Dec 9, 2008

இது வேற மாதிரியான T-20

தமிழ்10 விக்கி ஒரு ஆரம்பம்

என்னது இது?

தமிழ், தமிழ்நாடு, தமிழ்மக்கள் சார்ந்த எந்த ஒரு விஷயமும் இதில் இடம்பெறலாம். இதில் சிறந்த 10 / மோசமான 10 என்றளவில் வரிசைப்படுத்தலாம். (10+10 = 20 = Tamilnadu 20 > T 20) அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வாழ்வியல், மாவட்டங்கள், தனிநபர்கள், வசதிகள், பிரச்சனைகள், என யார் வேண்டுமானாலும் வரிசைப்படுத்தப்படலாம்.

எதற்காக?

இது வெறும் ஜாலிக்கான முயற்சி மட்டுமல்ல. ஐந்து வருடம் கழித்து பார்க்கும் போது, ஐந்து வருடங்களுக்கு முன் எவையெவையெல்லாம் முக்கியமாயிருந்தன என்பதும், அதன் தற்கால முக்கியத்துவத்துவத்தையும் அளவிட வசதியாய் இருக்கும்.

இதை தான் குமுதமும், ஆனந்தவிகடனும் செய்கிறார்களே, பின் எதற்கு?

ஊடகங்கள் செய்யும் விஷயங்களுக்கு பின்னுள்ள பின்புலங்கள் வேறு. மக்களாய் நேரடியாய் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்து பேசுவது வேறு. மேலும் ஊடகங்களுக்கு இருக்கும் வீச்சினை விட், வலைப்பதிவுகள், டிவிட்டர் போன்ற மின்னூடகங்களுக்கு இருக்கும் வீச்சு அதிகம். தொடர்ச்சியாக பல பேர் இணையாக விவாதிக்க வழியளிக்கும்.

எப்படி செய்வது?

http://tamil10.pbwiki.com என்கிற தளத்திற்கு போங்கள், உங்களுக்கு விக்கியில் கணக்கு இல்லையென்றால் ஒன்றினை துவங்குங்கள்.கணக்கு இலவசம் தான். நீங்கள் Open ID மாதிரியான ஒரே கணக்கெண் வைத்திருந்தால் அதன் மூலமும் உள்நழைந்து உங்களுடைய கருத்துக்களை எழுதலாம்.இந்த விக்கி ஒரு கருவூலம், இதில் எல்லாவிதமான கருத்துகளும் சேர்க்கப்படும். டிசம்பர் 25 ஆரம்பித்து இதில் சொல்லப்பட்டவைகளை கூகிள் ஒட்டெடுப்பில் விடப்படும். முடிவுகள் டிசம்பர் 31ஆம் தேதி வலைப்பதிவுகளில் அறிவிக்கப்படும்.

என்ன பயன்?

நேரடியாக ஒன்றுமில்லை. ஆனால் கூட்டணியாக மக்கள் என்ன நினைக்கிறார்கள்,எதை வாழ்த்த / வைய தயாராக இருக்கிறார்கள் என்கிற ஒரு கழுகு பார்வை கிடைக்கும்.

எழுத, திருத்த, பின்னூட்டமிட செல்க http://tamil10.pbwiki.com

Labels: , , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]