Dec 18, 2009

எட்செட்ரா

சென்னை ஹோட்டல்களில் தேசிய ஒருமைப்பாடு தலை சுற்ற வைக்கிறது. இட்லிக்கு தொட்டுக் கொள்ள கார சட்னி, தேங்காய் சட்னி, மற்றும் புதினா சட்னியினை வரிசையாக இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை நிறத்தோடு வழங்குகிறார்கள்.நடுவில் அசோக சக்கரம் தான் குறை.

தசாவதாரத்தின் சைவ-வைணவ சர்ச்சையினை கன்னிமேரா நூலகர்கள் சர்வசாதாரணமாக தீர்த்துவிட்டார்கள். வைணவம் என்கிற தலைப்பின்கீழுள்ள அடுக்கில் நாலைந்து திருவாசகம் புத்தகங்கள்.

சமீபத்தில் படித்ததில் பிடித்தது சுதேசமித்திரனின் கோபுரம்தாங்கி சிறுகதை தொகுப்பில் “கோபுரம் தாங்கி” கதையும், முதல் கதையும் பெயர் மறந்து விட்டது. அருமையான நடை. அதே மாதிரி எஸ்.சங்கரநாராயணனின் தொகுப்பிலிருந்த “குதிரேயேற்றம்” கதை. எம்.ஜி.சுரேஷின் தொகுப்பிலிருந்து Frenzy Schizophrenia அடிப்படையில் அமைந்த கதை. தமிழில் சாரு,ஜெமோ,எஸ்.ரா தாண்டிய ஒரு பெருங்கூட்டம் நல்ல கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறது.நாம் சினிமா கிசுகிசு மாதிரி, இலக்கிய கிசுகிசுவோடு நின்று கொண்டிருக்கிறோமோ??

அனுராக் காஷ்யபின் தேவ்.டி. ஸ்பானிஷ் சினிமாவிற்கு சவால் விடுகிற திரைக்கதை. காட்சியமைப்பு மற்றும் தரம். அமித் திரிவேதியின் இசை, இதுவரை இந்திய சினிமா கேட்டிராத இசை. ரொம்ப பேர் சுருதிஹாசனின் “உன்னைப் போல் ஒருவனின்” இசை அசாதாரணம் என்கிறார்கள். எனக்கென்னமோ, சுருதி இன்னமும் மணிசர்மாவின் “மார்னிங் ராகாவின்” ப்யுஷனையே தாண்டவில்லை என்பேன். அமித் திரிவேதியின் இசை உண்மையிலேயே புத்தம்புதிய இசை. படத்தின் பிண்ணணி இசையும், சிறு கதாபாத்திரங்களும் பளிச். சந்தாவின் ஆரம்ப காட்சிகளில் வெறும் ஆங்கில வசனங்கள்தான் கேட்கிறது. இங்கே அதெயெல்லாம், நல்ல தமிழ்பெயர் வைத்து கெளதம் வாசுதேவ மேனனால் மட்டுமே பண்ணமுடியும் ;)

ஆழ்வார்பேட்டை மாமி மெஸ்ஸின் காலையுணவு ஏகாந்தம். பஞ்சுபஞ்சாய் இட்லிகள், நெய் வழுக்கியோடும் பொங்கல், கார தோசை. 40 நாட்கள் நான் -வெஜிடேரியனாய் காலந்தள்ளியதோடு ஒப்பீட்டால், இது தான் சொர்க்கம். இந்த சுவைக்காகவே கே.கே.நகர் டூ ஆழ்வார்பேட்டை வந்து ஒசோன் ஒட்டையினை என்னாலான வரையில் பெரிதாக்குகிறேன்.

அமெரிக்க நூலகத்தில் கழிப்பறைகளில் சென்சார்கள், கதவை திறந்தால் தான் விளக்கு எரிகிறது.கன்னிமேரா நூலக கழிப்பறையில் தண்ணீர் சீறியடிக்கிறது.மெரீனாவில் காந்தி சிலைக்கு பின்னாடி புல்வெளி. 5 மாங்காய் துண்டங்கள் ரூ15, இந்தியாவின் உணவு பணவீக்கம் பின் ஏன் எகிறாது.

ப்ரீயாய் யாராவது அழைத்தாலும், செயிண்ட் மேரீஸ் சாலையிலுள்ள "கர்மா கஃபேக்கு" போகாதீர்கள். கர்மாந்திர கஃபே. லெக் ரூம் இல்லாத நாற்காலிகள். இணையம் இல்லாத இடம், பெண்களற்ற மேஜைகள். பேசாமல் ”ஆவிஷ்டா கஃபே” (ரா.கி.சாலை0 அல்லது பாரிஸ்தா (கா.நா.கா. சாலை) போங்கள். காபியோடு, அபாயகரமான வளைவுகளோடு எதிரில் இருக்கும் பெண்ணை பார்த்து கவிதை என்கிற எழவினை எழுதி பிரசுரமானால், 2 லிட்டர் பெட்ரோலுக்கு ஆச்சு.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்த்தது, நீதிபதிக்கு போக, முன்னால் டவாலி ஒரு தண்டத்தினை எடுத்து, பாம்பிற்கு இணையாக உஸ் உஸ்ஸைன்று குரலெடுத்துப் போகிறார்கள். எல்லாரும் அசையாமல் நிற்கிறார்கள். மதிய இடைவேளையில் அதே நீதிபதி தன் சகாக்களோடு இந்தியா காபி ஹவுஸில் காபிக்கு கியுவில் நிற்கிறார். இந்தியா everywhere.

கீ.வீரமணியின் 77வது பிறந்தநாள். ”உண்மை” டிசம்பர் இதழெங்கும் ஒரே பிம்ப நிறுவல்கள். போட்டோக்கள். கட்டுரைகள். ஈரோட்டுக் கிழவனின் ஹிட்லிஸ்டில் முதலில் இப்போது இருப்பது திராவிட கழகமாம்.Enemy within.

ராமன் வனவாச கதையாய், ஒரு வழியாய் 14 வருடங்கள் கழித்து மீண்டும் அதே அரும்பாக்கம் து.கோ.வைணவ கல்லூரிக்கு விஜயம்.இந்த முறை ஆசிரியனாய். அதே மைதானம். அதே குளம். அதே நூலகம். கண்டு,கேட்டு,உண்டுயிர்த்த அத்தனை இஞ்ச் செங்கல்களிலும், என் ஜீன்களிலும் அதே அவள். Times fly so fast.

ப்ராட்வே பழக்கதோஷம். மூத்திரவாசம். செளஜன்யம். ங்கோத்தா என்பது சார், மேடம் என்பது மாதிரி வாக்கிய ஆரம்பம். Swear words are extended vocabulary. சிக்னலில் இருக்கும்போது கேட்டது

PS: கொத்து பரோட்டா என்று நான் எழுதிய சமாச்சாரங்களின் உரிமம் பில்லியன் டாலர் பெறும், இருந்தாலும் தமிழ் மொழியின் எதிர்காலம் கருதி எவ்வித கோரிக்கையும் வைக்காமல் கேபிள் சங்கருக்கு அதை தத்து கொடுத்துவிட்டேன். அதனால், இந்த மாதிரி விஷயங்கள் எழுதுவதற்கான புதிய வார்த்தை தான் ’எட்செட்ரா”

Labels: , ,


Comments:
//தமிழில் சாரு,ஜெமோ,எஸ்.ரா தாண்டிய ஒரு பெருங்கூட்டம் நல்ல கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறது.நாம் சினிமா கிசுகிசு மாதிரி, இலக்கிய கிசுகிசுவோடு நின்று கொண்டிருக்கிறோமோ?//

நிஜம் !

//சைவ-வைணவ சர்ச்சையினை கன்னிமேரா நூலகர்கள் சர்வசாதாரணமாக தீர்த்துவிட்டார்கள். வைணவம் என்கிற தலைப்பின்கீழுள்ள அடுக்கில் நாலைந்து திருவாசகம் புத்தகங்கள்.//

//காபியோடு, அபாயகரமான வளைவுகளோடு எதிரில் இருக்கும் பெண்ணை பார்த்து கவிதை என்கிற எழவினை எழுதி பிரசுரமானால், 2 லிட்டர் பெட்ரோலுக்கு ஆச்சு.//

LOL :)))


எட்செட்ரா டோட்டலி சிரிச்சுக்கிட்டே படிச்சு முடிச்சேன் :)

நிறைய எட்செட்ரா எட்செட்ரா வரட்டும் !
 
ராமன் வனவாச கதையாய், ஒரு வழியாய் 14 வருடங்கள் கழித்து மீண்டும் அதே அரும்பாக்கம் து.கோ.வைணவ கல்லூரிக்கு விஜயம்.இந்த முறை ஆசிரியனாய். அதே மைதானம். அதே குளம். அதே நூலகம். கண்டு,கேட்டு,உண்டுயிர்த்த அத்தனை இஞ்ச் செங்கல்களிலும், என் ஜீன்களிலும் அதே அவள்

Mike Mohan, Vaali, SPB and IR are missing :)
 
எக்செட்ராவை விட கொத்து பரோட்டவே பொருத்தமாக உள்ளது என்ற என் கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். நாம் சமைத்ததை விரும்பி, அதன் பெயர்,recipeயுடன் மற்றவர்களும் பயன்படுத்த துவங்குவதுதானே நமக்கும் பெருமை; மேலும் நாம் சமைப்பதன் நோக்கம் இதைவிட வேறு வழிகளில் நிறைவேற வாய்ப்பு இல்லை(ஆனால் சொல்லிவிட்டு பயன்படுத்துவது நல்லது; சொல்லாவிட்டாலும் பெரிய பிரச்சனையில்லை) என்று நினைக்கிறேன். அதனால் கொத்து பரோட்டா போட வேண்டும் என்பதே என் அவா.
 
Please give the address of the mami mess in Alwarpet.
 
தலைவரே.. தெரிந்து வைத்தது இல்லை.. :))
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]