Feb 5, 2017
அலைகள் ஒய்வதில்லை - பகுதி 7
”I never once considered that it was appropriate to put taxpayer money on the line in resolving Lehman Brothers. A Fed loan to Lehman Brothers would not have prevented a bankruptcy"
- Henry 'Hank' Paulson, Treasury Secretary to USA
+++++
செப்டம்பர் 15, 2008.
லேமென் பிரதர்ஸ் என்கிற நிதி தரகு நிறுவனம் வீழ்ந்தது. அந்த வீழ்ச்சி தான் பொருளாதார மந்தநிலையை உருவாக்கியது. அடுத்த சில வாரங்களில் கிட்டத்திட்ட எந்த வங்கியும், அடுத்த வங்கியை நம்ப மறுத்தன. ஒட்டு மொத்த நிதிப் பொருளாதார அடிப்படைகளும் ஆட்டம் கண்டன. உலகம் திரும்பவும் 1930களின் பெரு பொருளாதார வீழ்ச்சிக்குப் போனது. அன்றைக்குப் போனது பத்து வருடங்களாகியும் முழுமையாக மீளவே முடியவில்லை.
லேமென் பிரதர்ஸ் கவிழ்ந்தது, சப் ப்ரைம் மார்ட்கேஜ் சிக்கல்கள், பங்குச்சந்தை தரகு நிறுவனங்களின் போங்காட்டங்கள், பெரு நிதி நிறுவனங்களின் அராஜகங்கள் என எல்லாவற்றையும் தாண்டி இதன் அடிப்படை கண்ணிகள் வேறு ஒரு விஷயத்தில் குடிக் கொண்டிருந்தது. அது அரசாங்கங்கள் மக்களுக்கு தர வேண்டிய ஒய்வூதியம்.
70களின் பெட்ரோலிய சிக்கல்கள், 80களுக்கு பின்னான முன்னேற்றங்கள், 90களின் பின்னால் நடந்த வளைகுடா சண்டைகள் என அமெரிக்கப் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்த காலக் கட்டம். கூடவே 90களுக்கு பின் இணையம் வர ஆரம்பித்தது. தொழில்நுட்பம் வளர ஆரம்பித்தது. 2000களில் டாட் காம் வீழ்ச்சியெல்லாம் வந்தாலுமே கூட உணவு, உடை, மூச்சுக் காற்று போல திறன் பேசிகள், இணையம், மெசேஜிங், சமூக வலைத்தளங்கள், மின் வணிகம், மின் பரிவர்த்தனை வளர ஆரம்பித்தது.
அமெரிக்கா ஒரு தொழிற்சாலைகளின் நாடு (தொழில்நுட்பம், சிலிக்கன் பள்ளத்தாக்கெல்லாம் 80களுக்கு பின்னாடி வந்தது. இன்றளவும் டெட்ராய்டிற்கான மரியாதையே வேறு) அதன் யூனியன்கள் பலமானவை. அதனால் காப்பீடு, ஒய்வூதியம், ஒய்வு, 8 மணி நேர வேலை என்பதெல்லாம் தெளிவாக வரையறுக்கப் பட்டவை. நிறுவனங்கள் பணியாளர்களை ஏமாற்ற முடியாது. Class Action Suite எனப்படும் பல தனிநபர்கள் ஒன்று சேர்ந்து நிறுவனத்தின் மீதோ, அரசின் மீதோ வழக்கு தொடுத்தால் தப்ப முடியாது. ஒரு பக்கம் போர்கள், இன்னொரு பக்கம் வயதாகிக் கொண்டேப் போகும் மக்கள் தொகை என உருவான சிக்கலில் 80களின் இறுதியில் கிளம்பியது தான் ஏகப்பட நிதி சார், கணக்கியல் உட்டாலக்கடிகள்.
இது தாண்டி, மருத்துவ அறிவியலின் வளர்ச்சி, நீண்ட வாழ்நாள் என ஒய்வூதியம் தரப் பட வேண்டிய காலம் நீண்டதும் ஒரு காரணம். ஆக இது ஒரு double whammy. ஒரு பக்கம் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியே ஆக வேண்டிய அரசு அழுத்தம். இன்னொரு பக்கம் அதிக ரிட்டர்னுக்கான தேடல்கள். அப்படி போய் எல்லா சாத்தியங்களின் மீதும் பணம் போட்டு, வீழ்ந்தது தான் 2008 பொருளாதார வீழ்ச்சியின் அடிப்படை.
ஏனென்றால் வெறும் அரசு பத்திரங்களில் செய்யும் முதலீட்டால் வரும் வட்டிப் பணத்தை வைத்துக் கொண்டு ஒய்வூதிய நிறுவனங்கள் பென்ஷனைத் தர முடியாது. அதிக வட்டி பெற வேண்டுமென்றால், அரசை தாண்டி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். அதை சந்தைகளிலோ அல்லது சந்தை சார்ந்த திட்டங்களிலோக் கொண்டு வந்தால் தான் அதிக ரிட்டர்ன் கிடைக்கும். அப்படி திறக்கப் பட்டது தான் ஒய்வூதியத்திற்கான, காப்பீட்டிற்கான சந்தை முதலீடுகள். அதனுடைய தொடர் விளைவு தான் வீழ்ச்சி.
இது அமெரிக்காவின் கதை மட்டும் கிடையாது. பெருமளவு ஐரோப்பாவின் கதையும் கூட. இதனுடைய இன்னொரு வடிவம் தான் ஜப்பானின் நினைத்துப் பார்க்க முடியாது வளர்ச்சியும், கடந்த 15 ஆண்டுகளாக அந்த நாட்டின் தேக்க நிலையும். உலகமயமாக்கப்பட்ட பின்னாலான இந்தியாவிலும் இதே நிலை தான். அது வரை அரசாங்கம் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருந்தது. தனியார் மயமாக்கப்பட்டப் பிறகு, அரசு நிறுவனங்கள் தேங்க ஆரம்பித்தன. பல உடைய ஆரம்பித்தன. பலவற்றிலிருந்து அரசுக்கு வரும் டிவிடெண்ட் வருமானம் குறைய ஆரம்பித்தது. ஆனாலும் இன்று வரைக்கும் அரசு தான் இந்தியாவின் மிகப் பெரிய எம்ப்ளாயர். அதனால் பி.எப், ஈ.பி.எப், ஈ.எஸ்.ஐ என சேர்த்து, பணியாளர்கள் இறக்கும் வரை பென்ஷன் தர வேண்டிய கட்டாயமிருந்தது. சராசரி இந்தியர்களின் வாழ்நாளும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டேப் போகிறது. அதனால் தான் போன ஐ.மு.கூ அரசின் நேரடி ஒய்வூதிய திட்டத்திலிருந்து, தேசிய பென்ஷன் திட்டத்துக்கு தொழிற்சங்கங்களில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அமெரிக்காவில் அடித்து துவைக்கப்பட்டு காலாவதியான திட்டங்களை தான் நாம் “முன்னேற்றம்” என்கிறப் பெயரில் இந்தியாவில் தூசு தட்டுகிறோம் என்பதும் உண்மை. இதன் சிக்கல்கள் அடுத்த 10-15 ஆண்டுகளில் தெரிய வரலாம்.
இதற்கும் யு.பி.ஐவிற்கும் என்ன சம்பந்தம் ?
இருக்கிறது.
தங்களுடைய வாழ்நாள் சேமிப்பும், ஒய்வூதிய வாக்குறுதிகளும் ஒரு கணத்தில் காணாமல் போனதாலும், வேலைக்கு போக முடியாத வயதான சூழலில் வாழ்வாதார தேவைகளுக்காக அடுத்தவர்களின் கையை எதிர்ப்பார்க்க வேண்டிய சூழல் வந்ததாலும் முதியவர்கள் வெகுண்டார்கள். பொருளாதார மந்தம், அதனால் உருவான வேலை வாய்ப்பின்மை, அதனூடே உருவான தொழில்நுட்ப வேலை நீக்கம் என்கிற சுழற்சியில் இளைஞர்களும், மத்திய தர வர்க்கமும் கோவத்தோடு சாலைக்கு வர ஆரம்பித்தார்கள். அது தான் அமெரிக்காவில் ட்ரம்பின் வளர்ச்சி. அது தான் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாக்களித்தற்கான ஆரம்பம். அது தான் பிலிப்பைன்ஸில் ட்கார்த்தேயின் வரவு. அது தான் பாப்புலிச வலதுசாரி ஆளுமைகளின் உலகளாவிய எழுச்சி, இந்தியாவின் மோடி உட்பட. அது தான் அமெரிக்காவின் ’அமெரிக்கா முதலில்’ என்று சொல்ல வைத்தது. அது தான் ஐரோப்பாவில் ‘வந்தேறிகளே வெளியே போ’ என சொல்லும் இனவாத குழுக்களின் வளர்ச்சியாக இருக்கிறது.
உண்மையில் பொருளாதார சித்தாந்தங்கள் என்பவை போன நூற்றாண்டில் சொன்னதுப் போல வெறுமனே வலது சாரி, இடது சாரி என்று கறாராக பிரிக்க முடியாத படி 20-ஆம் நூற்றாண்டிலும், 21-ன் ஆரம்பத்திலும் இணைய ஆரம்பித்து விட்டன. ஒபாமா மாதிரியான ஒரு அதிபர், அனைவருக்குமான மருத்துவ நலம் பேசுகிறார். சீனாவும், ரஷ்யாவும் அரசு நிறுவனங்களை, அரசுக்கு இணைக்கமாக இருக்கும் தனியார் நிறுவனங்களை உலகம் முழுக்கக் கொண்டு செல்லுகிறார்கள். எது வலது, எது இடது என்பதற்கான எல்லைக் கோடுகள் அழிக்கப்பட்டு வலது இடதிலும், இடது வலதிலும் சங்கமித்து விட்டன.
இந்த சூழலில் தான் அறிவேந்திரங்களின் எழுச்சி, நான்காவது பேரலை, மென்பொருளாக்கம் என ஏற்கனவே சிதைந்துப் போய் இருக்கின்ற சமூக நம்பிக்கைகளை, நவீன உலகம் மேலும் சிக்கலாக்கி இருக்கிறது. தொழில்நுட்பமும், இணையமும், டிஜிட்டல் பிட்களும் உலகினை சமப்படுத்தி விட்டன, ஆனால் வாழ்வாதார கேள்விகள் உலகமெங்கும் எழுந்திருக்கின்றன. சின்ன நாடுகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பெரு நிறுவனங்களை தங்களின் வழியாக வர்த்தகம் செய்ய சொல்லி வரி ஏய்ப்பினை செய்ய முனைகின்றன.
ஆக வரி வருமானம் அரசுகளுக்குப் போதுமானதாக இல்லை. அதை ஏற்றவும் முடியாது. பேரலையை தடுக்கவும் முடியாது. மக்களும் சிஸ்டத்தின் மீது கடுங்கோவத்தோடு இருக்கிறார்கள். இடியாப்ப சிக்கல். இது எளிமையாக புரிந்துக் கொள்ளக் கூடிய, உணர முடிகிற, அரசமைப்புகளால் திட்டங்கள் தீட்டி மாற்றி அமைக்க முடிகிற, தனியார் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை வைத்து தீர்க்க நினைக்கக் கூடிய எளிமையான சமூக சிக்கல் கிடையாது. 21-ஆம் நூற்றாண்டில் பல அடுக்குகள், போக்குகள், பார்வைகள், அதிர்வலைகள் ஏற்படுத்தக் கூடிய ஆகப் பெரிய சிக்கல் இது தான்.
இந்த சிக்கலின் அடிப்படையானது, டிஜிட்டலாய் மக்களுக்கு எல்லாமே கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. ஆனால் வாழ்வியலாய் செலவு செய்ய, வாங்க, அனுபவிக்க பணமில்லை. இந்த டிஜிட்டல் டிவைடு உருவாக்கி இருக்கக் கூடிய சமூக சீர்குலைவினை கையாளத் தெரியாமல் அரசுகள் திணறுகின்றன.
இந்தியா போன்ற நாட்டில் மான்யங்கள் ஒரு பக்கமாகவும், வேலைவாய்ப்பின்மை இன்னொரு பக்கமாகவும் தலைவிரித்து ஆடுகிறது. மான்யங்களை கொடுக்காமல் சமூக நீதியை நிலை நாட்டவும் முடியாது. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களை அந்த நிலையிலிருந்து மீட்டு மத்திய தர வர்க்கமாக மாற்ற வேண்டிய அளவிற்கு தொழில்களோ, வேலை வாய்ப்புகளோ உருவாக்கவும் முடியாது. அதை செய்ய வேண்டுமானால், தனியார் நிறுவனங்களுக்கு தான் சந்தையை திறக்க வேண்டும். திறந்தால் அவர்களுக்கான சலுகைகள் இல்லாமல் அவர்கள் முதலீடு செய்ய மாட்டார்கள். முதலீடு செய்பவர் அதிக வருவாயையும், ROIயையும் எதிர்ப்பார்ப்பார்கள். அதை மனிதர்களை வைத்து செய்வதை விட அறிவேந்திரங்களை வைத்து செய்வதால் தான் அடைய முடியும். ஆக சந்தையை முழுமையாக திறந்தாலும், ஒரு பெரும் ஜனத்திரளை பொருளாதார அடிப்படையில் அடுத்த அடுக்குக்குக் கொண்டு செல்ல முடியாது. அதை செய்யாமல் இருந்தால் அடுத்த தேர்தலில் ஒட்டு விழாது. அதற்காக வாரி இறைக்கவும் முடியாது. ஒரு அரசாங்கம் மக்களைக் காக்க என்ன தா செய்ய முடி
இதை வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு காரணங்களுக்காக எடைப் போட்டுக் கொண்டிருக்கின்றன. சில நாடுகளில் இளைஞர்கள் இல்லை, ஆனால் வளமிருக்கிறது, பணமிருக்கிறது. சில நாடுகளில் ஏழ்மை தறிக்கெட்டு ஒடுகிறது, அரசால் திட்டங்கள் போட்டு அதை சீர் செய்ய முடியவில்லை. சில நாடுகளில் இந்தியா மாதிரியான வளரும் நாடுகளில் பல்வேறு சமூகப் பொருளாதார அடுக்குகள், கூடவே சாதீயரீதியிலான பொருளாதார அடக்குமுறையும் இருக்கிறது.
மக்களின் அழுத்தம், அடக்கி வைக்கப்பட்டிருக்கும் கோவம், விரக்தி மனோபாவம், கையறு நிலை, சுயகழிவிரக்கம், பணமின்மை, வேலையின்மை, சமூக அங்கீகாரமின்மை என நீளும் சமூக சிக்கல்கள் எப்போது எரிமலையாய் வெடிக்குமென்று தெரியாது. ஆனால் எல்லா அரசுகளுமே உள்ளூர புகைந்துக் கொண்டிருக்கும் இந்த கனலை புரிந்துக் கொண்டே இருக்கிறார்கள். அதை முழுமையாக தீர்க்க முடியாமல் போனாலும், அதை ஒரளவாவது குளிர்விக்க கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் “எல்லோருக்குமான அடிப்படை வருவாய்” ( Universal Basic Income )
இதை எப்படி எதிர்கொள்வது, யாருக்கெல்லாம் கொடுப்பது, இதற்கான நிதி ஆதாரங்களை எப்படி உருவாக்குவது என்பது அடுத்த பகுதியில்.
(அலைகள் தொடரும்.....)
இந்த தொடரில் இதற்கு முன் வந்தவை
அலைகள் ஒய்வதில்லை - 1
அலைகள் ஒய்வதில்லை - 2
அலைகள் ஒய்வதில்லை - 3
அலைகள் ஒய்வதில்லை - 4
அலைகள் ஒய்வதில்லை - 5
அலைகள் ஒய்வதில்லை - 6

Labels: Industrial Revolutions, IR4.0, UBI, Universal Basic Income, இயந்திர பேரலைகள், நரேனாமிக்ஸ்
Subscribe to Posts [Atom]