Jun 6, 2008

[நையாண்டி] கோவாலு ஜர்னர்லில் சுட்டது

சும்மா அவார்டு வாங்கி மப்பில் இருந்த கோவாலுவிற்கு ப்ளாக் எழுதும் ஆசை வந்தது. இலக்கியவாதிகள் எல்லாரும் தான் இப்போது வலைப்பதிவாளர்கள் ஆகிவிட்டார்களை நாமும் ஆவோம். சரி நமக்கு சாதாரணமாகவே எழுத வராது அப்போது வலைப்பதிவில் என்ன எழுதுவது என்று யோசித்தான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம், முதலில் நீ எல்லோருடைய ப்ளாகினையும் வாசி என்று அவன் மேல் கைவைத்து ஆசீர்வதித்தார். கோவாலு எல்லாருடைய பதிவினையும் படித்தான். அவனுக்கு எழுத்து பிடிப்பட்டு விட்டது. தனக்கு வந்த குறுஞ்செய்திகள், மடல்கள், வீட்டில் நடந்தவை, வெளியில் நடந்தவை என எல்லாவற்றையும் சேகரிக்க ஆரம்பித்தான். அவனுடைய ப்ளாகில் இருந்து "எஸ்.எம்.எஸ்  7777' என்கிற தலைப்பில் எழுதிய கதைகளிலிருந்து சுட்ட ஒன்று தான் கீழே

ஷீலா என்றொரு தோழி எனக்கிருந்தாள். ஷீலாவின் தோழி கனகா. கனகா ஒரு N95  வாங்கியிருந்தாள். எனக்கும் கனகாவிற்கும் ஒன்றும் பெரியதாக தொடர்புகள் இல்லையென்றாலும், என்னுடைய கதைகளையும், கவிதைகளையும் எனக்கு தெரியாமலேயே ஷீலா மூலமாகவே படித்திருப்பாள் போலும். திடீரென ஒரு எஸ். எம். எஸ் வந்தது.

I wsh u wr here wt me 2 enjoi d breeze n d breath f me.

ஒரு வேளை காதலுனுக்கு அனுப்ப வேண்டிய குறுஞ்செய்தி தான் எனக்கு வந்ததோ என்று this is kovalu, who was this (என் ஆங்கிலம் அவ்வளவுதான், வேறென்ன செய்ய). இதற்கு கீழே வருவதனைத்தும் எங்களுக்குள் நடந்த குறுஞ்செய்தி சம்பாஷனைகள்......

Ko என்பது கோவாலுவினையும் Ka என்பது கனகாவினையும் குறிக்கும். இதையும் ஏன் போடுகிறேன் என்றால், நம் தமிழ் எழுத்து சிற்பிகளுக்கு நவீன உலகின் விவரங்கள் தெரியாது.

Ka: I kno u, n u kno me, bt u don kno me, find me who i am
Ko: sorry, i dont know you who is this
Ka: She knos u. I kno her. u knos me. who am i
Ko: ru Meera Jasmine ? Geetha ? Saharika ?
Ka: wow! u kno so mny gals n nt me ya, fnd me i m longn
Ko: Give me a clue
Ka: d gal wth a N95 whom we bot wth our c'mn frnd
Ko: who is our common friend tel me
Ka: fnd out. im XX-XX-XX now find me, u cmntd wth my luks wth hr
Ko: super. who are you?
Ka: Ranjitha or Rekha
Ko: wrng, i start wth K n nds wth A
Ka: Kavya, Kanika, Kousalya, Kshathriya
Ko: clsr 2 Kanika
Ka: are you Kanaka, sheela's frnd
Ko: Wow. congrats. Finally. nvr thot ur so dump. poya.
Ka: sorry. sorry. sorry. lets talk
(5 minutes later - நான் ஐந்து முறை அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டேன், ரிங் அடித்துக் கொண்டே இருந்தது)
Ka: Are you not interested in me? Where can we go?
(15 minutes later - மீண்டும் அடித்து பார்த்தேன்)
Ka: I think, you dont like me, we can enjoy ourselves. Common reply kanaka

ஒரு வாரம் கழித்து மீண்டும் அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
"சாரி சார் மொபலை வெக்கெஷன் போகும்போது ஷீலா கிட்ட கொடுத்திருந்தேன். இப்போதான் sorry i dont know you who is thisன்னு உங்க நம்பரை பார்த்தேன். அதுதான் போன் பண்ணி சொல்லிடாலாமேன்னு போன் பண்ணேன்." - கனகா

அதற்கு பிறகு நான் ஷீலாவினை பார்க்கவில்லை.


கோவாலுவின் "மாயாவாதமிகையதார்த்தநவீனம் - இடஞ்சுட்டி பொருள் விளக்குக" என்கிற தலைப்பில் இதாலா கால்வினோவுக்கு சவால் விட்டு எழுதிய ஒரு பதிவு.

கடைசி பாலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோட்டை விட்ட கப்பின் மதிப்பினை விட, அன்றைக்கு டோனி பேசியதை ரெக்கார்டு செய்ய முடியாமல் போனதே என்று கோவிந்தன் கவலைப்பட்டது கிருஷ்ணணுக்கு கேட்டாலும், கேட்டாமல் போல இருந்து கொண்டே, கோவாலுவிடம் அதைப் பற்றி கதையளந்ததை கோவிந்தன் கேட்டது கிருஷ்ணணுக்கு தெரியாது என்றாலும், கோவாலுவிற்கு அதை கோவிந்தனை பின்னொரு சமயம் சொல்லி காட்டி, கிருஷ்ணன் எப்படிப்பட்டவர் என்று சொன்னதும், ஆனால் கோவாலுவிடம் சொல்லும் எல்லா விஷயங்களும், இரவு 'லட்சுமி' முடிந்தபிறகு கோவாலு தன் மனைவி குந்தியிடம் சொல்லுவாள் என்பது கோவிந்தனுக்கும், கிருஷ்ணணுக்கும் தெரியாது என்பதும், குந்திக்கு கோவாலு வழியாக இல்லாமல், சூரியன் வழியாக ஒரு மகன் இருக்கிறான் என்பது கோவாலுவிற்கும் தெரியாது என்பது சூரியனுக்கும், குந்திக்கும் தெரியும். கர்ணன் என்றொரு முன்னாளைய இயக்குநர் இருந்தார், மிகக் கவர்ச்சியாக அவர் எடுத்த 'ஜம்பு' படத்தில் ஜெய்சங்கரும் இருந்திருந்தார். கர்ணணின் அப்பா சூரியன் அல்ல. கோவாலுவும் அல்ல. ஆனால், கர்ணணின் அம்மா குந்தி தான் என்பதில் கிருஷ்ணணுக்கு எந்த சந்தேகமுமில்லை.

இப்போது போட்டி கேள்விகள்,
எஸ்.எம்.எஸ்ஸில் மட்டுமே உங்கள் விடைகளை அனுப்பி ஏமாறுங்கள், அப்போது தான் நாங்களும், டெலிகாம் நிறுவனங்களும் சம்பாதிக்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட எஸ்.எம்.எஸ் அனுப்புவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் - ஏமாறுவதற்கு.

பின்குறிப்பு: மேலே சொன்ன மொத்தமும், எஸ்.எம்.எஸ் விவரங்களும் சேர்த்து ஒரு எஸ்.எம்.ஸ் போட்டி இருக்கிறது. விர்ஜின் மொபலை எண் 932345678 என்ற எண்ணுக்கு பத்து முறை அழைத்தால், உங்களூக்கான ரகசிய குறியீட்டு எண் அனுப்பபடும், அதை வைத்துக் கொண்டு மூர் மார்க்கெட்டில் சிவசாம்பிராணி பொடியினை சலீம் ஜாபர் கடையில், குறீயிட்டு எண் சொல்லி வாங்கினால், உங்களுக்கான இலவச பொருள் இருபதாண்டுகளில் உங்கள் வீடு தேடி வரும்.


கோவாலுவின் பழைய 'நிர்பந்தங்களுட்பட்ட சுற்றுசூழலியலில் முடக்குவாதமும், அமெரிக்க முதலாளித்துவ வல்லரசின் எதிர்மறை தொடர் திணிப்பும் மற்றும் இரண்டு செட்டு இட்லி போண்டாவும்’ கட்டுரையில் 27ஆம் பக்கத்தில் இருந்த ஒரு பகுதியினை கோவாலு மறுபடியும் இங்கே பதித்து இருக்கிறார். 28 - 32 பக்கங்களை அமெரிக்க எதிர்ப்பணியில் கிழித்து விட்டதாலும் அதுவே ஒரு ஈரானிய மொழிபெயர்ப்பின் ஆங்கில மூல ஜெராக்ஸ் என்பதாலும், இங்கே பதியப் படவில்லை.

சிறுபத்திரிக்கை தமிழ் எழுத்தாளன், சென்னை முழுவதும் நமீதா போஸ்டராய் பார்த்து ஒன்னுக்கு அடித்து வருகிறான். If i avoide someone because of the colour of his skin, it is th same as hating a man because of the clothes he wears. அடுத்த முறை குறுஞ்செய்தி அனுப்பும்போது பார்த்து அனுப்பவேண்டும் - ரெண்டு fkக்கு இடையில் தேவையில்லாமல் இடைவெளி விட்டிருக்கிறோம். மோனிகா லெவின்ஸ்கியிடம் ஹிலாரி கிளிண்டன் தனிமையில் இருப்பின் என்ன கேட்டிருப்பார் ? பின்னாடி உரசிய பெருசினை கிழிப்பது போல are you a fucking MCP and a dog என்று பஸ்ஸில் கேட்ட பெண்ணின் பிரா ஸ்ட்ராப் கொஞ்சம் விலகியிருந்ததை பார்ப்பதற்காக புத்தர் சிலுவையேறினார். நமூட்டு சிரிப்பு சிரித்து கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரம் ஏசு ஏரோபிக்ஸில் 40C உள்ளே போட்டு D&G என்று போட்டிருக்கும் பனியன் போட்டு குதித்து கொண்டிருக்கும் ஜெனிப்ரே பார்த்து கொண்டிருக்கிறார், யாரெனும் ஒருவர் இன்றைக்கு பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் ஏசுவின் சார்பில், பிட்சுகள் விஹாரங்கள் விஹாரங்களாக தேடிக் கொண்டிருக்கிறார்கள், புத்த சிலை இருந்த இடத்தில் ஒரு நாய் ஆயி போயிருக்கிறது. அடிச்செருப்பால, நாதாரி, இரண்டு குவார்ட்டருக்கு உனுக்கு பீவ் கேக்குதா, அன்னான்ட போ என்று முனியாண்டி அரிவாளின் மூலம் ஆம்லெட் கடைந்து கொண்டிருந்த அன்றைக்கு தான் நம்மாழ்வார்புரத்தில் இருக்கும் நதியா என்ற நரிக்குறவ பெண்ணும், முடிச்சூர் ரோட்டில் இருக்கும் பார்த்தசாரதி ஜயங்காரின் பேத்தி ஆண்டாள் என்றழைக்கப்படும் ஸ்னிவிதாவும் எம்.எம்.எஸ்ஸில் முதல் லெஸ்பியன் கிளிப் அனுப்பினார்கள். மே 27, 2008 அன்றைக்கு நாராயணனின் வாழ்வில் ஒன்றும் பெரிதாக கிழித்து விடவில்லை என்று தொடர்ந்தாற் போல பொய் சொன்னான்.

இப்படி செக்ஸ் மட்டுமே எழுதினால் தென்னமரிக்க இலக்கிய பரவெளியில் தனக்கு இடம் இருப்பதாக நம்ப ஆரம்பித்த காலகட்டமது (இதை இப்போது ஸ்ரீலஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ்ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ் கோவிந்தாசாமியின் தலைமை சீடராக தன்னை நிர்ணயித்துக் கொண்டிருக்கும் கோவாலு ஒரு நனவோடையாக எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது)


உண்மையில் இந்த பதிவு அவசியமே இல்லை. அவசியங்களுக்கான அவசியங்கள் கூட இல்லாமல், அவசர அவசரவாக காப்பியடித்தது. பார்த்தீர்களா, காபி பேஸ்ட் பண்ணியதற்கே அந்த மொழி தொற்றிக் கொண்டது. கோவாலு கண்ணசரும்போது எடுத்து தொடர்ச்சியாக பதிகிறேன்.
Blogged with the Flock Browser

Labels: , , ,


Comments:
கோவாலுவின் நான் லீனியர் படிமங்களையும் பின் யதார்த்தவியல்வாத மாயத் திரிபணுவாதத்தையும் ஒன்றன் மேல் ஒன்றாகக் காட்டிய ஒலி-ஒளிப் படிமம் இப்பதிவு.

//உண்மையில் இந்த பதிவு அவசியமே இல்லை. அவசியங்களுக்கான அவசியங்கள் கூட இல்லாமல், அவசர அவசரவாக காப்பியடித்தது.//

அவசியங்களின் அவசரங்களை அவசரங்களின் அவசியங்களே முடிவெடுக்கும். அவசியம் என்பது அட்டெண்டன்ஸ்!
 
பதிவின் ஆரம்பத்தில் சாருவை நக்கலடிப்பதாக தெரிகிறது. அப்புறம் யார் யார் கும்மப்படுகிறார்கள் என்று தெரியவில்லை :-(
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


情色貼圖,色情聊天室,情色視訊,情色文學,色情小說,情色小說,臺灣情色網,色情,情色電影,色情遊戲,嘟嘟情人色網,麗的色遊戲,情色論壇,色情網站,一葉情貼圖片區,做愛,性愛,美女視訊,辣妹視訊,視訊聊天室,視訊交友網,免費視訊聊天,美女交友,做愛影片

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]