Oct 23, 2016

அலைகள் ஒய்வதில்லை - பகுதி 1

”There are today lots of people (middle-level managers) earning between `30 lakhs and `70 lakhs per year. Half of them will lose their jobs in the next 10 years.”
- மோகன் தாஸ் பை, முன்னாள் இன்போசிஸ் இயக்குனர் ***

+++++

இது மனித குல வரலாற்றில் ஒரு சின்ன அத்தியாயம். இப்படி தான் வரலாறு முழுக்க நடந்திருக்கிறது.

இது ஆரம்பம். 

இதன் நீட்சி நமக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் அவ்வளவு உவப்பாக இருக்காது. We are going to see a whole lot of unrests, civil disobedience & blood on the street.

எதிர்காலம் இவ்வளவு அச்சமூட்டுவதாக இருக்குமா என்று கேட்கலாம். ஆனால் வரலாறு அப்படி தான் இதுவரை இருந்திருக்கிறது.  சராசரி மனித மனம் ‘மாற்றத்தினைக்’ கண்டு ஒடி ஒளிந்திருக்கிறது. வரலாற்றில் மாற்றங்கள் நிகழ்ந்தப் போதெல்லாம் அந்த மாற்றத்தினைப் புரிந்துக் கொள்ளாத ஒரு பெருங்கூட்டம் ‘புரட்சி’ என்று இறங்கி நகரங்களை, கிராமங்களை, நாடுகளை ரத்தத்தில் மிதக்க விட்டிருக்கிறது. அதுவே அடுத்த 20 - 30 வருடங்களிலும் நமக்கும் நடக்கலாம். இது புரிய காலச்சக்கரத்தில் 700 ஆண்டுகள் நாம் பின்னோக்கிப் போக வேண்டும்.

அங்கிருந்து தான் இயந்திரங்களின் பேரலைகள்^ (Industrial Revolution) ஆரம்பிக்கிறது. 1784-இல் நீராவி என்ஞினின் கண்டுப்பிடிப்பில் ஆரம்பிக்கிறது இந்த கதை. தண்ணீரை ஆவியாக்கி, அதை இயக்கமாக்கி, அந்த இயக்கத்தையே எரிப் பொருளாக மாற்றி ஒரு நீளமான இரும்பு பெட்டியை நகர வைத்தது. அதற்கு முன்னால் வரை அவ்வளவு பெரிய கனமான பொருளை முன் தள்ளி செல்ல யானைகள், குதிரைகள், அடிமைகள் தேவைப்பட்டார்கள். மனித குலம் பார்த்திராத சாதனையது. இலட்சக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியில் வளர்ந்திருந்த ஒரு இனம், முதன் முறையாக இயற்கையை தன்னுடைய தேவைக்கு மாற்றியதின் ஆரம்பம் அது தான்.

இதுவரை இதுப் போல மூன்று பேரலைகள் வந்திருக்கின்றன. ஒவ்வொரு பேரலைகளைப் பற்றியும் விரிவாக பின்னால் பார்ப்போம். சுருக்கமாய்,  முதல் பேரலை நீராவி என்ஞின்கள், ரயில் ட்ராக்குகள்,  முதல் மெக்கானிகல் இயந்திரங்கள் என்று ஆரம்பித்தது. கிட்டத்திட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு 1870-இல் இரண்டாவது ஆரம்பித்தது. இதில் தான் நாம் மின்சாரம் கண்டுபிடித்தோம். பெரு உற்பத்தி (Mass Production) என்பது உருவானது அப்போது தான். இந்த இரண்டு பேரலைகளின் ஊடே உருவானது தான் இரண்டு உலகப் போர்கள். இரண்டாம் உலகப் போரின் முடிவில் கிட்டத்திட்ட உலகின் முன்னேறிய நாடுகள் அத்தனையும் மக்களை கொல்லாத, ஆனால் போரிடத் தேவையான சாதனங்களை கண்டறிய வேண்டும் என்று ஒதுங்கியதில் ஆரம்பிக்கிறது மூன்றாவது பேரலை. 1950களில் ஆரம்பித்து கிட்டத்திட்ட 2000கள் வரை நீண்டது தான் தகவல் தொழில்நுட்ப பேரலை. இப்போது நாம் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதில் தான் மின்னணு சாதனங்கள், கணினிகள், வலைப்பின்னல்கள் என எல்லாவற்றையும் உருவாக்கினோம். இப்போது மெதுவாக தலையெடுத்து இனி வரும் அத்தனைத் தலைமுறைகளையும் ஒட்டு மொத்தமாக மாற்றப் போவது நான்காம் பேரலை. இது நாள் வரை நிகழ்ந்த பேரலைகளுக்கும், இதற்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. அதனாலேயே இது மனிதகுல வரலாற்றின் சுனாமியாக அடுத்த 200 / 300 வருடங்களில் கொண்டாடப்படும்.

Four Industrial Revolutions

பிரிட்டிஷ் அரசு உலக முழுவதும் காலனியாதிக்கத்தைப் பரப்பியதற்கு காரணமும் இது தான். இயந்திரங்களினால் டெக்ஸ்டெல் மில்கள் உருவாயின. அதற்கான மூலப் பொருட்கள் எங்கெல்லாம் கிடைத்ததோ, அங்கெல்லாம் பிரிட்டிஷ் ஆட்களும், பிற ஐரோப்பிய நாடுகளும் பயணித்தன. இந்தியா என்கிற நிலப்பரப்பு அதனால் தான் பிரிட்டிஷ் மட்டுமல்லாமல், போர்த்துகீசியர்கள், டச்சு காரர்கள், ப்ரெஞ்சு காரர்கள் என பிரித்தாளப்பட்டது. இதில் பிரிட்டிஷ் அரசு மேலெழுந்ததற்கு காரணம், முதல் இரண்டு பேரலைகளின் சூழலும், கண்டுப்பிடிப்பாளர்களும், அதற்கு தோதான eco-systemகளும் அன்றைய ஐரோப்பாவில் அமைந்திருந்தது. முக்கியமாய் நிலக்கரி அவர்களுக்கு கிடைத்தது.

முதலாம் பேரலை உருவானதற்கான காரணமுமே கூட அதற்கு முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் தான் (15 - 17ஆம் நூற்றாண்டுகள்) ஐரோப்பாவின் ‘மறுமலர்ச்சி’ (Renaissance) நடந்திருந்தது. உண்மையில் இன்றைக்கு நாம் taken for granted என்று எடுத்துக் கொள்ளும் பலவற்றுக்கும் மூலமென்பது இந்த மறுமலர்ச்சி^^ + மெடிசி காலகட்டம் தான். இப்போது நடக்க ஆரம்பித்திருப்பதை இயந்திரமயமாக்கல் என்று சுருக்க முடியாது.

இதற்கு முன் நடந்த மூன்று பேரலைகளிலும் மனிதர்கள் தங்களுடைய வேலையினை சுலபமாகவும், தொடர்ச்சியாகவும் செய்யும் இயந்திரங்களைக் கண்டறிந்தார்கள். அவற்றினை மனிதர்களே இயக்கினார்கள். இந்த இயந்திரங்களை இயக்கத் தெரிதல் என்பது ஒரு திறனாக மாறியது. அவை பெரும்பாலும் பத்து மனிதர்கள் செய்யும் பணியினை (tasks) வேகமாகவும், சீராகவும் செய்தது. அதை இயக்கவும், ரிப்பேரானால் சரிப் பார்க்கவும், அவற்றுக்கான உள்ளீடுகளை தரவும் மனிதர்கள் இருந்தார்கள்.

இன்றைய இயந்திரங்களை இந்த கேடகிரியில் கொண்டு வருவதே தவறு. அவை முதலில் மனிதர்களால் கண்காணிக்கப்பட்டு, நிறுவப்பட்டு, இயக்கப்படும் dump machines அல்ல. அவைகள் கொஞ்சம் கொஞ்சமாய் மனிதர்களின் திறமை என்று சொல்லப்பட்ட அறிவாற்றலை (intelligence) தங்களுக்குள் கிரகித்துக் கொள்ளும் சக்தியுடைய அறிவேந்திரங்கள் (Smart Machines). பல சமயங்களில் நாம் இதுநாள் வரை ‘இயந்திரங்கள்’ என்று நம்பிய பெரிய, கண் முன்னே தெரியும் மெக்கானிகல், எலக்ட்ரிக்கல் பொருட்கள் அல்ல இவை. கண்ணுக்கே தெரியாத மென்பொருள் வரிகளில் இயங்குபவை.  இவற்றை ‘அவை’ என அஃறிணையாக எதிர்காலத்தில் சொல்ல மாட்டார்கள்.

ஏன் இவை ஸ்பெஷலானவை ?

திறன் / திறமை என்பது தான் இதுநாள் வரை மனிதர்களின் ஆதார ”வேலையாக” இருந்தது. இந்த திறமைகளை பகுப்பாய்தல் (analytical), படைபாற்றல் (creative), உழைப்பு சார் வேலைகள் என்று முப்பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். மருத்துவம், கணக்காய்தல், பொறியியல் இவை பகுப்பாய்தலின் கீழ் வரும். இதற்கு நீங்கள் துறை சார்ந்து படித்தல் அவசியம். அவற்றை மனனம் செய்தும், அதை தகுந்த இடத்தில், தகுந்த தரவுகளின் வழியே ஆய்ந்து முடிவெடுத்தல் அவசியம். கலை, இலக்கியம், ஊடகம் இவை படைப்பாற்றலின் கீழ் வரும். மனித குல ஆதாரத் தொழிலான வேளாண்மை, ஆடு மாடு மேய்தல், மீன் பிடித்தல் உழைப்பு சார் தொழில்கள், இவை ஜீன்களால் கடத்தப்படும் native intelligence-ன் கீழ் வரும். துறை சார்ந்து படித்தல் இருந்தாலுமே கூட புதிது புதியதாய் உருவாக்கம் இங்கே அவசியம். கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர்கள் இன்ன பிற இந்த இரண்டும் கலந்த கலவையாக உருவாவார்கள்.

இந்த ‘திறமைகள்’ இருப்பதனால் தான் மனிதர்கள் ‘வேலைப்’ பார்த்தார்கள். இந்த ‘திறமைகளை’ கற்றுக் கொள்ள முடியும். படித்தல், அனுபவம், பார்வைகள், முன்னோர்களின் அனுபவங்களின் விளைவுகளை கற்றுத் தேர்தல் என நாம் “திறமைகளைக்’ “கற்றுக் கொள்கிறோம்”. கற்றுக் கொண்டவற்றை துறை சார்ந்து பயன்படுத்துதல் ‘வேலை’ என்றழைக்கப் பட்டது. இந்த ‘வேலைகளுக்கு’ சன்மானமாக ‘ஊதியமோ / கூலியோ / சம்பளமாக’ ஒன்று வழங்கப்பட்டது. இது பணமாக இருந்தது. பணத்தை வைத்துக் கொண்டு மனிதர்கள் தங்களுக்கு தேவையானதை அதற்கு ஈடான ‘மதிப்பைக்’ கொடுத்துப் பெற்றுக் கொண்டார்கள். இதை எழுதுகின்ற இந்த நொடி வரை உலகம் இப்படி தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அறிவேந்திரங்கள் இந்த அடிப்படையை தான் மாற்றப் போகின்றன. பொருள் என்பது சேவையாகவும், அந்த சேவை என்பது பைனரி எண்களாகவும் மாறி விட்டால் என்ன செய்வோம் ?

இயந்திர உலகில் ஒரு கூடுதல் பொருளை உருவாக்க அதற்கான உட்பொருட்களும், உழைப்பும், மனிதர்களின் திறமையும் தேவைப்பட்டது. அறிவேந்திர உலகில் ஒரு கூடுதல் சேவையை உருவாக்கும் எல்லா காரணிகளும் (திறன், திறமை, உழைப்பு, ஈடுபொருள்) டிஜிட்டலாகி சன்மானம் தேவை இல்லை என்றானால் என்ன செய்வது ? The marginal cost of creating something is either near zero or zero and What if the cost of "delivering work" also is Zero ? மேலும் இந்த அறிவேந்திரங்கள் தொடர்ச்சியாக தங்களை upgrade செய்துக் கொள்ள முடியும்.

சிம்பிளாய் நாம் 'இன்னொரு' மருத்துவரை உருவாக்க வேண்டுமெனில் உலகில் ஒரு குழந்தை பிறக்க வேண்டும். அந்த குழந்தை +2-வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். ஐந்து வருடங்கள் மருத்துவம் பயில வேண்டும். ஹவுஸ் சர்ஜனாக இருக்க வேண்டும். ஐந்தாறு வருடங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இதெல்லாம் சரியாக நடந்தால் 30-32 ஆண்டுகளில் நமக்கு ஒரு மருத்துவர் கிடைப்பார். அதாவது ஒரு நல்ல மருத்துவரை நாம் உருவாக்க நமக்கு 30 - 32 ஆண்டுகள் தேவை.

அறிவேந்திரங்களுக்கு அது ஒரே ஒரு file transfer.

One Single / Simple File Transfer Vs 
32 Years of Human Development.   Game Over. 

எவை தேவை, எவை எரிதங்கள் (spam) என்பதை நாம் முடிவு செய்வதில்லை; அறிவேந்திரங்களே முடிவு செய்து ஒரங்கட்டி விடுகின்றன. எவ்வளவு தூரம் நடந்தால் / ஒடினால் எவ்வளவு கலோரிகள் குறையும், என்ன உண்ண வேண்டும், எதை ஈடு கட்ட வேண்டும் என்பதை மருத்துவர்களிடம் போகாமலே உங்கள் கைக்கடிகாரம் சொல்லும். என்ன தேடினீர்கள், எதை உண்டீர்கள், எங்கேப் போனீர்கள், யாரோடு பேசினீர்கள் என்பதைப் பொறுத்து சாய்ஸ்கள் மாறும்.

இவையனைத்தையும் இதற்கு முன்னால் ‘இந்தந்த திறமைகளோடு’ இருந்த மனிதர்கள் ‘ஊதியம்’ பெற்றுக் கொண்டு வழிக் காட்டினார்கள். இப்போது ‘அவர்கள்’ தேவையில்லை. அவர்களை விட சிறப்பாக இந்த அறிவேந்திரங்கள் இயங்கும். இவற்றை நாம் இப்போதே பயன்படுத்துகிறோம், இவை முழுமையான அறிவேந்திர பயன்பாட்டில் 1% கூட இல்லை. இது தான் நான் மேலே சொன்ன ஆரம்பம்.

இது 1,000 சொற்கள் கட்டுரையில் முடிகிற விஷயமில்லை. இவை எந்தெந்த காரணிகளால் உருவாயின, இதற்கு முன் என்ன நடந்தது, அங்கிருந்து நாம் எப்படிப் பரிணாம வளர்ச்சியில் மேலெழுந்திருக்கிறோம், என்னென்ன காரணிகள் இப்போது இதை மாற்றப் போகின்றன, இனி என்ன நடக்கும் எனப் பார்ப்போம்.

++++

*** இந்தியாவின் மென்பொருள் துறையில் வேலைப்பார்ப்பவர்களின் எண்ணிக்கை 42.5 இலட்சம். இதில் மிடில் மேனேஜர்கள் அளவில் இருப்பவர்கள் 10-12% அதாவது 4,50,000; இவர்களில் பாதிப் பேர் அதாவது 2,50,000 அடுத்தப் பத்தாண்டுகளில் வேலை இழப்பார்கள். ஏனென்றால் ஒரு மேனேஜரின் வேலை என்பது வேலை நடக்கிறதா இல்லையா என்றுப் பார்ப்பது. இதை செய்ய இப்போதே இயந்திரங்களும், மென்பொருட்களும் வந்து விட்டன. இன்னும் பரவலாக மாறவில்லை. மாறினால் இந்த நிலையில் இருக்கும் அனைவரின் வேலைகளும் காணாமல் போகும்.

^ இயந்திரப் புரட்சி என்று தமிழில் மொழிப்பெயர்க்கிறார்கள். முதலில் இவை ‘புரட்சி’ (Revolution) அல்ல. இவை அந்தந்த காலக்கட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு முன்னேற்றங்களின் convergence. உ.தா நிலக்கரி சுரங்கங்களின் கண்டுபிடிப்பு தான் நீராவி, பின்னாளில் Coal Engine உருவாக்க உதவியது. ஆக இவை ஏதோ ஒரு vaccum-இல் நடக்கவில்லை. It's a combination of multiple discoveries, innovations & implementations. இவை மொத்தமும் ஒரு அலையாக வரலாற்றில் நிகழ்ந்து ஒட்டு மொத்த மனித சமூகத்தின் பார்வைகளையும், தேவைகளையும் மாற்றியிருக்கிறது. It swept humanity once & for all. அதனால் இதை பேரலை என்றே சொல்ல விழைகிறேன்.

^^ மெடிசி 14-ங்காம் நூற்றாண்டில், இன்றைய இத்தாலியின் ஒரு அங்கமாக இப்போது இருக்கும் அன்றைய ‘ப்ளாரென்ஸ் குடியரசின்’ குடிப்பெயர்ந்த யூதக் குடும்பம். கொசிமோ தே மெடிசி தான் ஆவணப்படுத்தப்பட்ட முதல் மெடிசி குடும்பத்து ஆள். மூன்று போப்கள் இந்த குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்கள். கலை, இலக்கியம், அரசாளுமே, மேலாண்மை, பயணங்கள், புவி அரசியல் என 400 வருடங்களில் இந்த குடும்பத்தின் பங்களிப்பு அதிகம். வங்கி என்று நாம் அழைக்கும் Banking துறையே இவர்கள் உருவாக்கியது தான்.

(அலைகள் தொடரும் ... )

Labels: , , , , , ,


Comments:
இன்றைய தமிழ் ஊடகத் துறையில் இது போன்ற கட்டுரைகளில் கவனம் செலுத்தினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிச்சயம் இளையர்களின் மனதில் ஒரு சில மாற்றத்தை உருவாக்க முடியும். வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை.
 
அதெல்லாம் நிறைய முட்டி, மோதிப் பார்த்தாச்சு தலைவரே. இங்க இருக்கிற எல்லா ஊடகங்களுக்கும் ‘நியுஸ்’ தான் முக்கியம். தமிழ்நாட்டோட வருங்காலமோ, தமிழ் இளைஞர்களோட எதிர்காலமோ கிடையாது. அதுக்காக தான் நரேனாமிக்ஸ். போங்கடா புண்ணாக்குங்களா, என்னோட இடம் டிஜிட்டல், நான் என்னோட இளைய தலைமுறையோட அவங்க புழங்கற மீடியத்துலயே பேசறேன்னு ஆரம்பிச்சாச்சு.
 
எளிய நடையில் ஆழமான விசயங்களை விவரித்துள்ளீர்கள். கடந்த 250 ஆண்டுகால வரலாற்றை நான்கு அலைகளில் கடந்து சென்றது அருமை. தொடருங்கள். தொடர ஆவலுடன் காத்திருக்கிறேன்
 
தமிழில் இது போன்ற கட்டுரைகள் அரிது. பயன்படுத்திய சொல்லாடல்கள் எல்லாம் சிறப்பு. இக்ககட்டுரைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
 
தமிழில் இது போன்ற கட்டுரைகள் அரிது. பயன்படுத்திய சொல்லாடல்கள் எல்லாம் சிறப்பு. இக்ககட்டுரைகளை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
 
I just started to talk about these changes without data. Now ibam ptetty much sure the article reveals the exact numbers and the reasons...

Well defined article .. much appreciated Narain...

This needs to publish every corner of the engineering colleges so those who studied will understand the reality and move.towards the challenges..
 
This comment has been removed by the author.
 
அருமையான கட்டுரை...
 
நன்றி.அருமையான பயனுள்ள கட்டுரை.தொடருங்கள்.ஆவலுடன் காத்திருக்கறோம்.
 
Good Article. I wish to reply back in Tamizh but it takes a while for me to slowly type. So I respond back English.

I see humanity & life on earth from a different perspective. We are tiny creatures blinded by 'massive' ego that makes us from thinking we are separate induiduals and NOT part and parcel of this Earth, solar system or Vishwam-Universe. This is thinking in general masses, irrespective of country, creed, race, religion, language, technocratic experience or corporate/company one works for.

It is this heliosphere that make us constantly evolve. Evolution of every life form happens no matter what. It has to happen until one reaches its goal. So what is the goal? Goal of Humanity? This is a subjective question. Answers vary on how one's thoughts are constructed and it be based on socio-economic situation, religious background, education background, personal interest in synthesis of knowledge world over, etc..

Perhaps this is a reason why "Who Am I" "Why am I here" are the highest searched for questions in Google even ahead of pornographic content search. Perhaps this is because Brahma himself was asking this question "Kaha" soon after his birth. In general, achieving comforts(Sukam) in life is primary goal for all life forms. Due to human's collaborative approaches these necessities like eating, sleeping, mating and defending are done in much efficient manner. That is why we have forests > villages > towns > cities in a organised way so these comforts can be reproduced and repeated, time over again and again. From an yogic level, independence or liberation from all these basic comforts is their primary goal. This state comes automatically to anyone who has seen complete cycle of eating, sleeping, mating and defending number of times and feels enough of it. One realizes that the carrots of comforts keep seducing one to make them run like a rabbit, forever.

In this age of rampant consumerism, humanity is consuming at much higher rate than compared to anything in last 300 or even last 3000 years. To see this other way, Heliosphere/Earth is allowing humanity to consume itself at highest rate than ever. If one closely observes India history, technologically, for a short span of time artificial intelligence & robotics was used by Salivahana empire to end the decayed decedents of Vikramaadhiya empire. (pls know that Vikramaadhiya's empire extended the current Sahara desert kingdoms including current Saudi) This was around the time of Christ and there are 3 interesting & important points to note on Salivahana's empire.
1) Most Governments across world use calendar & time standard set by him, including Georgian calendar.
2) The discussion between King Salivahana & Jesus Christ after His emergence from cruxification and his life in Kashmir.
3) There are connections between Salivahana Robotic army and Chinese terracotta warriors - Making inanimate objects animatable. Why AI and robotics emerged during 2000 years ago for short span of time and why did it completely kept secret and wiped out from pages of history? Why did Computing/AI/Robotics reemerge now?

Now connecting all these with the original topic in this blog. Comforts are necessary for life, but it is not the only purpose of life.

But at time like now where 'mad consumerism' is order of day, cut throat profit making become only goal, where success in life measured only by wealth and not by sacrifices, when humanity has totally forgetten their roots of sustaining their forests, villages, towns, cities and its environment. At such juncture, it is that mother Nature is allowing the technological advances like robotics or genetic engg etc only to wipe out the unruly or non evolving people and to reset the path of life. Perhaps all the tech advances of current age becomes a myth for future generations.

Whatsoever quest for life & comforts will continue and repeats, if not in this form, in some other form.

Humbly,
....


 
அருமை. பொழுதுபோக இணையத்தில் மேய்பவர்களை (நானும் தான்!) நிறுத்தி சற்றேனும் சிந்திக்கச் செய்யும் கட்டுரை. தொடருங்கள் நற்பணியை. நன்றி!
 
அண்ணனுக்கு வாழ்த்துக்கள். வரலாற்றுக் குறிப்புகள் தொடராக நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். சுற்றுச் சூழல் சீர்கேடு எப்போது தொடங்கியது என்பது ஒரு தேடலில் “தொழில் புரட்சி (பேரலை)” பற்றிய ஓரளவு புரிதல் இருந்தது. உங்களுடைய ஆக்கம் மேலும் பயனுள்ள தகவல்களை தொழில் புரட்சி (பேரலை) யின் அடிப்படையை அனைவரும் அறிவது நலம். தொடர்ந்து எழுதுங்கள் மானுடம் பயனுறட்டும்.
 
காலத்திற்கேற்ற சிந்தனை. எளிமையான சொல்லமைப்பில் கட்டுரை நகர்கிறது. மக்கள் தொகை மிகுந்த தற்காலத்தில், பொருள் படைத்த குறைந்த எண்ணிக்கையில் உள்ளோர் மனித குலத்தை சீரழிக்காமல் காக்க வழிகளையும் ஆராயும் பொறுப்பு உள்ளவர்கள் நாம்.
 
This comment has been removed by the author.
 
மிகவும் அதிக ஆர்வத்தினை தூண்டியது உங்களது கட்டுரை, தொடருங்கள் நரேன் சார்
 

ஜோதிஜி சொன்ன கருத்துகளை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்....அதுமட்டுமல்ல ஊடகத்துறை மட்டுமல்ல உங்களை போல உள்ளவர்களும் சமுக வலைத்தளங்களை பயன்படுத்தி இன்னும் அதிக நபர்கள் படிக்க செய்யவேண்டும் இன்று ஜோதிஜி உங்கள் பதிவை அறிமுகப்படுத்தி வைத்தால்தான் உங்கள் எழுத்தையும் எண்ணங்களையும் அறிய முடிந்தது. நானும் ஐந்து வருடங்களுக்கு மேலாக எழுதிவிருகிறேன் ஆனால் உங்கள் பதிவுகள் ஏதும் என் கண்ணில் படவே இல்லை என்பதை அறியும் போது எனக்கு வருத்ததைதான் தருகிறது...

ஒரு சின்ன வேண்டுகோள் உங்கள் தளத்தில் கூகுல் ஃப்ரெண்ட்ஸ் கனெக்ட் என்பதை நிறுவுங்கள் அதன்மூலம் பலரும் உங்கள் தளத்தை பாலோ செய்யமுடியும் செய்வீர்களா?

பயனுள்ள தகவல்களை அனைவரும் அறிவது நலம். தொடர்ந்து எழுதுங்கள்
 
தமிழில் வரவேற்கத்தக்க முயற்சி...வாழ்த்துக்கள்.

நேரடி விளைவுகளைத் தாண்டி, இத்தகைய பேரலைகளால் ஏற்பட்ட பின்விளைவுகள் சில பின்னாளில் சமூக, பொருளாதார தளத்தில் முக்கிய காரணிகளாக விளங்கியதாக தோன்றுகிறது.
குறிப்பாக,
- Mass production காரணமாக உருவான சந்தைகளின் தேவை, பின்னாளில் சந்தைகளை உருவாக்குதல் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தின் தோற்றுவாயாக இருந்தது .
- corporate நிறுவனங்களின் தோற்றம் பின்னாளில் சர்வதேச அரசியல், பொருளாதார தளத்தில் மிக முக்கிய காரணியாக உள்ளது ...

மேலும், இந்த பேரலைகள் அறிவியல் மற்றும் தொழிற் துறைகளைத் தாண்டி அரசியல்,சமூகம், தத்துவம் என பரந்து பட்ட அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதனாலேயே இந்தப் பேரலைகள் புரட்சி எனப்படுகின்றன என எண்ணுகிறேன் ...

சிந்திக்காத தூண்டிய இக்கட்டுரைத் தொடருக்கு நன்றி...
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]



Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]