Feb 3, 2017
அலைகள் ஒய்வதில்லை - பகுதி 6
Universal Basic Income (UBI) என்பது வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் கடந்த நான்கைந்து வருடங்களாக, மிகத் தீவிரமாக, தொடர்ச்சியாக, விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடிய ஒரு திட்டம். இது ஒன்றும் புதிய நவயுக சிந்தனையெல்லாம் கிடையாது. மக்கள் வருவாய், அடிப்படை வருவாய், குறைந்தப் பட்ச உத்தரவாதமான வருமானம் என்றெல்லாம் 1500 வருடங்களாக விவாதிக்கப்படும் சங்கதி.
இஸ்லாம் உருவான காலக்கட்டத்திற்கு பிறகு உருவான காலிப்பாக்கள் என்றழைக்கப்படும், நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்கள் இதை செய்திருக்கிறார்கள். முதல் காலீப்பாவான் அபு பக்கீர் தன்னுடைய அரசின் கீழ் ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் அன்றைய காலக்கட்டத்தில் 10 திர்ஹாம் கொடுத்திருக்கிறார். அது பின்னால் 20 திர்ஹாம்களாக மாறி இருந்து இருக்கிறது.
தாமஸ் மோர் எழுதி (1497 - 1535) அவர் பங்குப் பெற்றிருந்த மனிதவியலாளர்கள் (Humanists) அமைப்பு ‘யுடோபியா’ என்கிற 1516-ஆம் ஆண்டு வெளியான புத்தகத்தில் தேவாலயங்களின் பணியாக அனைவருக்குமான வருவாயினை தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஐரோப்பிய கண்டத்தில் அந்த காலக்கட்டத்தில் நிலவிய தேவாலய கண்ணோட்டத்தில் (இறைவன் ஒருவனே; நாம் அனைவரும் அவன் பிள்ளைகளே; இறைவன் நமக்களித்த இந்த பெருஞ்செல்வத்தை அனைவரோடு பங்கிட்டுக் கொண்டு வாழ்தலே, மனித வாழ்வின் மாண்பு etc) உருவான சிந்தனையிது.
அமெரிக்க புரட்சியாளாரான, தாமஸ் பெய்ன் 1795-இல் இதை அமெரிக்க சட்டத்திற்குள் கொண்டு வர முடிந்தார். அதே காலக்கட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து எழுந்த மாமன்னரான நெப்போலியன் போர்ன்பார்ட்டும், பெய்னின் கருத்தை உள்வாங்கி ”Man is entitled by birthright to a share of the Earth's produce sufficient to fill the needs of his existence" என்று சொல்லி இருக்கிறார் என்று வரலாறு சொல்கிறது. ஆக யு.பி.ஐ-ற்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது.
அரசாங்கம் ரேஷன் கொடுக்கலாம், கேஸ் மான்யம் கொடுக்கலாம், எல்லாருக்கும் மாசா மாசம் சம்பளம் போடணும்னா எப்படி ? கட்டுப்படியாகுமா ? இதெல்லாம் சாத்தியமா ? எந்த முட்டாள் இந்த மாதிரியெல்லாம் யோசிப்பான் ? அப்படி எல்லாருக்கும் சம்பளம் போட்டுட்டா, உழைக்கவே தேவையில்லையே, இது எல்லாரையும் சோம்பேறியா இல்ல ஆக்கும் ? இதைப் போய் 21-ஆம் நூற்றாண்டாடோட பெரிய விவாதம்னு வேற சொல்றீங்க ?
அலைகள் ஒய்வதில்லை தொடரின் ஆரம்பத்திற்கு போவோம். இயந்திரப் பேரலைகளின் தாக்கங்களைத் திரும்பிப் படியுங்கள். இதுவரை வந்த மூன்று பேரலைகளிலும் மனிதர்களுக்கான வேலைகள் வெவ்வேறு காரணிகளால் சுலபமானது. நான்காவது பேரலையில் மனிதர்களுக்கான வேலைகளையே அறிவேந்திரங்கள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இந்த அடிப்படை வேறுபாடு தான் யு.பி.ஐ பற்றி உலகம் முழுக்க பேச வைக்கிறது. அறிவேந்திரங்கள் மனிதர்களின் வேலைகளை செய்கின்றன என்பது வெறும் வாக்கியமல்ல. அதில் ஏகப்பட்ட சங்கதிகள் இருக்கின்றன.
மனிதர்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும் ? ”உத்யோகம் புருஷ இலட்சணம்” என்பதெல்லாம் ஒரு பக்கமிருந்தாலும், கடந்த 300 - 400 ஆண்டுகளில் வேலை என்பது மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு அங்கமாக மாறி விட்டது. மனித வாழ்வின் மூன்றில் இரண்டு பங்கு வேலையில் கழிகிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாமே இங்கே வேலைகளை அடிப்படையாக கொண்டு இயங்குபவையே.
என சாமான்யர்களின் இருப்புக்கான கேள்விகள் அத்தனையுமே தாங்கள் பார்க்கும் வேலைகள், அதன் எதிர்கால சாத்தியங்கள், அதன் மூலம் வரும் வருவாய், அதனால் செய்யக் கூடிய முதலீடுகளால் நிறைந்திருக்கிறது. இது எந்தளவிற்கு ஊடுருவி இருக்கிறதென்றால், புதியதாக நாம் யாரையாவதுப் பார்த்தால் கேட்பது “உங்க பேர் என்ன ? அப்புறம் என்ன பண்றீங்க”. இந்த “என்ன பண்றீங்க” என்பது தான் ஒட்டு மொத்த வாழ்வின் அடிப்படை சாரமாக இருக்கிறது.
ஒரு சாமான்யரின் மாத சம்பளமென்பது வெறும் வருவாய் மட்டுமல்ல. அதில் ஒரு நாட்டின் பொருளாதாரமே அடங்கி இருக்கிறது. வாடகைக்கு வீடு எடுத்தால், வீட்டு உரிமையாளருக்கு வருவாய் வரும். டூவீலர் வைத்திருந்தால் பெட்ரோல் போட வேண்டும், ஆயில் நிறுவனங்களுக்கு வருவாய் வரும். வீட்டில் இரண்டு செல் பேசி இருந்தால், இரண்டு செல் பேசி நிறுவனங்களுக்கு வருவாய் போகும்.
ஒரு சாமான்யரின் சம்பளமென்பது அவருடைய வருவாய் மட்டுமே கிடையாது. மளிகை, காய்கறி, பால், இறைச்சி, மின்சாரம், போன் பில், பெட்ரோல், பயணங்கள், கேளிக்கை, மருத்துவ செலவு, உணவு, கல்விக் கட்டணம், ட்யூஷன் பீஸ், கீழே இருக்கும் சம்ப்பில் அடைப்பெடுக்க வரும் தொழிலாளிக்கான கூலி என ஒருவரின் சம்பளமென்பது அவரை சுற்றி மட்டுமே நடக்கக் கூடிய ஒரு நேனோ அளவுப் பொருளாதாரம்.
நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த பூமி உருண்டையானது இப்படி தான் பொருளாதார ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆக மனிதர்களின் சம்பளம் என்பது வெறும் தனி மனித வருவாய் மட்டுமே கிடையாது, அது தான் பொருளாதாரத்திற்கான அடிப்படை. அங்கிருந்து தான் எல்லாமே உருவாகிறது, அங்கே தான் போய் எல்லாமும் விழுகிறது.
என்கிற மூன்று வாக்கியங்களும் வெறும் efficiency, optimization, betterment மட்டுமே கிடையாது. இதை கொஞ்சம் ஆழமாய் யோசித்தால், இத்தோடு சேர்த்து உலகப் பொருளாதாரமும் ஆட்டம் காணும் அபாயங்கள் புரியும்.
பெடீகிரி மாதிரி நாய் பிஸ்கெட் உற்பத்தி செய்தாலும், அவற்றை நாய்கள் பணம் கொடுத்து வாங்கப் போவதில்லை. அவற்றை மனிதர்களிடத்தில் தான் விற்க வேண்டும். மனிதர்கள் வாங்கி தான் தங்களுடைய நாய்களுக்கு அளிக்க வேண்டும். அதே தான் இங்கும். அறிவேந்திரங்கள் மனிதர்களை விட சிறப்பாக செயல்பட்டு, குறைந்த விலையில், நிறைந்த தரத்தில் பொருட்களை, சேவைகள் செய்யும் என்பது தான் நான்காவது இயந்திர பேரலையின் அடிப்படை. ஆனால் அவ்வாரு குறைந்த விலை; நிறைந்த தரத்தில் உருவாகும் பொருட்கள் & சேவைகளுக்கான பயனாளர்கள் மனிதர்கள் தானே.
ஒரு பக்கம் தொழில்நுட்பம் வெகு வேகமாக வளர்ந்து அறிவேந்திரங்களையும், செயற்கை நுண்ணறிவையும் உருவாக்கி மனிதர்களை எங்கெல்லாம் இடம் மாற்ற முடியுமோ அதை செய்துக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்களுடைய சிந்திக்கின்ற, தேடுகின்ற திறன்களை இயந்திரங்களிடம் இழந்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் திறன் குறைந்துக் கொண்டே இருக்கிறது. திறனில்லாத ஆட்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயங்குகின்றன அல்லது குறைதிறன் ஆட்களின் வேலைகளை அறிவேந்திரங்கள் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் உற்பத்தி ஒரு பக்கம் சீரிய நிலையிலும், தேவை இன்னொரு பக்கம் படு பாதாளத்திலும் விழ்ந்தால் உலகம் என்னவாகும் ?
மேலும், அறிவேந்திரங்கள் நுழைய, நுழைய மனிதர்களின் வருவாயில் நாம் போன அத்தியாயத்தில் பேசிய பல்வேறு சிக்கல்களும் இல்லை. ஆக இந்த நான்காம் பேரலையில் உருவாகப் போகும் இந்த ஏற்றத்தாழ்வினை தொழில்நுட்பப் பிரச்சனையாக சுருக்கினால் அது ஆபத்து. இது மிகப் பெரிய சமூகப் பிரச்சனை.
இது ஒரு பாப்புலிஸ வெறித்தனமாக மாற அதிக நாட்கள் எடுக்காது. இதை வேறு விதமாக காரணம் காட்டி தான் இன்றைக்கு உலகம் மோசமான வலதுசாரி தலைவர்களிடம் போய்க் கொண்டிருக்கிறது. இயந்திரங்கள் என்பதை இந்தியர்கள் என்று இடம் மாற்றினால், இது அமெரிக்காவின் பிரச்சனை. இயந்திரங்கள் என்பதை சிரியாவின் அகதிகள் என்று இடம் மாற்றினால் இது ஐரோப்பியப் பிரச்சனை. இயந்திரங்கள் என்பது வடகிழக்கு மாநில menial job ஆட்கள் என்று இடம் மாற்றினால், இது தமிழகத்தின் பிரச்சனை. இன்றைக்கு ஒரு மனித இனக்குழுவை இன்னொரு மனித இனக்குழு இடம் மாற்றுகிறது என்பது தான் அந்தந்த நிலப்பரப்பின் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சனை. ஒட்டு மொத்த மனிதகுலத்தையே அறிவேந்திரங்கள் இடம் மாற்றும் என்றால் அது மனித இனத்திற்கான பிரச்சனை. அந்த சமூக அங்கீகார இழப்பினைத் தாங்கிக் கொள்ளவோ, பொருளார சீரழிவை கையாளவோ உண்மையிலேயே மனித இனத்திற்கு தெரியாது என்பது தான் யதார்த்தம்.
யு.பி.ஐ இதற்கான மாற்றாக இப்போது முன் வைக்கப்படுகிறது. யு.பி.ஐயினை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை. யு.பி.ஐ என்பது இந்த பேரலைகளை எதிர்க்கொள்ள பொருளாதார நிபுணர்களால், அரசுகளால், சமூக அமைப்புகளால் முன் வைக்கப்படும் ஒரு வழி. இதைப் போல பல வழிகளை இனி நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அவ்ளோ பணத்துக்கு எங்க போறது, சோம்பேறியா இருக்கிறவன் தப்பா தானே யோசிப்பான், இந்த பணத்தை வச்சிட்டு குடி, கூத்து, கஞ்சா-ன்னு இறங்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் என நீள்வதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. அவையும், இதை எப்படி ஒரு அரசாங்கத்தால் தொடர்ச்சியாக கொடுக்க முடியும் என்பதும், மனித உளவியலில் வேலை இல்லாமல் இருப்பது என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும், இதற்கும் 2008 பொருளாதார மந்தத்திற்கும் என்ன உறவு என்பதையும் அடுத்தப் பகுதியில் அலசுவோம்.
(அலைகள் தொடரும்.....)
இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை
அலைகள் ஒய்வதில்லை - 1
அலைகள் ஒய்வதில்லை - 2
அலைகள் ஒய்வதில்லை - 3
அலைகள் ஒய்வதில்லை - 4
அலைகள் ஒய்வதில்லை - 5

எது யு.பி.ஐ ?
ஒரு நாட்டின் மக்கள் அனைவருக்கும், அவர்களின் பொருளாதார நிலைகளை தாண்டி ஒரு குறிப்பிட்ட வருவாயினை மாதாமாதம் அளிப்பது தான் யூ.பி.ஐ அல்லது எல்லோருக்குமான அடிப்படை வருமானம்.
அரசாங்கம் ரேஷன் கொடுக்கலாம், கேஸ் மான்யம் கொடுக்கலாம், எல்லாருக்கும் மாசா மாசம் சம்பளம் போடணும்னா எப்படி ? கட்டுப்படியாகுமா ? இதெல்லாம் சாத்தியமா ? எந்த முட்டாள் இந்த மாதிரியெல்லாம் யோசிப்பான் ? அப்படி எல்லாருக்கும் சம்பளம் போட்டுட்டா, உழைக்கவே தேவையில்லையே, இது எல்லாரையும் சோம்பேறியா இல்ல ஆக்கும் ? இதைப் போய் 21-ஆம் நூற்றாண்டாடோட பெரிய விவாதம்னு வேற சொல்றீங்க ?
அலைகள் ஒய்வதில்லை தொடரின் ஆரம்பத்திற்கு போவோம். இயந்திரப் பேரலைகளின் தாக்கங்களைத் திரும்பிப் படியுங்கள். இதுவரை வந்த மூன்று பேரலைகளிலும் மனிதர்களுக்கான வேலைகள் வெவ்வேறு காரணிகளால் சுலபமானது. நான்காவது பேரலையில் மனிதர்களுக்கான வேலைகளையே அறிவேந்திரங்கள் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. இந்த அடிப்படை வேறுபாடு தான் யு.பி.ஐ பற்றி உலகம் முழுக்க பேச வைக்கிறது. அறிவேந்திரங்கள் மனிதர்களின் வேலைகளை செய்கின்றன என்பது வெறும் வாக்கியமல்ல. அதில் ஏகப்பட்ட சங்கதிகள் இருக்கின்றன.
மனிதர்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும் ? ”உத்யோகம் புருஷ இலட்சணம்” என்பதெல்லாம் ஒரு பக்கமிருந்தாலும், கடந்த 300 - 400 ஆண்டுகளில் வேலை என்பது மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு அங்கமாக மாறி விட்டது. மனித வாழ்வின் மூன்றில் இரண்டு பங்கு வேலையில் கழிகிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாமே இங்கே வேலைகளை அடிப்படையாக கொண்டு இயங்குபவையே.
- +2 வில் என்ன குரூப் எடுக்கிறோம் ?
- எந்த இளங்கலை / கல்லூரிக்குப் போகிறோம் ?
- எந்தத் துறையில் விருப்பமிருக்கிறது ?
- அந்த துறையின் எதிர்கால சாத்தியங்கள் என்ன ?
- அரசாங்க வேலையா, தனியார் வேலையா ?
- பென்ஷன் வருமா, இல்லையென்றால் வாழ்வின் வேலைகளற்ற பின்பகுதிக்கு சேமித்து வைக்க வேண்டுமா ?
- குடும்பங்களை எப்படி உருவாக்குவது ?
- பிள்ளைகளை என்ன படிக்க வைப்பது ?
- அவர்களுடைய எதிர்கால வாழ்வை எப்படி அமைத்துக் கொடுப்பது ?
- உடல்நலக்குறைவு வந்து வேலைக்குப் போக முடியாத சூழல் வந்தால் என்ன ஆகும் ?
- விபத்துகள் நடந்தால் வாழ்வினை எப்படி கடப்பது ?
என சாமான்யர்களின் இருப்புக்கான கேள்விகள் அத்தனையுமே தாங்கள் பார்க்கும் வேலைகள், அதன் எதிர்கால சாத்தியங்கள், அதன் மூலம் வரும் வருவாய், அதனால் செய்யக் கூடிய முதலீடுகளால் நிறைந்திருக்கிறது. இது எந்தளவிற்கு ஊடுருவி இருக்கிறதென்றால், புதியதாக நாம் யாரையாவதுப் பார்த்தால் கேட்பது “உங்க பேர் என்ன ? அப்புறம் என்ன பண்றீங்க”. இந்த “என்ன பண்றீங்க” என்பது தான் ஒட்டு மொத்த வாழ்வின் அடிப்படை சாரமாக இருக்கிறது.
ஒரு சாமான்யரின் மாத சம்பளமென்பது வெறும் வருவாய் மட்டுமல்ல. அதில் ஒரு நாட்டின் பொருளாதாரமே அடங்கி இருக்கிறது. வாடகைக்கு வீடு எடுத்தால், வீட்டு உரிமையாளருக்கு வருவாய் வரும். டூவீலர் வைத்திருந்தால் பெட்ரோல் போட வேண்டும், ஆயில் நிறுவனங்களுக்கு வருவாய் வரும். வீட்டில் இரண்டு செல் பேசி இருந்தால், இரண்டு செல் பேசி நிறுவனங்களுக்கு வருவாய் போகும்.
ஒரு சாமான்யரின் சம்பளமென்பது அவருடைய வருவாய் மட்டுமே கிடையாது. மளிகை, காய்கறி, பால், இறைச்சி, மின்சாரம், போன் பில், பெட்ரோல், பயணங்கள், கேளிக்கை, மருத்துவ செலவு, உணவு, கல்விக் கட்டணம், ட்யூஷன் பீஸ், கீழே இருக்கும் சம்ப்பில் அடைப்பெடுக்க வரும் தொழிலாளிக்கான கூலி என ஒருவரின் சம்பளமென்பது அவரை சுற்றி மட்டுமே நடக்கக் கூடிய ஒரு நேனோ அளவுப் பொருளாதாரம்.
இந்த நேனோப் பொருளாதாரம்
x
x
7.4 பில்லியன் மக்கள்
=
உலகப் பொருளாதாரம்
=
உலகப் பொருளாதாரம்
நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த பூமி உருண்டையானது இப்படி தான் பொருளாதார ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆக மனிதர்களின் சம்பளம் என்பது வெறும் தனி மனித வருவாய் மட்டுமே கிடையாது, அது தான் பொருளாதாரத்திற்கான அடிப்படை. அங்கிருந்து தான் எல்லாமே உருவாகிறது, அங்கே தான் போய் எல்லாமும் விழுகிறது.
- அறிவேந்திரங்கள் மனிதர்களின் வேலையை செய்கின்றன.
- மனிதர்கள் வேலை இழக்கிறார்கள்.
- அதனால், மனிதர்களுக்கு வருவாய் இல்லை.
என்கிற மூன்று வாக்கியங்களும் வெறும் efficiency, optimization, betterment மட்டுமே கிடையாது. இதை கொஞ்சம் ஆழமாய் யோசித்தால், இத்தோடு சேர்த்து உலகப் பொருளாதாரமும் ஆட்டம் காணும் அபாயங்கள் புரியும்.
பெடீகிரி மாதிரி நாய் பிஸ்கெட் உற்பத்தி செய்தாலும், அவற்றை நாய்கள் பணம் கொடுத்து வாங்கப் போவதில்லை. அவற்றை மனிதர்களிடத்தில் தான் விற்க வேண்டும். மனிதர்கள் வாங்கி தான் தங்களுடைய நாய்களுக்கு அளிக்க வேண்டும். அதே தான் இங்கும். அறிவேந்திரங்கள் மனிதர்களை விட சிறப்பாக செயல்பட்டு, குறைந்த விலையில், நிறைந்த தரத்தில் பொருட்களை, சேவைகள் செய்யும் என்பது தான் நான்காவது இயந்திர பேரலையின் அடிப்படை. ஆனால் அவ்வாரு குறைந்த விலை; நிறைந்த தரத்தில் உருவாகும் பொருட்கள் & சேவைகளுக்கான பயனாளர்கள் மனிதர்கள் தானே.
ஒரு பக்கம் தொழில்நுட்பம் வெகு வேகமாக வளர்ந்து அறிவேந்திரங்களையும், செயற்கை நுண்ணறிவையும் உருவாக்கி மனிதர்களை எங்கெல்லாம் இடம் மாற்ற முடியுமோ அதை செய்துக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தங்களுடைய சிந்திக்கின்ற, தேடுகின்ற திறன்களை இயந்திரங்களிடம் இழந்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் திறன் குறைந்துக் கொண்டே இருக்கிறது. திறனில்லாத ஆட்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்கள் தயங்குகின்றன அல்லது குறைதிறன் ஆட்களின் வேலைகளை அறிவேந்திரங்கள் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் உற்பத்தி ஒரு பக்கம் சீரிய நிலையிலும், தேவை இன்னொரு பக்கம் படு பாதாளத்திலும் விழ்ந்தால் உலகம் என்னவாகும் ?
மேலும், அறிவேந்திரங்கள் நுழைய, நுழைய மனிதர்களின் வருவாயில் நாம் போன அத்தியாயத்தில் பேசிய பல்வேறு சிக்கல்களும் இல்லை. ஆக இந்த நான்காம் பேரலையில் உருவாகப் போகும் இந்த ஏற்றத்தாழ்வினை தொழில்நுட்பப் பிரச்சனையாக சுருக்கினால் அது ஆபத்து. இது மிகப் பெரிய சமூகப் பிரச்சனை.
இது ஒரு பாப்புலிஸ வெறித்தனமாக மாற அதிக நாட்கள் எடுக்காது. இதை வேறு விதமாக காரணம் காட்டி தான் இன்றைக்கு உலகம் மோசமான வலதுசாரி தலைவர்களிடம் போய்க் கொண்டிருக்கிறது. இயந்திரங்கள் என்பதை இந்தியர்கள் என்று இடம் மாற்றினால், இது அமெரிக்காவின் பிரச்சனை. இயந்திரங்கள் என்பதை சிரியாவின் அகதிகள் என்று இடம் மாற்றினால் இது ஐரோப்பியப் பிரச்சனை. இயந்திரங்கள் என்பது வடகிழக்கு மாநில menial job ஆட்கள் என்று இடம் மாற்றினால், இது தமிழகத்தின் பிரச்சனை. இன்றைக்கு ஒரு மனித இனக்குழுவை இன்னொரு மனித இனக்குழு இடம் மாற்றுகிறது என்பது தான் அந்தந்த நிலப்பரப்பின் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சனை. ஒட்டு மொத்த மனிதகுலத்தையே அறிவேந்திரங்கள் இடம் மாற்றும் என்றால் அது மனித இனத்திற்கான பிரச்சனை. அந்த சமூக அங்கீகார இழப்பினைத் தாங்கிக் கொள்ளவோ, பொருளார சீரழிவை கையாளவோ உண்மையிலேயே மனித இனத்திற்கு தெரியாது என்பது தான் யதார்த்தம்.
யு.பி.ஐ இதற்கான மாற்றாக இப்போது முன் வைக்கப்படுகிறது. யு.பி.ஐயினை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை. யு.பி.ஐ என்பது இந்த பேரலைகளை எதிர்க்கொள்ள பொருளாதார நிபுணர்களால், அரசுகளால், சமூக அமைப்புகளால் முன் வைக்கப்படும் ஒரு வழி. இதைப் போல பல வழிகளை இனி நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அவ்ளோ பணத்துக்கு எங்க போறது, சோம்பேறியா இருக்கிறவன் தப்பா தானே யோசிப்பான், இந்த பணத்தை வச்சிட்டு குடி, கூத்து, கஞ்சா-ன்னு இறங்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் என நீள்வதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. அவையும், இதை எப்படி ஒரு அரசாங்கத்தால் தொடர்ச்சியாக கொடுக்க முடியும் என்பதும், மனித உளவியலில் வேலை இல்லாமல் இருப்பது என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும், இதற்கும் 2008 பொருளாதார மந்தத்திற்கும் என்ன உறவு என்பதையும் அடுத்தப் பகுதியில் அலசுவோம்.
(அலைகள் தொடரும்.....)
இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை
அலைகள் ஒய்வதில்லை - 1
அலைகள் ஒய்வதில்லை - 2
அலைகள் ஒய்வதில்லை - 3
அலைகள் ஒய்வதில்லை - 4
அலைகள் ஒய்வதில்லை - 5
Labels: Industrial Revolutions, IR4.0, UBI, Universal Basic Income, இயந்திர பேரலைகள், நரேனாமிக்ஸ்
Comments:
<< Home
Awesome! Keep it going! Just wondering how on earth one can be so knowledgeable about science, economics, politics and be able to narrate things so well connecting all the dots. Hats off!
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Disciple of Dr Padma Subrahmanyam
Student of Dr Padma Subrahmanyam
Young Dancer Workshop
Karanas Bharatanatyam Teachers
Natya Shastra schools
Bharata Natya Shastra workshop
Workshop on Bharatanatyam
Karanas Bharatham
Natya sastra in bharatanatyam
Karanas in Natyashastra
Dancer Workshop studio
Natya Shastra of Bharata
Karanas workshop
Workshop on Natyashastra
Bharatanatyam karanas schools
Bharata Natya Shastra
Disciple of Dr Padma Subrahmanyam
Student of Dr Padma Subrahmanyam
Young Dancer Workshop
Karanas Bharatanatyam Teachers
Natya Shastra schools
Bharata Natya Shastra workshop
Workshop on Bharatanatyam
Karanas Bharatham
Natya sastra in bharatanatyam
Karanas in Natyashastra
Dancer Workshop studio
Natya Shastra of Bharata
Karanas workshop
Workshop on Natyashastra
Bharatanatyam karanas schools
Bharata Natya Shastra
I would highly appreciate if you guide me through this.
Thanks for the article…
spoken english material
Learning Books for spoken english
Learning Spoken english materials
Learning Spoken english from home
Home study English
English home study pack
English training books
Spoken English Study Pack
Spoken English training pack
Spoken English self study
Post a Comment
Thanks for the article…
spoken english material
Learning Books for spoken english
Learning Spoken english materials
Learning Spoken english from home
Home study English
English home study pack
English training books
Spoken English Study Pack
Spoken English training pack
Spoken English self study
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]