Mar 23, 2009

ஜீன்ஸ், பளாக்பெர்ரி & 5 இலட்சம் பங்குகள்

நிஷிகந்தா முகர்ஜி.

5 அடி. 3 அங்குலம். நேஷனல் லா காலேஜில் கார்ப்பரேட் லா முடித்து 6 வருடங்களாகிறது. மையிட்ட கண்கள். கொஞ்சம் சப்பையான மூக்கு. பார்மல் சட்டையில் மேலிரண்டு பட்டன்கள் திறந்திருந்தன. கொஞ்சம் தேய்ந்து போன லெவிஸ் ஜீன்ஸ். வலது கையில் குட்டியாய் சிலுவை போட்ட ஒரு ப்ரெஸ்லெட். குறைவான முடி. அளவான புன்னகை.நிஷிகந்தா என்று பெயர் வைத்துக் கொண்டு கேட்டால் கிறிஸ்டியன் என்று சொல்வாள். பண ராட்சஸி. அப்பா சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞர். காசுக்கும், கேளிக்கைக்கும் பஞ்சமில்லாத குடும்பம். 6 மாதத்துக்கு ஒரு முறை ஸுவிஸில் விடுமுறை கொண்டாடும் பெருங்குடும்பம். தம்பி மராத்தி தியேட்டரில் தாடியும், அழுக்கு ஜீன்ஸுமாக கம்யுனிஸம் பேசுவான், பியட் பேபியா வைத்துக் கொண்டு.

நேரம்: 1.30 பிற்பகல்

சிவாஜி பார்க் எதிரே இருக்கிற பாரிஸ்தாவில்,ஒரு கையில் கேஃபே லேட்டேயும், இன்னொரு கையில் ப்ளாக்பெர்ரியுமாக இருந்தபோது தான் பார்த்தேன்.பக்கத்தில் போன போது கேட்ட முதல் வாக்கியம்
Fuck them straight. I need to close that damn fkin thing by 2.30, before the markets get closed

என்னவென்று தெரிந்து கொள்வதற்கு முன், என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நான் விவேக். 5 அடி 7 அங்குலம். வாகான உடல்வாகு. மும்பை பாஷையில் மதராஸி. வேலை நிதி சம்பந்தப்பட்டது. ஊழ்ல்கள், பேரங்கள், கறுப்பு பணம் என்பது மாதிரியான ரொம்ப உசத்தியான ஆட்டம் நான் ஆடுவது. தெஹல்கா மாதிரியான பத்திரிக்கைகள் என்னை பவர் ப்ரோக்கர்கள் என்று அழைக்கும். சர்ச் கேட்டில் ஆரம்பித்தால் இருக்கும் எல்லா வங்கி எம்.டி களும், கார்ப்பரேட் உலகத்தின் எல்லா “சி” தலைகளும் என்னை பார்க்க அனுமதி வாங்க வேண்டும்.மொத்தத்தில் எவ்விதமான கெட்ட பழக்கங்களும் எனக்கு இல்லை என்கிற பொய்யினை தொடர்ச்சியாக சொல்லும் கெட்ட பழக்கத்தை விட வேறெதுவுமில்லை. சிவாஜி பார்க்கில் சச்சின் தெண்டுல்கர் விளையாடி புகழ் பெற்ற பிறகு, சச்சினோடு விளையாட கொடுத்து வைக்கவில்லையானாலும், பார்த்து விட்டாவது வரலாம் என்று போன போது தான் நிஷிகந்தாவினை பார்த்தேன். பார்த்தேன் என்பது பொய். ஒரு நிமிடத்தில் மானசீகமாக அவளுடைய அப்பாவின் அனுமதியினை வாங்க கனவில் போய்விட்டு வந்தேன் என்பது தான் உண்மை.

நேரம்: 1.50 பிற்பகல்

”ஹாய் விவேக்”

“ஹாய் நிஷி. கியா சல் ரஹா ஹே”

“முட்டாள். நீ இந்தியில் பேசாதே, எனக்கு இந்தி மறந்துவிடும். என்ன காரியம்”

மேற் சொன்ன மூன்று வாக்கியங்கள் முடிப்பதற்கு எங்களுக்கு 20 நிமிடங்கள் ஆகியது. இருவரும் அவரவர் ப்ளாக்பெர்ரியில் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தோம்.

நேரம்: 2.10 பிற்பகல்

“நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் நிஷி”

“ஹைதராபாத் கட்டுமான நிறுவனம். 3 லட்சம் பங்குகள். ப்ரேவேட் ப்ளேஸ்மெண்டு. டெல்லி ஆள். காலையிலிருந்து காசினை வைத்துக் கொண்டு கழுத்தறுக்கிறான். பிரபாதேவியில் ஹோட்டலில் சூட்கேஸ் நிறைய பணம். ரெட்டி தொய்ந்து போன தன் நிறுவனத்தின் பங்கினை தராமல் அடம் பிடிக்கிறான். நிப்டியில் 37 போகிறது. டெல்லிகாரன் 30ல் நிற்கிறான். ரெட்டி 34ல் இருந்து இறங்காமல் அடம்பிடிக்கிறான். அங்கே என்ன விசேஷம்”

“விசேஷம் தான். ஹைதராபாத்? கட்டுமான நிறுவனம் ? சத்யம் பிரச்சனைக்கு பிறகு ஹைதராபாத் என்று யார் சொன்னாலும் காத தூரம் ஒடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஜஸ்ட் ஜோக்கிங். 33 முடியுமா. என்னிடத்தில் ஆள் இருக்கிறான். என்ன அப் ஸ்விங் செய்ய முடியும்”

“33 ரெட்டி வருவான். அப் ஸ்விங் 25% ஒரு வாரம்”

“33 தருகிறேன். 50% அப் ஸ்விங். இரண்டு வாரம். 5 லட்சம் பங்குகள். கேட்டு சொல்”

”ரெட்டி 34லிலேயே நிற்கிறான். என்ன செய்யலாம்”

“அவன் தம்பி மனைவியோடு மத்தியானம் வீட்டில் இருப்பதை நிறுத்த சொல். 33 என் பார்ட்டி ரெடி. எல்லாம் விவசாயிகளின் கடன் மானியத்தில் சம்பாதித்த பணம். தொடர்ச்சியாக வரும். 33லிருந்து ஒரே மாதத்தில் 70வினை தொட வைக்கிறேன். அர்ஜூன் வர்ஷித்தோடு பேசுகிறேன். பயல் காசில் குறி. 5% ஆப் மார்க்கெட் கொடுத்தால் போதும். சந்தையில் விளையாடுவான். மார்ச் முடியும் போது மார்க்கெட் கேப்பிடலைசேஷனை 6 மாத முந்தைய நிலையில் கொண்டு வந்துவிடுவான். நமக்கு 2% என்ன சொல்கிறாய். ரெட்டியோடு தெளிவாக பேசு.”

நேரம்: 2.40 பிற்பகல்

“விவேக். 33 முடித்தாகிவிட்டது. 5 இலட்சம் பங்குகள். காசு எங்கே”

“அந்தேரி கிழக்கில், ஒரு பி.பி.ஒவில் டேட்டா சென்டர்களின் நடுவில் இருக்கிறது. அரசாங்கம் அச்சடித்த அழுக்கு 500 ரூபாய் தாள்கள்”

“எப்போது கிடைக்கும் விவேக். மணி என்ன இப்போது ? மணி 2.45, மொத்தத்தையும் லோக்கன்வாலாவில் இருக்கும் ரெப்ரியா மாலில் கொடுக்க முடியுமா, அடுத்த கால் மணி நேரத்தில்”

“இரு நிஷி கேட்டு சொல்கிறேன்”

நேரம்: 2.50 பிற்பகல்

“நிஷி, நீ சொன்ன இடத்துக்கு பணம் அனுப்பியாகிவிட்டது. என்னுடைய ஆள் உன்னுடைய பார்ட்டியின் இடத்தில் இருக்கிறான். ரெப்ரியா மால். 3வது மாடி.”

”சரி. உனக்கு பிடித்த லெமன் ஹனி டீ குடி. பாத்ரூம் போய்விட்டு வருகிறேன்"

நேரம்: 3.05 பிற்பகல்

என்னுடைய செல்பேசியில் அந்த மெஸேஜ் வந்திருந்தது.

நேரம்: 3.10 பிற்பகல்

”Done Vivek. Everything is pakka. Money is transferred to your Standard Chartered Account. Check Now"

”உன்னை விட வோடாபோனும், ஸ்டான்சார்ட்டும் பாஸ்ட். ஐந்து நிமிடங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டது.”

”வேறு எவ்வளவு வைத்திருக்கிறான் உன்னாள். அர்ஜூனோடு பேசினேன், இரவு ஐநாக்ஸில் படம் போலாமா என்று கேட்டான். சரியான வழிசல் பார்ட்டி. நீ ஏன் வழிவதில்லை விவேக் ? நான் பார்த்த ஆண்களில் ஐ லவ் யூ சொல்லாத, நைட் ப்ளாட் காலியாக இருக்கிறது என்று கூப்பிடாத சில ஆண்களில் நீயும் ஒருவன். ஒரு வேளை நீ கே-வா”

“டியர். நான் ஸ்ட்ரெய்ட் தான். ஆனால் வேலையையும், வேட்கையையும் வெவ்வேறு இடத்தில் வைத்திருப்பவன். உன்னோடு படுத்தால், புணர்வின் போது கூட எண்கள் கண்களில் வந்து போகும். அதற்கு சென்னை தான் சரி. அத்தை மகள், மாமன் மகள் என ஒரு கூட்டமிருக்கிறது. அங்கே பார்த்துக் கொள்கிறேன். அர்ஜுனிடத்தில் ஒரு ப்ரெஞ்ச் கிஸ்ஸோடு வேலை முடிந்துவிடும். என்ன ஒரே பிரச்சனை. வழிசலாக எஸ்.எம்.எஸ் அனுப்புவான். நாதாரி”

“குட். உன்னுடைய ஒரு பர்சென்ட் பிடித்தமெல்லாம் போக 1,47,350 சரியா”

“நாட் பேட். லா படித்துவிட்டு சரியாக கணக்கு போடுகிறாய்.”

நேரம்: 3.40 பிற்பகல்

“ஆனாலும், அநியாயத்துக்கு ஒரு காபியை 70ரூ சொல்கிறார்கள். இந்தியாவில் காஸ்ட் ஆப் லிவிங் அதிகமாகிவிட்டது. சரி நான் கிளம்புகிறேன். ஒரு தென்னிந்திய எம்.பி 3000 கோடி ரூபாய் வைத்திருக்கிறான். என்ன செய்யலாம்”

“விவேக். இப்போது சந்தையில் இறக்கினால் சந்தேகம் வந்துவிடும். வேண்டுமானால் கேஷாக கொடுக்க சொல், மஹாராஷ்டிராவின் ஆரஞ்சு சேனைக்கு தேவைப்படுகிறது. ரிடர்ன், ஜெயித்தால் ரிலையன்ஸில் பேசி மெட்ரோவின் ஒரு பகுதியினை எம்.பியின் கம்பெனிக்கு தர சொல்கிறேன். தோற்றால், போட்ட காசு 2% வட்டியோடு திரும்பி வந்துவிடும். என்ன சொல்கிறாய்”

“கேட்டு சொல்கிறேன்”

“பை”

“பை”

தேவையான பின்குறிப்பு:
A stock market, or equity market, is a private or public market for the trading of company stock and derivatives at an agreed price; these are securities listed on a stock exchange as well as those only traded privately. The size of the world stock market is estimated at about $36.6 trillion US at the beginning of October 2008. Free Market Economy allows buyers and sellers of the stock to determine the value more perfectly and arriving at fair market value of the corporation.

Labels:


Comments:
கடகடவென்று புரண்டோடும் சடசட நடை; தேவையான அளவு சரக்கு மற்றும் மசாலா இருந்தாலும் முடிவில் இன்னும் கொஞ்சம் முடிவு இருந்திருக்கலாம். கடைசி வரியை ஆரம்பித்திலேயே யோசித்து விட்டு கதை சொல்லத் துவங்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, வாத்தியார் சொல்வார் :-)
 
பேரங்கள் தென்னிந்திய / மஹாராஷ்ட்ர அரசியலை விற்று தனிமனித லாபம் வாங்குகின்றன‌. நல்லா இருக்கு.
 
Flop...not impressive. You are just trying to use so many new words...of which I am not sure u reallly understood before writing them.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]