Sep 17, 2009

[சமூகம்] வரவு எட்டணா, செலவு பத்தணா

சோனியா எகானமி கிளாஸில் போகிறார். ராகுல் காந்தி ரயிலில் போகிறார். பிரணாப் முகர்ஜி எகானமி கிளாஸில் போய்க் கொண்டு, சசி தரூரையும், கிருஷ்ணாவையும் அய்ந்து நட்சத்திர விடுதியிலிருந்து விரட்டுகிறார். சசி தரூர், எகனாமி கிளாஸினை மாட்டு கொட்டகை என்று சொல்லுகிறார். கேக்கறவன் கேணப்பயலா இருந்தா கே.பி.சுந்தராம்பாள் ஜீன்ஸ் போட்டுட்டு வந்தாங்கன்னு சொல்லுவாங்க அந்த கதை இது.

முதலில் இந்த எகானமி கிளாஸ் ஜோக்கு.உதாரணத்துக்கு ஏதாவது ஒரு மந்திரி எ.கியில் போகிறார் என்றால், விமான பணிப்பெண்கள் அவரை விழுந்து விழுந்து கவனிப்பார்கள், மத்த பயணிகளின் சேவைக்கு எள்ளு. எகனாமி கிளாஸில் தானே போகிறோம் என்று ஒன்று விட்ட சித்தப்பா பையன் முதற்கொண்டு எல்லாரையும் ஏற்றி போவார்கள்.காந்தியின் எளிமை பற்றி பேசும் போது ஒரு கதை சொல்லுவார்கள். காந்தி எங்கே போனாலும், ஆட்டுப்பால் தான் குடிப்பாராம். இதனால், அவர் எங்கே போனாலும் ஒரளவுக்கு நன்றாக பால் தரும் ஒரு ஆட்டினை பிடித்து கட்டவேண்டும். இல்லையென்றால் கூடவே ஒரு ஆட்டினை கொண்டு போக வேண்டும். அந்த மாதிரி இவர்கள் ரயிலில் போனார்கள் என்றால் 37வது வட்ட அடிமட்ட தொண்டன் வரை சென்ட்ரலிலோ, எழும்பூரிலோ வான வேடிக்கைகளோடு வரவேற்க்கும் வைபவங்கள் நடக்கும்.

இந்த நாட்டில் எது எதற்கோ எவ்வளவோ செலவு செய்கிறோம்.தேசிய கட்டாய கிராம பணித்திட்டத்தில் (NREGS)தரப்படும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் வெறுமனே 30-40பைசா தான் கடைக்கோடியில் இருப்பவனுக்கு போய் சேருகிறது. உங்களின் சிக்கன நடவடிக்கைகள் அங்கே காட்டுங்கள். அதனை 70பைசாவாக மாற்ற என்ன தேவை என்று யோசியுங்கள்.

மாயாவதி மாதிரி முட்டாள்தனமாக தனக்கும், தனனை சார்ந்தவர்களுக்கும் சிலை வைத்து கொண்டு சீன் போடும் நாடகங்களை குறையுங்கள்.உரூவ ரூபமாக இருக்கும் கடவுளை எதிர்த்து நடுரோட்டில் போட்டு உடைத்த பெரியாரினையே சிலை வடிவாய் எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. அதை விட கொடுமை, அந்த சிலைக்கு மாலை போட்டு வண்ங்கி வேறு போகிறார்கள்.அது வேறு கதை, இதற்கு கடவுள் நம்பிக்கையே பெட்டர்.

அரசு எடுக்கும் விழாக்களில் செலவுகளை குறையுங்கள். வினைல் போர்ட்டும், கட்-அவுடுமாய், ஜெகஜோதி விளக்குகளோடு ஒரு அடிக்கல்லினை நட்டுப்போக நடக்கும் கூத்துக்களில் இருக்கும் செலவீனங்களை குறையுங்கள். தன்னுடைய ஆட்சி தான் சிறந்தது என்று எல்லா முதலைமச்சர்கள் ஆங்கில, பிராந்திய ஏடுகளில் 3 முழு பக்கம் அரசு செலவில் விளம்பரம் கொடுப்பதை நிறுத்துங்கள். ஏ.சி கோச்சில் பயணித்து கொண்டு சென்னை-பெங்களூர் போக 6 மணி நேரம் எடுத்து கொண்டு, தண்டமாய் கூட்டாளிகளோடு சீட்டாடுவதற்கு பதில், விமான பயணம் ஒன்றும் செலவல்ல.Bring in more accountability to MPs rather than getting into austerity measures, which is neither going to improve topline or bottomline of this country.

எகானமி கிளாஸில் பயணித்தால் மட்டும் இங்கே எதுவும் மாறிவிடாது.இதெல்லாம் சுத்த ஹம்பக். போய் வேலையை பாருங்கப்பா... இவங்க எப்பவுமே இப்படித்தான்.... அய்ய்ய்யோ, அய்ய்ய்யோ.

சீரியஸாக ஒன்று, சமீபத்தில் என்னை கவர்ந்த தளம் இது தான்: www.rtination.com எனக்கு தெரிந்து சமூக ஊடக வெளியில்(Social Media) இந்தியாவிற்கு தேவையான மிக முக்கியமான தளமாக இதனை நம்மால் மாற்ற முடியும். எல்லாவற்றையும் கேள்வி கேட்போம், கேட்டாலேயொழிய இங்கே எதுவும் கிடைக்காது.கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க.....

Labels: , , ,


Comments:
well said. additionally if all party leaders would issue an order to reduce their bribes by 25%, that will help the common man.
 
In many ways, Pranab Mukherjee is still thinking that we are in the 80's. These austerity measures would found gullible takers in that era, not now. People see them for what they are - economically useless, practically inconvenient, and politically feeble.
 
மாறிவரும் அரசியலை புரிந்து கொள்ளாமல் மாடத்திலிருந்து ஆட்சி புரிவதன் கோளாறு.பிரெஞ்ச் புரட்சியின்போது இருந்த அரசியின் அறிவின்மைக்கு சற்றும் குறைந்ததில்லை இந்த யுக்தி. புதிய தலைமுறை தரூரே இவர்களின் அரசியல் தேக்கத்தன்மையின் வெறுமையில் மாட்டிக்கொண்டு விழிக்கிறார். இளைஞர்களின் வாக்குவிகிதம் வளர்ந்துவரும் நாட்டில் மேல்பூச்சு அரசியல் எடுபடாது என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தும்.
 
ஜோசப், சீரிகாந்த், மணியன் நன்றிகள்.

செலவீனங்களை குறைக்க இந்தியாவில் தொழில்நுட்பத்தினை புகுத்த வேண்டும். உலகத்திற்க்கே மென்பொருள் செய்து கொடுக்கும் ஒரு நாட்டில் தான் எல்லா மந்திரிகளும் பயணிக்கிறார்கள். வீடியோ கான்பரன்சிங் மாதிரியான விஷயங்களை வெறுமனே பொழுது போக்காக நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்னமும் எத்தனை கவுன்சிலர்களுக்கு மின்னஞ்சலின் பயன்பாடு தெரியும்? இங்கே எல்லாவற்றுக்கும் மனு கொடுக்க வேண்டும். கொடுத்த மனு தங்களுடைய ரெப்ரென்ஸுக்காக பிரதி எடுக்க வேண்டும். இப்படி கணக்கு போட்டால், நாம் செலவிடும் காகிதங்களின் எண்ணிக்கை என்ன?

இந்த மாதிரி பலவிசயங்களில் நம்மால் சேமிக்க முடியும். அதை விடுத்து, சும்மா எகானமி கிளாஸில் போனால் ஒன்றும் தேறாது.
 
We can't expect politicians to change overnight from their 62yrs of bribe, let this austeriry be a begining, we can chang them step by step
Defineatly this is +ve sign, now all citizens are talking of this, politicians will be cautious in spending public money, 1st victory 4 ppl
austerity measures are good begining from politicians, do not discourage thm. Anywy they are not ging to stop bribe,atleast let them do these
In our LTA, we need to pay diff in amt if want to travel 1st AC. simlrly,polticns can upgrade to busins class on their own money, no probs
 
//சுவிசர்லாந்து. வெனிஸ் ஏரிகள். கொடைக்கானல் மலைச்சரிவுகள். இலங்கையின் இயற்கை சூழல். ஆலப்புழாவின் போட் வீடுகள்.////கொஞ்சமாவது மனுஷனாக//


//சொர்க்கம் காசிருக்கும்போது. நரகம் சுற்றிலும் இருப்பவர்கள் புரிந்து கொள்ளாதவரை//

சூப்பர்ப்...

//வரவு எட்டணா செலவு பத்தணா//

நாம தமிழர்கள் --எப்பவுமே அப்படித்தான்...

அருமை... தொடர்ந்து விளாசுங்கள்
 
அது என்னங்க நாராயண் அய்ந்து? ஐகாரம் தமிழ் எழுத்துதானே. ஐந்து என எழுதினால் நன்றாகத்தானே இருக்கு?
 
இந்த வேர்ட் வெரிபிகேஷன் சனியனை எடுத்துத் தொலைக்கக் கூடாதா? அதான் கமெண்ட் மாடரேஷன் ஆப்ஷன் இருக்கே!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]