Nov 6, 2007

[இந்தியா] சமச்சீரின்மை - ட்ரைய்லர் 3

காட்சி 1
லியாகத் அலி என்றொருவர் பல பெண்களை மயக்கி ஏமாற்றி அவர்களை பாலியல் தொழிலில் தள்ளியதாக குற்றம்சாட்டப்பட்டு காவலில் இருக்கிறார். பாலியல் தொழிலாளிகளை மட்டும் குறி வைக்காமல், அவர் குடும்ப பெண்கள், கல்லூரி பெண்கள், என casual sex workers-ஆக நிறைய பேரினை மாற்றி இருக்கிறார். லியாகத் அலி குற்றவாளி என்பதில் சந்தேகமில்லை, ஆனால், அவருடைய நெட்வொர்க்கில் இருக்கும் பல்வேறு குடும்ப/கல்லூரி பெண்கள் ஏன் casual பாலியல் தொழில் செய்ய வேண்டும். எது அவர்களை இந்நிலைக்கு தள்ளியது - வறுமையா, ஆசையா, இன்பமா, பணமா, சமூகமா ?

காட்சி 2
நண்பரோடு நடந்த ஒரு உரையாடல்
"எப்படி வியாபாரமெல்லாம் போகுது"
'ஹா. நல்லா போகுது, ஆனா ஆளுங்க கிடைக்கிறது தான் கஷ்டமாயிருக்கு."
"ஓ"
"போன வாரம் ஒரு ட்ராப்ட்ஸ்மென் பையனை பார்த்து 6000 சம்பளம் + வண்டி தர்றேன், வாடா-ன்னா, ஒரு வாரம் கழிச்சு போன் பண்றான், நான் ஒரு மொபைல் கம்பெனியில சேல்ஸ் ரெப் வேலைக்கு சேர்ந்துட்டேன்னு"
"அப்படியா. டெக்னிகல் வேலைக்காக ஆள் இல்லை, நிறைய பேர் இருப்பாங்களே, என்ஞினியரிங் முடிச்சுட்டு சும்மா இருக்காங்களே"
"எங்க நாராயண், எல்லாரும் காத்துல கனவு காண்றானுங்க, ஆரம்பத்துலயே 10000 சம்பளம் வேணுமுன்னு எதிர்பாக்கறாங்க. அது நடக்குமா?"

காட்சி 3
பிஸினஸ் - ஸ்டாண்டர்ட்டின் இன்றைய இதழிலிருந்து
Despite the importance given, history is replete with instances where people in the regions and countries with abundant natural resources suffer low levels of living. In India, for example, the 40 per cent of the population of the country living in the six states of Bihar, Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, Orissa and Uttar Pradesh generate just about 20 per cent of incomes. Also, while the country has been registering high growth rates, the growth rates registered in these low-income states is much lower. Similar trends are seen in human development indicators. Thus, not only do these states have low incomes, they also have increasing disparities.

காட்சி 4
300 பேர்களை ஏற்றி சொல்லும் பேருந்து ஒரு சிக்னலில் நின்றால், ஆக்ரமிக்கும் இடத்திற்கும், மூணே பேர் போகும் ஒரு இன்னோவா அதில் பாதி இடத்தினை அதை சிக்னலில் அடைத்து கொண்டு நிற்பதற்கும் பின்னுள்ள காரணங்கள் என்ன ? பேருந்து நிலையத்திலோ, ரேஷன் கடையிலோ, பிற இடங்களிலோ வரிசையில் நிற்காத நாம், ஏன் ஏடிஏம்-ல் மட்டும் வரிசையில் நிற்கிறோம் ? வெறுமனே 3000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, ஒண்டு குடித்தனத்தில் கழிப்பறைக்குக் கூட வரிசையில் நிற்கும் சமூகத்தில், ஏன் நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், உயர் பணக்காரர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ? ஏன் எல்லா department store-களிலும் அத்தியாவசியமான அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், கடையின் கடைசியில் இருக்கின்றன, ஆனால் snacks, shampoo, health drinks முன்னாடி இருக்கின்றன ? அமெரிக்காவிலோ, சிங்கப்பூரிலோ குப்பையினை ஒழுங்காக போடும் நாம், மீனம்பாக்கம் வந்தவுடன் எப்படி தரையில் எச்சில் துப்புகிறோம் - Is this unlimited freedom or corruption of our own power in a country?

காட்சி 5
சந்தை பொருளாதாரத்தின் அடிப்படை வாடிக்கையாளர்கள் மற்றும் தேவைகள். சந்தை பொருளாதாரத்தினை தலையாய கடமையாக கொண்டிருக்கும் இந்தியாவில் ரவுடிகள், நிழலாளிகள், இடைத்தரகர்கள், அரசியல் தரகர்கள், போன்றவர்களின் தேவை என்ன ? அவர்களுக்கான வாடிக்கையாளர்கள் இல்லாமல், இவர்களின் தேவை இருக்கப் போவதில்லை. அப்படி இவர்களுக்கு தேவையிருப்பின், அத்தேவையினை உருவாக்கும் காரணிகள் எவை? ஏன் நமக்கான ஒரு சூழ்நிலையில் நாம் தரகர்களை நாடிகிறோம், பின்பு இந்தியாவே சரியில்லை என்று புலம்புகிறோம். துப்பாக்கி தூக்குதல் வன்முறையெனில் எதற்காக பிரபலங்களுக்கு 'பாதுகாப்பு' காரணத்திற்காக துப்பாக்கி உரிமம் கொடுக்கிறோம்.

Blogged with Flock

Labels: , , ,


Comments:
கேள்விகள்... கேள்விகள்...

---டெக்னிகல் வேலைக்காக ஆள் இல்லை, நிறைய பேர் இருப்பாங்களே, என்ஞினியரிங் முடிச்சுட்டு சும்மா இருக்காங்களே---

peer pressure?

---ஏன் எல்லா department store-களிலும் அத்தியாவசியமான அரிசி, பருப்பு போன்ற பொருட்கள், கடையின் கடைசியில் இருக்கின்றன---

அமெரிக்காவிலும் இதே மாதிரிதான். சந்தைப்படுத்தல் ரகசியம்!
 
பாலா,

அவர்கள் ஏன் அப்படி வைக்கிறார்கள் என்று தெரியும் :) இதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது, சொன்னால் பெண்ணியம் பேசுபவர்கள் என்னை கல்லால் அடித்துக் கொன்று விடுவார்கள்.

முதல் கேள்விக்கான பதில் peer pressure மட்டுமில்லை. நீங்கள் கற்றறிந்த தொழிலை விட பிற தொழில்களில் வருமானமதிகம். இந்தியாவில், ஏர்டெல் ஒரு சிம் கார்டு விற்றால் சிம் கார்டு ரீ சார்ஜில் 5- 15% விற்றவர்க்கு போய்விடும், ஆக இது ஒரு லாபகரமான தொழில் :)
 
இனிய நாராயண்,

தொடர்ந்து படிக்கிறேன்.

நானறிந்த சில காட்சிகள்.

அ.
அரசுப் பேருந்து சாலையை அடைத்து நின்றால் தலையைத் திருப்பி ஓட்டுனரை முறைத்துவிட்டுப் போகும் சிலர், தனியார் தொழிற்சாலைப் பேருந்துகள் கண்ட இடத்தில் நின்று ஆள்களை இறக்கிப் போனாலும் ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்று பேருந்து போனதும் புறப்படுவது ஏன்?

ஆ.
சகலவிதமான நவீன உபகரணங்கள் சமையலறையில் இருந்தாலும், இனிப்பு, பலகாரங்களை கடையில் வாங்குவது ஏன்?

உங்கள் தொடரில் சொல்லப்போகும் விடைகளுக்காக ஆவலாக இருக்கிறேன்.

அன்புடன்
ஆசாத்
 
ஆசாத், வருகைக்கு நன்றி. உங்களை விட அதிகமாக சமூகத்தின் இருண்ட, நிழல்திரைகளை நான் பார்த்ததில்லை. தீபாவளியன்று வீட்டிலிருந்து "ஈ". "சென்னை 600028" மற்றும் 'டிஷ்யும்" மூன்றும் பார்த்தேன். ஊடாக ஒரு விஷயமோடியது, ஊகியுங்கள் ;) பார்ப்போம். இவை மூன்றும் சென்னையினை சுற்றி எடுக்கப்பட்ட படங்கள் என்பதை தவிர, தமிழ் சினிமாவிற்கு சம்பந்தமில்லாத சில ஒற்றுமைகள் மூன்றிலும் இருக்கின்றன. அவை பொது வாழ்விலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், ஆனாலும், திரையில் முழுமையாக காட்டப்படுவதில்லை.
 
பெண்ணியமுக்கு பயந்து ஏன் சொல்லாமல் விட்டீர்கள் நாராயண்.என்னகுள் ஒரு சீப் த்ரில்..இனிமேல் ஆண்களுக்கும் தங்களுடய தோற்றத்தை பற்றிய ஒருவித ஆங்க்ஸ்ட் வந்திருப்பதால், ஆணழகு பொருட்களும் இனிமேல் கண்ணாடியில் வைக்கப்படலாமல்லவா?முன்பு ஒருமுறை உங்கள் பதிவில் எழுதுயது போல்,இப்பொழுது உள்ள 'பெண் ' என்ற இந்த கான்செப்ட் கபிடலிசமுக்கு தேவை.பெண்களுக்கு ஒரு ஆணின் அப்ப்ரூவல் என்பது ஒவ்வரு நாட்டின் தேவைக்கு ஏற்ப்ப மாறுகிறதே ஒழிய மறயவில்லை. அதன் வெளிப்பாடுதான், அனரக்ஸியா நர்வோசாவும் ,டீன் ஸெக்சும்.எத்தனயோ டீன் பெண்களுக்கு ஸெக்ஸ் தேவை என்று கூட தோன்றாவிட்டாலும் பீய்ர் ப்ர்ஷ்ஷர், மற்றும் 'பாய் ஃரெண்ட்'வைத்தால் கிடைக்கும் அங்கீகாரம் மிகவும் தேவைப் படுகிறது.

எனவே எல்லாம் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தப்பட்டது தான்.இதர்க்குமேல் விளக்கமாக எழுத எனக்கு திறமை இல்லை.
 
//300 பேர்களை ஏற்றி சொல்லும் பேருந்து ஒரு சிக்னலில் நின்றால், ஆக்ரமிக்கும் இடத்திற்கும், மூணே பேர் போகும் ஒரு இன்னோவா அதில் பாதி இடத்தினை அதை சிக்னலில் அடைத்து கொண்டு நிற்பதற்கும் பின்னுள்ள காரணங்கள் என்ன ? பேருந்து நிலையத்திலோ, ரேஷன் கடையிலோ, பிற இடங்களிலோ வரிசையில் நிற்காத நாம், ஏன் ஏடிஏம்-ல் மட்டும் வரிசையில் நிற்கிறோம் ?//

இது வரை சிந்தித்துப் பார்த்திராத கேள்விகள். முன்னோட்டத் தொடரே ஆர்வமூட்டுகிறது..

பி.கு - 300 பேர் பேருந்தில் போவது சாத்தியமா இல்லை எழுத்துப் பிழையா :)
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


av女優,av,av片,aio交友愛情館,ut聊天室,聊天室,豆豆聊天室,色情聊天室,尋夢園聊天室,080聊天室,視訊聊天室,080苗栗人聊天室,上班族聊天室,成人聊天室,中部人聊天室,一夜情聊天室,情色聊天室,情色視訊

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]