழிற்பேட்டை மாதிரி ஆகி விடும் அந்த கடல்பரப்பு என்று வைத்துக் கொள்ளுங்களேன் :))
//

இது உண்மை. நிச்சயம் காலா காலத்துக்கு தூர் வாரிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே அடிப்படைக் கருது கோள்.
இது முனையலில் பராமரிப்பு அங்கங்களில் ஒன்றாகவும், இடர் அங்கங்களில் ஒன்றாகவும் (maintenance management and risk management) எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.


கருத்துக்கு நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்
 
//Narain said...
கருத்தினை சொன்னவர்களுக்கு நன்றி.நாக.இளங்கோவனுக்கு நன்றி, பல கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள். நல்லதுதான். இதன்மூலம் ஒரு ஆரோக்கியமான விவாதத்தினை முன்னிறுத்த முடியும்
//
அதுவே எனது விழைவும்.
தங்கள் கருத்தின் மேல் எனக்கு
நிறைய மாற்றுக் கருத்துகள் இருக்கும்
போதிலும், நீங்கள் பரவலாக பலரும்
பேசும் பல புள்ளிவிவரங்களைத் திரட்டிப்
போட்டதற்குப் பாராட்டுகள்.

அதனால்தான் நான் தனியாகப் பதிவு
எழுதாமல், நீண்ட பின்னூட்டுகளாக
எழுதினேன்.

// நமக்கான பிரச்சனையை, பிரச்சனையாக பார்க்க வேண்டும். நேற்று நீங்கள் எழுதிய [http://nayanam.blogspot.com/2007/10/blog-post.html] பதிவினை படித்தேன். கண்டிப்பாக சில உண்மைகள் இருக்கின்றன. ஆனால், ஒட்டு மொத்தமாக ஒரு பக்கம் சாய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.
//

நண்பர் நாராயணன்,
இந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன்.
ஒரு பக்கச் சாய்வு என்பது தேவையில்லை.

அரசியலில் சாய்வுகளின் தன்மையும்
தரமும் சில நேரங்களில் பயங்கரமாக
இருக்கிறது.

மநுதர்ம நூலை நான் தொட்டு ஏறத்தாழ 9/10 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ்.நெட்டில் இருந்தபோது தொட்டது.

சேது முனையல் சரவல், இங்கே நண்பர் அரவிந்தன் சொன்னது போல, சூழமைவுக்காக என்று சொல்லியோ,
சுனாமி வரும் என்று சொல்லியோ அல்லது பாதுகாப்பு குறித்தோ ஏற்புடைய காரனங்களைச் சொல்லி
தடை வாங்கப் பட்டிருந்தால் அதனை
நான் அவசியம் பாராட்டியிருப்பேன்.
அலட்டிக் கொண்டிருக்க மாட்டேன்.

தடை போட்டபிறகும், கலைஞர்
இராமர் குறித்துச் சொன்னபிறகும்,
நான் கவலைப் படவேயில்லை. அதற்கு எதிர்ப்பு வந்த போதும்,
நடுவணரசு உச்ச நீதிமன்றத்தில்
சொதப்பிய போதும், இது
அரசியல் சரியாகிவிடும் என்றே இருந்தேன்.

ஆனால், நரபலி கோரிக்கை
எல்லோரையும் போல எனக்கும் சலிப்பைத் தந்தது. அதோடு போகாமல்,
உச்சநீதிமன்றம் விதித்த தடையும், நீதிபதிகள் அரிவாளைத் தூக்காத குறையாக ஆவேசப்பட்டதும்
சரியில்லை.

எனது இன்னொரு பதிவினைப் பார்த்தால் புரியும். சேது முனையல் தடை என்பது கூட்டுச்சதி.

இந்தச் சதியில் சு,சாமி, செயலலிதா
மட்டுமல்ல, பா.ச.க பரிவாரங்கள் மட்டும் அல்ல, பேராயக் கட்சிக்குள்ளே தொல்லியல் துறைக்குள்ளேயும்,
உச்ச நீதி மன்றத்துக்குள்ளேயிருந்தும்
கூடியவர்களின் சதி என்பது இதனைக்
கூர்ந்து பார்த்தால் தெரியும்.

அந்தச் சதியை உணர்ந்ததால்தான்
நான் மநுதர்ம ஒப்பீடை செய்து பார்த்தேன். அதுவும் சரியாகவே
அமைந்தது போல எனக்குப் படுகிறது.

சாய்வுகளில் எனக்கு சம்மதமில்லை.
ஆனால், ஒரு பக்கம் சாயும்போது,
இன்னொரு பக்கம் சாய்ந்தால்தானே
சமன் வருகிறது. வரும்.

அதேபோல, "நான் நடுவு நிலை வாதி"
என்று பேசி ஏமாற்றித் திரியும்
பல பேர்களைப் பார்க்கும் போது,
என் கருத்துகளுக்கு எதிர்க் கருத்துகள்
கொண்டவர்களின் சாய்வே பரவாயில்லை
என்று பல நேரங்களில் கருதுவதுண்டு.

// போகிற போக்கில், விசயகாந்த் போல புள்ளிவிவரங்களை வீசி இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். உண்மையில் தமிழ்நாடில் யார் புள்ளிவிவரங்களை அள்ளி வீசுவார்கள் என்பது உங்களுக்கு தெரிந்ததே.
//

:-))

நான் தான் அப்பவே சொல்லிட்டேன் இல்லையா. உங்களைக் குறித்து சொல்லலை என்று! பொதுவாக
பல சுட்டிகளிலும் புள்ளிவிவரம்
தருபவர்கள் இப்படிச் சேர்த்துக்
கொள்கிறார்கள். நீங்கள் கொடுத்த
திரட்டின் மீது எனக்கு மகிழ்ச்சியே.

//
நீங்கள் திமுக அரசினைப் பற்றி பேசியதால், நானும் ஒரே ஒரு வரி பேசி விட்டு போய்விடுகிறேன். மிகத்தெளிவாக என்னுடைய disclaimer-இல் சொல்லி இருக்கிறேன். ஜெயலலிதா ஆட்சியில், அரசு கேபிள் டிவியினை எடுத்து நடத்த வேண்டும் என்று சொன்னபோது, நண்பரும், கவர்னருமான பர்னாலாவினை உடனடியாக பார்த்து தடை மனுவினை கொடுத்தாரே கருணாநிதி, அப்போது எவ்விதமான வருணாசிரம சிரம்பரிகாரங்கள் நடந்தன ?
//
கலைஞர் இதற்கு ஏதேதோ விளக்கம்
கொடுத்திருக்கிறார். ஆயினும், அதனுள்
பச்சை அரசியல் உண்டு. செயலலிதா
அரசாக இல்லாமல், அது பக்தவத்சலம்
அரசாக இருந்திருந்தாலும் அப்படித்தான்
செய்திருப்பார்.

அது பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் கருணாநிதியைத்
திட்டிக் கொள்ளுங்கள். எனக்குக்
கவலையே யில்லை.
இதில் மதம் இல்லை, சாதி இல்லை.

நானே எனது பதிவுகளில் சில விதயங்களில்
கலைஞரைக் கடிந்து எழுதியிருக்கிறேன்.
அதையும் சேர்த்துக் கொண்டு
தாராளமாகத் திட்டிக் கொள்ளுங்கள் :-))
நானே மேலும் சில விதயங்கள் சொல்கிறேன்.

ஆனால் சேது முனையலில் சாதி,
மதம், நீதி, உரிமை, சதி, நரபலி, அரசியல் வெறி, அநாகரிகம் என்று எல்லாமே அளவுக்கு மீறி கலந்து விட்டன. அதனால்தான் நான் அந்த ஆய்வைச் செய்யவேண்டியதாகியது,

//
நாளை இவையனைத்துமே முட்டாள்தனம் என்று நிருபிக்கப்பட்டால் என்னுடைய நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ள கண்டிப்பாக தயங்க மாட்டேன், ஆனால் நீங்கள் எடுத்திருக்கும் நிலையிலிருந்து உங்களால் மாற இயலுமா ?
//

ஐயா, நான் ஏதும் நிலை எடுக்கவில்லை.
என்னைப் பொறுத்தவரையில்
தமிழ்நாடு, தமிழர் நலன் குறித்த
எல்லா விதயங்களிலும் மக்கள்
அரசியல், சாதி, மதம் என்ற இவற்றிற்கு
அப்பாற்பட்டு ஒருமித்து இருக்க வேண்டும் என்பதே.

சாதி கடந்து தமிழர் என்று ஒன்று படுவதை மட்டுமே நான் விரும்புகிறேன்.

கர்நாடகா, கேரளா, மராட்டியம்,
குசராத் போன்ற மாநிலங்களில் நல்ல
மக்கள் ஒற்றுமை இருக்கிறது,

தமிழகத்தில் சாதியாலும் தமிழ்நாட்டு
மக்களுக்கே உரிய ஆணவத்தாலும் பிரிந்து கிடக்கிறது.

இந்த நிலை கவலைக்குரியது.

எனது கொள்ளுப் பேரர் காலத்தில்
கூட இது சரியாகும் என்று தோன்றவில்லை :-))

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்
மாற்றம் எதிர்பார்த்து மகிழ்கின்றேன்.

கருத்துகளுக்கும் விவாதத்திற்கும்
மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்
 
நீங்கள் பெயரை உடான்ஸ் நாராயணன் என்று மாற்றி வைத்துக்கொள்ளல் நலம்...!!!!
 
எழுதுனதெல்லாம் நல்லாதான் இருக்கு. உண்மைதான் கொஞ்சம் குறைச்சல் போலிருக்கு.
 
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் வாதங்கள் அனைத்துமே strawman வகையினதாகவே இருப்பதாக எனக்குத் தோன்றும். அவற்றைப் பற்றி படித்துப் புரிந்து கொள்ள பொறுமை இல்லை.

நாக இளங்கோவனின் விளக்கங்கள் பல கேள்விகளுக்குப் பொருத்தமான விடைகளைத் தந்து விட்டன. நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்
 
சேது தமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பாக தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை ஒன்று உருவாகி வருகிறது.

இத்திட்டம் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அறிவினை அங்கே பதிவு செய்து கட்டுரையை வளர்த்தெடுப்பதன்மூலம் ஆக்கபூர்வமான பணி ஒன்றில் பங்கெடுக்க அனைவரையும் அழைக்கிறேன்.

விக்கிபீடியா கட்டுரை
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


成人電影,微風成人,嘟嘟成人網,成人,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,成人文章,成人影城,愛情公寓,情色,情色貼圖,色情聊天室,情色視訊

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
கடல் என்றால் என்ன நீரோட்டம் என்றால் என்ன லாபம் என்றால் என்ன நஸ்டம் என்றால் என்ன என்று தெரியாத பலர் தமிழகத்தில் இத்திட்டத்திற்கு ஆதரவுடன் பேசுகிறார்கள். மன்னார் வலைகுடா பகுதிகள் அதி வேக நீரோட்டம் உடையது, சில மாதங்கலிலேயே தோண்டிய இடம் தெரியாத வண்ணம் போய்விடும். கடலில் நீச்சல் கூட அடிக்க தெரியாதவர்கள் கப்பல் போக்குவரத்து பற்றி பேசுகிறார்கள். இருப்பதை விட்டுவிட்டு ப்றக்க ஆசை கொள்கிரார்கள்.மீனவ வாழ்வு என்றால் என்ன என்று தெரியாத சிலர் மீனவர்கலை குறை கூறுகிறார்கள். கருணானிதி ஒரு மனிதரெ அல்ல, தமிழ்னாட்டின் சாபக்கேடு.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]