Oct 15, 2007

[இந்தியா] Exclusive Growth - Inclusive Inequality

இந்தியாவில் 1991-க்கு பிறகு ஏற்பட்ட உலகமயமாக்கலால், வறுமைக் கோடு மெலிந்து விட்டது. முதல்வனில் ரகுவரன் சொல்வதுபோல, எல்லார் வீட்லயும் கேபிள் டிவி இருக்கு, செருப்பு போடறாங்க, தி.நகர்ல நகைக்கடையிலயும், புடவைக்கடையிலும் மக்கள் கியுவுல நிக்கிறாங்க என ஒட்டு மொத்தமாய் ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் ஒரு பக்கமும், OMR-ல ஒரு ப்ளாட் பார்த்தேன் DLF பில்ட் பண்றான், 70 லேக்ஸ் சொல்றான், லோன் போடலாமன்னு யோசிக்கிறேன், Why can't you take up a Sherton Loyalty card sir, we will give you 50% discount on your food bill, if you dine with 2 people, and 33% for 3 people and 20% for 4 and above என தொலைபேசியில் கொஞ்சும் வடக்கத்திய பெண்களும், இந்த தீபாவளி சாம்சங் தீபாவளி என மடக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் இன்னொரு புறம் இருக்க, இந்தியாவில் எங்காவது ஒரு மூலையில் விவசாயிகளும்,நெசவாளர்களும்,மீனவர்களும் செத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

Center for Policy Research in India-விலிருந்து படித்த ஓரு அறிக்கை பகீரென்றது. ஐகாரஸ் பிரகாஷ் தன்னுடைய பதிவில் சாய்நாத்தின் புத்தகம் பற்றி சொல்லி இந்தியா நாறுகிறது என சொல்லியிருப்பார். கொஞ்சம் ஆழமாய் அரசாங்கம் கொடுக்கும் புள்ளிவிவரங்களையும், அறிக்கைகளையும் ஆழமாக ஆராய்ந்தால், உண்மை, நாறவில்லை ஆனால் பயமாகவும், வேதனையாகவும், வெறுப்பாகவும் இருக்கிறது. 'கற்றது தமிழோ', 'அன்னியனோ', 'இந்தியனோ' இல்லை இனிமேல் வரப்போகும் 'கந்தசாமியாலேயோ' எதையும் புடுங்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

உதாரணத்திற்கு சில குறியீடுகள்

Exclusive Growth - Inclusive Inequality Total Report [20 பக்கம்]

Labels: , , ,


Comments:
This comment has been removed by the author.
 
என்ன சொல்ல வரிங்க நாரயண்,

அப்ப இந்தியா ஒளிரவில்லையா

அன்புடன்
அரவிந்தன்
 
அரவிந்தன், நான் ஜல்லியா, இல்லையா என்பது ஒரு மேட்டரே இல்லை. ஆனால் முழுவதுமாக விஷயத்தினை படிக்காமல், பொத்தாம்பொதுவாக ஜல்லி என சொல்வதின் விசயம் புரியவில்லை. இந்தியா ஒளிரவில்லை என்பதை என்னுடைய பாருக்குளே நல்ல நாடு என்கிற பதிவில் எழுதியிருப்பேன். எதை வைத்து ஜல்லியடிக்கிறேன் என சொல்ல வருகிறீர்கள்.

சென்செக்ஸ் 19K தொட்டால் இந்தியா ஒளிர்கிறதா ? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டவுடன் இந்தியா ஒளிர்கிறதா ? மால்கள், மெக்டோன்ல்ட்ஸ்குள், கே எப் சிகளால் இந்தியா ஒளிர்கிறதா ? மணிப்பூரில் தனிக் கொடி ஏற்றி இந்தியாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். அஸ்ஸாமில் ULFA-வின் அரசாங்கம் தனியாக நடக்கிறது. எல்லை தாண்டி வந்த பங்களாதேஷி அகதிகள் தனித்தொகுதி கேட்கும் அளவிற்கு மேற்கு வங்கமிருக்கிறது. 30 வருடங்களாகியும், ஆந்திராவில் நக்சல்களின் அரசு நடந்து கொண்டு தான் இருக்கிறது. மஹாராஷ்டிரா, ஆந்திரா என மாநிலவாரியாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் இந்தியாவின் அதிகாரமிருக்கிறதா இல்லையா என தெரியாத அளவிற்கு அரசு நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் மெட்ரோக்கள் என சொல்லப்படும் ஆறு நகரங்களிலும் ஒட்டு மொத்தமாக கணக்கு பார்த்தால் மக்கள்தொகை 10% கூட தாண்டாது. இந்த நகரங்களில் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன என்பதாலேயே, எல்லாம் மாறிவிட்டது என்று அர்த்தப்படுத்திக் கொள்வது வருந்ததக்கது. விவசாயிகளின் இறப்புகளும், வேலையில்லாமல் நகரத்துக்கு இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் அல்லாடல்களின் குருரங்களும், கொஞ்ச நஞ்ச அடிப்படை பொருளாதாரமும், அரசியலும், பிரச்சனைகளும் தெரியாமல் வளர்ந்து வரும் நகர இளைஞர்களின் கூட்டமும் - கொஞ்சம் தூரே நின்று நிதானமாக பார்த்தால் நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக உணர்த்தும். வெகுஜன ஊடகங்களின் பிடியில் நீங்களும் மாட்டிக்கொண்டு அதையும் நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் பின்னூட்டத்தினை பார்த்தால் தெரிகிறது. எல்லாவற்றுக்கும் வரலாறு என்ற ஒன்று இருப்பது போல, இந்த மிகையாக்கப்பட்ட ஓளிருதல் சொல்லாடல்களின் பின் ஒரு sub-altern வரலாறு இருக்கிறது. கொஞ்சம் அக்கறையும், தெளிவும் இருந்தால் எது Hype எது உண்மை என்கிற நிலவரம் புரியவரும்.
 
அன்பின் நாரயண்,

//வெகுஜன ஊடகங்களின் பிடியில் நீங்களும் மாட்டிக்கொண்டு அதையும் நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் பின்னூட்டத்தினை பார்த்தால் தெரிகிறது//

நான் களத்திலிருந்து வரும் செய்திகளையே நம்புகிறவன்,

தமிழ் நாட்டின் கிராமங்களில் தற்பொழுது ஆண்களுக்கு குறைந்தபட்சம் ரு75-ம் பெண்களுக்கு குறைந்தபட்சம் ரூ50 குறைந்தபட்சமாக கிடைக்கிறது.(விவசாய கூலிகள் உட்பட)

சென்னை பெரும்பாலன ரேஷன் அட்டையில் குடுமப வருமாணம் ரூ1000 என்றே இருக்கும்.ஆனால் சென்னையில் எந்த வேலை செய்தாலும் இன்று குறைந்தபட்சம் ரூ2000 சம்பாதிக்கலாம்.ஆகவே அரசாங்க அறிக்கைகளை நாம் முழுமையாக நம்பிவிடமுடியாது.

அன்புடன்
அரவிந்தன்
 
"ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன - கலீல் கிப்ரான்

தங்கள் பதிவின் மேல் பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த அறிஞனின் பொன்மொழிகள் தாம் இந்தப்பதிவிற்குப் பதிலாக இருக்க முடியும்.

ஆடுகள் விலகினால் தான், மேய்ப்பவனின் கவனம் திரும்பும். தோளில் தூக்கிப்போட்டுக்கொள்ளும் அக்கரை வரும்.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை, சில நேரங்களில் அதற்கு முன்னாலேயே வரும் சடங்கில் எப்படியோ ஏமாற்றி விடுகிறார்கள். அந்தக்கலையில் வல்லவர்களாக, தேர்ந்து இருக்கிறார்கள்.

என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.nqauoq
 
can we say India is flickering(or blinking)
in my opinion India is at a threshold of either making it big or drowning.
If we took india's stand today as a flickering fire...and if people safe guard it and boos it it can become a huge fire (like people boosting dimming fire) or you can put it down by just standing aside and see off dying it...
i haven't seen so much pessimists as in india (or indians) than anywhere else...
i think with these kind of people India will note surely survive...
if children are bad(or selfish)..the parents are bound to suffer..India is not an exception either.
 
நாரயண்,
இந்தியா ஒளிரவும் இல்லை மினுக்கவும் இல்லை. கிழிந்த பாவடை/அன்ட்ராயர் போட்டுக்கொண்டு வெளியே பட்டு சேலை/வேட்டிக் கட்டிய மனிதர்கள் போல்தான் இந்தியா இருக்கிறது.

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html

சாய்நாத் போன்றோரின் புலம்பல்களைவிட சாருக்கானே மனிதர்களுக்குப் பிடித்தவர். மந்தையில் இருந்து விலகும் ஆடுகள் சிலவே.
 
அரவிந்தன்,

எதை வைத்துக் கொண்டு அப்படி ஒரு முடிவுக்கு வந்தீர்கள் என புரியவில்லை. அப்போது அரசாங்க அறிக்கைகளின் validity என்ன ? ஒரு வாதத்துக்கு அரசாங்க அறிக்கைகள் டூபாக்கூர் என்றே வைத்துக் கொள்வோம், ஆனால் சாய்நாத்தின் இந்த அறிக்கை 2002-இல் வந்தது.

The policies of the past decade have smashed what little the rural poor have had on the public health front. The drive towards privatisation and "user fees" has been thorough. Indeed, loans taken for health spending make up one of the fastest growing segments of rural debt in the country. Children will drop out of school in large numbers because they can't afford to go. Or to join their migrating parents. That's what happened most years of the ongoing crisis, drought or no drought. In one part of Anantapur last year, the children spent most of August earning money for their families by capturing pests. Landowners paid them Rs.10 for each kilogramme of Red Hairy Caterpillar they brought in. A kilo meant catching over 1,000 caterpillars. In a part of Ananthapur last year, children spent most of August earning money for their families by capturing pests. There's an urgent need to provide work and incomes to the rural poor. But most governments don't want to spend even the modest cash component that major food-for-work programmes need. They can tolerate Rs.100,000 crores in unpaid debt by a handful of business houses that even the finance minister calls "a loot". [http://indiatogether.org/opinions/psainath/droughtseries1.htm]

2006-07 களில் அனந்த்பூர், விதர்பா, மாண்டியா என வரிசையாய் தற்கொலை சாவுகள். நீங்கள் சொல்வது போல சராசரியான வருமானம் கிராமங்களில் கிடைத்தால், ஏன் பெரும்பாலானவர்கள் நகரங்களுக்கு படையெடுக்கிறார்கள் ? நாம் பேசும் 'இந்தியாவிற்கும்', ஊடகங்களினால் உருவாக்கப்பட்ட 'இந்தியாவிற்கும்', இதற்கெல்லாம் கீழே உண்மையாகவே இருக்கும் இந்தியாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஒரு மடல் அனுப்பியிருக்கிறேன். இந்தியாவுக்கு உள்வரும் FII பணமும், அதன் பின்விளைவுகளும் என, ஐ எம் எப் [http://www.imf.org/external/pubs/ft/survey/so/2007/POL1010A.htm] அறிக்கையொன்றினையொட்டி நீங்கள் இணையத்தில் படிக்கலாம். அதில் அவர்கள் சொல்லும் ஒரு பிரச்சனை நம்மை மாதிரியான நகரத்திலிருந்து கொண்டு சென்செக்ஸும், கமாடிட்டி மார்க்கெட்டும் பார்க்கும் மக்களுக்கு உதவலாம்.

என்னுடைய வாதம் எல்லாம், முன்னேறியிருக்கிறோமோ இல்லையா என்பது இல்லை. எப்படிப்பட்ட முன்னேற்றம் என்பதில்தான் விஷயமிருக்கிறது. மற்றும் என்ன விலை முன்னேற்றத்திற்க்காக கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் இருக்கிறது.
 
//தமிழ் நாட்டின் கிராமங்களில் தற்பொழுது ஆண்களுக்கு குறைந்தபட்சம் ரு75-ம் பெண்களுக்கு குறைந்தபட்சம் ரூ50 குறைந்தபட்சமாக கிடைக்கிறது.//

அடேங்கப்பா. அவ்வளவு கிடைக்குதா என்ன?

//ஊர்களில் கிடைக்கக் கூடிய தினக்கூலி பெண்களுக்கு ரூ.30 ஆண்களுக்கு ரூ.35//

ன்னு நாராயண் எழுதினதயே, "அடேங்கப்பா இவ்வளவு கிடைக்குதா என்ன"ன்னு எழுதலாம்னு மறுமொழிப் பெட்டியத்திறந்தா, அதுக்குள்ள, ரூ50-75ஆனதப் பார்த்து வாயடைச்சுப் போயிட்டேன்.

நாடு முன்னேறிக்கிட்டுத்தான் இருக்கு போலிருக்கு.
 
//தமிழ் நாட்டின் கிராமங்களில் தற்பொழுது ஆண்களுக்கு குறைந்தபட்சம் ரு75-ம் பெண்களுக்கு குறைந்தபட்சம் ரூ50 குறைந்தபட்சமாக கிடைக்கிறது.//
அரவிந்தன் >> கண்டிப்பா 50-75 (எங்க பக்கம் 60-80) கிடைக்குது.. ஆனா அது வருசத்துல ஒரு ஐம்பது - அறுபது நாள் தான். 365 நாளும் அந்த கூலி வேணும்னா பெருநகரங்கள்ல போயி செங்கல் தூக்கனும்..
(நல்ல கூலி தானேன்னு சொன்னீங்கன்னா தினம் தினம் கட்டுமானங்களுக்கு நடுவே தூசியிலயும் குப்பையிலயும் செங்கல் சுமந்தா வர்ற வியாதிகருமத்துக்கு செலவு செய்ய அவுங்க பத்து வருசம் வாங்கின கூலிய சேர்த்து வச்சாலே பத்தாது)
 
//>> கண்டிப்பா 50-75 (எங்க பக்கம் 60-80) கிடைக்குது.. ஆனா அது வருசத்துல ஒரு ஐம்பது - அறுபது நாள் தான்.//

அப்போ ஆவெரேஜ் போட்டா, ரூ8 -லிருஉந்து ரூ13 தான ஆகுது?
 
அதைத்தானே கூவிக்கிட்டு இருக்கோம், இந்தியா ஒளிரல, சும்மா மின்மினி பூச்சியோட ஜொலிப்புதான் இதுன்னு. இது புரியவா இவ்வளவுநேரம் ;)
 
//அதைத்தானே கூவிக்கிட்டு இருக்கோம், இந்தியா ஒளிரல, சும்மா மின்மினி பூச்சியோட ஜொலிப்புதான் இதுன்னு. இது புரியவா இவ்வளவுநேரம் ;)///

யார்கிட்ட சொல்றீங்க? புரியாதவங்ககிட்ட கூவுங்க.
 
I was being sarcastic in my previous comments, I guess I wasn't very successful there.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]