Jul 11, 2011
உயிர் பெரிது
அந்த கணம் இனி நான் வாழப்போகும் காலம் முழுதும் நினைவில் தங்கும். சுபயோக சுகதினமான வெள்ளிக்கிழமை (8 ஜூலை) மாலை 4.30க்கு மத்திய கைலாஷ் சந்திப்பில், அடியேன் வைகுந்த ப்ராப்தியடைந்து, பொது மருத்துவமனையிலோ, ராயப்பேட்டை மருத்துவமனையிலோ போஸ்ட் மார்ட்டம் முடித்து, போரூர் மின்மயானத்தில் ஒரு டம்ளர் சாம்பலாய் மாறி, யாராவது எனக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து முடித்திருப்பார்கள். உயிரோடு இருக்கிறேன். ஒரு கீறல், சிராய்ப்புகள் கூட இல்லாமல் தப்பித்தாகி விட்டது. Am alive. Seems for the third time, i got an extension to my life.
முதல் நாள், இணையமில்லாத காரணத்தினால், 'ரெசிடென்சி'யின் நள்ளிரவு உணவுவிடுதியில் அமர்ந்து நண்பரின் டேட்டா கார்டு சகிதம் ’கான்பரன்ஸ் கால்’ முடித்து வீடு வந்து சேரும்போது மணி அதிகாலை 2.00. அந்த உரையாடலையொட்டி வெள்ளிக் காலையில் கிட்டத்திட்ட ஐந்து மணிநேரம் ஆராய்ந்து, கொடுத்த ‘ஆபர்’ ஒர் டூபாக்கூர், ப்ராடு என்று கண்டறிந்த போது எஞ்சியது அலுப்பும், ஆயாசமும் தான். One more in the long list of people i wanted to forget & move on. நல்ல வேளையாக நண்பருக்கு ஒரு பைசா இழப்பு இல்லை. காபாற்றியாகி விட்டது. ப்ராடுகள், ஏமாற்றுவர்கள் என கிரிமினல் கும்பல் எல்லாம் என் கண்களுக்கும் மட்டுமே மாட்டுகிறார்கள். வெளவால்களுக்கு இருட்டில் கண் தெரிவதுப் போல, பரந்து விரிந்திருக்கும் உலகில் தொடர்ச்சியாக எனக்கு மட்டுமே இந்த மொள்ளமாறி, முடிச்சவக்கி, கேப்மாரி, ப்ராடு கும்பல்கள் தெரிந்துக் கொண்டேயிருக்கின்றன. வெள்ளிக்கிழமை காபாற்றியது Linkedin வழியாக உலகில் அப்பாவி தொழில்முனைவோர்களை ஏமாற்றும் கும்பல்.
கோவமும், விரக்தியும், ஆயாசமும், சலிப்புமாக மாறி மாறி வாழ்ந்துக் கொண்டிருக்கும் என் வாழ்வில் என் தனிப்பட்ட குழப்பங்கள், பிரச்சனைகள் தாண்டி இந்த மாதிரியான நபர்கள் வேறு என்னை துரத்திக் கொண்டேயிருக்கிறார்கள். நானும் காபாற்றிக் கொண்டேயிருக்கிறேன். இதனால் எனக்கு பைசா பிரயோசனமில்லை என்றாலும், மற்றவர்களுக்கு பைசா இழப்பில்லை. I have started losing my trust on values which were close to my heart. என்னளவில் உலகம் மோசமான புதைகுழியாய் மாறி கிட்டத்திட்ட ஐந்து வருடங்களாகின்றன. அது வேறு பிரச்சனை. எல்லாவிதமான ப்ராடு கும்பல்களையும், நுனிநாக்கு அலம்பல்களையும், உள்ளொன்று வைத்து புறம் பேசும் மகானுபாவர்களுமாக என் சந்திப்புகள் நடக்கின்றன. எல்லாருக்கும் படுத்து எழுந்தவுடன் கோடீஸ்வரனாக வேண்டிய கட்டாயங்கள் இருக்கிறது போலும். அதுக்கு விளையாட நானா கிடைத்தேன்.
என் தேடல்களும், வாசிப்பும் வேறாக இருக்கிறது. என் குழப்பங்கள், வாழ்வியல் சங்கடங்கள், துரோகங்கள், முதுகு குத்தல்கள், உறவுமுறை சிக்கல்கள் என நான் தீர்க்க வேண்டிய காஷ்மீர் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன. உள்ளே இருக்கும் கடவுளை தின்று மிருகம் வளர்ந்தால் பரவாயில்லை. என் கடவுள் ப்ராய்லர் கோழி போல இறப்பதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறார் போலிருக்கிறது. தினமும் செத்துக் கொண்டேயிருக்கிறார். என்னை மாதிரியான ஒரளவுக்கு விஷயம் தெரிந்த ஆட்கள் மிருக குணங்களோடு இருப்பது மகா சிக்கல்.
மேற்சொன்ன, பின் இன்ன பிற லெளகீக 24x7 பிரச்சனைகளோடு வண்டி ஒட்டியது என் தவறு. முழுமையான தவறு என்மீது மட்டுமே. பல்வேறு குழப்பங்களோடு வண்டி அனிச்சையாய் ஒடிக் கொண்டிருந்தது. அந்த தேவையில்லாத வளைவினை நான் எடுத்திருக்கக் கூடாது. ஆனாலும் மனக்கிலேசங்களோடு அனிச்சையாய் திரும்புவனுக்கு என்ன தெரியும்? அந்த வளைவினை எடுத்து திரும்பலாமா, நேராக போகலாமா, யூ டர்ன் அடிக்கலாமா என்கிற குழப்பத்தில் சாலையில் வண்டியை வைத்துக் கொண்டு சஞ்சல முடிவெடுத்துக் கொண்டிருக்கும்போது தான் அது நடந்தது. வேகமாய் வந்த அந்த ’பாஸ்ட் ட்ராக்’ இண்டிகோ, நான் எப்படி போவேன் என்று தெரியாமல் ப்ரேக் அடிக்க முயன்று தோற்று, கிட்டத்திட்ட டிரைவர் ப்ரேக்கின் மீது ஏறி நிற்காத குறையாய் ஒரு கால்வட்டமடித்து நின்ற போது, வண்டிக்கும் எனக்குமான இடைவெளி ஒரு காலடிக்கும் குறைவே. மரணம் ஒரு காலடி இடைவெளியில் வந்து நின்றுவிட்டு நான் அப்புறம் வர்றேன் என்று போனது.
தமிழின் எல்லா கெட்டவார்த்தைகளின் அர்ச்சனைகளோடும், வசைகளோடும், தொடர் உடல் நடுக்கங்களோடும், என்ன நடந்தது என்று கிரகித்துக் கொண்டு அதை உணர்வதற்கும் நேரம் தேவைப்பட்டது. அதன்பின் நடந்தது எல்லாமே முடுக்கி விடப்பட்ட பொம்மை போல நடந்தது. நண்பர் அரவிந்தனைப் பார்த்தது, காபி டேயில் ப்ரெளனி உண்டது, லக்கி/அதிஷாவை சந்தித்து இரவு 10 வரை உரையாடியது. இதில் அவர்கள் மூவர் தான் பேசினார்கள். நான் வெறுமனே மனமெங்கோ பயணிக்க, பார்வையாளனாய் மட்டுமே இருந்தேன். எதுவும் நிரந்தரமில்லை என்று மண்டையில் உறைக்க 35 வருடங்களாகியிருக்கிறது.
Life is fragile என்று சொல்வதற்கும், உணர்வதற்குமான மன இடைவெளி வெகு அதிகம். உணர்ந்தாகி விட்டது. இனி என்ன?
Over and Out.
பின்குறிப்பு: கருப்புப் பணம் போன வாரம் எழுதாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

Labels: சமூகம், சுயம், தமிழ்ப்பதிவுகள், விபத்து
Comments:
<< Home
சந்தோஷம். இதுமாதிரியான விபத்து நுணிகளை வாழ்வின் புதுத்துவக்கம் என்பார்கள். புதுத்துவக்கம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். - வெங்கட், donion
Take care தலைவா.
இரண்டு வாரத்திற்கு முன், கஸ்தூரிபா ரோட்டில் மழை நேரத்தில், 90களில் விழுந்து நானும் என் பைக்கும் குட்டிக்கரணம் அடித்தப் பின்னர் இழுத்துச் செல்லப்பட்டு நானாய் எழுந்து வண்டியை எடுத்துக் கொண்டு மீண்ட பொழுது நினைவில் வந்தது இது தான்.
பொன்னியின் செல்வனில் கல்கி வந்தியத்தேவனைப் பற்றி ஓரிடத்தில் குறிப்பிடும் பொழுது இப்படிச் சொல்வார் “அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் கொட்டாப் புளியைப் போல் இங்கே வந்து முளைத்திருக்கிறான்” சத்தியமா இதைத்தான் நினைத்தேன்.
இந்த மாதிரி நிகழ்வுகளையெல்லாம் இலக்கியமாக்கிவிட்டு நகருங்கள். ;)

நாமல்லாம் போயிட்டா திராவிட நாட்டையோ, தனி தமிழ்நாட்டையோ, தமிழீழத்தையோ யார் தலைவா கட்டியெழுப்புறது?
இன்னும் ஒரு ஆயிரமாண்டு இரும்!
இன்னும் ஒரு ஆயிரமாண்டு இரும்!
/////எதுவும் நிரந்தரமில்லை என்று மண்டையில் உறைக்க 35 வருடங்களாகியிருக்கிறது.
Life is fragile என்று சொல்வதற்கும், உணர்வதற்குமான மன இடைவெளி வெகு அதிகம். உணர்ந்தாகி விட்டது. இனி என்ன?////
சாமியாராகிவிட வேண்டியதுதான்.

கவிஞர் கண்ணதாசனின் புத்தகத்தை படித்தது போன்ற ஒரு உணர்வு.
//எல்லாருக்கும் படுத்து எழுந்தவுடன் கோடீஸ்வரனாக வேண்டிய கட்டாயங்கள் இருக்கிறது போலும்.//
அதற்காகத்தானே ஓடிக்கொண்டே இருக்கிறோம்.கோடிஸ்வரன் ஆனா பின்பு தொலைந்து போன வாழ்கையை நினைத்து வருந்துகிறோம்.
வாழ்கை என்றால் என்ன என்று சொல்லி தராமலேயே இறைவன் மனிதனை படைத்தது விட்டான்.
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]