Jun 27, 2008

[சுயதம்பட்டம்] கலக்கல் கிரிக்கெட்

அன்றைக்கும் வழக்கம்போல தான் காலை 5.30 க்கு எழுந்து விளையாட போயிருந்தேன். 6.15-க்கு இரண்டு நபர்கள் கையில் கேமராவோடு, நாங்கள் விளையாடுவதை படமெடுத்து கொண்டிருந்தார்கள். யாரோ NRI கும்பல், memorabilia-வுகாக எடுக்கிறார்கள் என்று நினைத்து வழக்கமாக பீச்சில், மணலில் மேட் போட்டு கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம் கழித்து அருகில் வந்து சுய அறிமுகம் செய்து கொண்டார்கள் "நாங்க சன் டிவில இருந்து வரோம். சீரியல் / கிரிக்கெட் ரெண்டையும் கம்பைன் பண்ணி ஒரு இன்னோவேடிவ் ப்ரொக்ராம் ஒண்ணு ப்ளான் பண்ணிருக்கோம். கலந்துக்கிறீங்களா!" முதலில் சரி, இது வழக்கமான, சின்னத்திரை கேன் டிட் கேமரா கலாட்டா போல, என புறக்கணித்து விட்டு, செல்பேசி எண்களை கொடுத்துவிட்டு ஆட ஆரம்பித்து விட்டோம்.

மூன்று வாரங்கள் கழித்து போன் வந்தது. சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் 4.00 மணிக்கு மேட்ச் இருக்கிறது என்று. சரி என லேசாக நிமிர்ந்து, ட்ராக்ஸ் வாங்கி ஷூஸ் வாங்கி (நாங்க வெறும் காலில் ஆடற ஆளுங்க) போனால், எங்களூடைய சூட்டிங் 10 மணிக்கு தான் ஆரம்பித்தது. சின்னத்திரை அணிக்கும் எங்களுக்கும் போட்டி. இதில் காமெடி என்னவென்றால், நடந்த உள்ளரங்கில் எங்களுக்கு பயிற்சி செய்ய அனுமதிக்கவில்லை. அவர்கள் ஒரே பில்-டப் போடு பிட்ச்லியே பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் மந்தமாக ஒரு ஒரமாக நின்று கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம். வாங்கி வந்த ட்ராக்ஸ் ப்ரீ சைஸ் வேறு, நாடாவும் சரியாக இல்லை. கல்யாணராமன் பாணியில், இழுத்து இழுத்தூ, உள்ளே மடித்துக் கொண்டேதான் ஆட ஆரம்பித்தேன். பின்னர் ஆரம்பித்த போட்டியில் டாஸ் வென்று அவர்களை ஆடச் சொன்னோம். ஆட்டம் ஆரம்பமானது.

பொறவு, இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை (29-ஜூன்) இரவு 9.30 மணிக்கு சின்னத்திரையில் காண்க, நாங்கள் என்ன ஆடிக் கிழித்தோம் என்று தெரியும் :) 25 வருட கிரிக்கெட் ஆட்ட பைத்தியத்திற்கு இப்படியெல்லாம் தானா விடிவுகாலம் பொறக்கணும்.

Labels: , , ,


Comments:
அப்போன்னா ஜெயிச்சிட்டீங்கன்னு சொல்லுங்க. வாழ்த்துக்கள்!
 
ஆக இனிமே சன் டிவி புகழ் உருப்படதாது நாரயண் என்று உங்களை விளிக்கலாம் :)
upload that into youtube.
 
வாழ்த்துகள் ஐடிஎஸ் ஸ்டார்ஸ் ! உங்கள் 12 ஓட்டங்கள் உங்கள் அணியின் வெற்றிக்கு வெகுவாக துணை புரிந்தது :) கிரிக்கெட் எப்படியெல்லாம் ஆடலாம் என ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ' ?
இனி கிரிக்கெட் புகழ் நாராயணனின் எண்டோர்ஸ்மெண்ட்களை எதிர்பார்க்கலாமா :)))
 
நாராயண்,

உங்கள் 'மேன் ஆஃப் த மேட்ச்' ஆட்டம் பார்த்தேன். திலீப் வெங்க்சர்க்கார் மாதிரி ஆட்டத்தைத்துவக்கினீர்கள். அவரைபோன்ற உடல்வாகும் உங்களுக்கு. உங்கள் 'தல' சரவணகுமாரும் நன்றாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தந்தீர்கள். மேட்ச் சுவாரசியமாக இருந்தது. உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லையெனில் இனி 'சன் டிவி புகழ்' நாராயணுக்கு நிறைய ரசிகைகள் வரிசையில் நிற்கக்கூடும். வாழ்த்துக்கள்.
 
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்
 
அடுத்த மேட்சு எப்போ?

அமா, அது என்ன ஐ.டி.ஸ் ஸ்டார்ஸ்?

அப்புரம் நம்ம மோகன்ராம் கமெண்டிரியில பாலாஜியோட பாட்டிங்a பாத்து 'அட, ஒரு காமெடி ஆக்டர் இந்த அளவுக்கு நல்லா கிரிகெட் விளையாடுவார்ன்னு எதிர்பார்க்கலைனு' சொன்னார். இதுக்கு கண்டிப்பா நம்ம கோவாலு ஸ்டையில ஒரு கண்டன அறிக்கையை நீங்க எழுதுறீங்க :-))
 
Inna saare, Romba naala ala kaanom...Velai vetti murikkudha....
 
Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com
 
We hope you can give more exposure to your blog posts by encouraging your visitors to share your posts on eTamil. Doing so will be mutually beneficial both for your site and eTamil community. We believe the effort we've taken to build a community of visitors who are interested in to stay in touch with the Tamil society is much needed to grow Tamil web presense.

When a post is submitted, only title and first few characters of the submitted post will appear on eTamil and Title is linked directly to your post. Users who think the post is great would vote for it and bring the post to the top.

You can make the story submission process easier by place this button(can be obtained in the following URL) on your site.

http://www.etamil.net/faq-en.php
Thanks
eTamil team.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]