Apr 25, 2011
சாய்பாபாவும் ‘செக்கு’லுரிசமும்
புட்டபர்த்தி சாய்பாபா மறைந்து போனார். நாடெங்கிலுமிருந்து பக்த கோடிகள் புட்டபர்த்தி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். ஆந்திர அரசு 4 நாள் அரசு துக்கமாக அறிவித்திருக்கிறது. பக்தர்கள் அழுதவண்ணம் இருக்கிறார்கள். பிரதமரும், ஜனாதிபதியும் தங்கள் இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்கள். உலகமெங்கும் சாய்பாபாவிற்கு 100 கோடி பக்தர்கள் இருக்கிறார்களாம்.
ஒரு தனிமனிதன் 100 கோடி மக்களுக்கு எதோ ஒரு சந்தோஷத்தினைக் கொடுத்திருக்கிறான் என்கிற வகையில் சாய்பாபாவின் மறைவு ஒரு முக்கியமான நிகழ்வுதான். ஒன்னும் தெரியாத சராசரி நடிகன் செத்தாலே முதல் பக்கத்தில் செய்தி போட்டு அதை வட்டார துக்கமா மாற்றும் நாளிதழ்களின் பிடியில், இப்போது சாய்பாபா. அடுத்த ஒரு வாரத்திற்கு கவலையில்லை. எனக்கு சாய்பாபாவின் பக்தர்கள் மேலோ, அவர் முன்வைத்த இறைநம்பிக்கையிலோ, இன்ன பிற சித்து விளையாட்டுக்களிலோ பிரச்சனைகளில்லை.
தனிப்பட்ட முறையில், எனக்கு எவ்விதமான சாமியார்களின் மீதும், ஏன் இறைவன் என்கிற நபர் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனால் நம்புவர்களை நக்கலடிப்பதும் என் வழியில்லை. சாய்பாபாவின் மறைவுக்கு பின்னால் நடக்கக் கூடிய சங்கதிகளில் எனக்கு சில ஆதாரப் பிரச்சனைகள் உண்டு.
அன்னை தெரசாவுக்கு தான் இந்திய அரசாங்கம் கடைசியாக தேசிய அளவில் துக்கம் அனுஷ்டித்தது. அதற்கு பிறகு எனக்குத் தெரிந்து சாய்பாபாவுக்கு தான். ஆந்திர அரசு 4 நாள் அரசு துக்கம் அனுஷ்டிப்பதின் பின்னிருக்கும் ’பவர் ப்ளே’யினை என்னால் புரிந்துக் கொள்ளமுடிகிறது.
ஆனால்,
இந்து தத்துவ மரபில் துறவி என்பவர் எல்லாவற்றையும் துறந்த பற்றற்ற நிலையில் இருப்பவர். பட்டினத்தார் பாடல்களில் எனக்குத் தெரிந்தவரை அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. சாய்பாபா துறவி. அப்படியெனில், ஏன் அவருடைய மைத்துனர் பையன், ஒன்றுவிட்ட சித்தப்பா, சகலைப் போன்றவர்களை சாய்பாபா ட்ரஸ்டினை நிர்வகிக்க நடக்கும் போட்டியில் ஒருவராக போடவேண்டும்? பற்றற்ற துறவிக்கு எதற்கு 1.75 இலட்சம் கோடி சொத்து, அதை நிர்வகிக்க போட்டாப் போட்டி.
ஆதரவாளர்கள் உடனே அவர் கல்லூரி கட்டினார், அணை கட்டினார் என்றெல்லாம் ஒரு லிஸ்டினை எடுத்து முன்வைப்பார்கள். அவர் கல்லூரி கட்டியதும், பள்ளி கட்டியதும் நல்லதே. இன்றைக்கு பார்தி ஏர்டெல் கூட இந்தியாவில் 550 பள்ளிகள் கட்டுகிறது. அஸிம் ப்ரேம்ஜி தன் சொத்தில் கிட்டத்திட்ட $2 பில்லியன் பங்குககளை பள்ளிகள் கட்டக் கொடுத்திருக்கிறார். இதனாலெல்லாம், கேப்பிடலிசம் புனிதப்பட்டு விட்டதா என்ன?
கடவுளே தேவையில்லை என்றோ, கடவுளை நம்புவன் முட்டாள் என்றோ சொல்லும், திக கோஷ்டியில்லை நான். ஆனால், கடவுளின் பேரைச் சொல்லி மூளைச் சலவை செய்யும் பல்வேறு கோஷ்டிகளில் இவரும் ஒருவரே. ஷீரடி சாய்பாபா பக்தர்களிடம் போய் புட்ட்பர்த்தி சாய்பாபா பற்றிக் கேளுங்கள். என்னுடைய கேள்வி, அவர் யாராக வேண்டுமானலும், இருந்துவிட்டு போகட்டும். ஆனால் சொந்தக்காரர்கள் ட்ரஸ்டினை நிர்வகிக்க வேண்டும் என்கிற கேள்வி எழும்போதே அவரின் நற்செயல்கள் பெயரிழக்கின்றன.
இந்தியாவில் கல்யாணம்,கருமாதிக்கு சேரும், பாத்திரமும் போடுபவன் கூட சேவை வரிக் கட்டுகிறான். ஆனால் மானுடச் சேவை செய்கிறேன் பேர்வழி என்கிறப் பெயரில் இலட்சத்திக் கோடிக் கணக்கில் சொத்துக்கள் வைத்திருக்கும் எந்தவொரு இயக்கமும், சேவை வரிக் கட்டுவதில்லை. கேட்டால் அத்தனையும் “ட்ரஸ்ட்” யாரும் அனுபவிக்கமுடியாது என்கிறார்கள். அனுபவிக்காமாலா, ப்ரைவேட் சார்ட்டர் ப்ளேன்களை வாடகைக்கு எடுக்கிறீர்கள் ?
சரி போகட்டும். இதே மாதிரியான மரியாதையை ஒரு ஹசன் காத்ரிக்கோ, ஒரு ராபர்ட் செல்வரத்தினத்துக்கோ இந்தியாவில் தரமுடியுமா? அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மதத்தின் கீழ் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறீர்கள். அப்போது இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்து மதத்தினை எப்படி நிர்ணயிக்கிறது ?
இடதுசாரிகள் முதலாளித்துவத்தினை கேள்விக்கு உட்படுத்தும்போது, தொடர்ச்சியாய் சொல்லும் ஒரு வசனம் - முதலாளிகள் தொழிலாளிகளின் உழைப்பினை உறிஞ்சுகிறார்கள். அவர்களின் ரத்தத்தினைக் காசாய் மாற்றிக் கொழிக்கிறார்கள். 1.75 இலட்சம் கோடி சொத்து வைத்திருக்கும் ஒரு சாமியாரின் சிஷ்யகோடிகள் படத்தின் முன் புரண்டு புரண்டு அழுகிறார்கள். இவர்களை இந்தளவுக்கு மூளைச்சலவை செய்து வைத்திருக்கும் கார்ப்பரேட் சாமியார்களை, இந்தியாவில் எந்தக் கணக்கில் சேர்ப்பீர்கள்?
இந்தியாவின் செக்யுலரிசம் என்பது தொடர்ச்சியாக காவிகளுக்கு ஆதரவான, முதலாளிகளுக்கு ஆதரவான, பவர் ப்ரோக்கர்களுக்கு ஆதரவான, அரசியல்வாதிகள், ரவுடிகள், பலமிகுந்தவர்கள்/பணமிகுந்தவர்களுக்கு ஆதரவான இசமாக நீர்த்துப் போய் தசாம்சங்களாகிறது. செக்கு மாட்டுத் தனமாய் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பது.
சாய்பாபா இந்த ‘செக்கு’லுரிசத்தின் இன்னொரு வெளிப்பாடு.
PS: ஷீரடி சாய்ப்பாபாவின் மறு அவதாரம் நானே என்று அறிவித்துக் கொண்டுவந்தவர் தான் புட்டபர்த்தி. 1.75 இலட்சம் கோடி சொத்துக்கு அடிப்போட இன்னோரு சாய்பாபா கண்டிப்பாக மக்கள் முன் ‘தரிசனம்’ தருவார்.

- எல்லா விதமான சாமியார்களுக்கும் இதே மாதிரியான துக்கம் இந்தியாவில் அனுஷ்டிக்கப்படுமா ?
- அது இந்து சாமியார்களுக்கு மட்டுமா ?
- பிற மத சாமியார்களுக்கும் இது வருமா ?
- மதச் சார்ப்பின்மையின்மை என்பதை இந்தியாவில் எப்படி நாம் கட்டமைக்கிறோம் - இந்தியா என்கிற நாடு எந்த மதத்தையும் சாராத நாடு என்றா, அல்லது எல்ல மதங்களையும் உள்ளடக்கியதென்றா அல்லது எல்லா மத, இன நம்பிக்கைகளை அவரவர் இஷ்டத்துக்கு விட்டு பராக்கு பார்க்கும் தேசமென்றா ? எப்படி நாம் மதச்சார்ப்பின்மையினை நிறுவுகிறோம் ?
- தனிமனித நம்பிக்கைகளையும், அதன் சார்புகளையும் அரசு ரீதியாக எப்படி நாம் எதிர்கொள்கிறோம். பிரதமரோ, ஜனாதிபதியோ தங்களுடைய தனிநபர் நம்பிக்கைகளை எப்படி தேசத்தின் நம்பிக்கையாக, இரங்கலாக முன் வைக்கலாம் ?
- ஒரு வேளை இது சரியான விஷயமென்றால், நாளை பாபா ராம்தேவுக்கோ, ஸ்வாமி அக்னிவேஷுக்கோ, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கோ, மாதா அமிர்தானந்தமாயிக்கோ, சத்குரு ஜக்கி வாசுதேவுக்கோ, நித்யானந்தா முதலான tier-2 சாமியார்களுக்கோ, அல்லது பிராந்திய, வட்டார சாமியார்களுக்கும் இதுப் பொருந்துமா ?
- இதற்கான அளவுகோல் என்ன ? குறைந்தபட்சம் எவ்வளவு கோடிப் பக்தர்கள் இருந்தால் அரசு முன்வரும் ?
இந்து தத்துவ மரபில் துறவி என்பவர் எல்லாவற்றையும் துறந்த பற்றற்ற நிலையில் இருப்பவர். பட்டினத்தார் பாடல்களில் எனக்குத் தெரிந்தவரை அப்படிதான் சொல்லப்பட்டிருக்கிறது. சாய்பாபா துறவி. அப்படியெனில், ஏன் அவருடைய மைத்துனர் பையன், ஒன்றுவிட்ட சித்தப்பா, சகலைப் போன்றவர்களை சாய்பாபா ட்ரஸ்டினை நிர்வகிக்க நடக்கும் போட்டியில் ஒருவராக போடவேண்டும்? பற்றற்ற துறவிக்கு எதற்கு 1.75 இலட்சம் கோடி சொத்து, அதை நிர்வகிக்க போட்டாப் போட்டி.
ஆதரவாளர்கள் உடனே அவர் கல்லூரி கட்டினார், அணை கட்டினார் என்றெல்லாம் ஒரு லிஸ்டினை எடுத்து முன்வைப்பார்கள். அவர் கல்லூரி கட்டியதும், பள்ளி கட்டியதும் நல்லதே. இன்றைக்கு பார்தி ஏர்டெல் கூட இந்தியாவில் 550 பள்ளிகள் கட்டுகிறது. அஸிம் ப்ரேம்ஜி தன் சொத்தில் கிட்டத்திட்ட $2 பில்லியன் பங்குககளை பள்ளிகள் கட்டக் கொடுத்திருக்கிறார். இதனாலெல்லாம், கேப்பிடலிசம் புனிதப்பட்டு விட்டதா என்ன?
கடவுளே தேவையில்லை என்றோ, கடவுளை நம்புவன் முட்டாள் என்றோ சொல்லும், திக கோஷ்டியில்லை நான். ஆனால், கடவுளின் பேரைச் சொல்லி மூளைச் சலவை செய்யும் பல்வேறு கோஷ்டிகளில் இவரும் ஒருவரே. ஷீரடி சாய்பாபா பக்தர்களிடம் போய் புட்ட்பர்த்தி சாய்பாபா பற்றிக் கேளுங்கள். என்னுடைய கேள்வி, அவர் யாராக வேண்டுமானலும், இருந்துவிட்டு போகட்டும். ஆனால் சொந்தக்காரர்கள் ட்ரஸ்டினை நிர்வகிக்க வேண்டும் என்கிற கேள்வி எழும்போதே அவரின் நற்செயல்கள் பெயரிழக்கின்றன.
இந்தியாவில் கல்யாணம்,கருமாதிக்கு சேரும், பாத்திரமும் போடுபவன் கூட சேவை வரிக் கட்டுகிறான். ஆனால் மானுடச் சேவை செய்கிறேன் பேர்வழி என்கிறப் பெயரில் இலட்சத்திக் கோடிக் கணக்கில் சொத்துக்கள் வைத்திருக்கும் எந்தவொரு இயக்கமும், சேவை வரிக் கட்டுவதில்லை. கேட்டால் அத்தனையும் “ட்ரஸ்ட்” யாரும் அனுபவிக்கமுடியாது என்கிறார்கள். அனுபவிக்காமாலா, ப்ரைவேட் சார்ட்டர் ப்ளேன்களை வாடகைக்கு எடுக்கிறீர்கள் ?
சரி போகட்டும். இதே மாதிரியான மரியாதையை ஒரு ஹசன் காத்ரிக்கோ, ஒரு ராபர்ட் செல்வரத்தினத்துக்கோ இந்தியாவில் தரமுடியுமா? அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மதத்தின் கீழ் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறீர்கள். அப்போது இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்து மதத்தினை எப்படி நிர்ணயிக்கிறது ?
இடதுசாரிகள் முதலாளித்துவத்தினை கேள்விக்கு உட்படுத்தும்போது, தொடர்ச்சியாய் சொல்லும் ஒரு வசனம் - முதலாளிகள் தொழிலாளிகளின் உழைப்பினை உறிஞ்சுகிறார்கள். அவர்களின் ரத்தத்தினைக் காசாய் மாற்றிக் கொழிக்கிறார்கள். 1.75 இலட்சம் கோடி சொத்து வைத்திருக்கும் ஒரு சாமியாரின் சிஷ்யகோடிகள் படத்தின் முன் புரண்டு புரண்டு அழுகிறார்கள். இவர்களை இந்தளவுக்கு மூளைச்சலவை செய்து வைத்திருக்கும் கார்ப்பரேட் சாமியார்களை, இந்தியாவில் எந்தக் கணக்கில் சேர்ப்பீர்கள்?
If Capitalism is exploitation, then spiritualism in the name of Corporate gurus & power brokers in India is neo-colonialism.
இந்தியாவின் செக்யுலரிசம் என்பது தொடர்ச்சியாக காவிகளுக்கு ஆதரவான, முதலாளிகளுக்கு ஆதரவான, பவர் ப்ரோக்கர்களுக்கு ஆதரவான, அரசியல்வாதிகள், ரவுடிகள், பலமிகுந்தவர்கள்/பணமிகுந்தவர்களுக்கு ஆதரவான இசமாக நீர்த்துப் போய் தசாம்சங்களாகிறது. செக்கு மாட்டுத் தனமாய் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பது.
சாய்பாபா இந்த ‘செக்கு’லுரிசத்தின் இன்னொரு வெளிப்பாடு.
PS: ஷீரடி சாய்ப்பாபாவின் மறு அவதாரம் நானே என்று அறிவித்துக் கொண்டுவந்தவர் தான் புட்டபர்த்தி. 1.75 இலட்சம் கோடி சொத்துக்கு அடிப்போட இன்னோரு சாய்பாபா கண்டிப்பாக மக்கள் முன் ‘தரிசனம்’ தருவார்.
Labels: அஞ்சலி, இந்தியா, சமூகம், சாய்பாபா, தமிழ்ப்பதிவுகள்
Comments:
<< Home
புட்டபர்த்தி சாய்பாபாவை நம்பும் குடும்பத்தில் பிறந்து, நம்பக் கூடாது என்று தீவிர பிரசாரம் செய்பவள் நான். (உங்களை மாதிரி டிஸ்கி போட்டுக்கிறேன்).
//சகலை// சகலை என்றால் மனைவியின் சகோதரியின் கணவர். சகலை என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மையா? இல்லை நக்கலா?
//ஷீரடி சாய்பாபா பக்தர்களிடம் போய் புட்ட்பர்த்தி சாய்பாபா பற்றிக் கேளுங்கள்.// புதசெவி.
//If Capitalism is exploitation, then spiritualism in the name of Corporate gurus & power brokers in India is neo-colonialism.// மிக உண்மை. இப்படிச் சொல்வதால், தோழிகளை இழக்கிறேன்!

@அதிஷா - நன்றி
@கெக்கே பிக்குணி
சகலை - நக்கல் தான்.
ஷீரடி சாய்பாபாவினை வழிபடும் பக்தர்களுக்கு, புட்டபர்த்தி ஒரு மேஜிக் ஆட்டக்காரர். அவ்வளவே. பாபாவின் பெயரை வைத்துக் கொண்டு சம்பாதித்தவர். கொஞ்சம் அரசியல் ரீதியாய் சொன்னால், எப்படி கள்ளத்தனமாய் [ஸ்மார்ட்டாய் என்றும் சொல்வார்கள்] காந்தியின் பெயரை வைத்து நேரு குடும்பம் சம்பாதித்ததுப் போல.
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]