Apr 9, 2008

[சமூகம்] சத்யராஜ் பேச்சும், சில பார்வைகளும்

ஆடி அடங்கிய ஒகேனக்கல் கூச்சலில் எல்லோரும் பேசியது, பேச முற்பட்டது சத்யராஜ் பேசியதை ஒட்டியே. முக்கியமாக முன்வைக்கப்பட்டவைகள் கீழே

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசுகையில், இங்கு யாருடைய பெயரைச் (ரஜினி) சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.

இதுவரை என்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் இன்று முதல் என்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படியானால் தமிழன் மனிதன் இல்லையா என்ற சந்தேகம் வரும். தமிழன் மனிதன் இல்லை, வெறும் மரம் என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரமாக இருந்தால் என்ன நடக்கும்? நாய் வந்து ஒண்ணுக்கு அடிக்கும். பிறகு எவனாவது வந்து மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போய் கட்டில் செய்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருப்பான். டேபிள் செய்து அதில் உட்காருவான். மொத்தத்தில் அந்த மரத்திற்கு மரியாதையே இல்லாமல் போய் விடும். எனவே தமிழா, நீ மரமாக இருக்காதே, மனிதனாகவும் இருக்காதே, தமிழனாக இரு என்று சொல்கிறேன்.

காந்தி சொன்னார் கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் உலகில் உள்ள 600 கோடி பேரும் குருடனாகத்தான் இருப்பார்கள். கடைசியில் உலகில் அத்தனை பேரும் குருடனாகி விடுவார்கள் என்றார். ஆனால் தமிழனுடைய கண்ணை 40 ஆண்டுகளுக்கு முன்பே பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

முதலில் மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரே என்ற ஆள் பிடுங்கினார். பின்னர் மலேசியாவில் பிடுங்கினார்கள். ஈழத்தில் பிடுங்கினார்கள். இன்று கர்நாடகத்திலும் பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே காந்தி சொல்வதை இன்று கடைப்பிடிப்பதாக இருந்தால் உலகில் உள்ள 10 கோடித் தமிழர்களும் குருடனாக இருப்பார்கள். மற்ற 690 கோடி பேரும் பார்வையுடன் திரிவார்கள். ஏற்கனவே தமிழன் சிந்தனைக் குருடனாக, கருத்துக் குருடனாக இருக்கிறான். கண்ணும் போய் விட்டால் மயிரு மாதிரிதான் இருக்கும் அவனது வாழ்க்கை.

40 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர், தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகத்தில் குண்டுராவ் முதல்வராக இருந்தார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஒருமுறை குண்டுராவ் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போயிருந்தார். மட்டன், சிக்கன் என அனைத்தும் செய்து போட்டார்கள். எம்.ஜிஆரும் சாப்பிட்டார்.

ஆனால் அவர்கள் வைத்த தண்ணீரை மட்டும் குடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். எனது மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனக்கு மட்டும் எதற்கு உங்கள் தண்ணீர் என்று கூறி விட்டார்.

சாய்குமார் என்று ஒரு நடிகர். உனக்குப் பிடித்த நடிகர் யார் என்று அவரிடம் கர்நாடகத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறி விட்டார். அவ்வளவுதான் அவரை உதை உதை என்று உதைத்து ராஜ்குமார் என்று சொல் என்று கூறியுள்ளனர். இதற்குப் பெயர்தான் கன்னட வெறி.

நான் வீரப்பன் செய்த செயல்களை எல்லாம் கேள்விப்பட்டு முன்பு அவன் மீது கோபப்பட்டிருக்கிறேன், ஆவேசப்பட்டிருக்கிறேன். ஆனால் பல வீரப்பன்களை உருவாக்கும் நிலையை இப்போது உருவாக்கி விடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் தமிழகத்திற்கு லாபம் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்திற்கு ஒரு நஷ்டமும் கிடையாது.

சூப்பர் காமெடியன் வாட்டாள்:

அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார். அவர் சொல்கிறார் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லாம் கர்நாடகத்தோடு சேர வேண்டியதாம். விட்டால், மெட்ராஸ், பீச் எல்லாமும் எங்களுக்குத்தான் எல்லாம். நாம் என்ன வாயில் விரல் வைத்து கொண்டு போகனுமா.

என் பொண்டாட்டி கூட நான் படுக்குறேன் உனக்கு ஏண்டா வலிக்குது. உன் பொண்டாட்டி கூடவா படுகிறேன்.

நமக்கு சம்பந்தப்பட்ட ஒருவரே வாட்டாள்தான் எனக்குப் பிடித்த பேச்சாளர் என்று கூறியுள்ளார். என்னத்தைச் சொல்ல.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள். அப்படியே பேசிக் கொண்டிருந்தால் நீ கேன.... ஆகி விடுவாய். வாலாட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். அவன்தான் தமிழன். குனிந்து கொண்டே இருந்தால் குதிரை ஏறிக் கொண்டுதான் இருப்பார்கள். குனியாதே, நிமிர்ந்து நில்.

தமிழனுக்கு எங்கிருந்தும் தண்ணீர் வரக் கூடாது என்கிறார்கள். பாலாறில் தண்ணீர் இல்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் இல்லை, சேது சமுத்திரத் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

கடவுளுக்காக இனிமேல் வெளியில் போகாதீர்கள். தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான். அவனைக் கும்பிடுங்கள். மதுரை வீரனைக் கும்பிடுங்கள், சுடலை மாடனை கும்பிடுங்கள்.
( அப்ப இவர்கள் இந்த கடவுள் எல்லாம் இருக்கிறதா ? )

நமக்கு வடநாட்டு ராமனும் வேண்டாம், ராகவேந்திராவும் வேண்டாம் (ரஜினியை திரும்பிப் பார்த்தபடி), அய்யப்பனும் வேண்டாம்.

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். நீ குரல் கொடுக்கலை என்றால் நீ ஒரு முட்டாக்கூ....அவ்வளவுதான் என்றார் சத்யராஜ்.

( வைரமுத்து பேசும் போது, தந்தை பெரியாரே இங்கு சத்தியராஜ் உருவில் நேரில் வந்த மாதிரி இருக்கிறது என்றார். அதனால் இந்த படம் )
நன்றி: இட்லி வடை

நான் மேலே கொட்டை எழுத்துகளில் போட்டிருப்பது, இட்லிவடையில் மேற்கோள் காட்டப்பட்ட வாசகங்கள். பெரும்பாலான மக்களும், அவற்றினை தனியே எடுத்து பேசி இருக்கிறார்கள், மேற் சொன்ன "சாரார்"-களுக்கான சங்கடம் உண்டாக்கும் வார்த்தைகள் அவை.

முதலில், பெரியாருடைய பேச்சுக்களை கேசட் வாயிலாக பெரும்பாலானோர் கேட்டத்தில்லை. இதை விட உச்சப்பட்ட உணர்வு வேகத்தில் பேசியிருப்பார். "அப்ப அசிங்கமா பேசறவன் எல்லாம் பெரியார் ஆயிட முடியுமா" என்கிற முடிவுக்கு உடனடியாக போகாதீர்கள். தமிழ் சமூகத்தின் மொழி வழக்கு என்பது ஒரு சுவாரசியமான வரலாறு. காளிதாஸ், சிவகவி என ஆரம்பித்த புராண, இதிகாச தமிழ், கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றமடைந்தது எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்தில். அங்கும், இலக்கணப் பிழையில்லாத தமிழும் அதனூடே வெகு ஜன தமிழும் ஆங்காங்கே தலை காட்டின. உதாரணத்துக்கு சேரி பாஷை என்று அழைக்கப்பட்ட சென்னை தமிழினை அப்போது நகைச்சுவை நாயகர்கள் [உ.ம் சந்திரபாபு, சோ ராமசாமி, பின்னாளில் தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன்] பேசி வந்தனர். "மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க" என்பது ஒரு மாபெரும் அவச்சொல்லாக புரியப்பட்டது. இன்றைக்கு அவர்கள் பேசிய எதுவும் இழிசொல் இல்லை.

எம்.ஜி.ஆர்-சிவாஜி அலைகள் கொஞ்சம் தாழ்ந்த நேரத்தில் வந்த ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் கும்பல் படங்களிலும், 70களின் பிற்பாதியில் வந்த படங்களிலும், கிளைமேக்ஸில் மட்டுமே இலக்கணத்தமிழ் பேசப்பட்டது, மற்ற இடங்களில் வெகு ஜன தமிழ் உள்ளே வந்துவிட்டது. பின்னாளில் ஆரம்பித்த ரஜினி-கமல் வெகு ஜன படங்களில் இலக்கணத்தமிழ் சுத்தமாக வழக்கொழிந்து போய் 90களின் பிற்பாதியில் கவுண்டமணி - செந்தில், விவேக், சின்னி ஜெயந்த், இலக்கணத்தமிழில் பேசுவதையே நகைச்சுவையாக மாற்றி விட்டிருந்தார்கள். ஆக, சேரி பாஷை என்றழைக்கப்பட்ட தமிழ் வடிவம், center stage-க்கு வந்துவிட்டது.

நினைவு தப்பாமல் இருந்தால், மறைந்த சுஜாதாவும், கமலும் தான் [அல்லது பாலச்சந்தர்??!!] தான் திரையில் "தேவடியா பையா" என முதலில் சொன்னது என்று நினைக்கிறேன் [படம்: விக்ரம்] தேவடியா பையாவில் ஆரம்பித்த அவச்சொற்களின் இடைச்செருகல், இந்நாளைய தமிழ் சினிமாவில் ஒரு மாற்ற முடியாத அங்கம். ["த்தா நான் இருக்கும் போதே என் சித்தப்புவை செஞ்சிருவியா" - பருத்திவீரன், "த்தா சும்மா சும்மா அவுட் அவுட்ன்னு சுத்தினுக்கீறாரு, ஒர் நாளைக்கு பெருசா போட போறான் அப்ப தெரியும்" - பொல்லாதவன்] ஆக தமிழ் பேச்சு, மேடைப் பேச்சு என்பதும் அண்ணா பேசிய நடையிலிருந்து, இப்போது டி.ஆர் தாண்டி, எஸ்.ஜே.சூர்யா தமிழ் [ஆங்ங்... மேல பாக்கற, கீழ பாக்கற, சைடுல பாக்கற, ரோட்டை பாக்கற, டீவி பாக்க்ற ஆனா என் முகத்தை மட்டும் பாக்க மாட்டேங்கற ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்] வரை சொல் பொருள் ஒரே விஷயமாக இருந்தாலும், பேசும் மொழி வேறாக இருந்திருக்கிறது. சர்வ சாதாரணமாக, விஜய் டிவியின் லொள்ளு சபாவின் "இதுதாண்டா போலிஸ்" படத்தை நக்கலடிக்கையில், டோமர் பையா என்கிற வார்த்தை டீவி வரை சர்வசாதாரணமாக புழங்குகிறது. மிக சமீபத்தில் சிவாஜி படத்தில் சுமன், "நான் ஆதிடா" என்று கைது செய்யப்பட்ட பிறகு சொல்ல, ரஜினி, விவேக்கின் வாயினை பொத்திய பிறகு விவேக் சொல்லும் டயலாக் "கபோதின்னு சொல்ல வந்தேன்ப்பா". அந்த fill in the blanks-னை தியேட்டரின் முன் வரிசை கூட்டம் சர்வ சாதாரணமாக சொல்லும். இங்கே சென்னையில் தினமும் நான் "த்தா" சொல்லாமல் டூ வீலர் ஒட்டுவதில்லை.

ஆக, சத்யராஜ் பேசியதில் என்ன தவறிருக்கிறது என்று தெரியவில்லை. கேணைக் .... என்று pause விட்டதை, அவர் முழுவதுமாகவே சொல்லியிருந்தால் கூட ஒன்றும் பெரிதாக தவறாக எனக்கு தெரியவில்லை. அதனால், தமிழ்நாட்டில் ஒன்றும் யுகப்பிரளயங்கள் நடந்திருக்காது. இந்த அவ/இழிச்சொல் என்பது சிறு பத்திரிக்கை உலகில் சர்வ சாதாரணம். ஒரு சமூகப் பிரச்சனை முன் வைக்கப்பட்டிருக்கிறது, தமிழ்நாடே கொந்தளிக்கிறது, அவரவர்கள் அவர்வர்க்கு ஏற்றாற் போல் பங்காற்றி கொண்டு இருக்கிறார்கள். உங்களுடைய வீட்டில் உங்களுக்கும் உங்களுடைய சகோதரர்களுக்கும் ஏதோ பிரச்சனை, திடீரென நுழையும் பக்கத்து வீட்டு ஆள், இந்த வீடு அவருடையது என்று சொன்னால், உங்கள் வாயில் வரும் முதல் வார்த்தை என்ன. diplomatic talk எல்லாம் பேசாமல் மனதிலிருந்து சொல்லுங்கள் - என்னுடைய முதல் வார்த்தை - அடிங் ங்கோத்தா, எந்த நாய் பேசறது என்பது தான்.

ஆக, மொழியினை பிடித்து தொங்கி கொண்டிருப்பதில் எவ்விதமான பயனும் இல்லை. Fuck என்கிற வார்த்தையில்லாத ராப் பாடல்கள் கொஞ்சம் கஷ்டம். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை F வார்த்தை என்பது ஒரு விளிச்சொல், அவ்வளவே. அதேப் போலதான் இதுவும். இது தாண்டி, உணர்வுகளின் உச்சக்கட்டத்தில் இருக்கும் ஒருவன் அது வீதியாய் இருந்தாலும், படுக்கையாய் இருந்தாலும் கெட்ட வார்த்தைகள் வருவது மகா சகஜம். சத்யராஜ் பேசியதில் இருந்த உண்மையும், நேர்மையும் தான் முக்கியம். மற்றபடி சபை மரியாதை என்று இன்னமும் பிரிட்டிஷ் காலத்து சொல்லாடலினை பிடித்து தொங்கி கொண்டிருப்பதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை.

மற்றபடி, ராமகோபாலன், இட்லிவடை போன்றவர்கள் குறிப்பிட்டு காட்டும் கடவுள் இருக்கிறதா, இதை இவர் நம்புகிறாரா என்பதெல்லாம் வழக்கமான ............ குசும்பு. உண்மையான பெரியாரிஸ்ட் கடவுளை நம்புகிறவர்களையும் அவர்களின் உரிமைகளையும் கூட பேசுவான். பெரியாரின் வாழ்வில் இதற்கான உதாரணங்கள் பல இருக்கின்றன. இன்றைக்கும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தலித்துகளின் கோயில் நுழைவு போராட்டங்களில் திராவிட இயக்கம் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கும். இருக்க வேண்டும்.

மற்றபடி சத்யராஜ் பேசிய பேச்சில் எனக்கு தெரிந்த ஒரே பிழை. அவர் வாட்டாள் நாகராஜ் வடிவேலுவினை விட பெரிய காமெடியன் என்றார். வாட்டாளை விட பெரிய காமெடியன் தமிழ்நாட்டில் இருக்கிறார் அவர் பெயர் இயக்குநர் பாரதிராஜா. மேல் விவரங்களுக்கு இங்கே படியுங்கள்.

Labels: , , , , ,


Comments:
தமிழர் இல்லதாவன் தமிழ்ன்
சொல்லும் போது ஒரு தமிழன்
பேசினால் குற்றமா!
 
நாராயணன்,

தமிழில் பலவார்த்தைகள் அவற்றின் வீரியமான அர்த்தத்தை இழந்ததும் அர்த்தமின்றியே உபயோகப்படுவதும் ரொம்ப நாளாகவே நடக்கிறது. புரட்சி, இனமானம் எட்ச்செட்ரா.. கெட்ட வார்த்தைகளும் அதே கதைதான். ராயபுரத்து மூன்றுவயதுச்சிறுவன் த்தா என்று சொல்வதைப்பற்றி நீங்கள்தானே எழுதி இருந்தீர்கள்,அவனுக்கு அதன் அர்த்தம் தெரிந்திருக்க என்ன வாய்ப்பு.. பேச்சுத்தமிழில் ஏறத்தாழ இவை அங்கீகரிக்கப் பட்டே விட்டன.

ஆனால், சத்யராஜ் பேசியது மேடையில். மேடைக்கான எதிக்ஸும் மாறித்தான் வருகிறது என்றாலும், அந்த எதிக்ஸை குறிப்பிட்ட மேடையில் பேசுபவர்கள்தான் உருவாக்குகிறார்கள். நன்னிலம் நடராஜன் முக்கியப்பேச்சாளராக பேசும் பொதுக்கூட்டத்துக்கும், கலைஞர் பேசும் பொதுக்கூட்டத்தில் பேச்சாளராக அதே நன்னிலம் நடராஜன் பேசுவதற்கும் வேறுபாடு உண்டுதானே?

சத்யராஜ் பேசியதில், எனக்கும் பெரிய ஆட்சேபங்கள் இல்லை. பேச்சுத்தமிழில் நீங்கள் குறிப்பிட்டதுபோல எல்லாருமே கோபத்தில் பேசுவதுதான். ஆனால், மேடையில் பேசியதும், அந்த மேடைக்கு அப்போதுதான் உள்ளே நுழைந்த ரஜினியைக் கன்னடன் என்று சுட்டிக்காட்ட தன் பேச்சை உபயோகித்ததும்தான் ஆட்சேபிக்கத்தக்கதும்,தவிர்க்கப்பட்டிருக்கவேண்டியதும்.

சம்மந்தமில்லாமல் இன்னொரு த்ரெட் : நிறையப்பேர் பேச்சுத்தமிழில் எம்ஜிஆரையும் சிவாஜியையும் கிண்டலடித்தபோது பொங்காதவர்கள், அதையே விகடனில் ஜெயமோகனைப் பிரசுரித்ததும் பொங்கினார்களே, அந்தக் கூட்டத்தில் சத்யராஜும் உண்டா?
 
நன்றாகச் சொன்னீர் நாராயணரே! நான் என்னவோ திரைப்பட வசனங்கள் இயல்புக்கு அருகில் வருவதற்காகவே இலக்கணத் தமிழிலிருந்து பேச்சுத் தமிழுக்கு மாற்றினார்கள் என்று நினைத்தேன். இல்லை, இல்லை , பக்கா குழாயடித் தமிழுக்கு திரைப்பட உலகம் செல்வதற்கான திட்டமிட்ட பாதைதான் இந்த வசன மாறுதல்கள் என்று இப்போதுதான் புரிகிறது. இது இன்னும் முன்னேறி குழாயடியை மிஞ்சுகிற வகையில் இன்னும் சில ஆண்டுகளுக்குள் செல்லாவிட்டால் திரைப்பட வசனநடை வளர்ச்சி பெரும் தேக்க நிலைக்கு வந்து விட்டதாக சத்தியப்பிரமாணமே செய்துவிடலாம்.

ஏதோ ஒரு வார்த்தையை சத்தியராஜ் பாதியோடு நிறுத்திவிட்டதை முழுதாகச் சொல்லியிருந்தால் கூட அதில் தவறில்லை என்ற நல்வாக்கை நாராயணன் வாயிலாகக் கேட்பது பல புதிய நம்பிக்கைகளை தோற்றுவிக்கத்தான் செய்கிறது. சத்தியராஜ் முழுதாகச் சொல்லியிருக்க வேண்டும். அப்பறம் எப்படி மேடைப் பேச்சை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்வது? ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு பிரபலஸ்தரும் தெருமொழிகளை பழக்கிக் கொண்டே வந்தால்? ஆஹா! நினைத்தாலே தெருவாசனை கம்ம கம்ம என வீசுகிறதே!

பொதுவாழ்வில் தினமும் தவிர்க்க முடியாத இந்த வார்த்தகளை ஏன் மிகுந்த பாசாங்கோடு மூடிமறைத்துப் பழக வேண்டும்? இது பரவட்டும். இதில் தவறென்ன இருக்கிறது? சேரிகளிலிருந்து குழாயடி நடுத்தெரு மார்கமாக மேடைப்பேச்சுக்கும் திரைப்படங்களுக்கும் பரவியது பள்ளிக்கூடங்களுக்க்ம் கல்லூரிகளுக்கும் பாடம் நடத்தும்போதே பரவட்டும். இங்கெல்லாம் பாசாங்கு என்ன வேண்டிக் கிடக்கிறது? அப்பா மகளுக்கும் அம்மா மகனுக்குமிடையேக் கூட இவ்வழக்குகள் பொங்கிப் பிரவாகமெடுக்கட்டும். ஏன் நீதி மன்றங்களில் கூட யுவர் ஆனருக்குப் பதிலாக ஒரு நற்சொல்லைக் கூட புழங்கலாமே!

அடுத்து அம்மா ஆச்சியார் மனோரமா பொங்கி எழுந்து செய்துவித்த ஆக்கப்பூர்வமான விமர்சனத்தைப் பற்றி அண்ணன் நாராயணன் அள்ளி வீசுவார் என எதிர்பார்ப்போமாக!
 
//நினைவு தப்பாமல் இருந்தால், மறைந்த சுஜாதாவும், கமலும் தான் [அல்லது பாலச்சந்தர்??!!] தான் திரையில் "தேவடியா பையா" என முதலில் சொன்னது என்று நினைக்கிறேன் //

ரத்தக் கண்ணீரில் திருவாரூர் தங்கராசு " தேவடியாள் பெற்ற திருமகளே" என்று வசனமெழுதியதாக ஞாபகம்!
 
ரஜினி மட்டும், திராவிட கருத்து பேசுபவராக இருந்திருந்தால், சத்யராஜிற்கு வரவேற்பு கிடைத்திருக்கும் :P

சபை நாகரிகம் என்றால், ரஜினி பேசிய பேச்சும், நாகரிகம் குறைவானதே. (உதைக்க வேண்டாமா என்றால் ) ரேட்டிங்க வேண்டுமானால் வேறாக இருக்கும்.. :P
 
'சபை நாகரீகத்திற்கு' மட்டும் பழக்கப்பட்டவர்களுக்கு சத்தியராஜின் பேச்சு ஜீரணிக்கக் கஷ்டமாகத்தானிருக்கும். அதையே சாட்டாக வைத்து, சத்தியராஜ் சொல்லவந்த முக்கிய விடயங்களை இருட்டடித்து தங்களது 'அரசியலையும்' பிறர் நடத்தலாம் :-).
 
//நினைவு தப்பாமல் இருந்தால், மறைந்த சுஜாதாவும், கமலும் தான் [அல்லது பாலச்சந்தர்??!!] தான் திரையில் "தேவடியா பையா" என முதலில் சொன்னது என்று நினைக்கிறேன் [படம்: விக்ரம்]//

எனது நினைவில்... அபூர்வராகங்கள் படத்தில் கமல் சேறடித்தச் செல்லும் ஒரு கார் டிரைவரை ”தேவடியா மகனே“ என்று சொல்லி அடிவாங்குவார்.
 
நாரயணன்,

"ஃப்." சார்ந்த சொற்ற்க்கள் பாடல்களில் இருக்கலாம்..ஆனால் பொது இடஙளில் உபயோகிப்பதைப்பார்ர்க்க முடியாது.னண்பர்கள் கூட்டத்தில் சொல்லலாமே தவிர ஒரு அலுவலக கூட்டத்தில் கூட shit என்று சொல்ல முடியாது. சொன்னால் மன்னிப்பு கேட்க்கவேண்டும்..இது நான்கண்ட வெள்ளை சமூகம்.

சத்யராஜ் அவர்களின் பேச்சில் எல்லாவற்றையும் அலசுமளவிற்க்கு எனக்கு ஆர்வமும் இல்லை அதில் பெரிதாக ஒன்றும் இல்லவும் இல்லை.

காந்தியைப்பற்றி குறித்து பேசினது தான் எனக்கு சிரிப்பாக வருகிறது..இது தமிழில் புலமை என்றால் என்ன வென்றே தெரியாத நான் திரு.கருணானிதியை கேலி செய்தது போல் உள்ளது.

காந்தி தான் பிறருக்கு சொன்னதை பின்பற்றி சுதந்திரம் வாங்கினார்.
சத்யராஜ் போன்றோர் ஒருனாள் wonderகளாக இருந்து என்னா கண்டார்கள்?அவருடய மொழியிலே சொல்ல எனக்கு விருப்பம் இல்லை..
இனவெறியை தூண்டிவிட்டதைத்தவிர....

இதில் பர்வத்ம்மாள் எவ்வளோவோ பரவாயில்லை..அவராவது "சகோதரர்போல உள்ள எங்களை மூட்டிவிடுவது நல்லதல்ல "என்றூ சொன்னதாகப்படித்தேன்.

நடிகர்கள்தொடர் உண்ணாவிரதம் இருந்திருந்தாலோ, அல்லது கர்னடகத்துக்கு போய் அம்மக்களை சந்தித்து இருந்தாலோ இவர்கள் முயற்ச்சியில் நம்ப்பிக்கை வந்திருக்கும்..
 
நீங்கள் தெருவில் பயன்படும் அதே வார்த்தைகளை உங்கள் நிறுவனத்தில்
சக ஊழியரை அல்லது வாடிக்கையாளரை நோக்கி பயன்படுத்துவீர்களா.பொது மேடையில் அநாகரிகமாக பேசுவது என்பதை சரி என்று கூறும் நீங்கள் தொழில் என்று வரும் போது எப்படி நடந்து கொள்கிறீர்கள், எப்படி உடை உடுத்தி ஜெண்டில்மேனாக தோற்றமளிக்கிறீர்கள்
என்பதை யோசித்துப் பாருங்கள்.ஆங்கிலத்தில் வலைப்பதியும் போது எப்படி எழுதுகிறீர்கள்? ஏன். அதுவும் பொது இடம்தானே எப்படி வேண்டுமானாலும்
எழுதுவதில்லையே.

சத்யராஜை நோக்கி அவர்
பேசிய தொனியில் படப்பிடிப்பில் ஒரு
உதவி இயக்குனர் பேசி விட முடியுமா.இல்லை சினிமாவில் நீங்கள் தெருவில் பயன்படுத்தும்
வார்த்தைகளை யார் வேண்டுமானாலும் சொல்லிவிட
முடியுமா.இது வெறும் சபை நாகரிகம் பொறுத்த ஒன்றல்ல.
ஒரு பிரச்சினையில் குளிர்காய
விரும்பும் சிறுமதியாளர் சத்யராஜ்
அங்கே பெண்ணுடன் படுப்ப்பது என்பதை பேசும் போது பாரம்பரிய
கற்புக்கு ஆதரவாகப் பேசுகிறாரே.
அது ஏன். மூச்சுக்கு முன்னூறு தடவை பெரியார் பெயரை சொல்பவர்கள் ஒருத்தர் பெண்டாட்டி
இன்னொருத்தருடன் விரும்பி படுத்தால் தப்பில்லை என்று பெரியார்
சொன்னதை ஏன் ஏற்பதில்லை.
இந்தப் பிரச்சினையில் எதற்காக
பெண்டாட்டியுடன் படுப்பது வரவேண்டும்.அங்கு தொனிப்பது
பெண்டாட்டி கணவனுக்கு உரிய,
ஆசையை நிறைவேற்ற வேண்டிய
பொருள் என்ற அர்த்தமல்லவா.
 
சத்தியராஜ் பேசியது எந்த வகையிலும் நாகரீகமான பேச்சே அல்ல, அதற்கு நாராயணன் போன்றவர்கள் ஆதரவு போல் எழுதி இருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது, சத்தியராசு என்று தமிழ்பற்றால் பெயரை மாற்றிக்கொள்ளக்கூட முடியாத தமிழ்பற்றாளர் அவரின் அப்பட்டமான இனவாத பேச்சை அறிவாளர்கள் அங்கீகரிக்ககூடாது, அது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.முதல்நாள் தமிழ்நாட்டில் சோறுதிண்ணும் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் என்று ரஜினிபற்றிய கேள்விக்கு பதில் சொல்லும்போது அவருடைய விழியையும் முகபாவத்தையும் கவனித்திருக்க வேண்டும்.நிஜ வில்லனாக முயல்கிறார் போல தெரிகிறது,தமிழனை பெருமை படுத்தாத பேச்சு.
 
http://mugakkannadi.blogspot.com/2005/06/1.html
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


情色貼圖,色情聊天室,情色視訊,情色文學,色情小說,情色小說,臺灣情色網,色情,情色電影,色情遊戲,嘟嘟情人色網,麗的色遊戲,情色論壇,色情網站,一葉情貼圖片區,做愛,性愛,美女視訊,辣妹視訊,視訊聊天室,視訊交友網,免費視訊聊天,美女交友,做愛影片

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]