Nov 27, 2007
[பொது] பிடித்தொன்போது
- என்னைச் சுற்றி வந்திருக்கும் காதலுக்கு, சொல்லியனுப்பு [வரிகள் மாறி இருக்கலாம்] என துவங்குகிறது அந்தப் பாட்டு. காதலிக்க நேரமில்லை என்று விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் ஒரு தொடரின் ஆரம்பப் பாட்டு. மஹதி்யின் குரலாகதான் இருக்க வேண்டும். யாரந்த நாயகி [வேண்டாம் சொல்லாதீர்கள், நான் ரசித்த பெரும்பாலான சின்னத்திரை நாயகிகளின் வாழ்வு தற்கொலையில் அல்பாயுசில் முடிந்திருக்கிறது - உ.ம். ஷாலினி, வைஷ்ணவி] திரைப்பாடல்களை விட அருமையாக இருக்கிறது. அதே வரிசையில், நண்பர் யுகபாரதி எழுதிய மதுரை தொடரின் பாடலும்[சீறும் சிலம்பெடுத்து....] கலவரமாக, அருமையாக இருக்கிறது
- பொல்லாதவனில் வரும் கருணாஸின் "மச்சி நீ கேளேன், நீ கேளேன், டேய் நீ கேளேன்" ரொம்ப நாட்களுக்கு பிறகு ரசித்து பார்த்த பக்கா அக்மார்க் லோக்கல் காட்சி. கொண்டித்தோப்பில் செல்வம் டீக்கடை என்ற ஒரு டீக்கடை ஒன்று இருந்தது. நானும் நண்பர்களும் பெரும்பாலும், இரவு அங்குதான் டீ குடிப்போம். மச்சி, வர்ற அவசரத்துல காசு கொண்டார்ல, நீ குடேன் அப்புறம் தரேன் என பேசி பேசி, ஒருத்தர் மாற்றி ஒருத்தர் டீ குடித்திருக்கிறோம். அந்த காலங்கள் நினைவுக்கு வந்தது
- மூன்று வருடங்களுக்கு முன்பு நானும், சாரு நிவேதிதாவும் எங்கேயாவது சாப்பிட [குடிக்க அல்ல] போகலாம் என நினைத்து கே.கே.நகர் அஞ்சுகத்தில் சாப்பிட்டு வீடு திரும்பும்போது அந்த சின்னத்திரை நடிகரை எதிரில் பார்த்தேன். ATM அளவுக்கு ESP சக்திகள் இல்லாமல் போனாலும், சில உள்ளுணர்வுகள் பலிக்கும், அந்த வகையில் அந்த நடிகர் செம ரவுண்டு வருவார் என்று அன்றே உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேன். அந்த நடிகர் - டேனியல் பாலாஜி பொல்லாதவனில் பின்னி பெடலடெடுத்திருக்கிறார் [அந்த குத்துப்பாட்டு கொஞ்சம் ஒவர் மச்சி]
- வெட்டியாய் சனியன்று சானல் மாற்றிய போது கிரண் டிவியில் பிரபு தேவாவின் அலாவுதீன். அது ஒரு மொக்கையான படம் என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது. ஆனால், நான் தீவிர பிரபு தேவா ரசிகன், நடனம் மட்டுமல்ல, நடிப்பிலும், நம்மாளு சில சமயங்களில் வெளுத்து வாங்கியிருப்பார். நடிகர் பிரபுதேவாவின் அந்திம காலத்தில் நடித்த படம், ட்ரைய்லரிலேயே பல நாள் ஒடிய படம். ஆனாலும், ஆஷிமா / பிரபு தேவா / மணிவண்ணணுக்காக உட்கார்ந்து பார்தேன். இன்னமும் பிரபு தேவா நடித்த படங்களின் இடம் காலியாக இருக்கிறது.
- அடுத்த வாரிசு என்றொரு ரஜினி படம். அப்படத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல், ஆனால் கேட்டால் ரிபீட்டு என்பது மட்டுமே சொல்லக்கூடிய ஒரு பாடல், "பேசக் கூடாது, வெறும் பேச்சில் அல்ல", ரஜினியும், சுமிதாவும் ஆடும் பாடல். பார்த்த அன்றிலிருந்து ஹம்மிங்கில் அதுதான் ஒடுகிறது. யாரிடத்திலாவது எம்பி3 இருப்பின் மின்னஞ்சலில் அனுப்புங்கள், என்னுடைய ஒரு நாள் பாவ/புண்ணியங்கள் உங்கள் அக்கவுண்டில் கிரெடிட் ஆகும்
- End of Faith - Sam Harris, Super Crunchers: How everything in the world can be predicted - Ian Ayers, Blue Ocean Strategy - Chan Kim & Renee Mauborgne, Making Globalization work - Joshph Stiglitz போன்றவை தான் நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு தளத்தில் இருந்து படித்துக் கொண்டிருப்பவை. Freakonomicsஇன் தொடர்ச்சியாக Under cover Economist - Tim Harford பதிவினை படித்து வருகிறேன். மிகவும் சுவாரசியமான பதிவு. தமிழில் சமீபத்தில் உண்மையில் எந்த புத்தகமும் படிக்கவில்லை. தொடர்ச்சியாக படித்து வருவதெனின், இரா.முருகன், திணமணி கதிரில் எழுதி வரும் non fiction தொடர். தொடர்ச்சியாக படிப்பதன் மூலம் என்னுடைய பல நம்பிக்கைகளையும்/அவ நம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறேன்
- கலைஞர் தொலைக்காட்சியில் பொறுமையாக உட்கார்ந்து அஜீத் பேட்டி பார்த்தேன். மனிதருக்கு நல்ல தெளிவும், பொறுமையும், கவனித்து பேசுதலும், சமூகம் பற்றிய கேள்விகளும், பிம்பமாய் இருப்பதின் வேதனைகளும் என ஒட்டு மொத்தமாக நிதானமாக இருப்பது கைவந்திருக்கிறது. ஒரு வெகுஜன நாயகனுள் இருப்பது வியக்க வைக்கிறது. மற்ற படி, பில்லா ட்ரைய்லர் உண்மையிலேயே மிரட்டலாய் இருக்கிறது. காக்க காக்க, கஜினிக்கு பிறகு தமிழில் இவ்வளவு ஸ்டெயிலிஷாக ஒரு படம் பண்ண முடியுமா என்று கேட்க வைத்திருக்கிறார் விஷ்ணுவர்தன். விஷ்ணுவின் திறமை மீதும், film making மீதும் [மறக்க முடியுமா - தீப்பிடிக்க தீப்பிடிக்க] பெருமளவு நம்பிக்கையிருக்கிறது. நயன்தாராவின் உடையமைப்புகள் என்னவோ X-Men னில் ஹாலி பேரியின் உடையமைப்புகளை நினைவுறுத்தினாலும், நன்றாக பொருந்தியிருக்கிறது. ஆரம்பமெல்லாம் நல்லா வைச்சு, பினிஷிங்ல சொதப்பாம இருக்கணும்
- கபாபிஷ் என்றொரு தந்தூரி உணவகம், திருமலை பிள்ளை சாலையில் இருக்கிறது. அங்கே கிடைக்கும் வெஜ் தந்தூரி கபாபும், அசைவ கபாபுகளும் கொள்ளையடிக்கின்றன. விஜய ராகவா சாலையிலிருக்கும் ஒரு பஞ்சாபி உணவகத்தில் கிடைக்கும் ஜேடு சூப்பும், உப்புப் போட்ட லஸ்ஸியும் சாப்பிடாமல் சென்னையில் இருப்பது வீணே. மற்ற படி, நண்பரோடு வாரத்துக்கு ஒரு முறை டீக்கடை என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் வடபழனி கீரின் பார்க்கில் குடிக்கும் அந்த மசாலா டீ பண்ணும் கைகளுக்கு ராஜாவாக இருந்தால் மோதிரம் போட்டிருப்பேன். இப்போதைக்கு ஒழுங்காக பில்லையும், டிப்ஸையும் மட்டும் கட்டுகிறேன்
- பெண்ணிய வாதிகள் கொலை வெறியோடு வாசலில் முற்றுகையிட ஒரு வாய்ப்பு: ஒரு நாயகியை தேவதையாய் உணருவது எப்போது? - எனக்கு
- சம்திங் சம்திங் படத்தில் உன் பார்வையில் பைத்தியமானேன் பாடலில் இரண்டாவது இண்டர்லூடில் திரிஷா பச்சை நிற நீளப்பாவாடையோடு வரும் போது,
- தீபாவளி படத்தில் காதல் காதல் வைத்து காத்திருந்தேன் பாடலில் பாவனா, சின்னப்பிள்ளைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் போது,
- செந்தூரப்பூவே என தொடங்கும் 16 வயதினிலே பாடலில், ஸ்ரீதேவி கண்ணசைக்கும் போது,
- உனக்காகவே வாழ்கிறேனில் நதியா மலையிறங்கும் போது,
- கஜினியில் அசின் சூர்யா வெளிநாட்டுக்காரர்களுக்கு வழி சொல்லும்போது, முகத்தை சுளிக்கும் போது,
- பிதாமகனில் லூசாப்ப்பா நீ, என லைலா கேள்வி கேட்கும் போது
- ரன்னில் மீரா ஜாஸ்மின் கிளைமாக்ஸுக்கு முன்பு சுவரில் பாதி முகத்தினை காண்பிக்கும் போது என நீள்கிறது பட்டியல். அது என்னமோ தெரியவில்லை, ஊரே மாய்ந்து மாய்ந்து கொண்டாடும்/டிய சிம்ரன், மீனா, ரம்பா, இப்போது நமீதா, ஸ்ரேயா, சிநேகா பார்த்தால் எனக்கொன்றும் தோன்றவில்லை. வயசாகி விட்டது என்பது உண்மையாகவும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி ஞாயிறன்று பாக்யராஜின் ரகசிய போலிஸ் 100, மறைந்த சுமிதா "நடித்த" படங்களில் ஒன்று. இதற்கு முன் அவர் நடித்த படம் அலைகள் ஒய்வதில்லை என்று நினைக்கிறேன்.
Blogged with Flock
Labels: உணவு, சினிமா, தமிழ்ப்பதிவுகள், புத்தகம், பெண்கள், ரசனை, ரசித்தவை
Comments:
<< Home
//மறைந்த சுமிதா "நடித்த" படங்களில் ஒன்று. இதற்கு முன் அவர் நடித்த படம் அலைகள் ஒய்வதில்லை என்று நினைக்கிறேன்.//
கோழிக்கூவுது படத்தில் சிலுக்கு மிக நன்றாக நடித்திருப்பார். உங்கள் எழுத்துக்களில் சிலுக்குப்பற்றிய பார்வை வித்தியாசமாக இருப்பதை தொடர்ந்து காணமுடிகிறது..எதாவது காரணங்கள்..?
கோழிக்கூவுது படத்தில் சிலுக்கு மிக நன்றாக நடித்திருப்பார். உங்கள் எழுத்துக்களில் சிலுக்குப்பற்றிய பார்வை வித்தியாசமாக இருப்பதை தொடர்ந்து காணமுடிகிறது..எதாவது காரணங்கள்..?
//நயன்தாராவின் உடையமைப்புகள் என்னவோ X-Men னில் ஹாலி பேரியின் உடையமைப்புகளை நினைவுறுத்தினாலும், நன்றாக பொருந்தியிருக்கிறது//
இதை நான் வன்மையா இப்பவே கண்டிச்சு வைச்சுக்கிறேன். நயந்தாராவுக்கு அந்த ட்ரெஸ் ட்ரெயிலரிலேயே பொருத்தமாயிருக்கிறதாய் எனக்குப்படலை.(ஏகப்பட்ட ஒட்டுவேலையோ???)
x-men hally berry யோட கம்பாரிஸனா! ம்ஹும் மம்மி...(அழுறேனாக்கும்)
இதை நான் வன்மையா இப்பவே கண்டிச்சு வைச்சுக்கிறேன். நயந்தாராவுக்கு அந்த ட்ரெஸ் ட்ரெயிலரிலேயே பொருத்தமாயிருக்கிறதாய் எனக்குப்படலை.(ஏகப்பட்ட ஒட்டுவேலையோ???)
x-men hally berry யோட கம்பாரிஸனா! ம்ஹும் மம்மி...(அழுறேனாக்கும்)
உங்க மெயில் ஐடி தெரியல, அதனால்
http://rajinifans11.tripod.com/Pesakoodathu.mp3
என் அக்கவுண்ட்ல எதையாச்சும் சீக்கிரம் Credit பண்ணுங்க
http://rajinifans11.tripod.com/Pesakoodathu.mp3
என் அக்கவுண்ட்ல எதையாச்சும் சீக்கிரம் Credit பண்ணுங்க
Lyrics for the song:
____________________
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ஒ..
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
I
யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ? ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுது..
பாடலிசை : விஜய் அந்தனி
பாடல் வரிகள் : தேன் மொழிதாஸ்
எழுத்துறு : செயின்ட்
To download the song
http://venkatramanan.googlepages.com/kni.mp3
Regards
Venkatramanan
____________________
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
என்னிடத்தில் தேக்கிவைத்த காதல் முழுதும் –
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் சொல்லி அனுப்பு ஒ..
பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு ஒ..
I
யாரோ ? உன் காதலில் வாழ்வது யாரோ ?-
உன் கனவினில் நிறைவது யாரோ ? என் சலனங்கள் தீர்த்திட வாராயோ !?
ஏனோ என் இரவுகள் நீள்வது, ஏனோ ? ஒரு பகல் எனை சுடுவது ஏனோ,?
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ..?
காதல் தர நெஞ்ஜம் காத்துயிருக்கு காதலிக்க அங்கு நேரம் இல்லையா ?
இலையை போல் என் இதயம் தவறி விழுது..
பாடலிசை : விஜய் அந்தனி
பாடல் வரிகள் : தேன் மொழிதாஸ்
எழுத்துறு : செயின்ட்
To download the song
http://venkatramanan.googlepages.com/kni.mp3
Regards
Venkatramanan
நன்றி நாகை சிவா, வெங்கட்ராமன். நான் செய்யும் காரியங்களில் புண்ணியங்கள் இருப்பதாக தெரியவில்லை, வேண்டுமானால், சேர்த்து வைத்திருக்கும் பாவங்களில் உங்கள் கணக்கில் கொஞ்சம் சேர்த்து விடுகிறேன் ;)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]