Oct 4, 2007

[இந்தியா] பாருக்குள்ளே நல்ல நாடு!

பஞ்சாப் , ஹரியானாவின் விவசாயிகளுக்கு காசு கொடுக்க மறுக்கும் மத்திய அரசு, ஆஸ்திரேலியாவிலிருந்து கோதுமையினை இறக்குமதி செய்திருக்கிறார்கள். கொள்முதல் விலையாக ரூ.9 [ஒரு கிலோவிற்கு என்று நினைக்கிறேன்] இந்திய விவசாயிகளுக்கு தர மறுத்த நடுவண் அரசு தான், கிலோ ரூ.13-க்கு மட்டமான கோதுமையினை இறக்குமதி செய்து விநியோகித்திருகிறது. இந்த வார பிஸினஸ் டூடேயில் படித்தது. ஆனால் அமைச்சர்களோ அடுத்த 11 மாதத்துக்கு தேவையான சரக்கு நம்மிடத்தில் இருக்கிறது என்று ஜல்லியடிக்கிறார்கள். வாங்கி சாப்பிட்ட மக்களுக்கோ எல்லா வியாதியும் வருமளவுக்கு quality control பார்த்திருக்கிறார்கள். இந்தியாவில் நீங்கள் விவசாயியாக இருந்தால், ஒழுங்கு மரியாதையாக நகரங்களுக்கு வந்து கூலியாட்களாக வேலை பாருங்கள். அதிகப்பிரசங்கித்தனமாக விவசாயமெல்லாம் பார்க்காதீர்கள் என்று சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது.

பார்க்க: சி.என்.என்.- ஐ.பி.என் செய்தி

ராஜின்ந்தர் பூரிக்கு இருக்கக்கூடிய தைரியம் சும்மா சொல்லக்கூடாது. அவுட்லுக் போன்ற ஒரு முக்கியமான பத்திரிக்கையில் திமுக தலைவர் கருணாநிதியினை கிழித்திருக்கிறார். இதில் கருணாநிதியினை உள்ளே தள்ளச் சொல்லும் சட்டம் வேறு.

"Did Ram study engineering in college? He was a drunkard. There is no historical evidence that Ram ever existed," Tamil Nadu CM M. Karunanidhi has said. It matters little what Ram was or was not. What matters is that this veteran politician has violated Section 153-A of the Indian Penal Code by creating disaffection among communities. Under law, he can be prosecuted and sent to prison for three years.

அடுத்து ராஜின்ந்தர் பூரி கிழிக்க வேண்டிய கியுவில் இருப்பவர்கள் - ஜெயலலிதா, அத்வானி, சோனியா, மன்மோகன் சிங் மற்றும் மொத்த சங் பரிவார் கும்பல். எழுத்தினை படித்தப் போதே இது ஒரு ஆரஞ்சு பார்ட்டி என்று கண்டிப்பாக தெரிகிறது. "மவனே நீ மெட்ராஸ் வராமயா போய்டுவே, அப்ப வைச்சுகறோம் மச்சி கச்சேரிய"

முக்கிய எச்சரிக்கை: இதய பலவீனம் கொண்டவர்கள், சடாலென உணர்ச்சி வசப்படுபவர்கள், திமுக தொண்டர்கள் இதை படிக்காமல் இருப்பது நல்லது.

பார்க்க - அவுட்லுக் - புல்ஸ் ஐ

அருகருகே இரண்டு ட்ரெயின்கள் ஸ்டேஷனுக்கு வந்ததில் ஏற்பட்ட நெரிசலில், உத்தரபிரதேஷின் முஹல்சராயில், ஏற்பட்ட தடியடியில் 14 பெண்கள் மரணமடைந்திருக்கிறார்கள். இறந்த பெண்கள் அனைவரும் பீகாரினை சேர்ந்தவர்கள். ஜூதியா என்கிற பண்டிகையினை கொண்டாட உத்தரபிரதேஷுக்கு வந்திருந்தவர்கள். ஜூதியா என்பது அம்மாக்கள் தங்கள் மகன்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுவது, எப்படி தமிழ்நாட்டில் பெண்கள், தங்கள் கணவன்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று வரலட்சுமி நோன்பு இருப்பார்களோ அதைப் போல. ஆனால் இந்த தடியடி வெறும் நெரிசலால் மட்டும் ஏற்பட வாய்ப்பில்லை., இவ்வளவு பெண்களும் ஏன் இரண்டு டிரெயின்களை பிடிக்க இவ்வளவு அவசரப்படவேண்டும், 10 நிமிட இடைவெளியில் ஒரே இடத்துக்கு போக இரண்டு டிரெய்ன்களை எப்படி ரெயில்வே நிர்வாகம் அனுமதித்தது [கோயம்பேடு போன்ற பஸ் நிலையங்களில் இது சாத்தியம்] பல கேள்விகள், ஆனால் போனது அப்பாவி உயிர்கள். இந்தியாவில் உயிர்களுக்கான மரியாதை இவ்வளவுதான். நண்பர் சுரேஷ், கொத்து பரோட்டா எழுதிய போது எழுதிய பின்னூட்டத்தில் ஏன் எல்லா ஊர்களின் இருண்மையான பக்கங்களை மட்டுமே எழுதுகிறீர்கள் என கேட்டிருந்தார். உண்மையில் நிழலுலகத்தினை விட Establishment மிக பயங்கரமானதாக இருக்கிறது. இதைப் பற்றிய முழுமுச்சான செய்திகள் நாம் படிக்கும் செய்தித்தாள்களில் இடம் பெறும் 'தகுதி' பெறுமா என்று தெரியவில்லை, அதனாலேயே ஒரு கவன ஈர்ப்பாக இருக்கட்டுமே என்று இருண்ட பக்கங்களை எழுதுகிறேன்.

பார்க்க - டி.என்.ஏ செய்தி

India Shining என்கிற தேசபக்தி பிரச்சாரத்தினை கையிலெடுத்து அதற்கு அரசு பணத்தினை வாரியிறைத்து வீட்டுக்கு போனார்கள் பி.ஜே.பியினர். அப்போது காங்கிரஸ் மிக சாதுர்யமாக, வேலை கிடைக்கலை, வருமானம் இல்ல என சொல்வது போல ஒரு விளம்பரத்தினை போட்டு கல்லா கட்டி ஆட்சியிலும் அமர்ந்தாகி விட்டார்கள். டெல்லியிலிருக்கும் இருக்கைககளில் மந்திர மாயாஜாலங்கள் இருக்கும் போலிருக்கிறது. பின்னே, பி.ஜே.பியினர் செய்த அதை தவறினை கொஞ்சம் ஸ்மார்ட்டாக, India@60 என்கிற பெயரில் நியுயார்க் நகரில் ஒரு பெரும் கூத்தினை 10 மில்லியன் டாலரில் [சுமார் 40 கோடி] அரசாங்கம் செய்து முடித்திருக்கிறது.

The $10-million mega promotional blitz of India@60 makes for an interesting story, The four-day marketing showcase, named IncredibleIndia@60, and abbreviated to India@60, had a singular purpose of promoting the country in the financial capital of the world. The branding campaign that began on 23 September was part of the 60th anniversary celebrations to commemorate Indian Independence. It was organised by the Ministry for Tourism and Culture, and the Confederation of Indian Industry (CII), an industry body.

இதில் என் கண்ணில் பட்ட ஒரு விளம்பரத்தின் வாசகம் தான் என்னை அதிர செய்தது "Ninety per cent of MNCs make a profit in India,” screamed a billboard in the ultra-expensive Times Square advertising space, in a bid to project India as a favourable investment destination." இந்த நாட்டில் ஒரு பக்கம் ஏழை விவசாயிகளுக்கு ரு.9 வழங்க முடியாத அரசு, விபத்தில் இறந்துப் போன அப்பாவி பெண்களுக்கு நஷ்டஈடு தர வருடங்களை இழுத்தடிக்கும் அரசு, பிரச்சனைகளை உள்நோக்காமல் ராமரா, பாபரா, கருணாநிதியா, ஜெயலலிதாவா என பொறுப்பின்றி பேசி திரியும் ஊடகங்கள், இவைகளுக்கு நடுவில், இந்திய பெருமையினை நிலைநாட்ட நியுயார்கில் செலவு 40 கோடி ரூபாய்கள். எங்கே போகிறோம் நாம் ? அப்புறம் ஏன் நாடு முழுக்க ஏற்றத்தாழ்வுகள் வந்து, ஆயுத போராட்டம் நடக்காது ?

பார்க்க - பிஸினஸ் வேர்ல்டு செய்தி [அனுமதி தேவை]

Labels: , , , , ,


Comments:
அதிலும் நாராய்ண்,கோதும்மையில் அதிகமான அளவு பூச்சிகொல்லி மருந்து இருப்பதாக முதலில் 8 மாததத்துக்கு முன் இந்திய அரசாங்கம் சொன்னதாக ஆஸ்த்ரேலிய டிவியில் வந்தது. இது அந்த கோதுமயா தெரியவில்லை.


ஏழைகளுக்கு எதுவும் கிடயாது. வாதிடிபவர்களுக்கும் நல்லது கிடைக்கது.டாக்டர் பினாயக் சென் போல.
 
நாரயண்,

இப்படித்தான் இந்த அரசியல்வாதிக்களுக்கு/அதிகாரிகளுக்கு ஏழை மக்களுக்கு வழங்கும் உணவு பொருட்களில் தரமில்லாமல் வழங்க மனசு வருகிறதோ,

இந்த விஷயத்தில் தமிழக அரசாங்கம் எவ்வளவோ பரவாயில்லை( தி.முக.க மற்றும் அ.தி.மு.க)

நியாய விலை கடைகளில் நல்ல தரமான கோதுமையை மாநில அரசாங்கம் வழங்கி வருகிறது. என்ன கோதுமையை சற்று முறத்தில் புடைத்து விட்டால் முதல் தர கோதுமை தயார்.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் மனிதர் சாப்பிட லாயக்கில்லை என்று ஒதுக்கப்பட்ட கோதுமை இது என்று இன்று காலை செய்தி தொலைக்காட்சியில் சொன்னார்கள்.

அன்புடன்
அரவிந்தன்
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

a片下載,線上a片,av女優,av,成人電影,成人,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,成人文章,成人影城,成人網站,自拍,尋夢園聊天室

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]