May 3, 2008

சதாப்தி எக்ஸ்பிரஸ்

மூன்று நாட்கள் பெங்களூரு வாசம். 30-ஆம் தேதி காலையில் அரக்க பரக்க ஆட்டோ பிடித்து சென் ட்ரல் போனால், சரியாக 7 நிமிடங்கள் கழித்து தான் வண்டி ஊர ஆரம்பித்தது. இதனிடையில், தனியாக போனதால் மூன்று இருக்கைகள் மாற்றம் வேறு. சதாப்தியில் பயணிப்பது ஒரு தனி அனுபவம். முதலில் சாப்பாடு, தொடர்ச்சியாக காலை 6.15க்கு ஆரம்பித்து 9.00 மணி வரை எதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கும் [தண்ணீர், சாக்லெட்டுகள், காபி/டீ, தினசரி செய்தித்தாள், காலை உணவு, பழச்சாறு] இரண்டாவது மனிதர்கள். இரண்டாம் வகுப்பில் பிருந்தாவனில் செய்யும் மனிதர்களுக்கும், சதாப்தியில் பயணம் செய்யும் மனிதர்களுக்கும் வித்தியாசங்கள் நிறையவே இருக்கின்றன. பொருளாதார ரீதியில் சற்றே தெம்பாக இருப்பவர்களும், அலுவலக காசில் பெங்களூரு போகிறவர்களும்தான் பெரும்பாலும் சதாப்தியில் போவார்கள்.

நான் போன நாளில் பல விசித்திரங்கள். ஒரு நடுத்தர வயது அம்மணி, கழிவறைக்கு போகும்போதும் கூட கைப்பையினை எடுத்துக் கொண்டு போனார்கள். கழிவறைக்கு எதற்கு கைப்பை ? முன்னால் உட்கார்ந்திருந்த ஐயங்கார் பாட்டி, பேத்திகளோடு போகிறார்கள் போலிருக்கிறது, ஆனாலும், பேத்திகள் விளையாடிக் கொண்டிருக்கையில் இந்தியா டுடே ட்ராவலும், செல் பேசியில் இந்தி பாடல்களும் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருந்தன. ஐந்து நிமிட இடைவெளியில் 67 இருக்கைகள் இருக்கும் ஒரு கூபேயில் எவரேனும் ஒருவரது செல்பேசி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எல்லோரும் தத்தம் செல்பேசியில் படமோ, பாட்டோ கேட்டு கொண்டே இருக்கிறார்கள். இதற்கிடையில் தினசரிகள் கைமாற்றம் வேறு. ஒருவருக்கு ஒரு தினசரி. கொடுப்பவரின் கைவண்ணத்தினை பொறுத்து அது ஹிண்டு, இண்டியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் க்ரோனிகல், எகனாமிக் டைம்ஸ் என மாறும். எனக்கு எகனாமிக் டைம்ஸ், பக்கத்து இருக்கை தெலுங்கருக்கு டெக்கானும், அவர் மனைவிக்கு எக்ஸ்பிரஸும். ஆக ஒரு தினசரி படித்தவர்களிடமிருந்து அது கைமாறிக் கொண்டே இருக்கும். 10 மணிக்கு யாராவது ஒருவர் வந்து வாங்கிக் கொண்டு போய், பழைய பேப்பர் கடைக்கு போட அடுக்கி வைத்து விடுவார்.

யாரேனும் வட இந்தியர்களுக்கு, செல் பேசி என்பது இருவர் தொலைவிலிருந்து பேச பயன்படுவது என்று சொல்லி தாருங்கள். மைக்கினை பிடித்துக் கொண்டு, லோக்கல் வட்டச்செயலாளர்கள் "அவர்களே" எனப் பேசுவது போல, "முன்னு ஹே, சோட்டு ஹே, தரம்வீர் ஹே க்யா" என ஒட்டு மொத்த ஜெய்ப்பூரின் மக்கள் தொகையையும் ஒரே போன் காலில் விளித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சத்தமான சிரிப்புகளும், ஆர்ப்பாட்டங்களும் வேறு. Super Crunchers படித்துக் கொண்டிருந்த என்னை வினோதமாக பார்த்தார்கள். இளம்பெண்கள்/மனைவிகள் டீ சர்ட், ஜீன்ஸோடு, தங்களுடைய ஐ.டி கணவர்களிடம், வீடு கடன் பற்றியும், மாமியார், அலுவலக நண்பர்கள் பற்றியும் 3 மொழிகளில் பேசுகிறார்கள். தமிழில் ஆரம்பித்து, ஆங்கிலத்திற்கு தாவி, ஹிந்தியில் கடுப்பேற்றுகிறார்கள். சின்ன குழந்தைகள் சத்தமாக ஒவ்வொரு போகும் ரயில் நிலையமாக படித்துக் கொண்டு vocabulary கற்று கொள்கிறார்கள். அதுவும், ஆங்கிலத்திலிருந்து தமிழ் பெயர்களை படிக்கும் போது எரிச்சல் வருகிறது. பின்னிருக்கையில் இருந்த சிறுவன் ரொம்ப நேரமாக "சேவா பட்" என்று விளித்துக் கொண்டிருந்த இடம் - செவ்வாய்பேட்டை ரோடு. பெரும்பாலானவர்கள் தூங்கி விடுகிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்னாடி போன போது ஒரு மலையாளி சத்தம் போட்டு குரட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். பாவம் விடியற்காலை 5 மணிக்கு எழுந்து ஒடி வந்திருப்பார் போலும்.

பெங்களூர் ஒன்றும் பெரிதாக மாறவில்லை. ஒவெர் ஹெட் பாலத்தில் சிக்னல் வைத்து காவலரை நிறுத்தும் ஒரே மந்த கூடார ஊர் அதுவாக தான் இருக்கும். ஆனால் மக்களிடத்தில் பொறுமையில்லை. சாலையில் எல்லோருமே restless ஆக வண்டியோட்டுகிறார்கள். எந்நேரமும், நான் போகும் ஆட்டோ யாரேயேனும் முட்டிவிடுமோ என்கிற பதட்டத்தில்லேயே எனக்கு பி.பி ஏறுகிறது. ட்ராபிக் போலிஸ்காரர்கள் அதே மந்த சுதியுடன் பேசுகிறார்கள். கன்னடம் சத்தமாக அங்கேதான் கேட்கிறது. வேறெங்கும் கன்னடம் காணோம். இந்த பயணத்தில் தான் ஒரு பெரும் முரண்பாட்டினை என்னால் கண்டறிய முடிந்தது. தமிழும், தமிழனும் வேண்டாம் என்று சத்தம் போடுகிற கர்நாடகத்தில் தான் தமிழ் திரை சீரியல்களின் சத்தம் தெளிவாக கேட்கிறது. போரம் மாலில் ஒரு சந்திப்பு இருந்தது. நண்பர் வர நேரமிருந்ததால் லேண்ட்மார்க்கில் உலாவிக் கொண்டிருந்தேன். கன்னடம் பேசும் எல்லோரும், தமிழ் / தெலுங்கு டிவிடிகளை பார்த்து கொண்டிருக்கிறார்கள். தசாவதாரம் ஆடியோ சிடி நன்றாக போகிறது. கன்னட டிவிடிகள் பக்கம் யாரேனும் கடந்தால் உண்டு, மற்றபடி ஒரு மனுஷ ஜீவனும் அங்கிருப்பத்தில்லை. தமிழினை வெறுப்பதாக சொல்லும் கன்னடர்கள், சத்தமேயில்லாமல் ஹிந்தியினை நடுவீட்டில் இருக்க பண்ணி விடுவார்கள் போல. எங்கே போனாலும் ஹிந்தி பாடல்கள் கேட்கின்றன. எப்.எம்மில் எந்நேரமும் த்தஷனும், ரேசும் ஒடிக் கொண்டிருக்கிறது. உண்மையில் நான் சந்தித்த வணிகரீதியான மக்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். அனைவரும் தெளிவாக கன்னடம் பேசுகிறார்கள். சந்தித்த மூன்று வட இந்தியர்களுக்கும் கன்னடம் தெரியாது. அவர்களின் அலுவலகத்தில் இருக்கும் கடைநிலை ஊழியன்தான் என் ஆட்டோ ஒட்டுநருக்கு கன்னடத்தில் வழி சொல்கிறார். எங்கே பார்த்தாலும், அடுத்தவர்களுக்கு தெரிகிறதா இல்லையா என்கிற அடிப்படை கவலையே இல்லாமல், ஹிந்தியில் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். போரமில் ஆங்கிலமும், ஹிந்தியும், தமிழும் தான் கேட்கிறது. கன்னடம் பேசுபவர்கள் அங்கே தரையினை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்க கன்னடர்களை பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது. அப்படியே பார்த்தாலும் அவர்களும் தமிழில் பேசுகிறார்கள். தமிழுக்கு பதிலாக ஹிந்தியினை முன்னிறுத்தி, தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு, கன்னட பெருமிதத்தை தொலைப்பதை எவ்விதமான சங்கோஜமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.

நான் இருந்த அடுக்க்கத்தில் இருக்கும் காவலாளிகள், வேலை செய்பவர்களை கேட்டால் எல்லோருக்கும் தமிழ் சீரியல்கள், சினிமா, சேனல்கள் என அத்துப்படியாக இருக்கிறது. பெரும்பாலான உணவகங்களில் மதிய உணவோடு பியர் இருக்கிறது. எப்படி பியர் குடித்துவிட்டு அலுவலகம் போவார்கள் என்கிற பூர்ஷ்வா/மத்திம தர கேள்வி எழாமல் இல்லை ? நகரம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது என்று சுவரொட்டிகளும், பின்னேறிக் கொண்டே இருக்கிறது என்று மக்களும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். டெல்லிக்கு பிறகு "இந்தியத்தன்மை" பெங்களூரில் தான் பார்க்கிறேன். இந்தியத்தன்மை என்பது நமக்கு தெரியுமோ, தெரியாதோ, எல்லாவற்றையும் தெரியும் எனக் கொள்வது மற்றும் "எனக்கு அவரை தெரியும், இவரை தெரியும், ஜார்ஷ் புஷ் பார்க்கணுமா சொல்லுங்க, நம்ம காண்டாக்ட்ஸ் வைச்சு ஆர்கனைஸ் பண்றேன்" என்கிற அளவில் விடப்படும் வாய்சவடால். அது டெல்லியில் அதிகம். சாலையில், யாரேனும் காலை மிதித்தால் கூட, டெல்லியில் அதற்கு மனித உரிமை கழகம் வரை செல்வேன், என சொல்லக்கூடிய ஆட்களை பார்த்திருக்கிறேன். அதற்கடுத்து இப்போது பெங்களூருவும் அந்த லிஸ்டில் வந்து விடும் போலிருக்கிறது. எவருக்கும் அரசியல் அறிவு பெருமளவு இல்லை. இன்னமும், எஸ்.எம். க்ருஷ்ணாவும், குமாரசாமியும் தான் பெங்களூரிவினை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்கிற அளவில் தான் அரசியலறிவு இருக்கிறது என்று நண்பர் சொன்னார். உண்மைதான் போலும். ஒரு காஸ்மோபாலிடன் நகர மாற்றத்தில் இவையனைத்தும் பெரும்பாலும் சகஜம், ஆனால் இன்னமும் பெங்களூர் ஒரு பதின்ம வயது நகரம். அக்குழப்பங்கள் நீங்கும் போது தெளிவு பெறும் வாய்ப்புகள் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பின்குறிப்பு: நான் புதன்கிழமை போனது ஒரு நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள. மாப்பிள்ளை என் நண்பர், கொஞ்சம் உயர்பதவியில் இருப்பவர். அவருடைய மாமனாரின் குடும்பம் ஒரு இன்போஸிஸ் குடும்பம். மாமனார், மாமியார், பெண், பெண்ணின் மைத்துனி என எல்லோரும் இன்போஸிஸில் ஏதோ ஒரு மேற்பதவியில் இருக்கிறார்கள்.அதனால் சுற்று வட்டாரங்களும், கொஞ்சம் மேல்நிலை சமூகம் தான். எனக்கான ஆச்சர்யம் ப்ளாக்பெர்ரியில் காத்திருந்தது. மண்டபத்தில் இருந்த எல்லோர் கையிலும் பளாக்பெர்ரி அல்லது ஏதேனும் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தது. பேசிக் கொண்டே, டைப் பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள். இது போன்ற உயர்நிலை நிச்சயங்களை இனி blackberry betrothal என அழைக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன். போனதிற்கு அருமையான ஐயங்கார் உணவு கிடைத்தது :) அந்த மாதிரியான ஐயங்கார் சாப்பாட்டினை சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிறது. வெண்டைக்காய் சாம்பாரும், வெள்ளரிக்காய் பச்சிடியும் சூப்ப்பர். சென்னையில் இருந்தால் டி.டி.கே சாலையில் ஒரு மெஸ் இருக்கிறது. இதற்கு கொஞ்சம் மாற்று குறைவான ஆனால் தரமான ஜயங்கார் உணவு அங்கே கிடைக்கும்.

Labels: , , , ,


Comments:
ஒரு ட்விட்டர் மாட்டேரை சீரியல்
மாதிரி இழுஇழுன்னு இழுத்திருப்பது
நல்லாவா கீது. எதையும் நூறு வார்த்தையிலெ சொல்ல முடியலையா, சொல்லாதே :)

You seem to be badly influenced by Economic Times and Sujatha. Like ET you exaggerate and jump to quick
conclusions. Like Sujatha you try to show off. These mar your writings. There is something
known as economy of words.
It is a virtue and try to learn
that.
 
//ஒவெர் ஹெட் பாலத்தில் சிக்னல் வைத்து காவலரை நிறுத்தும் ஒரே மந்த கூடார ஊர் அதுவாக தான் இருக்கும//

பெங்களூருவாசிகளை கடுப்பேற்ற வேண்டுமென்றால் நான் உபயோகிக்கும் முதல் அஸ்திரம் இதுதான் :))
 
You really dont know why woman take their hand bags with them to restrooms? You will know if check with with any of your female friends/family members.
 
நரேன்

பெங்களூரில் "வட்டாள் நாகராஜை" பார்க்கவில்லையா?

அண்ணன் திருமாவிற்கு "மாண்டியாவில்" ஏதோ பிரச்சினை என்று படித்தேன். நீங்கள் படித்தீர்களா?

மயிலாடுதுறை சிவா...
 
கைபேசியில் ஹிந்திகாரர்கள் மட்டும்தானா உரக்கப் பேசுகிறார்கள்? தமிழன் யாரும் அப்படி பேசுவதில்லையா? இந்தியர்கள் அனைவரும் அப்படித்தான். மேலும் ஹிந்தியை ஏன் அனாவசியமாக இழுக்கிறீர்கள்? அனைத்து தமிழ் ஜனங்களும் தாத்தா தலைவரின் தமிழ் பேச்சு பற்றி புகழ்கிறார்களே? கொடுமையடா சாமி! இந்துக்களின் மனதை புண்படுத்தி பேசுவதையும் கண்டனம் தெரிவிக்காமல் வாழும் தமிழர்கள் இங்கு இருக்கும் போது , கன்னடர்களின் அரசியல் அறிவு எப்படி இருந்தால் என்ன?
 
This is what I call a blog, a personal experience rather than journalistic article.

I've been reading your blog since 2005. Why are you not writing much for the past two years?

//யாரேனும் வட இந்தியர்களுக்கு, செல் பேசி என்பது இருவர் தொலைவிலிருந்து பேச பயன்படுவது என்று சொல்லி தாருங்கள். மைக்கினை பிடித்துக் கொண்டு, லோக்கல் வட்டச்செயலாளர்கள் "அவர்களே" எனப் பேசுவது போல, "முன்னு ஹே, சோட்டு ஹே, தரம்வீர் ஹே க்யா" என ஒட்டு மொத்த ஜெய்ப்பூரின் மக்கள் தொகையையும் ஒரே போன் காலில் விளித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சத்தமான சிரிப்புகளும், ஆர்ப்பாட்டங்களும் வேறு.//

Evening Shatabdi Blr to Chennai. Same experience. I second your opinion.
 
//பெங்களூர் ஒன்றும் பெரிதாக மாறவில்லை. ஒவெர் ஹெட் பாலத்தில் சிக்னல் வைத்து காவலரை நிறுத்தும் ஒரே மந்த கூடார ஊர் அதுவாக தான் இருக்கும். //

நீங்கள் குறிப்பிடும் அந்த ரிச்மெண்ட சாலை மேம்பாலம் Y போன்று இருக்கும் அதனால்தான் மேம்பாலத்தின் நடுவே சிக்னல் பொறுத்தப்பட்டு போக்குவரத்து நெறிப்படுத்தப்படுகிறது
 
1) வெர் ஹெட் பாலத்தில் சிக்னல் - ரொம்ப சரி, புதிதாக வருபவர்கள் எல்லோருக்கும் விசித்திரம் ஆக இருக்கும்.
2) பூர்ணிமா என்று ஒரு தியேட்டர் இருக்கிறது. அங்கே விஜய் படம் ரிலீஸ் ஆனால், தமிழ் நாட்டில் நடக்கும் எல்லா சம்பிரதாயங்களும் நடக்கும் (atleast 50%)
3) BlackBerry முதல் கட்டட தொழில் வரை தமிழர்கள் இருக்கிறார்கள்.
4) ஹிந்தியின் ஆதிக்கத்தை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்து இருக்கிறார்கள். பெல்காம் conflict (பெல்காவி?) ஒரு எடுத்துக்காட்டு. படித்தவர்கள் கூட "Being exploited" போல உணர்கிறார்கள் (தமிழ் மற்றும் ஆந்திர மாநில மக்கள் ஆதிக்கத்தால் ). ஆனால் ஹிந்தி மட்டும் "fashionable", RadioCity FM சேனல் ஹிந்தி பாடல்களை மையமாக வைத்தே ஓடுகிறது.
5) Krishna Cafe என்று ஓர் தமிழ் மெஸ்ஸில் மீல்ஸ் 65Rs. அந்த விஷயத்தில் சென்னை பெஸ்ட்.
6) கடைசியாக சாப்ட்வேர் மக்கள் - ஓசூர் ரோடு மறியல் நடந்தால் 2 Km நடந்தே ஆபீஸ் போகிற கூட்டம் (வன்முறை வெடிக்க சாத்தியம் இருந்தாலும்), மழை நீர் தேங்கி வழி மறித்தாலும் 3-4 மணி நேரம் நிதானமான பயணத்தில் அலுவலகம் செல்கிற கூட்டம்.
அந்த கடமை உணர்ச்சிகாக be tolerant when we show-off
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


成人電影,微風成人,嘟嘟成人網,成人,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,成人文章,成人影城,愛情公寓,情色,情色貼圖,色情聊天室,情色視訊

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]