May 22, 2008

[சமூகம்] பாலியல்-கஞ்சா-கல்யாணம்

தளபோட்சுத்ரியினை கில்லி வழியாக படித்தவுடன் ரொம்ப நாட்களுக்கு முன்பாக நானும் இதைப் போல ஒன்றை எழுதியிருக்கிறேனே என்று தேடி துலாவி பின்னூட்டம் இட்ட பிறகு தான் மனசு "பாவனா"வானது [எவ்வளவு நாள் தான் 'சாந்தி'யானது என்று சொல்லப் போகிறோம் ;)]

பா.ராகவன் செல்லமாக கரித்துக் கொட்டிய அதே மெஸ்ஸில் தான் இன்றைக்கு சாப்பாடு, சாருவோடு. ரொம்ப நாளாயிற்று. நண்பர்களை பார்த்து. இப்போது தான் கவனிதேன். நான்கு வருடங்களில் 251 பதிவுகள், சினிமா பாஷையில் 35 வாரங்கள் ஒடுவதற்கு ஈடான கோல்டன் ஜுப்ளி படமாதிரியான சந்தோஷம். (நிறைய நண்பர்கள் இதை ஒரு வருடத்தில் செய்கிறார்கள். அவங்க எல்லாம் மனுஷங்களே கிடையாது............................... தெய்வம்னு சொல்ல வந்தேன் ;) )

இரண்டு மூன்று விஷயங்கள் இருக்கின்றன எழுத, ஆனாலும் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி ஸ்கோர் போல முன்னுரிமை பட்டியலில் பின்னாடி இருக்கின்றன.

ஒரு செய்தி. இரு பார்வை.

மூன்று நாட்களுக்கு முன்னாடி தினசரியில், திருவொற்றியூரில் இரண்டு பெண்கள் ஒரே வீட்டில் இறந்து போனார்கள். இதை என் வீட்டுக்கு வரும் தமிழ் / ஆங்கில தினசரிகளில் படித்தேன். தினந்தந்தியில் நட்பின் பிரிவினை தாங்க முடியாமல் இறந்து போனார்கள் என்று வந்திருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் அவர்கள் இருவரும் தன்பால் சேர்க்கை கொண்டவர்கள், அதை இரு குடும்பத்தினரும் எதிர்த்தார்கள் அதனால் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இந்த இரு ஊடக பார்வைகளிலும் இருக்கும் வித்தியாசத்தினை கூர்ந்து கவனித்தால் நம் சமூகம் எவ்வாறாக வகைப் படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களை கலாச்சார காவலர்கள் என்று வர்ணிக்கும் இதே தினசரிகள் தான், தங்களுக்கென ஒரு கலாச்சார எல்லையினை நிர்ணயித்துக் கொண்டு அதன் வாயிலாக செய்திகளை மக்களுக்கு தருகின்றன. டைம்ஸ் கொட்டை எழுத்தில் லெஸ்பியன் என்று போட்டது ஒன்றும் கலாச்சார புரட்சி, வெங்காயமெல்லாம் கிடையாது. அவர்களுக்கு அந்த வார்த்தை போட்டால் நிறைய பேர் படிப்பார்கள், இன்னமும் சுவாரசியம் கூடும் என்கிற நம்பிக்கை அவ்வளவே. தினந்தந்திக்கோ இன்னமும் தமிழ் தினசரி படிப்பவர்கள் 1970-இல் இருக்கிறார்கள், சமூக மாற்றங்கள் எதுவும் தெரியாது என்கிற "தமிழ்க்கலாச்சார, பண்பாடு" சார்ந்த நம்பிக்கை. ஆனால், மிகத் திறமையாக ஒரு மாற்று பாலியல் வழியும், அது சார்ந்த விவாதங்களும் வாயடைக்கப்படுகின்றன. தமிழன் இன்னமும் சரவண பவன் புல் மீல்ஸ் சாப்பிட்டு, சன் டிவி பார்த்து கொண்டிருக்கிறான் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்று பாலியல் சார்பு என்பதை பற்றி உரக்க பேச வேண்டிய நேரமிது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ரேஷன் கார்டுகளில் "அரவாணிகளுக்கென" தனியிடம் இருக்கிறது. பாஸ்போர்ட்டில் அரவாணிகள் என்று இந்தியாவில் பாலினம் பகுதியில் குறிப்பிட வழி இருக்கிறது. போன வாரம், கலிபோர்னியாவில் ஒரிணச் சேர்க்கை திருமணங்கள் செல்லுபடியாகும் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வழியில, தன்பால் சார்ந்த பாலியல் விருப்பங்களை வெகுஜன ரீதியில் அங்கீகரிக்க வேண்டிய காலம் சார்ந்த கட்டாயங்கள் உள்ளன. இந்நிலையில், தமிழ் ஊடகங்கள் அதனை இருட்டடிப்பு செய்வது என்பது, ஒரு சமூகத்தினை பின் தள்ளுவதை முனைப்போடு செய்வது. தினந்தந்திகளும், நக்கீரன்களும் இன்னபிற தினசரிகளும், வாரந்தரிகளும் அதைதான் செய்கின்றன. இதே தினசரிகள், இரண்டு நாட்களாக ஓசூர் அருகே, தமிழக-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களைப் பற்றி விரிவாக எழுதுகின்றன. கள்ளச்சாராயத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூடவா, சமூகம் சார்ந்த-பாலியல் ரீதியான ஒரு முக்கிய பிரச்சனைக்கு கொடுக்க முடியாது ?

கொஞ்சம் நேரம் கிடைத்தால் இந்தியாவிலிருக்கும் ஏதெனும் ஒரு கேஃபே காபி டே-வுக்கு போங்கள். அங்கேயிருக்கும் காபி டைம்ஸ் 8 பக்க பத்திரிக்கையினை கையிலெடுத்து, அதன் கேள்வி பதில் பகுதியினை படியுங்கள். இந்தியாவின் பாலியல் சார்புகள், கேள்விகள், அதன்பின் இருக்கும் அரசியல்கள் என பல்வேறு விஷயங்கள் தெரிய வரும். இதற்கான அங்கீகாரமும், விடைகளும் எளிதல்ல, ஆனால் பிரச்சனையினை அங்கீகரிக்கும் அடிப்படை நேர்மை கூட நம் தமிழ் ஊடகங்களுக்கு இல்லாத போது, பொதுவான அங்கீகாரம் எப்படி வரும் ?

கஞ்சா தேசம்

இந்த வார தெஹல்காவில் புகழ் பெற்ற எழுத்தாளாரான அமிதப் கோஷின் நேர்காணல் மாதிரியான அவருடைய வரப்போகும் புத்தகம் பற்றிய உரையாடல் வந்திருக்கிறது. மிகவும் சுவாரசியமான விஷயத்தினை எழுதியிருக்கிறார். விஷயம் 1839-42 கிழக்கிந்திய கம்பெனிக்கும், அப்போது சீனாவினை ஆண்டு வந்த க்விங் பேரரசுக்கும் இடையில் நடந்த ஒபியம் என்று டீசண்டாக சொல்லப்படுகின்ற கஞ்சாவுக்கான போரில் ஆரம்பிக்கிறது நாவல். மொத்த இந்தியாவுமே கஞ்சா தேசம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு கஞ்சா பயரிடுதல், ஏற்றுமதி செய்தல் என ஒரு ஒட்டுமொத்த eco system இருந்திருக்கிறது. மதனின் "வந்தார்கள், வென்றார்கள்' புத்தகத்தில் ராஜபுத்திரர்களின் வாழ்வியல் பழக்கமாக ஒன்றினை சுட்டிக் காட்டியிருப்பார். போரில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தால், ராஜபுத்திரர்கள், அதற்கு முன்னாள் நன்றாக 'அனுபவித்து விட்டு', மறுநாள் மூக்கு முட்ட கஞ்சா அடித்து விட்டு, கோட்டையினை சுற்றி நெருப்பு வைத்து விட்டு, நிர்வாணமாக கிளம்பிவிடுவார்களாம். ஆக, கஞ்சா அடித்தல் என்பது இந்தியாவின் மிக முக்கியமான பண்பாக இருந்திருக்கிறது. வழக்கமாக எனக்கு நாவல் படிக்கும் பொறுமையில்லை, அதுவும் ஆங்கில நாவல்கள் சொல்லவே தேவையில்லை, ஆனாலும், இந்த புத்தகத்தினை யாராவது படித்து excerpts போட்டீர்களேயானால் டி ப்ளாக் மாமி தினமும் துளசி செடி சுற்றி சேர்க்கும் புண்ணியத்தில் 20% தரச் சொல்லுகிறேன்.

One of the most haunting scenes in Sea of Poppies is one where dark men move slowly, in a trance, knee-deep in a pile of opium — an image straight out of Dante’s Inferno. The empire was responsible for the opium war, but there were complicit players in India and China, a fact India seems anxious to forget. Ghosh says, Opium, which according to some scholars may have accounted for half the wealth that accrued to the colonial government, has received very little attention... One possible reason is that the writing of Indian history is still heavily influenced, through patronage and other means, by British institutions.”

He names Amar Farooqui as the only contemporary historian who has explored this past. Farooqui once told him that he’d been trying for years to interest his research students in this subject but they just would not touch it. “We’ve developed a vision of ourselves as strait-laced and spiritual and we’ve chosen to forget that much of modern India was actually built on this drug. Amar Farooqui has shown in his book, Bombay: Opium City, that Bombay probably would not exist but for opium.”

சுவாரசியமான கட்டுரை படித்துப் பாருங்கள்

கல்யாணங்கறது......................

சமீபத்தில் மிகவும் ரசித்த வசனம். விஜய் டிவியில் "ரீல் பாதி, ரியல் பாதியில்" நண்பர் ஜெகன் சொன்ன ஒரு வசனம். " கல்யாணங்கறது பப்ளிக் டாய்லெட் மாதிரி. உள்ள போனவன் எப்படா வெளிய வருவமோனு இருப்பான், வெளிய இருக்கறவன் எப்படா உள்ள போக போறோம்னு இருப்பான்"

Labels: , , , , ,


Comments:
திரு நங்கைகள் என்றே எழுதலாமே...


அன்புடன்
அரவிந்தன்
 
////மாற்று பாலியல் சார்பு என்பதை பற்றி உரக்க பேச வேண்டிய நேரமிது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ரேஷன் கார்டுகளில் "அரவாணிகளுக்கென" தனியிடம் இருக்கிறது. ////
பல கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களில் பாலினம் பகுதியில் "அதர்" ஆப்சன் இந்தாண்டு முதல் சேர்க்கப்பட்டு உள்ளதாக படித்தேன். சில அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் (அண்ணா பல்கலை உட்பட..) அதை இன்னும் செய்ய வில்லை எனவும் அறிகிறேன். தனியார் கல்வி நிலையங்களின் நியாயமான கவலைகள் புரிகிறது. பெண்களுக்கான பாதுகாப்பே அவர்களால் உறுதி செய்ய முடியாத பொழுது இது அவர்களுக்கு மற்றும் ஒரு பிரச்சினை. மூன்றாம் பாலினத்தவர் மீதான கேலி, மற்றும் டிஸ்கிரிமிநேசண் போன்றவற்றை "ஈவ் டீசிங்" குற்றங்களாக கருதப்பட்டு கல்வி நிலைய வளாகங்களிலும் "லெட்டர் அண்ட் ஸ்பிரிட்" செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தால் எல்லா கல்வி நிலையங்களும் "அதர்" ஆப்சனை தயங்காமல் சேர்க்கும் என நினைக்கிறேன்.

தளபோட்சுத்ரி பதிவை மீண்டும் பார்த்தீர்களா? பதிவை திருத்திய பிறகுதான் என் மனமும் "பாவனா"வானது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]