Oct 1, 2011

ஜென்டில்மேன் சைத்தான்

நிரக்‌ஷனா அனந்தராமன். எல்லாருக்கும் நிரக்‌ஷ். எனக்கு நீரு. TamBram. பொறியியல் படிப்பு. ஒரு டாட் காம்மில் வேலை. என்னைவிட 8 வயது சிறியவள். அபார ஞானம். சுறுசுறுப்பு. பார்ட்டி பிரியை. 10 டவுனிங் தெருவின் பர்மனெண்ட் கஸ்டமர். வோட்கா அடிப்பாள். எப்போதாவது டன்ஹில் புகைப்பாள். பெங்களூர் வளர்ப்பு. பொன் நிறம். எந்த ஆடை அணிந்தாலும், தனியாய் தெரிவாள். சென்னையில் தனியாய் வீடெடுத்து தங்கியிருந்தாள். ஒருவேளை அழகான பெண்கள் எது செய்தாலும் நன்றாக இருக்குமோ ?

சுருள் சுருளாய் முடி. இந்த சுருள் முடி ஒரு டேஞ்சரான விஷயம். Curls turns me. நீருவை பார்க்க வேண்டுமெனில், லேட்டஸ்ட் டவ் விளம்பரம் வரும். அதில் வரும் மாடலுக்கும் நீருவுக்கும் சத்தியமாய் ஆறு வித்தியாசங்களுக்கு மேலிருக்காது. பேசும்போது சேனல் மாறுவதுப் போல நான்கு மொழிகள் பேசுவாள். ஆங்கிலத்தில் ஆரம்பித்து, இந்தியில் தாவி, கன்னடத்தில் நிறுத்தி, தமிழில் முடிப்பாள். தமிழில் அவள் சொல்லும் ‘வுட்ருப்ப்பா-” பா வாக முடியாமல் ஹா-வாக முடியும் அழகு கேட்டாலேயொழிய புரியாது.

நீருவோடு எனக்கு இருந்த உறவினை எப்படி சொல்வது? எங்களிடையே ஒளிவு மறைவுகள் இல்லை. எல்லா குப்பையையும் பேசுவோம். நீலகிரிஸில் விஸ்பர் அல்ட்ரா வாங்கியதிலிருந்துக் கூட எங்கள் சம்பாஷனைகள் தொடங்கியிருக்கிறது. நீருவின் பர்சனாலிடி உயர்ரக ப்ரெஞ்ச் காக்டெயில் ரகம்.

ஏதோ ஒரு தன்னார்வல நிறுவனத்தில் சேர்ந்து, கதியற்ற சிறுமிகளோடு வார இறுதியினை கழிப்பாள். டாட்.காமில் விளம்பரம் விற்பாள். ஹோட்டல் சவேராவின் Girls Niteல் பாடுவாள். பேய்த்தனமாய் எலக்ட்ரிக் கிடார் வாசிப்பாள். தி.நகரில் jive கொஞ்ச நாள் பயின்றாள். பரதநாட்டியம் தெரியும். was in the mood to bed yesterday, but you know what, i cant trust men என்பாள். செம தெளிவு. ‘யேய் நான் பழகின பசங்களுக்கு என்னை எப்படி டீல் பண்ணணும்னு தெரியல. i dont mind bedding with anyone as long as i am comfortable, ஆனா நீ வேறடா.”

மண்டையில் மணி அடிக்கும். ஆனாலும் ஒரு நாளும் எல்லை மீறியதில்லை. அவளும் ஒரு நாளும் என்னை வீட்டுக்கு அழைத்ததில்லை. எங்கள் பேச்சுகள் ஆண்/பெண் உறவுகளை சுற்றியே பெரும்பாலும் இருக்கும். நீருவோடு எனக்கு காதல் இல்லை. நீருவுக்கும் காதல் இல்லை. நாங்கள் இருவருமே அப்போது இரண்டு மோசமான உறவு சிக்கலிருந்து வெளியே வர முயன்றுக் கொண்டிருந்தோம். அதுவும் என் நிலை மகா மோசம். சென்னையின் எல்லா இடங்களும், கூறுகளும் அவளை நினைவுப் படுத்திக் கொண்டே இருந்ததால், i was desparately looking for a change and on a forced sexual abstinence.

என்னிடத்திலிருந்த எல்லா கருணையும் வற்றி உலகம் சபிக்கப்பட்ட இடமாகவும், எல்லாரும் வில்ல/லியாகவும் தெரிந்த நேரமது. ஒரு தோற்றுப் போன ஒப்பந்தத்தினை ஒப்பேற்றும் பணியில் வெகு தீவிரமாய் இருந்த காலமது. பணமென்பது பாதாளத்தினை நோக்கி போய்க் கொண்டிருந்தது. அன்றைக்கும் அப்படி தான். ஏதோ பிரச்சனை. என்னவோ மனக்குழப்பம். நீருவை வழக்கமாய் சந்திக்கும் கேஃபேயில் சந்திப்பதாக திட்டம். வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டால் மழை. குபேரன் என் வாழ்வில் பண்ணிய கஞ்சத்தனத்துக்கு ஈடுகட்ட மொத்தமாய் வருணன் தன் சாத்தியங்களைக் காட்டிக் கொண்டிருந்த நாள். போனடித்து சொன்னவுடன், நுங்கம்பாக்கத்தில் மழையில்லை என்றாள்.

நுங்கம்பாக்கம் கொத்தாரி சாலை தான் இந்த நிகழ்வின் கதாநாயகன் என்பது அப்போது தெரியவில்லை.

அன்று நாங்கள் ஒரு ஆறு பேர், ஆண்கள் நால்வர், பெண்கள் இருவர், இரவு முழுவதும் ஒரு நண்பன் வீட்டில் அகிரா குரோசாவா படங்கள் பார்ப்பதாக திட்டம். அந்த கும்பலிலேயே சரக்கடிக்காத ஒரே ஆள் நான் தான். எல்லாம் வாங்கி தயாராக வைத்திருந்தோம். இரவு 8 மணிக்கு ஆரம்பிப்பதாக திட்டம். பதினோரு மணி வரைக்கும் ஒரு படம் + சரக்கு + அரட்டை. பதினோரு மணிக்கு வெளியேப் போய் சாப்பாடு வாங்கிவிட்டு திரும்பி, மீண்டும் 12.30யிலிருந்து படம் + சரக்கு ஒட்டுவதாக ப்ளான்.

அதிகாலை 3.00க்கு பாதி பேர் தூங்கிவிட்டிருந்தார்கள். நான், நீரு + இன்னொருவன் மட்டுமே விழித்திருந்தோம். சரக்கும் காலியாயிருந்தது. போதும் தூங்கலாம் என்றார் நண்பர். நீரு பாத்ரூம் போனாள். நான் பால்கனியில் நின்று நுங்கம்பாக்கம் கொத்தாரி சாலையினை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர எல்லாரும் சரக்கு அடித்திருந்ததால், போதை ஏறி மட்டையாயிருந்தார்கள். அதிகாலை. கார்பன் கலக்காத காற்று. வெளியே வந்த நீரு, டன் ஹில் பற்ற வைத்தாள். long time da, am high, can feel that. நான் எதுவும் பேசவில்லை. இரண்டு இழுப்பு இழுத்து விட்டு, shall we go for a walk என்றாள்.

3.20 AM

கொத்தாரி சாலை, சென்னையின் ப்ரீமியம் சாலை அதனால் பயமில்லை. நாய் பிரச்சனைகளில்லை. கீழிறங்கி, வாட்ச்மேனிடம் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தோம். ஐம்பதடி நடந்திருப்போம், கவுரவ் படம் பார்த்துட்டு இருக்கும்போது ப்ரோபோஸ் பண்ணான் என்றாள். நான் எதுவும் பேசவில்லை. திடீரென கொஞ்சம் சத்தமாய் பிரிட்னி ஸ்பியர்ஸின் daddy cool, we are ok பாட்டினைப் பாட ஆரம்பித்தாள். நான் கொஞ்சம் மெதுவாய் "நீரு இது ரோடு, எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க" என்றேன். சடாலென முறைத்தாள்.
"கவுரவ் பத்தி சொன்னேன், நீ எதுவுமே சொல்லல
நான் என்ன சொல்றது நீரு, thats between you guys அவனுக்கு தோணினதை அவன் சொன்னான். its upto you to decide
come on man, he sucks. he cant handle me, asshole
சரி அப்ப விடு. அதை பத்தி பேச வேண்டாம்"

சடாலென திரும்பி, "dont you like me" என்று கேட்டாள். "i do, but not with any hidden agenda or marriage in my head & as you said, i dont think am capable enough to handle you" என்று சிரித்தேன். கேட்டவுடன் சிரிக்க ஆரம்பித்தாள். ஸ்டெர்லிங் சாலை வரைக்கும் வந்துவிட்டு, மீண்டும் திரும்ப ஆரம்பித்தோம். பேசாமல் நடந்தோம்.

கொத்தாரி சாலையின் நடுவே, நில்லு என்றாள். நின்றேன்.

3.40 AM

"hug me tight & kiss me
Whaaat?
மண்டையில ஏறலையேடா முண்டம். நான் தண்ணியா, நீயா, கட்டிப்புடின்னு சொன்னேன்.
அது கேட்டுது, அதான் ஏன்னு கேக்கறேன்
போடா லூஸூ" என்றவாறே கட்டிப் பிடித்தாள்.

80 வருட தமிழ் சினிமாவில் அந்த மாதிரி சீன் வந்திருக்குமா என்று தெரியவில்லை. விடியற்காலை 3.45க்கு சென்னையின் மத்தியில், நட்ட நடு ரோட்டில் ஒரு ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்துக் கொண்டு நின்றிருப்பார்களா ? நாங்கள் நின்றோம். உள்ளே சூடும், வெளியே வியர்வையும் வந்தது. இதற்காக தானே ஆசைப்பட்டாய் ............

சடாலென முகம் பற்றி, ஆனால் எச்சரிக்கையாய் முன் நெற்றியில் முத்தமிட்டேன். நீருவின் உடல் என் உடல் மீது ஒட்டிக் கொண்டிருந்த நொடியில், ஜூரம் பரவியது. வீட்டுக்குப் போவோம் என்றேன். lets make out now என்றவுடன் பயம் விலகி, காமம் தலைக்கேறியது. வேகமாக வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஆனாலும் என்னுள்ளே ஏதோ ஒரு மாற்றம் நடந்திருப்பதை உணர முடிந்தது. வீட்டிற்கு வந்து, பைக் எடுத்து 4 மணிக்கு பெசன்ட் நகர் விரட்ட ஆரம்பித்தேன். சைத்தான் மண்டைக்குள் குஷியாக ஆரம்பித்து, பசியினைக் காட்ட ஆரம்பித்திருந்தது. இரண்டு பக்கமும் கால்போட்டுக் கொண்டு கட்டி அணைத்திருந்தாள். உள்ளே ஜூர வேகத்தில் சூடு ஏறினாலும், மனம் வேறு கணக்குப் போட ஆரம்பித்திருந்தது.

4.45 AM

பெசண்ட் அவென்யுவில் அவள் வீட்டுக்கு வந்து இறங்கியவுடன், மனம் தெளிவாக இருந்தது. நீருயை இறங்கச் சொன்னேன்.

"வா போலாம்
நான் வரலை.
நீ போ. you are on a high now, get some rest.
What the fuck man, come lets enjoy
Girl, you are on a high, and i dont want to make use of it. போய் தூங்கு
Go to hell" என்றவாறே மேலேப் போய் கதவை திறந்து அறைந்து சாத்தினாள்.

5.00 AM

பெசண்ட் நகர் பீச்சில் பெருசுகள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்.

இது முடிந்து அதற்கு பிறகு இதைப் பற்றிய பேச்சே வரவில்லை. அவளும் சென்னையிலிருந்து பெங்களுருக்கு மாறிப் போனாள். பன்னார்கட்டா சாலையில் ஐஐஎம் பெங்களூருக்குப் பக்கத்திலிருந்த ஒரு டவுன்ஷிப்பில் 23 மாடி அடுக்ககத்தில் 21வது மாடியில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினாள். கல்யாணம் செய்தாள். கணவன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் இருந்தான். இன்னொரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குப் போனாள். ’சாட்’டில் அவ்வப்போது வந்து அப்டேட் சொல்வாள். அலுவலக அரசியல், கணவனின் பார்ட்டி மோகம், குழந்தை பெறுவதை தள்ளிப் போடுவதின் காரணம், ரெஸ்டாரெண்ட் வைக்க ஆசை, குருவாயூர் கோயில் தரிசனம், யாஹுவின் வீழ்ச்சி, பாஸ் எ பாஸ்கரனில் ஆர்யாவின் ஸ்டெயில், பெங்களூர் வந்தால் வீட்டுக்கு வா என்கிற தொடர் அழைப்புகள், என்னுடைய ஸ்டார்ட்-அப் கனவுகள் என நீளும் தொடர்பில்லாத பேச்சில் ஒரு தடவை கூட நாங்கள் ஆண்/பெண் சமாச்சாரங்கள் பேசவேயில்லை. ஆனாலும் அந்த கொத்தாரி சாலை இரவு எப்போது பேசினாலும் நினைவிலிருந்தது.

ஜூலையில் ஒரு சந்திப்புக்காக ஐஐஎம் பெங்களூர் போக வேண்டியிருந்தது. அழைத்தேன். சந்தோஷமாய் டின்னருக்கு வீட்டுக்கு வா என்றாள். சந்திப்பு முடிந்து 6 மணிக்கு காலிங் பெல் அடித்தேன். கணவனும், அவளுமாய் உற்சாகமாய் வரவேற்றார்கள். கணவனோடு உலக கதைகள் பேசி, 8 மணிக்கு சாப்பிட்டோம். will be back in a moment என்று சொல்லி, அவள் கணவன் கிளம்ப, கதவைப் பூட்டிக் கொண்டு சொன்னாள். அடுக்ககக் கிளப்பில் போய் தண்ணியடித்து விட்டு 10.30க்கு தான் வருவான் என்றாள். இரு என்றாள். இல்லை கிளம்பறேன். அதற்குள் மண்டைக்குள் சைத்தான் உக்கிரமாய் விரட்ட ஆரம்பித்திருந்தான். உடனடியாக கிளம்பினேன்.

கதவருகில் வந்து நின்று thank you for the dinner & time. been a long time & good to catch up again girl என்று சொல்லி கிளம்பினேன். கீழிறங்கி ஆட்டோ பிடித்து பசவனகுடி வந்து சேரும்போது இரவு 10.00. வந்த அலுப்பில் அப்படியே தூங்கி நடு இரவில் பாத்ரூம் போக எழுந்தால், மொபைலில் குறுஞ்செய்தி வந்திருப்பதாக மின்னியது.

You are a perfect gentleman all thru the years. You did the right thing on that night, thanks for that. Proud to have you as my friend. Please, please get married soon. Would envy your future girl. Good night. - நீரு

One more to call me a thorough Gentleman. ம்ம். இந்த ஜென்டில்மென் பட்டத்திற்கு தான் எத்தனை சைத்தான்களை உள்ளுக்குள் கொல்ல வேண்டியிருக்கிறது!

ஹார்மோன் அவென்யு தொடரில் இதுவரை

ஹார்மோன் அவென்யு 1 - 'வரா’து வந்த நாயகி
ஹார்மோன் அவென்யு 2 - ரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ்
ஹார்மோன் அவென்யு 3 - One spoiler is good for life
ஹார்மோன் அவென்யு 4 - சைவப் பூனை
ஹார்மோன் அவென்யு 5 - அனாவஸ்யமா பேசாதீங்கோ
ஹார்மோன் அவென்யு 6 - நான் = கார்த்தி

Labels: , , ,


Comments:
nice man...gentle behavior..
 
அதான் நீங்க உருப்புடவே இல்லை
 
Really liked your style of writing ! Excellent...

BTW, "Curls turns me." should have been "Curls turns me ON" ???

anbudan
BALA
 
Really liked your style of writing ! Excellent...

BTW, "Curls turns me." should have been "Curls turns me ON" ???

anbudan
BALA
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]